எந்த இறைநாமத்தை ஜபிப்பது என்பது பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அவரவர் பிறந்த மதத்தின் படி கடவுளின் நாமஜபம் செய்வதையே ஆன்மீக பயிற்சியின் அடித்தளமாக நாங்கள் பரிந்துரைக்கிறோம். ‘உங்கள் ஆன்மீக பயணத்தைத் துவங்குங்கள்’ என்ற கட்டுரையை பார்க்கவும்.

கடவுளின் நாமத்தை ஜபம் செய்வதைப் பற்றி பொதுவாக மற்றும் அடிக்கடி கேட்கப்படும் பல கேள்விகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

1. மத மாற்றத்துடன் தொடர்புடையவை

1.1 நான் பௌத்தனாகப் பிறந்து, பின் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினேன். நான் கடவுளின் எந்த பெயரை நாமஜபம் செய்ய வேண்டும் ?

பதில்: நீங்கள் விருப்பத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தால், அதில் உங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கும். எனவே, புதிய மதத்தின் படி நாமஜபம் செய்யவும். உங்கள் விருப்பத்திற்கு எதிராக, பலவந்தமாக மதம் மாற்றப்பட்டிருந்து, பிறந்த மதத்தின் மீது உங்களுக்கு அதிக பற்று இருக்குமேயாயின், நீங்கள் உங்கள் பிறந்த மதத்தின் படி நாமஜபம் செய்யவும். நீங்கள் முன்பு கிறிஸ்தவம் போன்ற வேறொரு மதத்திற்கு விருப்பத்துடன் மதம் மாறியிருந்தாலும், தற்பொழுது உங்கள் பிறந்த மதத்துடன் நெருக்கமாக உணர்ந்தால், நீங்கள் பிறந்த மதத்தின் படி கடவுளின் நாமஜபம் செய்யலாம்.

1.2 நான் ஒரு கத்தோலிக்கனாக பிறந்தேன், ஆனால் ஒரு புராடஸ்டண்டாக வளர்ந்தேன். நான் மரியே வாழ்க’ என ஜபம் செய்ய முயன்றேன், ஆனால் ‘கர்த்தராகிய இயேசு’ என்பதையே மனம் மீண்டும் ஜபிக்கிறது. இது சரியானதா அல்லது கடவுளின் எந்த பெயரை நான் நாமஜபம் செய்ய வேண்டும் ?

பதில்: ‘கர்த்தராகிய இயேசு’ என்று நாமஜபம் செய்வதை தொடரவும்.

1.3 நம் முன்னோர்கள் வேறொரு மதத்திற்கு பலவந்தமாக மாற்றப்பட்டு நாம் அந்த மதத்தில் பிறந்தால் என்ன செய்வது? அவ்வாறான நிலையில், நாம் கடவுளின் எந்த பெயரை நாமஜபம் செய்ய வேண்டும் ?

பதில்: பிறந்த மதத்தின் படி கடவுளின் பெயரை நாமஜபம் செய்வதையே ஆன்மீக அறிவியல் அறிவுறுத்துகிறது.

உங்கள் மூதாதையர்கள் மாற்றப்பட்ட மதத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், அவர்களின் முந்தைய மதத்தின் மீது அதிக நம்பிக்கை இருக்குமேயாயின், நீங்கள் அந்த மதத்தின்படி நாமஜபம் செய்யலாம்.

1.4 எனது தாயும் தந்தையும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். அவரவர் மதங்களை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். கடவுளின் எந்த பெயரை நான் நாமஜபம் செய்ய வேண்டும் ?

பதில்: உங்கள் தந்தை பின்பற்றும் மதத்தின் அடிப்படையில் கடவுளின் பெயரை நாமஜபம் செய்ய வேண்டும். ஆன்மீக அறிவியலின் படி, குழந்தைகள் தங்கள் தந்தையின் மதத்தின்படி கடவுளின் பெயரை நாமஜபம் செய்வதன் மூலம் அதிக பயனடைகிறார்கள்.

2. திருமணத்துடன் தொடர்புடையவை

2.1 நான் திருமணமான பெண். கடவுளின் எந்த பெயரை நான் நாம ஜபம் செய்ய வேண்டும் ?

பதில்: ஆன்மீக அறிவியலின் படி, திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் தன் கணவனின் மதத்தின்படி கடவுளின் நாமஜபம் செய்வதன் மூலம் மிகவும் பயனடைகிறாள். நீங்கள் ஒரு இந்துவாக இருந்தால், உங்கள் கணவரின் குடும்பத்தின் குலதெய்வத்தின் பெயரை நாமஜபம் செய்யவும்.

2.2 நான் கணவரை பிரிந்துவிட்டேன், ஆனால் விவாகரத்து செய்யப்படவில்லை, கடவுளின் எந்த பெயரை நான் நாம ஜபம் செய்ய வேண்டும் ?

பதில்: நீங்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை, ஆதலால் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு (மேலே 2.1 ஐப் பார்க்கவும்) கூறப்பட்டதே இதற்கும் பதிலாகும்.

2.3 நான் விவாகரத்து பெற்ற பெண். கடவுளின் எந்த பெயரை நான் நாமஜபம் செய்ய வேண்டும் ?

பதில்: திருமணத்திற்கு முன்னான உங்கள் மதத்தின்படி கடவுளின் பெயரை நாமஜபம் செய்யவும்.

2.4 நான் சிறுவயது முதலே ‘மரியே வாழ்க’ என்று நாமஜபம் செய்து வருகிறேன். இப்போது நான் ஒரு ஹிந்துவை மணந்துள்ளேன். நான் என்ன பெயரை நாமஜபம் செய்ய வேண்டும் ?

பதில்: நீங்கள் திருமணத்திற்கு முன்பே நீண்ட காலமாக தவறாமல் ‘மரியே வாழ்க’ என்று நாமஜபம் செய்து வந்துள்ளதால், இந்த பெயரில் மட்டுமே உங்களுக்கு வலுவான நம்பிக்கை இருந்தால், இந்த நாமஜபத்தைத் தொடரவும். இல்லையெனில் ஆன்மீக அறிவியலின் படி, திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் கணவரின் மதத்தின் / குடும்பத்தின் குலதெய்வத்தின் பெயரை நாமஜபம் செய்ய வேண்டும்.

3. தத்தெடுப்பு தொடர்புடையவை

3.1 தத்தெடுக்கப்பட்ட குழந்தை எந்த பெயரை நாமஜபம் செய்ய வேண்டும் ?

பதில்: ஆன்மீக அறிவியலின் படி, தத்தெடுக்கப்பட்ட குழந்தை தத்தெடுக்கும் குடும்பத்தினர் பின்பற்றும் மதத்தின் படி கடவுளின் பெயரை நாமஜபம் செய்ய வேண்டும்.

4. ஒருவரின் மதத்தை சார்ந்த கடவுளின் பெயரோடு தொடர்புடையவை

4.1 ‘மரியே வாழ்க’ என்று நாமஜபம் செய்வதை நான் மிகவும் வறண்டதாகவும் குறுகியதாகவும் உணர்கிறேன். ‘கடவுளின் பரிசுத்த தாயான மரியே வாழ்க’ என நாமஜபம் செய்யலாமா ?

பதில்: ஆன்மீகம் என்பது ஒரு விஞ்ஞானம், மருத்துவம் போன்று மிகவும் பிரத்தியேகமானதாகும். ஆன்மீக வளர்ச்சி என்பது ஆன்மீக அறிவியலை பின்பற்றி மனதின் இச்சைகளை கடந்து செல்வதேயாகும். ஆன்மீக பயிற்சியின் அடிப்படை ஆன்மீகக் கோட்பாடுகளில் ஒன்று ‘பலவற்றிலிருந்து ஒன்றுக்கு செல்வது‘. இந்தக் கோட்பாட்டின்படி, ஒரு சொல் பலவற்றை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை மனதில் வைத்துக்கொண்டு, ஆன்மீகக் கோட்பாடுகளின் படி நாமஜபம் செய்யும் திறனை உங்களுக்கு அருளச் செய்ய, அன்னை மரியிடம் பிரார்த்தனை செய்யலாம். அப்படியும் உங்களால் ‘மரியே வாழ்க’ என நாமஜபம் செய்ய முடியாவிட்டால், ஆரம்பக் கட்டங்களில் நீங்கள் ‘கடவுளின் பரிசுத்த தாயான மரியே வாழ்க’ என நாமஜபம் செய்யலாம்.

5. குல தெய்வத்துடன் தொடர்புடையவை

5.1 எங்கள் குல தெய்வம் யாரென்று தெரியாதபோது கடவுளின் எந்த பெயரை நாமஜபம் செய்வது ?

பதில்: உங்கள் குலதெய்வத்தின் பெயர் உங்களுக்கு தெரியாவிட்டால், உங்கள் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், உங்கள் குடும்பத்தின் ஆச்சாரியார், வேதிய ஜோதிடத்தின் படி தயாரிக்கப்பட்ட ஒரு ஜாதகம் போன்றவற்றைக் கொண்டு கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இதற்கிடையில், நீங்கள் ‘ஸ்ரீ குல தேவதாயை நமஹ’ என்று நாமஜபம் செய்யலாம்.

5.2 மேலே கூறியபடி பொதுவான நாமஜபமான ‘ஸ்ரீ குலதேவதாயை நமஹ’ என்பது உச்சரிக்க கடினமாக இருந்தால் என்ன செய்வது? வேறு ஏதாவது பெயரை நாமஜபம் செய்யலாமா ?

பதில்: பழகி வர அது எளிதாகும். கடவுளின் வேறு எந்த பெயரை நாமஜபம் செய்தாலும் குறைவான பலனே கிடைக்கும்.

5.3 பெண் குலதெய்வத்தின் பெயருக்கு பதிலாக ஆண் குலதெய்வத்தின் பெயரை நான் நாமஜபம் செய்யலாமா ?

பதில்: 90% மற்றும் அதற்கு மேற்பட்ட ஆன்மீக நிலையிலுள்ள ஒரு குரு (அதாவது பரத்பர குரு) நாமஜபம் செய்ய பரிந்துரைக்கும் கடவுளின் பெயர் ஒருவரின் விரைவான ஆன்மீக வளர்ச்சிக்கு 100% உகந்ததாகும். ஒருவரின் விரைவான ஆன்மீக வளர்ச்சிக்கு குடும்பத்தின் பெண் குலதெய்வத்தின் பெயர் 30% மும், ஆண் குலதெய்வத்தின் பெயர் 25% மும் உகந்ததாகிறது. அதனால்தான் நாம் ஒரு குருவை அடையும் வரை, குடும்பத்தின் பெண் குலதெய்வத்தின் பெயரை நாமஜபம் செய்வது நல்லது. ஒரு குடும்பத்தின் பெண் குலதெய்வத்தின் பெயரை கண்டுபிடிக்க முடியாவிட்டால் அல்லது குலதெய்வம் பெண் தெய்வமாக இல்லாமல் ஒரு ஆண் குலதெய்வமாக இருந்தால், நாம் அவருடைய பெயரை நாமஜபம் செய்யலாம்.

6. விருப்பமான நாமஜபத்துடன் தொடர்புடையவை

6.1 ஸ்ரீகிருஷ்ணர் என்னுடைய இஷ்ட தெய்வம். எனது குலதெய்வத்தின் பெயருக்குப் பதிலாக அவருடைய பெயரை நான் நாமஜபம் செய்யலாமா ?

பதில்: ஆம், நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை நாமஜபம் செய்யலாம் (அதாவது, இஷ்ட தெய்வத்தின் பெயரை). ஆனால் விரைவான ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒருவரின் மதத்தின் படி குலதெய்வத்தின் பெயரையோ அல்லது தெய்வ தத்துவத்தின் பெயரையோ நாமஜபம் செய்வது நல்லது. ‘நான் எனது குலதெய்வ நாமஜபத்தைக் காட்டிலும் எனது இஷ்ட தெய்வத்தின் நாமஜபத்தை செய்ய விரும்புகிறேன் – அது சரிதானா?’ எனும் கட்டுரையை படிக்கவும்’

6.2 நான் என் அம்மாவை வணங்குகிறேன். அவர் எனக்கு ஒரு குருவைப் போலவும், கடவுள் போலவும் இருந்தார். நான் அவருடைய பெயரை நாமஜபம் செய்யலாமா ?

பதில்: தெய்வீக தத்துவத்தின் பலனைப் பெறவே நாம் கடவுளின் பெயரை நாமஜபம் செய்கிறோம். நம் தாயின் பெயரை உச்சரிப்பதன் மூலம் அந்த நன்மையை நாம் பெற மாட்டோம். ஆன்மீக அறிவியலின் படி, மகான்கள்/குருக்கள், ஸாதகரின் பெற்றோர்/ உடன்பிறப்புகளாக இருந்த சந்தர்ப்பங்களில் கூட, ஒருவரின் பெற்றோர் அல்லது உடன்பிறப்பின் பெயரை நாமஜபம் செய்ததற்கான எந்த முன்னுதாரணமும் இல்லை.

6.3 நான் ஒரு ஹிந்து. நான் ‘ஓம்’ என்று நாமஜபம் செய்யலாமா ?

பதில்: ‘ஓம்’ என்பது ஒரு மேம்பட்ட மந்திரம். இது முழுமையான அக்னி (நெருப்பு) தத்துவத்துடனும் மற்றும் கடவுளின் நிர்குண வடிவத்துடனும் ஒத்துப்போகிறது. ‘ஓம்’ என்று தவறாமல் நீண்ட காலத்திற்கு ஜபம் செய்யும் ஸாதகருக்கு அதிகமான அளவில் தேஜ (அக்னி) தத்துவம் கிடைக்கப் பெரும். அந்த ஸாதகரின் அடிப்படை ஆன்மீக பயிற்சி, கீழ் நிலையில் உள்ள பஞ்சமஹாபூதங்களான பரிபூரண ப்ருத்வி (பூமி) மற்றும் பரிபூரண ஆப (நீர்) தத்துவங்களில் முழுமை அடைந்திராவிட்டால், அவரால் உயர்மட்ட அளவிலான பரிபூரண தேஜ (அக்னி) தத்துவத்தை தாங்கிக்கொள்ள முடியாது. பிறந்த மதத்தின் படியான கடவுளின் பெயரையோ அல்லது குலதெய்வத்தின் பெயரையோ நாமஜபம் செய்வது பரிபூரண ப்ருத்வி (பூமி) தத்துவதுடன் தொடர்புடைய ஆன்மீக பயிற்சியாக அமையும்.

6.4 நான் ஒரு மகானின் பெயரை நாமஜபம் செய்யலாமா ?

பதில்: ஒருவர் பிறந்த மதத்தின்படி கடவுளின் பெயரை நாமஜபம் செய்வதையே ஆன்மீக அறிவியல் அறிவுறுத்துகிறது. ஒரு மகானின் பெயரை நாமஜபம் செய்யலாகாது.

  • தெய்வீக சக்தியின் ஆன்மீக நிலையில் (70%) உள்ள மகான்கள் ஒரு குறிப்பிட்ட பணியை செய்யப் பிறந்தவர்கள். அதற்குண்டான வெளிப்படும் ஆற்றலை அவர்கள் கொண்டுள்ளனர். எனவே, அவர்களின் பெயர்களை நாமஜபம் செய்தால் அதனால் கிடைக்கப்பெரும் வெளிப்படையான ஆற்றல் சிலருக்கு கஷ்டங்களை ஏற்படுத்தக்கூடும். இதற்கு நேர்மாறாக, ஒரு தெய்வம் பெரும்பாலும் வெளிப்படாத ஆற்றலைக் கொண்டிருப்பதால், அதன் பெயரை நாமஜபம் செய்வதால் எந்த கஷ்டமும் ஏற்படாது. மேலும் ஸாதகர்கள் சக்தியை விரும்பவதில்லை. அவர்கள் ஆனந்தம் மற்றும் சாந்தி ஆகியவற்றையே விரும்புகிறார்கள். [80% மற்றும் 90% ஆன்மீக நிலையில் உள்ள மகான்களால் ஆனந்தம் மற்றும் சாந்தியின் ஆன்மீக அனுபவங்களை வழங்க முடியும்].
  • படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றின் விதி மகான்களுக்கும் பொருந்தும் என்பதால், அவர்களின் சக்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அதாவது சில நூறு ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கிறது. அதன்பிறகு, ஒருவரின் அழைப்புக்கு அவர்களால் செவிசாய்க்க முடிவதில்லை. இதற்கு நேர்மாறாக, பிரபஞ்சம் உருவான காலத்திலிருந்து முடியும் வரை தெய்வங்கள் நித்தியமாக இருக்கின்றன.
  • ஆன்மீக அறிவியலின் படி, மகான்களின் வழிபாட்டுத் தலங்களை உருவாக்குவது தவறானது. இருப்பினும், இப்போதெல்லாம் இது அடிக்கடி நிகழ்கிறது.

7. வேறொரு மதத்தை விரும்புவது தொடர்பானவை

7.1 நான் ஒரு கிறிஸ்தவன். ‘ஓம்’ என்ற வார்த்தையை நான் நாமஜபம் செய்யலாமா ?

பதில்: ஆன்மீக அறிவியலின் படி, ஒருவர் பிறந்த மதத்தின் கடவுளின் பெயரை நாமஜபம் செய்வது ஒருவரின் விரைவான ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாகும். விரைவான ஆன்மீக வளர்ச்சியின் கண்ணோட்டத்தில், கடவுளின் அந்த அம்சத்தின் பெயரை நாமஜபம் செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மை ஓம்’ என்று நாமஜபம் செய்வதன் மூலம் பெறுவதை விட மிக அதிகமாக இருக்கும்.

7.2 நான் ஒரு கிறிஸ்தவன், ஆனால் சிவபெருமானே என் இஷ்ட தெய்வம். நான் அவருடைய பெயரை நாமஜபம் செய்யலாமா ?

பதில்: ஆம், நீங்கள் சிவபெருமானின் பெயரை நாமஜபம் செய்யலாம். (அதாவது, இஷ்ட தெய்வத்தின் பெயரை). ஆனால் விரைவான ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒருவரின் மதத்தின் படி கடவுளின் பெயரையோ, குலதெய்வத்தின் பெயரையோ அல்லது தெய்வ தத்துவத்தின் பெயரையோ நாமஜபம் செய்வது நல்லது. ‘நான் எனது குலதெய்வ நாமஜபத்தைக் காட்டிலும் எனது இஷ்ட தெய்வத்தின் நாமஜபத்தை செய்ய விரும்புகிறேன் அது சரிதானா?’ எனும் கட்டுரையை படிக்கவும்’

8. மதத்தின் மீதான வெறுப்புடன் தொடர்புடையவை

8.1 நான் நாமஜபம் செய்வதில் ஆர்வமாக உள்ளேன், ஆனால் எனது மதத்துடன் ஒரு இணைப்பை என்னால் உணர முடியவில்லை. நான் வேறு என்ன நாமஜபம் செய்யலாம் ?

பதில்: அவ்வாறான நிலையில், நீங்கள் இணைப்பை உணரமுடிந்த வேறு எந்த கடவுளின் பெயரையும் நாமஜபம் செய்யலாம்.

8.2 நான் ‘கடவுள்’ என்று நாமஜபம் செய்யலாமா ?

பதில்: கடவுளின் பெயரை நாமஜபம் செய்வதின் மூலம், அப்பெயர் பிரதிநிதித்துவப்படுத்தும் தெய்வீக தத்துவத்தின் அந்த அம்சத்தை நாம் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம். ‘கடவுள்’ என்பது மிகவும் பொதுவான பெயர். இது எல்லாம் அறிந்த, சர்வ வல்லமை படைத்த, எங்கும் நிறைந்த, சர்வ வியாபியான கடவுளின் கூறுகளையும் தத்துவத்தையும் உள்ளடக்கியது. எனவே, ‘கடவுள்’ என்ற வார்த்தையை நாமஜபம் செய்வது கடவுளின் அனைத்து அம்சங்களையும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்க முயற்சிக்கும் ஒரு கடினமான பணியாக இருக்கும். ஆகவே, நம்முடைய ஆன்மீக நிலைக்கு தகுந்த, ஒரு குறிப்பிட்ட கடவுளின் பெயரை, கடவுளின் அந்த அம்சத்தை ஒருங்கிணைப்பதற்காக, நாமஜபம் செய்வதையே ஆன்மீக அறிவியல் அறிவுறுத்துகிறது.

8.3 தெய்வத்தின் பெயருக்குப் பதிலாக ‘அன்பு’, ‘நேசம்’, ‘சாந்தி’ அல்லது ‘அமைதி’ போன்ற வார்த்தைகளை நான் நாமஜபம் செய்யலாமா ?

பதில்: ஆன்மீக கண்ணோட்டத்தில், நாமஜபம் என்பது கடவுளின் குறிப்பிட்ட ஒரு பெயருடன் தொடர்புடைய குறிப்பிட்ட தெய்வீக சக்தியை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. மேற்கண்ட சொற்களில் எந்த குறிப்பிட்ட தெய்வீகத் தத்துவமும் இல்லை. எனவே, கடவுளின் ஒரு குறிப்பிட்ட பெயரை நாமஜபம் செய்வதனால் கிடைக்கும் தெய்வீக சக்தியை இந்த வார்த்தைகளை ஜபம் செய்வதால் பெற முடியாது.
மேலும், கடவுள் என்பவர் நிபந்தனையற்ற ஆன்மீக அன்பின் (ப்ரீதி) அல்லது எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பின் உருவகமாகும். எனவே, கடவுளின் எந்தப் பெயரை நாமஜபம் செய்தாலும் நிபந்தனையற்ற ஆன்மீக அன்பின் தெய்வீக அம்சத்தை, அமைதி’, ‘அன்பு’ போன்ற சொற்களை ஜபம் செய்வதை காட்டிலும் அதிகமாக பெற இயலும்.

8.4 தற்போது நான் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை, நான் எந்த பெயரை நாமஜபம் செய்ய வேண்டும் ?

பதில்: நீங்கள் பிறந்த மதத்தின் படி கடவுளின் பெயரை நாமஜபம் செய்யலாம்.

8.5 எனது பிறப்பு மதத்தின்படி நான் நாமஜபம் செய்யும் போது, என் மனதிற்கு அது சரியாக படுவதில்லை. நான் என்ன செய்வது ?

பதில்: கடந்த கால சூழ்நிலைகள் / அனுபவங்கள் காரணமாக பிறந்த மதம் குறித்து மனதில் ஒரு முடக்கம் ஏதும் இருந்தால், ஆன்மீகம், மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை புரிந்து கொள்ளுதல் உதவக்கூடும். ஒருவரின் பிறப்பின் மதத்தின் படி நாமஜபம் செய்வது என்பது அந்த மதத்துடன் அடையாளம் காண்பதற்கான வழிமுறை என்பதை விட, ஆன்மீகக் கோட்பாட்டினை பிரயோகப்படுத்தும் வழியெனக் கொள்ள வேண்டும். நாமஜபம் செய்வதற்கு முன், அதன் பலன்களை அனுபவபூர்வமாக உணர வேண்டுமென ஒரு மனமார்ந்த பிரார்த்தனை செய்வது உதவியாக இருக்கும்.

9. நாஸ்திகத்துடன் தொடர்புடையது

9.1 நான் ஒரு நாத்திகன். நான் என்ன பெயரை நாமஜபம் செய்ய வேண்டும் ?

பதில்: பிறந்த மதத்தின் படி கடவுளின் பெயரை நாமஜபம் செய்வதையே உங்களுக்கும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஒருவரின் பிறப்பின் மதத்தின் படி நாமஜபம் செய்வது என்பது அந்த மதத்துடன் அடையாளம் காண்பதற்கான வழிமுறை என்பதை விட ஆன்மீகக் கோட்பாட்டினை பிரயோகப்படுத்தும் வழியெனக் கொள்ள வேண்டும். நீங்கள் அதை மனமார்ந்து, தவறாமால் முயற்சி செய்தால், அது நம்பிக்கையின்றி செய்யப்பட்டாலும் கூட, உங்கள் வாழ்க்கையில் அதன் பலனை நீங்கள் காண்பீர்கள். நாமஜபம் செய்வதனால் பெறும் நன்மையின் ஒருவரது தனிப்பட்ட அனுபவமே இந்த வகை ஆன்மீக பயிற்சிக்கு சிறந்த அத்தாட்சியாகும்.