இந்த கட்டுரையை விளங்கி கொள்வதற்கு பின்வரும் கோப்பினை காணவும்.

1. நாமஜபத்தின் நன்மைகள் – ஒரு அறிமுகம்

பல மகான்கள் நாமஜபத்தின் நன்மைகளை பற்றி விளக்கி உள்ளனர். நாமஜபம் என்பது இறைவனுடைய நாமத்தை திரும்பத்திரும்ப உச்சரிப்பதாகும். நாமஜபமே ஆன்மீக பயிற்சியின் அடித்தளமாக SSRF வலியுறுத்துகிறது. இது ஏனெனில் நாமஜபமே தற்போதைய காலத்திற்கு உகந்த ஆன்மீக பயிற்சி ஆகும். உரக்க சொல்வதை விட மனதால் சொல்வது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

நாமஜபத்தின் முக்கியத்துவம்: ஆழ்மனமானது கோடிக்கணக்கான எண்ணப்பதிவுகளை கொண்டுள்ளது. ஒரு எண்ணப்பதிவையேனும் இல்லாமல் செய்ய பல காலம் தேவைப்படுகிறது. ஆகையால், கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றி, ஆழ்மனதின் போக்குகளை கடந்து செல்ல குறிப்பிடத்தக்க காலம் விரயமாகிறது. நமது ப்ரக்ருதி எனப்படும் இயற்கையான குணாதிசயத்தால் உருவாகும் எண்ணப்பதிவுகளை அழிக்க முயற்சி செய்வதைவிட பூரணமான பரமாத்மாவுடன் இணைவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்வது முக்கியமாகும். இதனையே நாமஜபம் நமக்கு அளிக்கிறது. ஏனைய அம்சங்களிற்குள் நமது இயற்கை குணாதிசயத்தின் தொகுப்புக்களான மனம், புத்தி மற்றும் ஆழ்மனம் ஆகியவை அவைகளின் பண்புகளுக்கு ஏற்றாற்போல் செயல்புரிகிறது. இவைகளை எதிர்ப்பதில் ஒருவர் தனது ஆன்மீக பயிற்சியை வீணடிக்காது, நாமஜபத்தின் மூலம் இறைவனுடைய நாமத்தோடு ஒன்றுபட்டு, இறை தத்துவத்தை நோக்கி முன்னேறி செல்வதற்கு ஆன்மீக பயிற்சியை பயன்படுத்துவதன் மூலம் தன்னுடைய இலக்கினை விரைவாக அடைய முடியும். – பரம்பூஜ்ய பக்தராஜ் மஹராஜ்

2. நாமஜபத்தின் சூட்சும நன்மைகள்

கீழே வழங்கப்பட்டுள்ள சூட்சும வரைபடமானது SSRF சாதகரான திருமதி யோயா வாலே அவர்களால் அதி நுட்ப ஆறாவது அறிவின் துணையுடன் வரையப்பட்டதாகும். யோயாவினால் சூட்சும பரிமாணத்தை உணர்ந்து அதன்படி வரைபடங்களை உருவாக்க முடியும். இதனை தன்னுடைய இறை சேவையாகவும் ஆன்மீக பயிற்சியாகவும் செய்து வருகிறார். பரம் பூஜ்ய டாக்டர் ஆடவலே அவர்களால் இந்த சூட்சும வரைபடங்கள் சரி பார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

கீழே வழங்கப்பட்டுள்ள சூட்சும வரைபடம் நாமஜபத்தின் சூட்சும நன்மைகளை விளக்குகிறது.

சூட்சும ஞானத்தை கொண்டு வரையப்பட்ட சித்திரம் மூலம் நாம் பின்வருவனவற்றை புரிந்து கொள்ள முடியும்:

  • அனாஹத சக்கரத்தில் (இதய சக்கரம்) ஆன்மீக உணர்வு வளையம் இயக்கப்படுகிறது
  • தெய்வ தத்துவம் ஒரு ஊற்று போல் ஆக்ஞா சக்கரத்தை (புருவ மைய சக்கரம்) நோக்கி ஈர்க்கப்படுகிறது
  • சைதன்யம் எனப்படும் தெய்வீக உணர்வு ஒரு ஊற்று போல் நாமஜபம் செய்பவரை நோக்கி ஈர்க்கப்படுகிறது
  • ஆக்ஞா சக்கரத்தில் (புருவ மைய சக்கரம்) தெய்வீக சக்தி வளையம் உருவாக்கப்படுகிறது

எனவே நாமஜபம் செய்வதன் மூலம் இறைவனுடைய நாமத்தினால் உருவாக்கப்படுகின்ற சூட்சும அதிர்வலைகளின் பலனை நம்மால் அடைய முடியும்.

3. நாம ஜபத்தினால் ஏற்படும் மருத்துவ, உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியான நன்மைகள்

நாமஜபம் நமக்கு மருத்துவ, உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியான நன்மைகளை வழங்குகிறது. ஆன்மீக பயிற்சியின் ஆரம்ப கால கட்டங்களில் நாமஜபத்தின் நன்மைகளை உணருவது கடினமாக இருக்கும். நாமஜபத்தின் நன்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் பயிற்சி செய்வோமானால் பிந்தைய காலகட்டங்களில் அனுபவ ரீதியாக உணர முடிவதோடு நமது நம்பிக்கையையும் அதிகரிக்கிறது.

மனித வாழ்வின் அடிப்படை குறிக்கோளான ஆன்மீக முன்னேற்றம் அடைதலை நோக்கமாக கொண்டு, நாமஜபம் செய்யும்பொழுது நமது குறிக்கோளை அடைவதோடு, மற்றைய நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.