குடியிருக்கும் வளாகத்தில் (வீட்டில்) ஆன்மீக அதிர்வுகளை மேம்படுத்துவதற்கான நடைமுறை குறிப்புகள்

Practical tips to improve spiritual vibrations at home

இந்த கட்டுரையைப் படிப்பதற்கு முன், பின்வரும் கட்டுரைகளை நீங்கள் நன்கு படித்து விஷயத்தை அறிந்துகொள்ள நாங்கள் பரிந்துரைக்கிறோம்:

1. அறிமுகம்

வளாகத்தைப் பற்றிய எங்களுடைய முந்தைய கட்டுரையில், வெற்று வளாகத்தில் அதிர்வலைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும், அதன் ஸ்தூல பண்புகள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் நாம் அனுபவிக்கும் அதிர்வலைகளின் வகையை எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பதையும் கற்றுக்கொண்டோம்.

இக்கட்டுரையில், ஒரு வளாகத்தில் உள்ள கஷ்டம் தரும் அதிர்வலைகளைக் குறைத்து இனிமையானவற்றை அதிகரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய நிவாரணங்களைப் பற்றி மேலும் படிக்கலாம். உதாரணமாக, நம்மில் பலர் அசுத்தமான சூழலில் இருப்பதை விட சுத்தமான சூழலில் சிறப்பாக செயல்படுவதை காண்கிறோம். இதன் காரணமானது அசுத்தமான சூழ்நிலையை விட தூய்மையான சூழலில் ஆன்மீக அதிர்வலைகள் அதிகமாக இருப்பதன் நேரடி விளைவினாலேயே ஆகும்.

இங்கு, நாம் குடியிருக்கும் வளாகத்தில்(வீட்டில்) நல்ல அதிர்வலைகளை அதிகரிப்பதற்கு, ஆன்மீக அறிவியலில் (வாஸ்து சாஸ்திரம்) கூறியுள்ள சில நடைமுறை குறிப்புகளை உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

2. குடியிருக்கும் வளாகத்தில் (வீட்டில்) ஆன்மீக அதிர்வலைகளை மேம்படுத்துவதற்கான நடைமுறை குறிப்புகள்

2.1 எதிர்மறை அதிர்வுகளை ஈர்க்கும் தாமஸீக குணத்தின் பிரதான செயல்பாடுகளைத் தவிர்க்க;

குடியிருக்கும் வளாகத்தில் (வீட்டில்) எதிர்மறை அதிர்வுகளை குறைக்க தேவையான பல குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 • ஆவிகளை ஈர்க்கும் சடங்குகள் அல்லது விளையாட்டுகளை வீட்டில் பரிசோதனை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் இதைப்பற்றிய தகவல்களுக்கு ஒரு ஊடகம் அல்லது ஓஜா விளையாட்டுப்பலகை மூலம் ஆவிகள் அல்லது மறைந்த உறவினர்களை தொடர்புகொள்வது பற்றிய எங்கள் கட்டுரையைப் படிக்கவும்.
 • ஆன்மீக ரீதியில் குடியிருக்கும் வீட்டில் புகைபிடிப்பது மற்றும் மது அருந்துதல் ஆகிய இரண்டு பழக்கங்களையும் தவிர்ப்பது நன்மை பயக்கும். புகைபிடிக்கும் பழக்கம்  பெரும்பாலும் மறைந்த மூதாதையர்களின் சூட்சும உடல்களால் வீட்டில் கருப்பு சக்தியை பரப்ப தூண்டப்படுகிறது. மேலும் புகையில் ரஜ மற்றும் தமவின் குணங்கள் நிறைந்துள்ளதால் வீடு முழுவதும் அது கருப்பு சக்தியை பரப்புகிறது. மதுபழக்கத்திலும் ரஜதமவின் ஆதிக்கம் இருப்பதால்,வீட்டில் குடிக்கும்சமயம் மறைந்த மூதாதையர்களின் சூட்சும உடல்களையும் அவர்களின் கருப்பு சக்தியையும் அது ஈர்க்கிறது. கூடுதலாக, மது தீய சக்திகளை ஈர்த்து அதை சேமித்து வைத்துள்ள இடத்தையும் ஆன்மீக ரீதியில் மாசுபடுத்துகிறது. எனவே, வீட்டில் மதுவை வைக்காமல் இருப்பது நல்லது. பல்வேறு பானங்களின் ஆன்மீகத் தூய்மை பற்றிய தகவல்களுக்கு எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்.
 • தொலைக்காட்சி, தீய சக்தியை வீடு முழுவதும் பரப்புவதால், அதிக நேரம் அதை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொலைகாட்சி அணைக்கப்பட்டுருந்தாலும் அது எதிர்மறை அதிர்வலைகளை வெளியிடும் என்பதால், முடக்கப்பட்டிருக்கும் நேரம் அதை சுத்தமான ஸாத்வீக துணியால் மூடுவது நல்லது.
 • அதிக சத்தத்துடன் இசை கேட்பது சுற்றுச்சூழலில் தீய சக்திகளை ஈர்த்து பரப்புவதால் அதன் அதிர்வுகள் நீண்ட நேரம் வீட்டில் இருக்கும் எனவே வீட்டில் அதிக சத்தத்துடன் இசையைக் கேட்பதைத் தவிர்ப்பது நல்லது.
 • வீட்டில் சபித்தல் அல்லது வசை சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க எஸ்.எஸ்.ஆர்.எஃப் பரிந்துரைக்கிறது. இவை தீய சக்தியை ஈர்த்து பரப்புகிறது, ஒரு நபரின் எண்ணம், நோக்கம் மற்றும் அவர் உபயோகிக்கும் வார்த்தைகள் ஆன்மீக ரீதியாக சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன எனவே வசை சொற்களை அடிக்கடி பயன்படுத்துவது சிறந்தது அல்ல.

2.2 வீட்டில் நேர்மறையை( நல்லசக்தியை) வளர்க்க;

வீட்டில் அதிக நேர்மறையை(நல்ல சக்தியை) வளர்த்துக்கொள்ள பின்வரும் குறிப்புகளை நாம் செயல்படுத்தலாம்.

 • தூய்மை மற்றும் நேர்த்தியைப் பேணுதல்: “சுத்தம் இருக்கும் இடத்தில், கடவுள் இருக்கிறார்அல்லது ‘தூய்மை தெய்வீக்தின் அடுத்த படி’ என்ற பழமொழிக்கு ஏற்ப தூய்மையும், நேர்த்தியும் தெய்வீக குணங்களாகும். அசுத்தம் ரஜதமவின் அதிர்வுகளை வரவழைப்பதால் நம் வீடுகளை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகும்.
 • கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்திருத்தல்: பரிபூரண பிரபஞ்ச தத்துவம்(பஞ்ச பூதங்கள்) (பஞ்சதத்வா) தெய்வீக உணர்வுகளை (சைதன்யா) கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் உறுதியான வடிவத்தில் செயல்படுகின்றன. கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் இந்த, ஐந்து பிரபஞ்ச தத்துவங்கள் நமது உறுப்புகளில் ஆன்மீக நிவாரணம் செய்ய அனுமதிக்கின்றது, எனவே முடிந்தவரை கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைப்பது சிறந்தது.
 • வளாகத்தைச் சுற்றி தாவரங்களை  வளர்த்தல் : நிலமும் வளாகமும் ஆன்மீக அதிர்வுகளை வெளியிடுவது போல, வளாகத்தைச் சுற்றியுள்ள தாவரங்களும் வெவ்வேறு ஆன்மீக அதிர்வுகளை வெளியிடுகின்றன. சில தாவரங்கள் மற்றவற்றை விட அதிக ஸாத்வீக அதிர்வுகளை வெளியிடுகின்றன, எனவே இந்த ஸாத்வீக தாவரங்களை நடுவது வளாகத்தை(வீட்டை) ஆன்மீக ரீதியில் தூய்மையாக்குகிறது. துளசி, செவ்வந்திப்பூ, செம்பருத்தி மற்றும் வாழை மரம் ஆகியவை ஸாத்வீகத் தாவரங்களின் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். முடிந்த வரை,  ஸாத்வீகத் தாவரங்களை வளாகத்தைச் சுற்றி வளர்ப்பது  அல்லது  வரவேற்பறையில் வீட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
 • கிழக்குமேற்கு திசையை நோக்கிய பீடம்: ஒருவர் வீட்டில் பூஜை அறை(அல்லது கடவுளின் படம் வைக்கும் இடத்தை) வைத்து இருந்தால் அதை  கிழக்குமேற்கு திசையை நோக்கி வைப்பது சிறந்தது. ஒவ்வொரு நாளும் சூரியன் வானில் கிழக்கில் இருந்து மேற்கே செல்லும் போது தெய்வீக அதிர்வலைகளை வெளியிடுகிறது. இந்த அதிர்வலைகள் கிழக்குமேற்காக வைக்கப்பட்ட பூஜை அறையில் சிறப்பாக ஈர்க்கப்படும்.

3. ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவம்

பின்வரும் அட்டவணை வீட்டில் ஆன்மீக அதிர்வுகளை மேம்படுத்துவதில் பல்வேறு தீர்வுகளின் ஒப்பீட்டு முக்கியத்துவத்தை வழங்குகிறது.

நிவாரணம் முக்கியத்துவம்  %
வளாகத்தில் வசிப்பவர்களின் ஆன்மீக பயிற்சி 30%
வளாகத்தில் வசிப்பவர்கள் நேர்மறையான எண்ணமுடையவராக இருப்பின்(மகிழ்ச்சியான ஆளுமை திறனுடையவராக இருந்தால்) 30%
வளாகத்தை சுத்தம் செய்வதற்கான சடங்கு முறைகள் 14%
மகான்களின் வருகை 10%
கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைத்திருத்தல் 2%
ஒரு வளாகத்தின் சூட்சும அதிர்வுகளுக்கு பங்களிக்கும் வளாகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குதல் 2%
ஓஜாபலகை ( ஆவிகளை தொடர்பு கொள்வதற்கு ) போன்ற தீய சக்திகளுடன் தொடர்பு கொள்ளும்  பரிசோதனை செய்யாமல் இருத்தல் 2%
மற்றவை  (துளசி போன்ற ஸாத்வீக செடிகளை வளர்ப்பது) 10%
100%

மேலே உள்ள அட்டவணையில் இருந்து நாம் பின்வரும் முடிவுகளை எடுக்கலாம்:

 • ஒரு வளாகத்தின் ஆன்மீக அதிர்வுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுள் ஒன்றான கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைப்பதில் சில வரம்புகள் இருந்தாலும், இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதும் முக்கியமாகும்.
 • ஒரு வளாகத்தில் வசிப்பவர்கள் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியான ஆளுமை கொண்டிருக்க வேண்டும். இது இல்லாத இடங்களில், அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்யலாம். இந்த விஷயத்திலும் ஆன்மீக பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
 • நமது ஆன்மீகப்பயிற்சி முறையாகவும், நிலையாகவும் இருக்கவேண்டும்.இது ஆனந்த அனுபவத்தைத் தருவதோடு, நம் வீட்டின் ஆன்மீக அதிர்வுகளிலும் மாற்றம் விளைவிக்கின்றது. மகான்கள்  வசிக்கும் இடங்களில் மிகவும் இனிமையான அதிர்வலைகள் உள்ளன. இது அவர்களின் தீவிர ஆன்மீக பயிற்சியின் விளைவால் ஆகும்.

4. சுருக்கமாகவீட்டிற்கான வாஸ்துசாஸ்திரம் மற்றும் ஆன்மீக அறிவியல்

ஆன்மீகம் மற்றும் வாஸ்துசாஸ்திர அறிவியல் கூறிய அறிவுரைகளை செயல்படுத்துவதன் மூலம் எதிர்மறை அதிர்வுகளைத் தவிர்த்து, சில நேர்மறையான ஆன்மீக அதிர்வுகளை நம் வீட்டிற்குள் ஈர்ப்பதை உறுதிசெய்ய முடியும். இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைக் குறிப்புகளை வீட்டிற்கு மட்டுமல்ல, அலுவலகங்கள், கடைகள் போன்ற எந்த வளாகத்திலும் செயல்படுத்தினால், அது  ஆன்மீகத் தூய்மை அடைய உதவியாக  இருக்கும்.

மறுபுறம், ஆன்மீக பயிற்சி, நமது ஆளுமையை நல்லமுறையில் வடிவமைத்து,நமது வீட்டின் ஆன்மீக அதிர்வுகளை கணிசமாக மேம்படுத்துகிறது. இது தவிர, ஒரு வளாகத்தில் உள்ள இனிமையான மற்றும் விரும்பத்தகாத அதிர்வுகளை உண்மையில் அடையாளம் காணவும், அந்த அனுபவங்களுக்கான ஆன்மீக காரணத்தை புரிந்து கொள்ளவும் ஆன்மீக பயிற்சி நமக்கு உதவுகிறது.