ஆன்மீக நிவாரண சிகிச்சை | வெற்றுப்பெட்டி நிவாரணம்

ஆன்மீக நிவாரண சிகிச்சை | வெற்றுப்பெட்டி நிவாரணம்

உடல் மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். பரிந்துரைக்கிறது.

வாசகர்கள் எந்தவொரு ஆன்மீக சிகிச்சை முறையையும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முதலில், பல்வேறு ஆன்மீக நிவாரண முறைகளின் அடிப்படை தத்துவங்களை விளக்கும், ஆன்மீக நிவாரணம் ஆ என்ற கட்டுரையை படிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

1. வெற்றுப்பெட்டியை பயன்படுத்தி ஆன்மீக நிவாரணம் – ஓர் அறிமுகம்

கருப்பு சக்தி: தீய சக்திகள் பயன்படுத்தும் பிரதான ஆயுதமான கருப்பு சக்தி, உலகத்தில் நிகழும் எந்த ஒரு செயலையும் கையாளக்கூடிய திறன் உடைய ஒரு ஆன்மீக சக்தியாகும். இந்த திறன், தாக்கும் தீய சக்தியின் வலிமையை பொருத்தது.

ஆன்மீக நிவாரண சிகிச்சைக்கு ஒரு சாதாரண வெற்று அட்டைப்பெட்டி பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால் கடவுளருளால் எஸ்.எஸ்.ஆர்.எஃப் தனது ஆன்மீக ஆராய்ச்சியின் போது இந்த ஆன்மீக நிவாரண சிகிச்சையை கண்டறிந்தது. இது நமது உடலிலுள்ள எதிர்மறையான, கஷ்டங்கள் தரும் சூட்சும சக்தியை வெளியேற்ற உதவும் ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த முறையாகும்.

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் ஆன்மீக பரிமாணத்தில் உள்ள தீய சக்திகளான ஆவிகள் பேய்கள், பிசாசுகள் போன்றவற்றால் ஏற்படும் போது, ஆன்மீக நிவாரணம் தேவையாகிறது. நமது வாழ்வை ஆன்மீக பரிமாணம் எவ்வாறு பாதிக்கின்றது என்ற கட்டுரையில் இதைப்பற்றி விளக்கியுள்ளோம்.

2. வெற்றுப்பெட்டிகள் மூலம் ஆன்மீக நிவாரண சிகிச்சை என்றால் என்ன?

2.1 வெற்றுப்பெட்டி ஆன்மீக நிவாரண சிகிச்சையை எஸ்.எஸ்.ஆர்.எஃப் எவ்வாறு கண்டறிந்தது?

2005-இல் பராத்பர குரு டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் தனது அறையில் உள்ள காலியான இழுப்பறைகள் மற்றும் அலமாரிகள் தெய்வீக நறுமணத்தை வெளியிடுவதை கண்டார். ஒரு சோதனையாக, ஆன்மீக ஆராய்ச்சி மையத்தில் தீய சக்திகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸாதகர்களை, திறந்து வைக்கப்பட்ட அந்த இழுப்பறைகள் மற்றும் அலமாரிகள் முன்பு அமரச் சொன்னார். அந்த செயல் ஆன்மீக நிவாரண முறையை துரிதப்படுத்தியது. மேலும், தீய சக்திகளால் கடுமையான கஷ்டத்தை அனுபவித்த ஸாதகர்கள் நிவாரணம் அடைந்ததையும் காண முடிந்தது.பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் ஆடவலே அவர்களின் அலமாரியில் உள்ள காலியான இழுப்பறை முன் அமர்ந்து, ஒரு ஸாதகர் ஆன்மீக நிவாரணத்தை அனுபவிக்கிறார்

இந்த புதிய நிவாரண சிகிச்சை பிறருக்கும் பயன்படுமாறு அதை எவ்வாறு மறுஉருவாக்கம் செய்யலாம் அல்லது மாற்றம் செய்யலாம் என்று பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் சிந்தித்தார். இதன் பின்னணியில் உள்ள ஆன்மீகக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள ஆன்மீக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதிநுட்பமான ஆறாவது அறிவின் மூலம் கிடைத்த விடை, முரண்பாடாகத் தோன்றினாலும், ‘ஏதுமில்லை’ என்பதே ஆகும். காலியான இழுப்பறைகள் ‘ஏதுமற்ற’ நிலையைக் கொண்டிருந்தன. மேலும், அதிலுள்ள வெற்றிடம் சக்திவாய்ந்த பரிபூரண ஆகாயத் தத்துவத்துடன்  நேரடியாகத் தொடர்புடையதாகும்.

அனைத்து பரிபூரண பிரபஞ்ச தத்துவங்களிலும், ஆகாய தத்துவம் மிகவும் சூட்சுமமானதும் சக்தி வாய்ந்ததாகும். மனிதர்களின் உடலில் உள்ள ஆன்மாக்கள் (ஜீவன்கள்) , பெரும்பாலும் பரிபூரண நிலத் தத்துவம் (பிருத்வி தத்துவம்) மற்றும் நீர் தத்துவம் (ஆப தத்துவம்) ஆகியவற்றால் ஆனது. பரிபூரண ஆகாய தத்துவம் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, ஆகாய தத்துவத்திற்கு நம்மை உட்படுத்தும் போது, ஆன்மீக நிவாரணம் ஏற்படுகிறது.

2.2 செயல்முறையின் அடுத்தடுத்த படிகள்

வெற்றிடம் சார்ந்த நிவாரணத் தத்துவத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில், எளிதாக கிடைக்கக்கூடிய வெற்று அட்டைப்பெட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம், பரிபூரண ஆகாயத் தத்துவத்தினால் கிடைக்கும் அதே ஆன்மீக நிவாரண பலனைப் பெற முடியும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். நம்மைச் சுற்றிலும் ஒன்று அல்லது பல வெற்று பெட்டிகளை நமக்கு மிக அருகில் வைத்துக் கொள்வதன் மூலம், நம் உடலிலிருந்து எதிர்மறை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் சக்திகளை உறிஞ்சி வெளியேற்றும் ஆற்றல் அதற்கு உள்ளதாகவும் கண்டறிந்தோம். இந்தச் சோதனையின் செயல்திறனைப் பாதிக்கக்கூடிய சில அம்சங்கள் உள்ளன; அவற்றை இக்கட்டுரையின் அடுத்தடுத்த பகுதிகளில் விவரித்துள்ளோம்.

செயல்முறையின் அடுத்தடுத்த படிகள்

இந்தத் தத்துவத்தை கண்டறிந்த பிறகு, தீய சக்திகளால் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டிருந்த ஒரு பெண்ணுக்கு, அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தி அதே ஆன்மீக நிவாரண சிகிச்சையை மேற்கொண்டோம்; அவள் 30 நிமிடங்களுக்குள் குணமடைந்ததை கண்டு நாங்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தோம். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டும் அவற்றால் பீடிக்கப்பட்டும் இருந்த ஸாதகர்கள் மீது, இந்த வெற்று அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு பரிசோதனையிலும் நேர்மறையான ஆன்மீக குணப்படுத்தும் விளைவு ஏற்பட்டதால், இந்த நிவாரண முறை எஸ்.எஸ்.ஆர்.எஃப் – இன் முதன்மையான நிவாரண முறைகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3. பெட்டிகளை பயன்படுத்தி ஆன்மீக நிவாரண சிகிச்சையை எவ்வாறு மேற்கொள்வது?

3.1 வெற்றுப் பெட்டி உபாயத்திற்கு என்னென்ன தேவை?

பெட்டிகளின் எண்ணிக்கை: பொதுவாக இந்த நிவாரண சிகிச்சைக்கு 1 முதல் 4 பெட்டிகள் வரை தேவைப்படும். சில சந்தர்ப்பங்களில், 12 பெட்டிகள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்: திண்ம வடிவங்களைப் பொறுத்தவரை பயன்படுத்தப்படும் பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் உள்ளீடற்ற (வெற்றிட) வடிவமாக இருந்தால், பெட்டிகள் எப்பொருளால் செய்யப்பட்டுள்ளன என்பது அவ்வளவு முக்கியமல்ல. அதனால் தான், எளிதாக கிடைக்கக்கூடிய பெட்டிகளை பயன்படுத்துமாறு பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார். இதற்கு காலியான, தூய்மையான மற்றும் நேர்த்தியான அட்டைப் பெட்டிகள் மிகவும் பொருத்தமானவை.

வெற்று பெட்டி ஆன்மீக நிவாரண சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய காலி அட்டைப்பெட்டிகளுக்கான உதாரணங்கள்

உள்ளீடற்ற வடிவத்தின் வகை:

 வெற்றுப்பெட்டி ஆன்மீக நிவாரண சிகிச்சைக்கு எந்த வகை உள்ளீடற்ற வடிவத்தை தேர்ந்தெடுப்பது?

இச்சா சக்தியுடன் தொடர்புடையதால், முக்கோண வடிவப் பெட்டி தீய சக்திகளால் ஆக்கிரமிக்கப்படக்கூடும்; எனவே, இதை பயன்படுத்தக் கூடாது.

அ) சராசரி மனிதருக்கு சதுரம் அல்லது செவ்வக வடிவப் பெட்டிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றின் அதிர்வலைகள் கிரியா சக்தியுடன் தொடர்புடையவை ஆகும்.

ஆ) வட்ட வடிவப் பெட்டிகள் ஞான சக்தியுடன் தொடர்புடையவை; அவற்றின் அதிர்வலைகள் மிகவும் சூட்சுமமானவையாகவும், கடவுளின் வெளிப்படாத வடிவத்தை நோக்கியவையாகவும் உள்ளன. 50% மேற்பட்ட ஆன்மீக நிலையுள்ளவரால் மட்டுமே, வட்ட வடிவப் பெட்டியிலிருந்து முறையான பலனைப் பெற முடியும்.

ஆன்மீக நிலை பற்றிய கட்டுரையை இங்கே காண்க.

3.2. பெட்டிகள் மூலமாக ஆன்மீக நிவாரண சிகிச்சையை எவ்வாறு மேற்கொள்வது?

பிரார்த்தனை: நிவாரண சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், இப்பெட்டியின் வெற்றிடத்தில் இருக்கும் தெய்வீக உணர்வு (சைதன்யம்) செயல்பட்டு, நம் உள்ளிருக்கும் அனைத்து கஷ்டம் தரும் சக்திகளையும் வெளியே அகற்றுமாறு இறைவனிடம் மனப்பூர்வமாகப் பிரார்த்தியுங்கள்.

ஊதுபத்திகளைக் கொண்டு ஆன்மீகத் தூய்மைப்படுத்துதல்: எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளை ஏற்றி, அவற்றை பெட்டிக்குள் வலஞ்சுழியாகச் சுழற்றுவதன் மூலம், இறைத் தத்துவம் செயல்பட்டு, பெட்டிகள் ஆன்மீக ரீதியாகத் தூய்மைப்படுத்தப்பட உதவுகிறது.

பெட்டிகளை அமைக்கும் முறை:

a) வெற்றிடம் உட்புறம் இருக்குமாறு உங்களைச் சுற்றி 4 பெட்டிகளை வைக்கவும்

i) அதிநுட்பமான ஆறாவது அறிவு அல்லது சூட்சும ஞானம் பெற்ற ஒரு ஸாதகரால் மட்டுமே, ஆன்மீக கஷ்டத்தின் தன்மையைப் பொறுத்து எத்தனை பெட்டிகள் தேவை என்பதை கூற முடியும். மேலும், எந்த தத்துவத்திற்கு எந்த பெட்டியை பயன்படுத்த வேண்டும், பெட்டிகளின் திசை என்ன, ஆன்மீகத் தூய்மைப்படுத்த எந்த மணமுள்ள ஊதுபத்தி தேவை போன்ற விவரங்களையும் அவர்களாலேயே சரியாக கூற இயலும்.

ii) மற்றவர்கள், மேலே கூறப்பட்ட தகவல்களை அதிகம் பொருட்படுத்தாமல் பெட்டிகளை பயன்படுத்தலாம். பயன்களை பெற அதிக காலம் எடுத்தாலும், பயன்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்பது உறுதி.

b) “பெட்டிகளை உங்களிடமிருந்து 6–12 அங்குல இடைவெளியில் வைக்க வேண்டும். இந்நிவாரணத்தில் ‘ஆன்மீக உணர்வு’ ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து மேலும் அறிய, இப்பகுதியின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பைப் பார்க்கவும்.”

c) பெட்டிகளின் வெற்றிடம் நம்மை நோக்கியோ அல்லது வெளிப்புறம் நோக்கியோ வைக்கலாம். வெற்றிடம் நம்மை நோக்கி இருந்தால் நிவாரண முறை அதிகம் வெளிப்பட்டதாக இருக்கும். வெளிப்புறமாக இருந்தால் வெளிப்படாத நிவாரணம் ஆகும். சூட்சும தீயசக்தியின் தாக்குதல் வெளிப்பட்டதா அல்லது வெளிப்படாததா என்பதை பொறுத்து பெட்டிகளை வைக்கவேண்டும். நமக்கு ஆன்மீக நிவாரணம் வெளிப்பட்டது வேண்டுமா இல்லை வெளிப்படாதது தேவையா என்பது தெரியாத போது இரண்டு முறைகளையும் முயற்சித்து எது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

d) அடுத்து வரும் தொடர்காட்சியில், இந்தச் சக்திவாய்ந்த நிவாரண சிகிச்சையின் பலன்களைப் பெற பயன்படுத்தக்கூடிய பல்வேறு பெட்டி அமைப்புகளை நாங்கள் காட்டியுள்ளோம்.

e)தீவிரமான கஷ்டம் இருந்தால் (காலி தீப்பெட்டி போன்ற)சிறிய பெட்டிகளை தங்களது சக்கரங்களில்  வைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு நெஞ்சில் அசௌகரியம் அனுபவிக்கும் ஒருவர் இதய சக்கரத்தில் பெட்டி வைத்து 30 நிமிடங்களில் நிவாரணம் பெற்றார். பெட்டிகள் உட்புறம் அல்லது வெளிப்புறம் நோக்கி வைத்து எது அதிகம் நன்மை தருகிறது என்று சோதித்து பார்க்கலாம்..

கீழே உள்ள பல்வேறு படங்களில் பெட்டிகளை வைக்கும் முறைகள் சிலவற்றின் உதாரணங்களை காட்டியுள்ளோம்.

பிரார்த்தனையும் நாமஜபமும்: ஆன்மீக நிவாரண சிகிச்சையை பயன்படுத்தும் போது, நீங்கள் பிறந்த மதத்திற்கேற்ப நாமஜபம் செய்ய வேண்டும். சூட்சும தீய சக்திகளை அகற்றவும், ஆன்மீக நிவாரணத்தின் திறன் உயரவும், அடிக்கடி பிரார்த்தனை செய்யலாம். தேவையான காலம் வரை இந்த நிவாரண முறையைத் தொடரலாம்.

.ஆன்மீக உணர்வின் முக்கியத்துவம்: ஒருவரிடம் ஆன்மீக உணர்வு இருக்கும் போது, இந்த உபாயத்தின் செயல்திறன் வியத்தகு முறையில் அதிகரிக்கிறது. பெட்டியின் வடிவம், அதன் அளவு அல்லது அது அமைந்திருக்கும் தூரம் போன்ற அம்சங்கள் முக்கியத்துவம் குறைந்ததாகிவிடுகின்றன. ஆன்மீக உணர்வு கொண்ட ஒருவர், கையில் கிடைக்கும் எந்தவொரு பெட்டியின் மூலமும் பயன் பெற முடியும். இந்த ஆன்மீக நிவாரண சிகிச்சை, ஆன்மீக உணர்வுடன் மேற்கொள்ளப்படும் போது, எந்தவொரு பெட்டியும் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் செயல்படத் தொடங்கி நிவாரணம் அளிக்கும். கூடுதல் தகவல்களுக்கு, ஆன்மீக உணர்வு குறித்து நாங்கள் வெளியிட்டுள்ள கட்டுரைகளைப் பார்வையிடலாம்.

4. நாம் இந்த நிவாரண சிகிச்சையை எப்போது பயன்படுத்த வேண்டும்?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளில் நாம் கஷ்டங்களை உணரும்போது, இந்த நிவாரண சிகிச்சையை பயன்படுத்தலாம்.

  • சோம்பல் / மந்தநிலை
  • துரிதத்தன்மை குறைவு
  • சிந்திக்க இயலாமை
  • அளவுக்கு அதிகமான சிந்தனைகள் (குறிப்பாக எதிர்மறை தன்மையுடையவை)
  • கோபம் அல்லது பிற தீவிரமான உணர்வுகள்
  • மன அழுத்தம்
  • உடல்நலக் குறைபாடுகள்
  • சக்கரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி அல்லது அசௌகரியம்

இது போன்ற கஷ்டங்கள் நம்மை உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக பலவீனப்படுத்துகின்றன. இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஆவிகள் நம்மை அதிக கஷ்டம் தரும் சக்திகளால் சூழ்ந்து கொள்கின்றன. வெற்றுப் பெட்டி ஆன்மீக நிவாரண சிகிச்சையைப் பயன்படுத்துவதால், இந்த அறிகுறிகள் குறைந்து, இதுபோன்ற தாக்குதல்களை முறியடிக்க உதவுகிறது; மேலும், நமது உன்னதமான ஆன்மீக பயிற்சி வீணாகாமல் இருப்பதை உறுதி செய்கிறது. மற்ற நேரங்களிலும் நம்மைச் சுற்றி பெட்டிகளை வைத்துக்கொள்ளலாம். அமர்ந்து நாமஜபம் செய்யும் போது, மேஜையில் அமர்ந்து வேலை செய்யும் போது, உறங்கும் போதும் இதைச் செய்யலாம்.