
அட்டவணை
- 1. உங்கள் இல்லத்தை ஆன்மீக ரீதியாக தூய்மைப்படுத்துதல் பற்றிய அறிமுகம் (வாஸ்து சுத்தி)
- 2. என் வீட்டில் எதிர்மறை அதிர்வலைகள் இருப்பதை எவ்வாறு அறிவது?
- 3. ஆன்மீக முறையில் சுத்தப்படுத்துதல் அல்லது தூய்மைப்படுத்தும் வழி முறைகள் (வாஸ்து சுத்தி)
- 3.1 பரிபூரண நீர் தத்துவத்தை பிரதானமாகக் கொண்டு ஆன்மீக ரீதியில் வீட்டை தூய்மைப் படுத்துதல்
- 3.2 பரிபூரண நெருப்புத் தத்துவத்தை பிரதானமாகக் கொண்டு ஆன்மீக ரீதியில் வீட்டை தூய்மைப் படுத்துதல்
- 3.3 பரிபூரண ஆகாயத் தத்துவத்தை பிரதானமாகக் கொண்டு ஆன்மீக ரீதியில் வீட்டை தூய்மைப்படுத்துதல்
- 3.4 ஸாத்வீகமான அல்லது ஆன்மீக ரீதியில் தூய்மையான தாவரங்கள்
- 4. எதிர்மறையான அதிர்வலைகளை அகற்றாவிட்டால் என்ன நேரிடும்?
- 5. வாஸ்து சுத்தி செய்வதன் நன்மைகள்
1. உங்கள் இல்லத்தை ஆன்மீக ரீதியாக தூய்மைப்படுத்துதல் பற்றிய அறிமுகம் (வாஸ்து சுத்தி)
நாம் நமது நேரத்தில் 90 % மேல் (திறந்த வெளியில் இல்லாமல்) உட்புறமாக(வீடு,தெரிந்த இடம்) செலவிடுகிறோம் அதிலும் குறிப்பாக 70% வீட்டிற்குள்ளேயே செலவிடுகிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தொற்றுநோயால் ஏற்பட்ட முடக்கநிலை காரணமாக (கோவிட் லாக்டவுன்), நாம் வீட்டில் செலவிடும் நேரத்தின் அளவு இன்னும் அதிகமாகி இருக்கலாம்.
நம்மில் பலருக்கு வீடு என்பது இவ்வுலகில் நமக்காக நாம் வாழ, இளைப்பாற தேவையான ஒரு சிறிய இடமாகும். நமது தேவைக்கேற்ப வீட்டை அமைக்க நாம் அதிக பணமும் நேரமும் செலவிடுகிறோம். பொதுவாக நாம் வீடு கட்டும் போது நமது பொருட்சார்ந்த தேவைகள், வசதிகள் மற்றும் உடல், மன அமைதியுடன் வாழக்கூடிய இடத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். நமது வீடு நம்முடைய ஆளுமைகள், விருப்பம் மற்றும் நமது வாழ்வுமுறைகளை பிரதிபலிக்கின்றன.
நாம் இல்லத்தில் அதிகப்படியான நேரத்தை செலவழிப்பதால் நமது வீட்டை வைத்திருக்கும் விதம் நம்மை பாதிக்கக்கூடும். அழுக்கு, தூய்மையின்மை, உடைந்த பொருட்கள் போன்ற ஸ்தூல நிலையில் உள்ள அம்சங்களை நாம் அறிவோம். அதை சரி செய்யவும் முயற்சிக்கிறோம். மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் உள்ள மனக்கசப்பையும் அறிந்து அதை சமாதானம் செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் நம்மில் பலருக்கு நமது வீட்டில் எதிர்மறை அதிர்வலைகள் இருப்பதும், அவை ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி உடல்/உளவியல் ரீதியாகவும் நம்மை பாதிக்கிறது என்றும் தெரியாது. உண்மையில், ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய சூட்சும அதிர்வலைகள் நம்மையும் நம் குடும்பத்தையும் பாதிக்கிறது.
அப்படியானால் நமது வீடு நேர்மறை அதிர்வலைகளோடு இருக்க நாம் எவ்வாறு அதை தூய்மைப்படுத்த வேண்டும்?
1.1 வாஸ்து சுத்தி என்பதன் பொருள்
வாஸ்து சாஸ்திரம் (கட்டிடக்கலை) போன்ற பண்டைய அறிவியலானது கட்டிடத்தில் எதிர்மறை அதிர்வுகளை குறைத்து நேர்மறை அதிர்வுகளை எவ்வாறு தக்கவைப்பது என்று மக்களுக்கு வழிகாட்டுகிறது. வாஸ்து சுத்தி (‘ஷுத்தி’ என்று உச்சரிக்கவேண்டும்) என்பது குறிப்பாக கட்டிடத்தை ஆன்மீகத்தூய்மைப்படுத்துவதைப் பற்றிய அறிவியலாகும்.
வாஸ்து சாஸ்திரம் (கட்டிடக்கலை) போன்ற பண்டைய அறிவியல் முறைகள் வீட்டிலுள்ள/ இல்லத்திலுள்ள எதிர்மறை அதிர்வலைகளை குறைத்து நேர்மறை அதிர்வலைகளை எவ்வாறு ஈர்க்க வேண்டும் என்று மக்களுக்கு வழிகாட்டுகிறது. குறிப்பாக வீட்டை/இல்லத்தை ஆன்மீக ரீதியாக தூய்மைப்படுத்துவதைப் பற்றிய அறிவியலாகும்.

இல்லத்தை ஆன்மீக ரீதியாக தூய்மையாக்க உதவும் வகையில் வாஸ்து சுத்தியைப் பற்றி தகவல் அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இது பண்டைய சமஸ்க்ருத நூல்களையும், பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலில் மஹரிஷி ஆன்மீகப்பல்கலைக்கழகம் நடத்திய ஆன்மீக ஆராய்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது.
2. என் வீட்டில் எதிர்மறை அதிர்வலைகள் இருப்பதை எவ்வாறு அறிவது?

ஒரு வீட்டிற்குள் நுழைந்தவுடன் சூட்சும அதிர்வலைகளை உணரமுடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இன்றைய காலத்தில், ஆன்மீக ரீதியாக தூய்மையற்ற அதிர்வலைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதோடு தீய சக்திகளின் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளதால், பெரும்பாலான வீடுகளில் ஓரளவிற்கு எதிர்மறை அதிர்வலைகள் இருக்கும். எனவே, வீட்டிலுள்ள தீயசக்திகளை அகற்ற தவறாமல் நடவடிக்கை எடுப்பது நல்லது.
“ஒரு இல்லத்தில் எதிர்மறை அதிர்வலைகள் உருவாக காரணம், கட்டிடத்தை விட அதில் வசிப்பவர்களின் ஆளுமைகள் மற்றும் அவர்கள் செய்யும் செயல்களே ஆகும்.” என்று எமது ஆன்மீக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது.
2.1 அளவுகடந்த ஆளுமை குறைபாடு மற்றும் அஹம்பாவம், அதிகளவு எதிர்மறை அதிர்வலைகளை உருவாக்குகின்றன.

வீட்டில் எதிர்மறை அதிர்வலைகள் இருப்பதற்கான முக்கிய காரணம்
அங்கு வசிப்பவர்களின் ஆளுமை குறைபாடுகளே ஆகும். அவர்களின் அதி தீவிரமான ஆளுமை குறைபாடுகளான கோபம், பேராசை, பொறாமை, பழியுணர்ச்சி போன்றவை தன்னையும் வீட்டைச் சுற்றியும் ஆன்மீக நிலையில் பாதகமான சூழலை உருவாக்குகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்கள் அந்த இடத்தில் நிறைந்து எதிர்மறைத்தன்மை அதிகமாகி சூட்சும உலகத்திலிருந்து தீயசக்திகளை ஈர்க்கின்றன.
2.2. தொடர் ஆன்மீக பயிற்சி செய்வதாலும், அவ்வாறு செய்யாதிருப்பதாலும் ஏற்படும் விளைவுகள்
ஒருவரது ஆளுமையை சிறந்ததாக மாற்ற உதவும் ஒரு வழி உலகளாவிய தத்துவங்களுக்கு இணங்க தொடர் ஆன்மீக பயிற்சி செய்வதாகும். அவ்வாறு செய்வதால் நேர்மறை ஆற்றலும் இறையருளும் ஈர்க்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலானோர் ஆன்மீக பயிற்சி செய்வதில்லை, குறைபாடுகளையும் அஹம்பாவத்தையும் களைவதில்லை. இதனால் அவர்களும் முன்னேறாமல் இல்லத்தின் சூழலையும் தாழ்வடையச் செய்கிறார்கள்.
2.3. இல்லத்தின் பயன்பாடு
ஒருவரது ஆன்மீகத் தூய்மை அல்லது ஸாத்வீகத்தை அதிகரிப்பதே ஆன்மீக பயிற்சி செய்வதன் மற்றொரு நன்மையாகும். ‘இனம் இனத்தோடு சேரும்’ என்று பழமொழிக்கேற்ப ஸாத்வீகமானவர்கள் ஸாத்வீக விஷயங்களைத் தேர்ந்தெடுத்து, ஸாத்வீகமான விளைவு ஏற்படும் வகையில் முடிவெடுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அறவழியில் இல்லத்தை பயன்படுத்துவார்கள். அதர்ம வழியில் இல்லத்தை பயன்படுத்துவது எதிர்மறையின் ஈர்ப்புக்கு வழிவகுக்கிறது.
இந்தியாவைச் சேர்ந்த உன்னத மகான் ஆதி சங்கராச்சாரியாரின் (8 - 9 -ஆம் நூற்றாண்டு) கூற்றுப்படி, தர்மம் என்பது 3 பணிகளை சாதிக்கின்றது:
- சமூக அமைப்பை சிறந்த நிலையில் வைத்திருத்தல்
- ஒவ்வொரு உயிரின் உலக முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்
- ஆன்மீக ரீதியிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.
- ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்
மற்றொரு மிக முக்கியமான செயல்முறையும், ஆன்மீக வளர்ச்சியுடன் நிகழ்கிறது. அதாவது ஒருவரது ஆறாவது அறிவு விழிப்படையத் தொடங்குகிறது. இதன் மூலம் அதிர்வலைகளை அவை நேர்மறையானவையோ அல்லது எதிர்மறையானவையோ அவற்றை ஒருவரால் உணரமுடிகிறது. இந்த நிலை அடைந்தவுடன், எதிர்மறை அதிர்வலைகளை வெளிப்படுத்துகின்றவற்றை அறிந்து அவற்றை முதலிலேயே தவிர்த்துவிடலாம். சுருக்கமாகச் சொன்னால், ஒருவர் அதிக ஸாத்வீகமான மற்றும் ஆன்மீக தூய்மையான வாழ்வு முறைக்கு ஈர்க்கப்படுகிறார்.
நாம் வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சமான ஸாத்வீக வாழ்க்கை முறையை கற்காததால், நாம் வசிக்கும் இடத்தைத் தேர்வு செய்யும் போது அறிவு சார்ந்தும் மற்றும் அழகியல் (aesthetics) அடிப்படையிலும் முடிவெடுக்கிறோம்.
2.4 வளாகத்தில் எதிர்மறை அதிர்வலைகள் இருப்பதற்கான சில பொதுவான அறிகுறிகள்
மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்களைத் தவிர, எதிர்மறை அதிர்வுகளின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஆதாரமாக இருக்கும் ஏராளமான விஷயங்கள் (ஒரு வீட்டில் வைக்கப்படும் போது) உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன
-
- அழுக்கு மற்றும் தூய்மையின்மை
- வீட்டில் பொருட்களை குவித்து குப்பை போல் வைத்திருத்தல்/ ஒழுங்கின்மை
- சுவற்றில் உள்ள ஓவியம் (ஓவியங்கள் பெரும்பாலும் எதிர்மறை அதிர்வுகளை வெளியிடுகின்றன)
- வீட்டில் எதிர்மறை அதிர்வலைகளை வெளியிடும் கலைப்பொருட்களை வைத்தல்
- மரச்சாமான்களை முறையற்ற முறையில் வைத்திருத்தல்
- துணிவிரிப்புகள், திரைச்சீலைகள், சுவரோவியம் போன்றவற்றின் வடிவமைப்பும் நிறமும்
- ஸாத்வீகமற்ற நிறங்களால் சுவர்களில் வண்ணம் தீட்டுதல் அல்லது வெள்ளைச் சுவர்கள் மற்றும் கருப்பு தரை போன்ற அதிக மாறுபாடு கொண்ட நிறங்களை பயன்படுத்துதல்.
- ஸாத்வீகமற்ற வடிவமைப்பு அல்லது நிறங்களை கொண்ட தரை ஓடுகளை அமைத்தல்.
- வளாகத்தில் ஒலிக்கும் இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் வகை (நேர்மறை அல்லது எதிர்மறையான ஒலி வளாகத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்).
- எந்த வகையான இறைச்சியையோ மற்றும் முட்டைகளையோ சமைப்பது (துர்நாற்றம் வீட்டின் அதிர்வலைகளை எதிர்மறையாக மாற்றும். இது வீடு எதிர்மறையாக மாறுவதற்கான மிக விரைவான வழிகளில் ஒன்றாகும்.)
வரும் முன் காப்பதே சிறந்தது. வீட்டில் எதிர்மறை அதிர்வலைகளை வரவிடாமல் தடுப்பது என்பது அவை மேலும் அதிக அளவு சேராமல் இருக்க பெருமளவு உதவுகிறது. மேலே குறிப்பிட்டவற்றைப் படித்த பிறகு எந்தெந்த பொருட்கள் எதிர்மறை அதிர்வலைகளை வெளிப்படுத்தும் என்று உடனடியாகத் தெரியாது. எதிர்மறை அதிர்வுகளை வெளியிடும் மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய சில பொருட்கள்/வீட்டு அலங்காரபொருட்களின் உதாரணங்களை கிழே கொடுத்துள்ளோம்.
3. ஆன்மீக முறையில் சுத்தப்படுத்துதல் அல்லது தூய்மைப்படுத்தும் வழி முறைகள் (வாஸ்து சுத்தி)
ஆன்மீக ஆராய்ச்சி மூலம், பல்வேறு பொருள்கள் மற்றும் ஒலிகளைப் பயன்படுத்தி ஒரு வளாகத்தை ஆன்மீக ரீதியாக சுத்தம் செய்ய உதவும் சில வழி முறைகளை நாங்கள் கண்டறிந்தோம். இவை எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த, அனைவராலும் பயன்படுத்தக்கூடியவை. இவற்றை அனைவரும் தங்கள் வீட்டு வளாகத்தை சுத்தம் செய்ய தவறாமல் பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஒருவர் ஆன்மீக பயிற்சி செய்து வந்தாலும் அதன் மூலம் பெறப்படும் மதிப்பு மிக்க சக்தி வீட்டிலுள்ள தீமையை எதிர்கொள்வதில் வீணாகாமல் இருக்க இந்த வழிமுறைகள் உதவுகின்றன. அவற்றை, அவை சார்ந்துள்ள பரிபூரண பிரபஞ்ச கொள்கைகளான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் படி தொகுத்துள்ளோம்.
3.1 பரிபூரண நீர் தத்துவத்தை பிரதானமாகக் கொண்டு ஆன்மீக ரீதியில் வீட்டை தூய்மைப் படுத்துதல்
1. தீர்த்தத்தை (நீரில் கலக்கப்பட்ட விபூதி) வீடு முழுவதும் தெளிப்பது (பரிபூரண நீர் மற்றும் நெருப்பு தத்துவத்துடன் தொடர்புடையது)

ஆன்மீக ரீதியில் வீட்டை தூய்மைப்படுத்த துளசி இலைகளால் தீர்த்தத்தை தெளிக்கவும்
- ஒரு கிண்ணம் நிறைய தண்ணீரில் சிறிதளவு விபூதியை சேர்க்கவும்.
- பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்யவும்.
- உங்கள் விரல் அல்லது துளசி இலைகளைக் கொண்டு கடவுளின் நாமஜபம் செய்தவாறு வீட்டைச் சுற்றி தெளிக்கவும். வீட்டின் மூலை முடுக்குகளில் கட்டாயம் தெளிக்கவும், அங்குதான் தீயசக்திகள் தேங்கும்.
- விபூதியை எவ்வாறு பெறுவது மற்றும் விபூதியிலிருந்து தீர்த்தத்தை தயாரிக்கும் முறையைப் பற்றி அறிய விபூதியிலிருந்து தீர்த்தம் என்ற கட்டுரையை படிக்கவும்.
2. கோமியம் (இந்தியப் பசுவின் சிறுநீர்) கலந்த தண்ணீர் தெளித்தல்

ஆன்மீக ரீதியில் உங்கள் வீட்டை தூய்மையாக்க சில துளிகள் கோமியத்தை தண்ணீரில் சேர்த்து பயன்படுத்தவும்.
மேலே சொல்லப்பட்ட முறைகளை பின்பற்றலாம். விபூதிக்கு பதிலாக சில துளிகள் கோமியத்தை சேர்க்கலாம். இது வலிமையான ஆன்மீகத் தூய்மையாக்கும் விளைவைக் கொண்டது.
கோமியத்தைப் பற்றி மேலும் பல தகவல்களை பெற இந்த வலைத்தளத்தை பார்வையிடவும்–
நாட்டுப் பசுக்களிடமிருந்து மட்டும் தான் கோமியத்தை பெறவேண்டும். பிற இனப் பசுக்களின் சிறுநீரில் அந்தளவு நிவாரணத்தின் விளைவு கிடையாது.
3.2 பரிபூரண நெருப்புத் தத்துவத்தை பிரதானமாகக் கொண்டு ஆன்மீக ரீதியில் வீட்டை தூய்மைப் படுத்துதல்
1. நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவது

உங்கள் வீட்டிற்குள் நேர்மறையை ஈர்க்கவும் வெளிப்படுத்தவும் நெய் விளக்கு ஏற்றுவது பழமையான வழிமுறையாகும்.
நாட்டுப் பசும்பாலிலிருந்து நெய் தயாரிக்கப்படுகிறது. நெய்யால் ஏற்றப்பட்ட விளக்கு தெய்வீக சைதன்யத்தை ஈர்த்து சுற்றுச்சூழலில் நேர்மறை ஆற்றலை வெளியிடுவதால் அந்த இடம் விரைவாக ஆன்மீக ரீதியில் தூய்மையடைகிறது. சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் நெய் விளக்கு ஏற்றுவது சிறந்தது. நெய் கிடைக்காவிட்டால் நல்லெண்ணெயை உபயோகிக்கலாம். இதுவும் ஆன்மீக ரீதியில் தூய்மையானது.
2. எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியை ஏற்றுதல்

ஊதுபத்தியை ஏற்றி உங்கள் வீட்டைச் சுற்றி காட்டுவதால் வீட்டிலுள்ள தீமை அழியும்
- எஸ்.எஸ்.ஆர்.எஃப் -இன் எந்த வகையான மணமுள்ள ஊதுபத்தியையும் எடுத்துக்கொள்ளவும்..
- ஒரே மணமுள்ள 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஊதுபத்திகளை ஏற்றவும்.
- பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்யவும்.
- ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று ஜபித்தவாறு (2025 வரை இந்த நாமம் தான் பரிந்துரைக்கப்படுகிறது) ஒளிரூட்டப்பட்ட ஊதுபத்தியை வீட்டைச் சுற்றி எடுத்துச்செல்லவும்.
- ஒளிருட்டப்பட்ட ஊதுபத்தியை கையில் ஏந்தியவாறு இடஞ்சுழியாக வீட்டைச் சுற்றி செல்லலாம். இவ்வாறு செய்வதால் இறைவனின் மாரக சக்தி செயல்படுகிறது. எதிர்மறை அதிர்வலைகளை இச்சக்தி வலுவிழக்கச் செய்கிறது. அழிக்கும் சக்தியானது இடஞ்சுழியில் (வலமிருந்து இடம்) சுற்றுகிறது. இவ்வாறு ஆன்மீக ரீதியாக தூய்மை செய்தால் பெருமளவு எதிர்மறை அதிர்வலைகள் அழியும்.
- வீட்டின் மூலை முடுக்குகளில் ஒளிருட்டப்பட்ட ஊதுபத்தியை 2-3 தடவை காண்பிப்பது அவசியம்.
- இப்படிச் செய்தபின் உங்கள் வீட்டின் பூஜை அறையில் அல்லது எங்கு தூய்மையாக்குவது அவசியமோ அங்கு ஊதுபத்தியை வைக்கலாம்.
அதிக தகவலுக்கு இக்கட்டுரைகளை படியுங்கள்:
எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளை சிறப்பாக பயன்படுத்தி அதிகபட்ச பலனை அடையும் முறை
ஏற்றிய பின்பு எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளை எவ்வாறு உபயோகிப்பது
பராத்பர குருவாகிய சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களின் சங்கல்பத்துடன் உருவாக்கப்பட்டதால், இந்த ஊதுபத்திகளைப் பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். பராத்பர குரு என்பவர் 90% மேற்பட்ட ஆன்மீக நிலை அடைந்தவராவார். கடைகளில் விற்கப்படும் ஊதுபத்திகளுக்கு வீட்டை ஆன்மீக ரீதியாக தூய்மை செய்ய போதிய ஆன்மீக சக்தி இல்லை.
3. விபூதியை ஊதுவது
பரிபூரண நெருப்பு மற்றும் பரிபூரண காற்றுத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது

விபூதியை ஊதுவதால் எதிர்மறை விலகும்
- உங்கள் உள்ளங்கையில் சிறிது விபூதியை எடுத்துக்கொள்ளவும்.
- பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்யவும்.
- ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று ஜபித்துக்கொண்டே வெளியேறும் வாயிலை நோக்கியவாறு விபூதியை ஊதவும்.
அதிக தகவலுக்கு இக்கட்டுரைகளை படியுங்கள்:
எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்தியின் மூலம் பெறப்பட்ட விபூதியை ஊதுதல்- நிவாரண சிகிச்சை
4. சாம்பிராணி மூலம் தூய்மையாக்குதல்
சாம்பிராணியின் புகையும் நறுமணமும் ஆன்மீக தூய்மையை தருகிறது
- ஒரு எஸ்.எஸ்.ஆர்.எஃப் சாம்பிராணியை ஏற்றி ஒரு தட்டில் வைக்கவும்.
- பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்யவும்.
- ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று ஜபித்துக்கொண்டே வீடு முழுவதும் அதை எடுத்துச்செல்லவும். அதன் புகை வீடு முழுக்க பரவவேண்டும், ஏனென்றால் அதன் புகையும் நறுமணமும் நிவாரணத்தை அளிக்கும். எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியைப் போலவே இடஞ்சுழியில் வீட்டைச் சுற்றி செல்லவும்.
- இப்படிச் செய்தபின் உங்கள் வீட்டின் பூஜை அறையில் அல்லது எங்கு தூய்மையாக்குவது அவசியமோ அங்கு சாம்பிராணியை வைக்கலாம்.
சுற்றுச்சூழலில் வாயு ரூபத்தில் சில நேர்மறை சக்திகள் உள்ளன என ஆன்மீக சாஸ்திரம் கூறுகிறது. சாம்பிராணியை ஏற்றுவதால் அதன் ஆன்மீக தூய்மையான நறுமணத்தால் இவை ஈர்க்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் தூய்மையடைவதால், இது வீட்டிலுள்ள தீயசக்திகள் வெளியேற்ற உதவியாக உள்ளது..
5. கற்பூரத்தை ஏற்றுதல்
பரிபூரண நெருப்பு மற்றும் பரிபூரண நிலத் தத்துவத்துடன் தொடர்புடையது (கற்பூரத்தை நுகர்ந்தால் பரிபூரண காற்று தத்துவ நிலையில் செயல்படும். கற்பூரத்தை ஏற்றும் போது பரிபூரண நெருப்பு மற்றும் பரிபூரண நிலத் தத்துவ நிலையில் செயல்படும்)

கற்பூரத்தை ஏற்றி வீடு முழுவதும் சுற்றி காண்பிக்கும்போது ஆன்மீக நிலையில் வளாகம் முழுவதும் தூய்மையாகிறது.
- கற்பூரத்தின் மணம் சிவ தத்துவத்தை ஈர்க்கிறது. கடவுளின் அழிக்கும் தத்துவத்துடன் தொடர்புடைய சிவபெருமான் ஆன்மீகத் தூய்மை அடைய உதவுகிறார்.
- ஏதேனும் ஒரு உலோகம் அல்லது மண் பாத்திரத்தை எடுத்து, அதில் சில கற்பூரத் துண்டுகளைப் போடவும். கவனம்: அந்தப் பாத்திரத்தில் கறை படியக்கூடும், எனவே அதற்கேற்ப பாத்திரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- பொதுவாகவே தூய்மையான பீமசேனி கற்பூரத்தை உபயோகிப்பது நல்லது. இது ஆன்மீக ரீதியில் தூய்மையானதாக இருப்பதால் அதிகளவு சிவ தத்துவத்தை ஈர்க்கிறது.
- பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்யவும்.
- கற்பூரத்தை ஏற்றி ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று நாமஜபம் செய்தவாறு வீடு முழுவதும் ஏந்திச்செல்லவும். அதன் புகை பரவட்டும், இதனால் வீடு தூய்மையாகும். கற்பூரம் எளிதில் தீப்பற்ற கூடியதாகையால் கவனத்தோடு உபயோகிக்கவும்.
- கற்பூரம் ஏற்றும் போது, அதன் தரத்திற்கற்ப கரும்புகை உருவாகும், அதனால் கவனமாக வீட்டைச் சுற்றி எடுத்துச்செல்லவும்.
- ஏற்றிய கற்பூரத்தை இடஞ்சுழியில் வீட்டைச்சுற்றி எடுத்துச் செல்லவும்.
6. அக்னிஹோத்ரம் செய்தல்

அக்னிஹோத்ரத்தினால் பல நன்மைகள் உண்டு, அவற்றில் ஒன்று செய்யப்படும் சூழலை தூய்மையாக்குவது
அக்னிஹோத்ரம் செய்வது எப்படி என்ற கட்டுரையைப் படிக்கவம்.
7. நாமப் பட்டிகளை பயன்படுத்துதல்
தெய்வங்களின் நாமத்தில் தெய்வீக சக்தி இருப்பதால் வளாகத்தில் நேர்மறைத்தன்மை உண்டாகிறது
தெய்வங்களின் சக்திகள் அவர்களின் பெயர்களுடன் தொடர்புடையவை. உயர்நிலை தெய்வங்களின் நாமப்பட்டிகளை ஒரு அறையில் குறிப்பிட்ட வரிசையில் குறிப்பிட்ட திசையில் வைத்தால் அவை சூட்சும நிலையில் வளாகத்தை பாதுகாக்கிறது. இப்படிச் செய்வதால் மேல் திசை, கீழ் திசையைச் சேர்த்து அனைத்து திசைகளிலிருந்தும் ஒரு வீடு பாதுகாக்கப் படுகிறது. கீழே குறிப்பிட்டுள்ளவாறு தெய்வங்களின் நாமப்பட்டிகளை, வீட்டின் கூரையோடு சுவர் இணையும் இடத்தில் வைக்கவேண்டும். இதனால் வீட்டைக் காக்கும் சூட்சும பாதுகாப்புக் கவசம் உருவாகிறது. சில திசைகளுக்கு ஒன்றிற்கு மேலான நாமப்பட்டிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை ஒரே திசையில் வைக்கவேண்டும்..
| திசை | தெய்வத்தின் நாமப்பட்டி |
|---|---|
| வடக்கு | ।। ஓம் ஓம் நம: சிவாய ।। (பகவான் சிவன்) |
| தெற்கு | ।। ஸ்ரீ குருதேவ தத்த ।। (தத்தாத்ரேயர்) மற்றும் ।। ஸ்ரீ கணேசா’ய நமஹ ।। (ஸ்ரீ கணபதி) |
| கிழக்கு | ।। ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் ।। (ஸ்ரீ ராம்), ।। ஓம் நமோ பகவதே வாசுதேவாய ।। (ஸ்ரீகிருஷ்ணன்) மற்றும் ।। ஸ்ரீ ஹனுமதே நமஹ ।। (ஸ்ரீஹனுமான்) |
| மேற்கு | ।। ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ ।। (ஸ்ரீ துர்கா தேவி) |
3.3 பரிபூரண ஆகாயத் தத்துவத்தை பிரதானமாகக் கொண்டு ஆன்மீக ரீதியில் வீட்டை தூய்மைப்படுத்துதல்
1. வெற்றுப்பெட்டிகள் மூலம் ஆன்மீக தூய்மை செய்தல்

வெற்றுப்பெட்டி நிவாரண முறையானது பரிபூரண ஆகாயத் தத்துவத்தின் சக்தியால் வீட்டிலுள்ள தீமையை உறிஞ்சி எடுக்கிறது.
- ஓரளவு பெரிய சுத்தமான வெற்று அட்டைப்பெட்டிகளை உபயோகிக்கலாம்.
- அறைகளின் மூலைகளில் பெட்டியின் உட்பகுதி அறையை நோக்கியும் பின் புறம் சுவற்றை நோக்கி இருக்குமாறும் வைக்கவும். ஒரு அறையின் நான்கு மூலைகளிலும் நான்கு பெட்டிகளை உட்பகுதி அறையின் மையத்தை நோக்கி இருக்குமாறும் வைக்கலாம்..
- பெட்டியின் வெற்றிடத்தில் உள்ள பரிபூரண ஆகாயத் தத்துவம் ஆன்மீக தூய்மை செய்ய உதவுகிறது.
- பெட்டிகளை தூய்மையாக்க வெயிலில் சில மணி நேரம் வைக்கலாம் அல்லது ஒளிரூட்டப்பட்ட ஊதுபத்தியை பெட்டிக்குள்ளே காண்பிக்கலாம்..
ஆன்மீக நிவாரண முறை | வெற்றுப்பெட்டி நிவாரணம் என்ற கட்டுரையை படிக்கவும்.
2. உயர்நிலை மகான்கள் அல்லது பராத்பர குருவின் வழிகாட்டுதல் ஒலி நாடா அல்லது பக்திப்பாடல்களை இசைத்தல்

ஸந்த் பக்தராஜ் மஹராஜ் மற்றும் சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே போன்ற உயர் நிலை மஹான்களின் குரலில் தெய்வீக சைதன்யம் நிறைந்துள்ளது. இது பரிபூரண ஆகாயத் தத்துவ நிலையில் வளாகத்தை சுத்தப்படுத்துகிறது.
- புனிதமான உயர்நிலை மகான்களின் குரலில் தெய்வ சைதன்யம் நிரம்பியுள்ளதால், அது வலுவான நிவாரண விளைவை ஏற்படுத்தும். பராத்பர குரு போன்ற மிக உயர்ந்த நிலை மகான்களின் குரல் மிகவும் சக்திவாய்ந்த குணப்படுத்தும் விளைவை உருவாக்குகிறது.
- ஒலி என்பது பரிபூரண பிரபஞ்ச தத்துவங்களுள் ஒன்றான சக்தி வாய்ந்த பரிபூரண ஆகாயத் தத்துவத்துடன் தொடர்புடையது. ஆகையால் ஒலியின் மூலம் ஆன்மீக நிவாரணம் துரிதமாகவும் பயனுள்ளதாகவும் நடக்கிறது.
- உயர் நிலை மகான்களால் எழுதப்பட்டு, இசையமைக்கப்பட்டு, பாடப்படும், எந்தவொரு பக்திப் பாடலும் அதிகப்படியான நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்துகின்றது..
- இத்தகைய ஒலிப்பதிவுகளை வீட்டில் ஒலிக்கச்செய்தால், அந்த இடத்தில் தெய்வீக சைதன்யம் பரவி, அங்கு குவிந்துள்ள கருப்பு சக்தியை அழிக்க உதவுகிறது..
- வழக்கமாக ஓரளவு சத்தமாக பாடல்கள் ஒலிக்கப்பட வேண்டும். இது முடியாதபோது குறைவான ஒலியிலும் இசைக்கப்படலாம். இரவு முழுவதும் இத்தகைய பாடல்களை இசைக்கச்செய்வதால் தொடர்ச்சியாக நேர்மறை சக்தியை வழங்கி, ஆன்மீக பாதுகாப்பை அளிக்கிறது..
- ஒரு நாளைக்கு குறைந்தது சில மணிநேரங்களாவது இவ்வொலியை இசைக்க பரிந்துரைக்கிறோம். இருப்பினும் இரவுபகல் முழுவதும் கூட ஒலிக்கலாம்.
ஸந்த் பக்தராஜ் மஹராஜ் பாடிய பக்திப்பாடல்களின் ஒலியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்க பாடல் 1, பாடல் 2, பாடல் 3, பாடல் 4, பாடல் 5
சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் ஆன்மீக பயிற்சியைப் பற்றி வழிகாட்டுதல் ஆடியோவை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
(இந்த ஒலி கோப்பு பற்றிய அதிக விபரங்களை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்க)
ஆன்மீகத்தைப் பற்றி சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலேயின் ஒலியை குறித்து சில புள்ளிகளும் விமர்சனமும்
ஒரு மகானின் குரலில் பதிவிடப்பட்ட தெய்வங்களின் நாமத்தை நீங்கள் இசைக்கலாம். பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்க
3. சங்கு ஊதுதல்
சங்கொலி தீயசக்திகளை அழித்து நேர்மறை சக்தியை பெற வழி வகுக்கிறது
சங்கின் ஒலி சுற்றுச்சூழலில் உள்ள எதிர்மறை அதிர்வலைகளை அழித்து சுற்றுச்சூழலை ஆன்மீக தூய்மையாக்கும் திறன் கொண்டது. சங்கு மூன்று முறை முழங்கப்படும்போது, தீயசக்திகளின் செயல்பாடு குறைந்து பாதுகாப்பு கவசம் உருவாகும். சுற்றுச்சூழல் தூய்மையாவதால் அங்குள்ளவர்கள் அதிக அளவு நேர்மமறைத் தன்மையை உணர்கிறார்கள். அதோடு ஆன்மீக பயிற்சி செய்யும் ஸாதகர்கள், தங்கள் ஆன்மீக பயிற்சியிலிருந்து பெரும் ஆன்மீக நன்மைகளை, சூழலில் உள்ள தீமையை எதிர்த்து போரிட செலவழிக்காமல் அதிக பட்ச பலனை அடைகிறார்கள். காலை குளித்த பிறகும் மாலை சூரிய அஸ்தமனத்திலும் சங்கை ஊதலாம்..
சங்கு முழங்குவதன் ஒலியை இங்கே பதிவிறக்கம் செய்க.
4. தெய்வங்களின் படம் மற்றும் வீட்டில் பூஜை அறை

வீட்டில் பூஜை அறை இருப்பது தொடர்ந்து நேர்மறையை அளிக்கிறது
- வீட்டில் பூஜை அறை இருந்தால் ஸாத்வீகமும் ஆன்மீக தூய்மையும் வளரும்.
- ஆன்மீக பயிற்சியை அதிகரிக்க இது நினைவூட்டுகிறது.
- ஆனால் அதை நன்கு பராமரித்து வழக்கமான பூஜைகளை (சுத்தம் செய்வது, விளக்கும் ஊதுபத்தியும் ஏற்றுவது, பூக்கள் வைப்பது, தெய்வங்களை வணங்குவது) தினசரி செய்யவேண்டும். குறைந்தபட்சம் தினசரி தூய்மைப்படுத்தி விளக்கேற்றி வணங்கவேண்டும்.
- அதிகமான தெய்வங்களின் படங்களை வைக்கக்கூடாது. அதிகபட்சம் 4-5 தெய்வங்களின் படங்கள் வைப்பது நல்லது. சீடனாக ஒரு ஸாதகர் இருந்தால் பொதுவாக அவரது குருநாதரின் ஒரு படம் மட்டுமே இருக்கவேண்டும்.
3.4 ஸாத்வீகமான அல்லது ஆன்மீக ரீதியில் தூய்மையான தாவரங்கள்

துளசி மிகவும் ஆன்மீக ரீதியாக தூய்மையான தாவரங்களில் ஒன்றாகும், மேலும் இது நேர்மறையை வெளிப்படுத்துகிறது.
- துளசி மிகவும் ஸாத்வீகமானது.
- துளசி சுற்றுச்சூழலில் தொடர்ந்து நேர்மறையைப் பரப்பும் திறனைக் கொண்டுள்ளது. ஆன்மீக உணர்வுடைய ஒரு ஸாதகர் இதை பராமரித்து தினமும் நீரூற்றினால் அதிக அளவு நேர்மறையை வெளியிடும்..
4. எதிர்மறையான அதிர்வலைகளை அகற்றாவிட்டால் என்ன நேரிடும்?
வாஸ்து சுத்தியைப் பற்றி அறியாதவர்கள் அதன் முக்கியத்துவத்தையும் தீவிரத்தையும் அறியமாட்டார்கள். இதை கடைபிடிக்கவிட்டால் பல தீய விளைவுகள் ஏற்படலாம் என ஆன்மீக ஆராய்ச்சி கூறுகிறது. இவை ஆன்மீக நிலையில் மட்டுமின்றி ஸ்தூல மற்றும் உளவியல் நிலையிலும் நம்மை பாதிக்கும். வீட்டில் தீயசக்திகள் இருப்பதால் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளை நாங்கள் கீழே பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியல் உங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் பற்றிய ஒரு யோசனையை வழங்குவதற்காக மட்டுமே. இது எந்த வகையிலும் முழுமையானது அல்ல.
| நிலை | பிரச்சனைகள்/தடங்கல்கள் |
|---|---|
| ஸ்தூல | சோர்வு, சோம்பல், உடல்நலக் குறைவு, உணவும் நீரும் குறைந்த ஆன்மீக ஆற்றலை பெற்றிருப்பதால் எதிர்மறை ஒளிமண்டலம் ஏற்படுதல், தலை பாரம் மற்றும் தலைவலி, அதிக மயக்கம், குமட்டல், பொருளாதார இழப்பு, வீட்டில் பொருட்கள் உடைவதும் கருவிகள் செயலற்று போவதும், மற்றும் செயல்களில் தடங்கல் ஏற்படுதல் |
| உளவியல் | எரிச்சல், எதிர்மறை எண்ணங்கள், தெளிவின்மை, மன குழப்பம், ஊக்கமின்மை, அதிகளவு காம எண்ணங்கள், மன அழுத்தம், குடும்ப சண்டை, படிக்கவோ அல்லது கவனம் செலுத்தவோ இயலாமை, அதிக கோபம், போதை பழக்கங்களுக்கு உகுந்த சூழல் ஏற்படுதல். |
| ஆன்மீகம் | தீய சக்திகளின் தாக்குதல்கள், பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் எதிர்மறை விளைவுகள் அதிகரிப்பது, தீய சக்திகளின் இருப்பை உணர்வது, நாமஜபம் மற்றும் ஆன்மீக பயிற்சியிலும் தடைகள், உலக வாழ்க்கையின் மீது பற்று அதிகரிப்பது, ஆன்மீக பயிற்சி, குரு அல்லது ஆன்மீக வழிகாட்டி மீது சந்தேகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு தீமை ஏற்படுதல், அகால மரணம் நிகழ அதிக வாய்ப்பு. |
5. வாஸ்து சுத்தி செய்வதன் நன்மைகள்
வாஸ்து சுத்தி செய்வது வீட்டை ஆன்மீக ரீதியாக சுத்தம் செய்வது போன்றது. இது வீட்டிற்குள் நேர்மறை சக்தி வர அனுமதிக்கிறது. இதனால் வீட்டில் உள்ள அனைவரும் ஸ்தூல, உளவியல் மற்றும் ஆன்மீக நிலையில் பயனடைகிறார்கள். வீட்டில் தடைகள் குறைந்து, நோய்கள் குறைந்து, குடும்ப உறுப்பினர்களுள் அதிக நல்லிணக்கம் ஏற்பட்டு. குடும்பத்தினுள் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவுகிறது. எமது ஆன்மீக ஆராய்ச்சி கூறுவது என்னவென்றால் வீட்டில் வசிப்பவர்கள் ஆன்மீக பயிற்சி செய்வதோடு வாஸ்து சுத்தியும் செய்தால் வீட்டிலும் அதைச் சுற்றி உள்ள பகுதியிலும் உள்ள மண் மற்றும் நீரின் ஒளிமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றை நேர்மறையாக மாற்றுகிறது.

