
உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது.
வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
அட்டவணை
1. எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்திகளை பயன்படுத்தி கையாளும்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
• தெய்வ தத்துவத்தை ஈர்க்கும் தன்மையை அதிகரித்தல் :
ஏற்றிய எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியின் முதன்மை பலனானது அதிலிருந்து வெளிப்படும் நறுமணத்தால் ஈர்க்கப்படும் ஒரு குறிப்பிட்ட தெய்வ அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே இந்த தெய்வீக தத்துவத்தை ஈர்க்க எடுக்கும் அனைத்து முயற்சிகளும் மேலும் நன்மை பயக்கும்.
- எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்தியை ஏற்றுபவரின் மனதில் பயபக்தி எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அதற்கேற்ப பெறும் நன்மையும் அதிகரிக்கின்றது. இந்த பயபக்தி உணர்வின் வழி கிடைக்கும் நிவாரண ஆற்றல் சுற்றியுள்ளவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இருக்கும்.
- நம் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். சுத்தமான வீட்டில் ரஜ-தம குறைவாக இருக்கும். இது இரண்டு வழிகளில் உதவுகின்றது. வீட்டின் சூழலில் ரஜ-தம குறைவாக இருப்பதால், தெய்வ தத்துவம் அதிகமாக ஈர்க்கப்படுகின்றது. மேலும், ஈர்க்கப்பட்ட தெய்வ தத்துவத்தை எதிர்த்து போராட அங்கே குறைந்த ரஜ-தம அதிர்வலைகளே உள்ளதால், அந்த நபருக்கும், வாஸ்துவுக்கும் தெய்வீக சைதன்யத்தால் அதிக பலன் கிடைக்கின்றது.
• ஊதுபத்தி தாங்கிகள்(ஸ்டாண்ட்) :
பயபக்தி, பாதுகாப்பு மற்றும் எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்திகளின் விபூதியை சேகரிப்பது என்ற மூன்று கண்ணோட்டங்களிலிருந்து பார்க்கும்பொழுது, ஒரு சரியான ஊதுபத்தி தாங்கி அல்லது ஒரு ஸாத்வீகமான தாங்கியை உபயோகிப்பது சிறந்ததாகும்.

- பயபக்தியின் கண்ணோட்டதிலிருந்து : சிலர் ஊதுபத்திகளை சுவற்றின் விரிசல்கள் மற்றும் பிளவுகளில் ஏற்றுகின்றனர். ஆன்மீக ரீதியாக இது சரியல்ல. மேலும், ஊதுபத்தியிலிருந்து கிடைக்கும் சாம்பல்(விபூதி) நிலத்தில் விழுந்து மற்றவர் காலில் மிதிபடலாம். இது விபூதியை அவமதிப்பதாகும். ஊதுபத்தி தாங்கி மற்றும் அதனடியில் ஒரு தட்டை வைப்பதே ஊதுபத்தி எரிந்த பிறகு கிடைக்கும் விபூதியை சேகரிக்க சிறந்த வழியாகும். விபூதியை சேகரிக்க வேண்டாமென்றால், பழங்கள்(உதாரணத்திற்கு, ஆப்பிள்), உருளைக்கிழங்கு, தானியம் கொண்ட கிண்ணங்கள் போன்ற ஸாத்வீகமான தாங்கிகளை பயன்படுத்தலாம்.
- பாதுகாப்பின் கண்ணோட்டதிலிருந்து : கம்பளம் அல்லது துணியில் சாம்பல் விழுவது தீ விபத்தை ஏற்படுத்தலாம். ஆகையால், விழும் சாம்பலை சேகரிக்க ஒரு தட்டை உபயோகிப்பது பரிந்துரைக்கப்படுகின்றது.
• சேகரித்து வைத்தல்
எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்திகள் முதன்மையாக ஆன்மீக நிவாரணத்தின் கண்ணோட்டத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், ஊதுபத்திகளை வீட்டின் உள்ளே, பூஜையறையில் (ஈரப்பதம் இல்லாத இடத்தில்) வைப்பது சிறந்ததாகும். ஊதுபத்திகளின் ஸாத்வீகத் தன்மையை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கத்திற்காக இது பரிந்துரைக்கப்படுகிறது.
1.2 செய்யக்கூடாதவை
• மாதவிடாய் காலத்தில்
மாதவிடாய் காலத்தின் ஐந்து தினங்களில் அல்லது இரத்தப்போக்கு தொடரும் வரை, ஒரு பெண்ணின் சூட்சும அடிப்படையான ராஜஸீக தன்மை அதிகரிக்கின்றது. ஆகையால், மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் ஊதுபத்திகளை தொடும்போது, அவற்றின் ஆன்மீகத்தூய்மை அல்லது சூட்சும அடிப்படையான ஸாத்வீகத்தன்மை குறைகின்றது. மேலும், மாதவிடாய் காலத்தில் ஊதுபத்திகளை ஏற்றுவதோ அல்லது அவற்றை வாஸ்துசுத்தி செய்வதற்காக வீட்டைச் சுற்றி (வீட்டின் உள்ளே) எடுத்துச் செல்வதோ சிறந்ததல்ல.
எனினும், ஒரு பெண் தனியாக இருக்கும் பட்சத்தில், மாதவிடாய் காலத்தில் உபயோகிப்பதற்காக சில ஊதுபத்திகளை முன்பே எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதனால் அவர் இக்காலத்தில் ஊதுபத்திகளின் கையிருப்பை தொடவேண்டியதில்லை மேலும் கையிருப்பை தொடும் போது ஏற்படும் ஆன்மீகத்தூய்மையின்மையையும் குறைக்க முடியும்.
2. நம்மிடம் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்திகளின் கையிருப்பை எவ்வளவு காலம் வரை உபயோகிக்கலாம்?
எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்திகளை இரண்டு வருடங்கள் வரை உபயோகிக்கலாம். காலப்போக்கில் நறுமணத்தின் வீரியம் குறைந்து விடுவதால், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இவற்றைப் பயன்படுத்துவது சிறந்ததாகும். ஊதுபத்திகளின் கையிருப்பை பூஜையறை போன்ற ஆன்மீகரீதியில் தூய்மையான இடத்தில் வைப்பது பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனென்றால், ஊதுபத்திகளை வீட்டில் வேறு இடங்களில் வைப்பதால் இவற்றின் மீது கருப்பு சக்தி படலம் உருவாகும் வாய்ப்புள்ளது.
ஊதுபத்திகளின் ஆன்மீக நிவாரணமளிக்கும் வீரியத்தைக் குறைக்க, ஆவிகள் இவற்றின் மீது கருப்பு சக்தி படலத்தை உருவாக்கலாம். இதனைக் குறைக்க சிறந்த வழி, ஊதுபத்திகளை பூஜையறையில் வைத்து அவற்றின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாகும். மேலும், உபயோகிப்பதற்கு முன்பு ஒவ்வொரு முறையும், ஏதாவது கருப்பு சக்தி படலம் உருவாகியிருந்தால் அதனை அழிக்குமாறு பிரார்த்தனை செய்யலாம்.
3.ஆன்மீக நிவாரணத்திற்காக எஸ்.எஸ். ஆர்.எஃப் அட்டைப்பெட்டியைப் பயன்படுத்துவது
எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்தியின் அட்டைப்பெட்டியில் உள்ள கலைப்படைப்பில் அடிப்படை சூட்சும ஸத்வ கூறுகள் அதிகமான அளவில் உள்ளன. இந்த கலைப்படைப்புகளின் ஆன்மீகத் தூய்மை சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது. மேலும், இந்த அட்டைப்பெட்டிக்குள் எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்திகள் உள்ளதால், இதன் ஸாத்வீகத்தன்மை மேலும் அதிகரிக்கின்றது. மிக முக்கியமாக, சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் வெளிப்படாத ஸங்கல்பமும், இதனுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே, இந்த அட்டைப்பெட்டியே மிகவும் ஸாத்வீகமானது மற்றும் இதனை மட்டுமே ஆன்மீக நிவாரணமளிக்கும் கருவியாகவும் பயன்படுத்தலாம்.
இந்த கண்ணோட்டத்தின்படி, எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்தியின் அட்டைப்பெட்டியை அலமாரிகள், பீரோக்கள் போன்ற இடங்களில் வைக்கலாம். இதைத் தட்டையாக்கி, மெத்தை, தலையணைகள் போன்றவற்றின் கீழ் வைக்கலாம். இந்த எல்லா பொருட்களும் மற்றும் இந்த பொருட்களின் தொடர்பில் வரும் மக்களனைவரும் அட்டைப்பெட்டியின் ஸாத்வீகத்தால் பயன் பெறுகின்றனர்.