வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
இது, கடுமையான தோலரிப்புகள் (rashes) ஆன்மீக முறைகள் மூலம் மட்டுமே எவ்வாறு குறைந்தன என்பதற்கான ஒரு வழக்குக்கட்டுரை. இந்த அனுபவத்தை பெற்ற ஃபியோனா லிங்க், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தைச் சேர்ந்த ஒரு தொழில்முறை செவிலியர் ஆவார். அவர் தனது அனுபவத்தைப் பின்வருமாறு விவரிக்கிறார்
2005 ஆம் ஆண்டில், அவ்வவ்பொழுது எனக்கு உடல் முழுவதும் தடிப்புகள்(தோலரிப்பு) தோன்றும். அவை சவுக்கால் அடித்த அடையாளம் போல இருக்கும்,மற்றும் அதிகளவு அரிப்பும் ஏற்படும். இதனோடு எனது முகம் வீங்கத் தொடங்குவதுடன்,எனது உதடுகள் பிங்க்-பாங் (டேபிள் டென்னிஸ்) பந்துகளின் அளவிற்கு வீங்கி விடும். இதை எதிர்க்க எதுவும் செயல்படாததால், மிகவும் பதட்டமான உணர்வாக இருந்தது. ஒரு நாள் நிலைமை மிகவும் மோசமடைந்ததால், நான் மெல்போர்னின் ஆல்ஃபிரட் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றேன். அங்கே, அவர்கள் என்னை ஐ.சி.யு பிரிவில் இருக்கச்செய்து, அலர்ஜி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை அளித்தனர். சுமார் 8 மணி நேரத்திற்குப் பிறகே அறிகுறிகள் குறைந்தன, ஆனால் அது என்னை முற்றிலும் மயக்க நிலை(தூக்க நிலை) அடையச்செய்தது.
பின்னர், மருத்துவமனையில் இருந்து என்னை அழைத்துச் செல்ல என் நண்பரை (தற்செயலாக அவர் எஸ் எஸ் ஆர்.எஃப் பை பின்பற்றும் ஒரு ஸாதகர் ) கூப்பிட்டேன். அவர் என் நிலையைப் பார்த்தார். நான் நடந்ததை விவரித்தவுடன், இந்த பிரச்சினைக்கு, மூல காரணம் ஆன்மீகப் பரிமாணத்தில் இருக்கலாம் என்று கூறினார். அடுத்த முறை இது நிகழ்ந்தால், ஒரு வாளி தண்ணீரில் சிறிது கோமூத்திரம் (gomutra –இந்தியப் பசுவின் மூத்திரம்) சேர்த்து குளிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். அடுத்த முறை பயன்படுத்துமாறு கூறி, அவர் தன்னிடம் இருந்த ஒரு பாட்டில் கோமூத்திரத்தை எனக்குக் கொடுத்தார்.
0
ஃபியோனாவின் உடலில் ஏற்பட்ட தோலரிப்பின் தீவிரத்தை எடுத்துக்காட்டாக விளக்கும் படம்
எதிர்பார்த்தபடியே,சில நாட்களில் இந்த பிரச்சனை மீண்டும் ஏற்பட்டது. நான் உடனே ஒரு டீஸ்பூன் கோமூத்திரத்தை ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து அந்த நீரில் குளித்தேன். தண்ணீர் என் தோலைத் தொட்டவுடன் உடனே அரிப்பு நிற்க, சுமார் 15 நிமிடங்களில் தோலரிப்பும் குறைந்துவிட்டது, அதைக்கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். அந்த நிமிடத்தில் எனக்கு ஏற்பட்ட நிம்மதி மற்றும் நன்றியை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்தது.
அதற்குப் பிறகும் தோலரிப்பு அடிக்கடி வந்தது ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த வைத்தியம் செயல்பட்டது. பின்னர் நான் புரிந்துகொண்டது என்னவெனில், பிரச்சனை ஆன்மீக இயல்புடையதாக இருந்தது மேலும் இப்பிரச்சினையின் மூல காரணம் தீய சக்திகள் ஆகும் . அத்தகைய பிரச்சனைகளுக்கு கோமூத்திரம் ஒரு சக்திவாய்ந்த மாற்று மருந்து. அடுத்த சில மாதங்களில் நான் இறைவனின் நாமத்தையும், பித்ருதோஷத்தால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு “ஶ்ரீ குருதேவ தத்த” என்ற நாமஜபத்தையும் மனமுவந்து ஜபிக்கத்தொடங்கினேன். அதன் பிறகு தோலரிப்பு மீண்டும் வரவில்லை, எந்த மருந்தும் இல்லாமல் முற்றிலும் குணமாகிவிட்டது
^Top