அதிகப்படியான நெஞ்செரிச்சல் மற்றும் பசி வேதனைக்கான ஆன்மீக நிவாரணம்

1. அதிகப்படியான நெஞ்செரிச்சல் மற்றும் பசி வேதனையின் ஆரம்ப அறிகுறிகள்

2000ஆம் ஆண்டில், இரவில் குளிர்ந்த பாலுக்கான ஒரு தீவிர வேட்கையால் உந்தி தள்ளப்பட்டு உறக்கத்திலிருந்து எழத் தொடங்கினேன். எனக்கு பால் ஒவ்வாமை (lactose intolerance) இருந்ததால் பல ஆண்டுகளாக பால் குடிப்பதைத் தவிர்த்து வந்த நான் இந்த மாற்றத்தால் அதிர்ச்சியடைந்தேன். இது ஒரு வாரம் தொடர்ந்தது. பின்னர் எனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இது கடந்த காலங்களில் நான் பால் அல்லது பால் பொருட்கள் சாப்பிட்டால் ஏற்படும். இத்தருணங்களில் சிறிய அளவில் என்னால் பொறுத்துக் கொள்ளக்கூடிய ஒரே விஷயம், புதிதாகத் தயாரிக்கப்பட்ட இயற்கையான இனிப்பு தயிரை உட்கொள்வது மட்டுமே. இரவில் பால் சாப்பிடுவது ஒரு வழக்கமான செயலாக மாறியது, விரைவில் பசியைத் தடுக்க இன்னும் கணிசமான உணவை சாப்பிட விரும்பினேன். நான் சப்பாத்தி மற்றும் பழங்களை பாலுடன் சாப்பிடுவேன். படிப்படியாக பசி அதிகரித்தது, கடுமையான பசியின் காரணமாக நான் எல்லா நேரங்களிலும் எழுந்திருக்க ஆரம்பித்தேன். இது மிகவும் விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது, ஏனெனில் நான் இதற்கு முன்பு இது போன்ற எதையும் அனுபவித்ததில்லை. இப்போது எனக்கு மாமிச உணவுக்கான தீவிர இச்சையும் உண்டாகி இருந்தது. 1980 முதல் மாமிச உணவை நான் முற்றிலுமாக கைவிட்டிருந்தேன். எனவே என்னால் சகிக்க(ஆசையில்லாத) முடியாத உணவை சாப்பிட்டேன். நான் வழக்கமாக சாப்பிடும் பொருட்களை சாப்பிட முடியவில்லை.

என் வயிற்றில் அமிலத்தன்மையின் அளவு அதிகரித்து வருவதையும் என் எடை கூடிக்கொண்டே இருந்ததையும் உணர்ந்தேன். என் சருமம் மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக மாறியது; குடை இல்லாமல் சூரிய ஒளியில் கால் வைக்க முடியவில்லை. நான் எதிர்கொண்ட மற்றொரு விசித்திரமான அறிகுறி என்னவென்றால், நான் குடிக்கும் நீரின் சுவை எப்போதும் கசப்பாக இருந்தது. பல உணவுகளுக்கு ஒவ்வாமை அதிகரித்து, அது தொடர்ந்து நீடித்தது. படிப்படியாக என்னால் வழக்கமான அன்றாட உணவை உண்ண முடியவில்லை. எந்த வடிவத்திலும் கோதுமைப் பொருட்களை சாப்பிடுவது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில், எனக்கு மிகவும் மோசமான இருமல் ஏற்பட்டது. எந்த மருந்தும் உதவவில்லை.

2. எனது நெஞ்செரிச்சல் மற்றும் பசி பிரச்சனை குறித்து மருத்துவர்களின் கருத்துக்கள்

நான் எனது மருத்துவர்களை அணுகியபோது, ​​அதற்குக் காரணம் பின்வருமாறு இருக்கலாம் என்று அவர்கள் நினைத்தனர்:

  1. மாதவிடாய் நிறுத்தத்தின் தொடக்கம்
  2. அதிக மன அழுத்தம்
  3. பெருங்குடல் அழற்சி அல்லது புண்களின் நீண்டகால பாதிப்பு

கடந்த 13 வருடங்களில் நான் 17 மருத்துவர்களை அணுகியுள்ளேன், ஒவ்வொரு முறையும் எனது முழு மருத்துவ வரலாற்றையும் அவர்களிடம் விவரிப்பேன். அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் என எதனாலும் எனக்கு உதவ முடியவில்லை. மேலும் மருத்துவர்கள் என்னை குணப்படுத்த இயலாத நிலையையும், தங்கள் இயலாமையையும் வெளிப்படையாக தெரியப்படுத்தினர். ஒவ்வொரு முறையும், நான் அதிக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டேன். பல்வேறு நோயியல் ஆய்வகங்களில் சோதனைகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டன. ஒருவரின் ஒளிமண்டலத்தை ஆராய்ந்து பிரச்சனையை கண்டுபிடிக்க முடியும் என்று ஒருவரிடமிருந்து நான் கேள்விப்பட்டேன். ஆனால் அவ்வாறு ஆராய்ச்சி செய்பவராலும் எனது பிரச்சனை என்னவென்று சொல்ல முடியவில்லை. எனக்கு பேரியாட்ரிக் (Bariatric) அறுவை சிகிச்சை கூட பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இது தீர்வாகாது என்று எனக்குத் தெரியும். உண்மை என்னவென்றால், மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எல்லா மருந்துகளும் அவற்றை எடுத்துக் கொண்ட 15 நிமிடங்களுக்குள் வயிற்று வலி மற்றும் மிகுந்த பசியைத் தூண்டின. அதைத் தொடர்ந்து அதிக நெஞ்செரிச்சல் ஏற்பட்டது. நெஞ்செரிச்சல் பசியை மேலும் அதிகரித்தது; இதனால் நான் மறுபடியும் அதிகமாக சாப்பிட்ட போது, ​​எனக்கு அதிக நெஞ்செரிச்சல் ஏற்படும். இந்த தீய சுழற்சி தொடர்ந்தது. நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் தர வேண்டிய மருந்துகள் சிறு துளி கூட உதவவில்லை.

என்னுடைய மாதவிடாய் நிறுத்தத்தின் ஆரம்பத்திலேயே என்னுடைய மகளிர் மருத்துவ நிபுணர் எனக்கு உண்டான ஒரு மனநல மதிப்பீட்டை பெற சொல்லியிருந்தார். இந்த கடினமான ஆண்டுகளில், மன சிகிச்சையாளரிடம் நான் பேசும்போது அவர் எனக்கு மனச்சோர்வு இல்லை என்று சொன்னார். ஆனாலும் அவரால் எனக்கு உதவ முடியவில்லை.

3. அதிக எடை நிலைமையை மேலும் சிக்கலாக்கியது

இப்போது என் எடை 84 கிலோ. என் வாழ்க்கையில் இந்த பாதகமான கட்டத்திற்கு முன்பு, என் எடை 48-50 கிலோ மட்டுமே. என் எடையைக் குறைக்கும் முயற்சியில், நான் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் சீரான வேகத்தில் நடந்தேன். என் இயன் மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) மற்றும் உடற்பயிற்சி நிலைய பயிற்றுவிப்பாளர் பரிந்துரைத்த அனைத்து பயிற்சிகளையும் செய்தேன். இதனுடன் நான் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தேன். அதிகரித்து வரும் வலிகள் இருந்தபோதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன்.

எடை அதிகரித்ததால், என் மூட்டுகளில் வலி ஏற்படத் தொடங்கியது. படிப்படியாக மூட்டுகளில் வலி மிகவும் தீவிரமடைந்ததால், மருத்துவர் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு நடக்க மட்டுமே சொன்னார். மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இவை அனைத்தும் எனக்கு என்ன விளைவை ஏற்படுத்தின என்பதை ஒருவர் அனுமானிக்க இயலும்.

4. அக்குபஞ்சர் சிகிச்சையால் ஏற்பட்ட தற்காலிக நிவாரணம், அதைத் தொடர்ந்து நெஞ்செரிச்சல் பிரச்சனை மேலும் அதிகரித்தல்

இறுதியாக 2012 ஆம் ஆண்டு, ஒரு அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவர்) நிபுணரை அணுக முடிவு செய்தேன். மகளிர் மருத்துவ நிபுணர் நாளமில்லா சுரப்பி அமைப்பை (endocrine system) தொந்தரவு செய்யும் எதையும் செய்யக்கூடாது என்று எச்சரித்ததையும் நான் அவரிடம் சொன்னேன். ஒரு பெரிய பிரச்சனையைத் தூண்டும் எந்த சிகிச்சையிலிருந்தும் விலக அவர் ஒப்புக்கொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு எங்களுக்கு பலன்கள் தெரிய ஆரம்பித்தன. வாரத்தில் 1, 2, 3 அல்லது 4 இரவுகள் கூட இரவில் சாப்பிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படவில்லை; சில சமயங்களில் தொடர்ச்சியாக கூட, நெஞ்செரிச்சல் மற்றும் உடலின் அமிலத்தன்மை அளவுகள் அப்படியே இருந்தன; இருமலும் அப்படியே இருந்தது, ஆனால் இப்போது இரண்டு பிரச்சினைகளையும் சமாளிக்க ஒரு முறையைக் கண்டறிந்து விட்டேன். நெஞ்செரிச்சல் மற்றும் தொண்டையின் கடுமையான வலியை நிறுத்த, தலையணைகள் உதவியுடன் சாய்வான நிலையில் குப்புறப்படுத்து தூங்கினேன். நெஞ்செரிச்சலை குறைக்கவும், மருந்துகளின் பக்க விளைவுகளை அனுபவிக்காமல் இருக்கவும் அடிக்கடி சிறிது சிறிதாக குளிர்ந்த நீரைக் குடித்தேன். தண்ணீர் என் தொண்டை மற்றும் வாயை வறண்டு போகாமல் வைத்தது. சில நேரங்களில் என் குடல்கள் சிக்கிக்கொண்டது போலவும் அல்லது உள்நோக்கி விழுவது போன்ற உணர்வும் எனக்கு ஏற்படும். அதிக தண்ணீர் குடித்ததால், நான் அடிக்கடி கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே உணவு, நீர் குடிப்பது, தூக்க நிலைகளை மாற்றுவது போன்றவற்றுக்கு இடையில், இரவில் எனக்கு மிகக் குறைந்த தூக்கமே கிடைத்தது.

நான் பலமுறை, நாளமில்லா சுரப்பி அமைப்பை தொட வேண்டாம் என்று எச்சரித்த போதிலும், குத்தூசி மருத்துவ நிபுணர் அதன் மீது பணியாற்றினார். இதனால் உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு ஒரு மாதத்திற்குப் பிறகும் எனக்கு மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் தொடர்ந்தன.

5. விரக்தியே எஸ்.எஸ்.ஆர்.எஃப். யும் இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வையும் கண்டுபிடிக்க உதவியது.

ஒரு மாலைப் பொழுதில், விரக்தியில் நான் இணையத்தில் தேடினேன். கடவுளின் அருளால் எஸ்.எஸ்.ஆர்.எஃப் வலைத்தளத்தைக் கண்டுபிடித்து, அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் படித்தேன். என் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதற்கான நாமஜபத்தைக் கண்டுபிடித்தேன் – ‘ஸ்ரீ குருதேவ தத்த என் பிரச்சினைகள் இறந்த மூதாதையர் ஆவிகளால் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்தவுடன், உடனடியாக
நாமஜபத்தை செய்யத் தொடங்கினேன். பல வருடங்களுக்குப் பிறகு அன்று இரவு நான் நிம்மதியாகத் தூங்கினேன்; இரவில் சாப்பிடவில்லை! நான் தொடர்ந்து நாமஜபத்தை செய்தேன். அதிக நெஞ்செரிச்சல் மற்றும் எலும்பு வலிக்குமான பல நாமஜபங்களையும் மெதுவாக சேர்த்து செய்ய ஆரம்பித்தேன்.

6. நெஞ்செரிச்சல் மற்றும் பசி வேதனையை, ஆன்மீக ரீதியாக குணப்படுத்தியதற்கு நன்றியுணர்வு.

நான் முதன்முதலில் ‘ஸ்ரீ குருதேவ தத்த’ நாமஜபத்தை செய்ய ஆரம்பித்து இப்போது 11 மாதங்கள் ஆகின்றன. இந்த 11 மாதங்களில் நான் இரவில் சாப்பிடவில்லை. இன்று, எனக்கு இருந்த அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் எனது இருமல் மறைந்துவிட்டது. எனது எடை 76 கிலோவாகக் குறைந்துள்ளது. எனது சருமம் குணமாகி வருகிறது. உணவு சகிப்புத்தன்மை மேம்பட்டு வருகிறது. மேலும் குடிக்கும் நீரின் சுவை மீண்டும் எப்பொழுதும் போலவே உள்ளது.

இந்த ஆன்மீக நிவாரணம் தரும் நாமஜபத்தைப் பற்றி நான் முன்பே அறிந்திருந்தால், இத்தனை வருடங்களாக நான் அனுபவித்த வேதனையிலிருந்து நான் விடுபட்டிருப்பேன். மருத்துவர்கள், மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் வேறு பல சிகிச்சைகளுக்கு, இவ்வளவு கடினமாக சம்பாதித்த பணத்தை தேவையில்லாமல் செலவிட வேண்டியிருந்திருக்காது.

ஒரு எளிய நாமஜபத்திற்கு இவ்வளவு சக்தி இருக்க முடியுமா? அது சாத்தியமற்றதைச் செய்ய முடியுமா என்றால் எனது பதில் ஒரு உறுதியான ஆம்! என்பதே.

நான் எனது அனுபவத்தைப் பற்றி எழுதியுள்ளேன். தெய்வீக சக்திக்கு முழுமையான சமர்பணத்துடன் என் தலை வணங்கி, இந்த அறிவை உலகம் முழுவதும் இலவசமாகக் கிடைக்கச் செய்ததற்காக எஸ்.எஸ்.ஆர்.எஃபிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாமஜபத்தை தயக்கமின்றி தொடங்குங்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து மட்டுமே பயனடைய முடியும். எஸ்.எஸ்.ஆர்.எஃப். வாசகர்களுக்கு இதுவே எனது கோரிக்கை.

– ஸாதகர் தன் பெயரை குறிப்பிட விரும்பவில்லை


குறிப்பு: ஆடியோ கோப்பைப் பதிவிறக்கம் செய்ய , தயவுசெய்து படத்தின் மீது, வலது இணைப்பை அழுத்தி “இணைப்பை சேமி / இணைப்பை இவ்வாறு சேமி” என்பதை அழுத்தவும்