மாற்று சிகிச்சைகளுக்கான வரைவிலக்கணங்கள்

1. அறிமுகம்

இந்த கட்டுரையில், நாங்கள் செய்த பல்வேறு சிகிச்சைமுறைகளைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வை வரையறுத்துள்ளோம்.

2. அலோபதி முறையின் வரைவிலக்கணம்

அலோபதி அல்லது அலோபதி மருத்துவம் என்பது வழக்கமான, ஆதாரத்தின் அடிப்படையிலான மருத்துவ சிகிச்சை முறையாகும். இது மாற்று சிகிச்சை முறைகள் அல்லது மரபு சாரா மருத்துவத்திற்கு மாறானது. இந்த வழக்கமான மருத்துவ நடைமுறையை C.F.S.ஹனிமன் என்பவர் 1842 இல் அவர் கண்டறிந்த ஹோமியோபதி சிகிச்சை முறையின் மூலம் வேறுபடுத்தி காட்டினார்.

ஆதாரம் : Wikipedia.org

3. யுனானி மருத்துவமுறைக்கான வரைவிலக்கணம்

இது ஹிப்போகிரட்டீஸ், கேலன் மற்றும் அவிசென்னாவின் போதனைகளின் அடிப்படையில் கிரேக்க-அரபு மருத்துவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல். கபம் (பால்கம்), இரத்தம் (அணை), மஞ்சள் பித்தம் (சஃப்ரா) மற்றும் கருப்பு பித்தம் (சௌதா) ஆகிய நான்கு சுவைகளை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையில் இஸ்லாமியத்தின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

ஆதாரம் : Wikipedia.org

4. அக்குபிரஷர் முறையின் வரைவிலக்கணம்

அக்குபிரஷர் என்பது கை, முழங்கை அல்லது பல்வேறு சாதனங்கள் மூலம் உடலிலுள்ள குறிப்பிட்ட புள்ளிகளுக்கு அழுத்தத்தை செலுத்தி உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும். உடலில், குறிப்பிட்ட பாகங்கள் மற்றும் உறுப்புகளுடன் தொடர்புடைய சுமார் 1,100 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அக்குபிரஷர் புள்ளிகள் உடலின் பாதிப்பு அறிகுறி தென்பட்ட அதே இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ இருக்கலாம். குறிப்பிட்ட அக்குபிரஷர் புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம், உடலின் குறிப்பிட்ட பகுதி அல்லது உறுப்புக்கான ஆற்றல் ஓட்டத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு மாற்றியமைக்கப்படுகிறது. அக்குபிரஷர் சிகிச்சை முறையில் மருந்து மற்றும் அறுவை சிகிச்சை முறை இல்லை.

ஆதாரம் : Wikipedia.org

5. முத்திரை முறையின் வரைவிலக்கணம்

இந்த சிகிச்சையில், விரல்களின் பல்வேறு நிலைகள் அல்லது தோற்றப்பாங்குகள், சுயமாகவோ, அல்லது உடலின் ஒரு பகுதியாலோ அல்லது குறிப்பிட்ட குண்டலினி சக்கரத்தின் மூலமாகவோ இயக்கப்படுகின்றன. விரல்களின் குறிப்பிட்ட நிலை அல்லது தோற்றப்பாங்கானது உடலுக்கு உள்ளும், புறமும் சக்தியை செலுத்துகிறது. இந்த சக்தியானது குறிப்பிட்ட நபரின் ஆன்மீக நிலையைப் பொறுத்தது. குறைந்த ஆன்மீக நிலையில் உள்ள ஒருவருக்கு, பெரும்பாலும் ஸ்தூல உடல் மூலம் இந்த சக்தி வரையறுக்கப்படுகிறது. உயர்ந்த ஆன்மீக நிலை கொண்டவருக்கு, இந்த சக்தி குண்டலினி ஆற்றல் போன்ற சூட்சும சக்தியால் வரையறுக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் எந்த மருந்தும் பயன்படுத்தப்படுவதில்லை.

ஆதாரம் : Spiritual Science Research Foundation

6. ஹோமியோபதி முறையின் வரைவிலக்கணம்

நோயைப் போலவே ஆரோக்கியமான மக்களிடமும் அதே அறிகுறிகளை உருவாக்கும் திறன் கொண்ட அதே மருந்துகளால் (மிகச்சிறிய அளவுகளில்) நோய்க்கு சிகிச்சையளிக்க முடியும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை முறை.

 

ஆதாரம் : medicinenet.com

7. ஆயுர்வேத முறையின் வரைவிலக்கணம்

இந்த விரிவான மருத்துவ முறையானது 5,000 மற்றும் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மருத்துவ பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது. இது உடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கு சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறது. இதன் குறிக்கோள் தனிநபரின் இயல்பான நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதாகும். ஒரு ஆயுர்வேத மருத்துவர், நோயாளியின் வளர்சிதை மாற்றம்(தோஷம்) உடல் வகை [வாத (காற்று), பித்த (பித்தம்) அல்லது கஃபா (கபம்)], தனிப்பட்ட கேள்விகள், நாடி, நாக்கு, நகங்கள் மற்றும் பிற ஆய்வுகள் மூலம் நோயாளியின் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் ஏதேனும் ஏற்றத்தாழ்வுகளை அடையாளம் கண்டு அதன் அடிப்படையில் சிகிச்சை முறையை வடிவமைத்து ஒரு தனிநபரை அவரது சுற்றுச்சூழலுடன் மீண்டும் இணக்கமாக வாழ வழிவகை செய்கிறார். இந்த முறையில் உணவு மாற்றங்கள், உடற்பயிற்சி, யோகா, தியானம், மசாஜ், மூலிகை டானிக்குகள் மற்றும் பிற சிகிச்சை முறைகளும் இருக்கலாம்.

ஆதாரம் : Wikipedia.org