நான் எனது குலதெய்வ நாமஜபத்தைக் காட்டிலும் எனது இஷ்ட தெய்வத்தின் நாமஜபத்தை செய்ய விரும்புகிறேன் – அது சரிதானா ?

ஆம், இஷ்ட தெய்வத்தின் நாமஜபம் செய்வதில் தவறேதும் இல்லை. ஆனால் ஒருவர் அவரது குலதெய்வத்தின் நாமஜபத்தையோ அல்லது அவர் சார்ந்துள்ள மதத்தின் தெய்வீக தத்துவத்தையோ ஜபிப்பது அவரது ஆன்மீக முன்னேற்றம் விரைந்து நடக்க உதவும்.

இதற்கான காரணங்கள் பின்வருமாறு :

1. நமது ஆன்மீக வளர்ச்சிக்கு அதிக அனுகூலமாய் இருப்பது

 • ஆன்மீக சாஸ்திரப்படி எந்த மதம் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்குமோ அதில்தான் நாம் பிறந்துள்ளோம். கீழே உள்ள வரைபடத்தில் கொடுத்துள்ளபடி நாம் எந்த குடும்பத்தில் பிறந்துள்ளோமோ அந்த குடும்பத்தின் குலதெய்வமே நமது ஆன்மீக வளர்ச்சிக்கும் அதிகம் உதவக்கூடியதாக இருக்கும். இறைவனின் எல்லா அம்சங்-களிலும் ஒருவரது குலதெய்வமே அக்குடும்பத்தினர் அனைவருக்கும் அதிக நெருக்க-மான, அக்குடும்பத்தினரின் ஆன்மீக வளர்ச்சிக்காக அணுகக்கூடிய இறை அம்சமாக உள்ளது.

நான் எனது குலதெய்வ நாமஜபத்தைக் காட்டிலும் எனது இஷ்ட தெய்வத்தின் நாமஜபத்தை செய்ய விரும்புகிறேன் – அது சரிதானா ?

இறைவனின் ஐந்து முக்கியமான தத்துவங்கள் :


1. படைத்தல்


2. காத்தல்


3. அழித்தல்


4. மறைத்தல்


5. அருளல்

 • ஆன்மீக முன்னேற்றம் என்பதன் பொருள் என்னவெனில் எல்லா இறை தத்துவங்-களையும் நமது சூட்சும உடலில் உள்வாங்கிக் கொள்ளுதல் ஆகும். எல்லா இறை தத்துவங்களும் நமது சூட்சும தேஹத்தில் உள்வாங்கிக் கொண்டு விட்டோம் எனில் நமது ஆன்மீக பயிற்சியும் பரிபூரணமானதாகி விடும்.
  • நமது பிறப்பினால் நாம் சார்ந்துள்ள மதத்தின் இறைவனின் நாமத்தையோ அல்லது குலதெய்வத்தின் நாமத்தையோ நாம் ஜபிப்பதால் எல்லா இறை தத்துவங்களும் நம்மால் ஈர்க்கப்பட்டு 30% ஆன்மீக முன்னேற்ற அளவை நாம் எட்டுகிறோம்.

  • நாம் வேறு ஏதாவது ஒரு கடவுளின் நாமஜபத்தில் ஈடுபட்டால் அது அந்தக் கடவுள் எந்த இறை தத்துவத்தின் பிரதிநிதியோ அதை வலுப்படுத்துமே தவிர நமது ஒட்டு மொத்த ஆன்மீக வளர்ச்சிக்கு அந்த அளவு உதவுவதில்லை. எனவே மேற்குறிப்பிட்ட நாமஜபம் நாம் நமது பிறப்பினால் சார்ந்துள்ள மதத்தின் இறைவனின் நாமஜபத்தைப் போன்றோ அல்லது நமது குலதெய்வ நாமஜபத்தைப் போன்றோ அந்த அளவு பயனளிப்பதாக இருப்பதில்லை.

  • ஒருவர் தனது விடாமுயற்சியினால் எல்லா இறை தத்துவங்களையும் 30% எப்போது உள்வாங்கிக் கொள்கிறாரோ அப்போது குரு தத்துவம் அவரை 100% இறை தத்துவத்தை உள்வாங்கிக் கொள்ளும் அளவிற்கு உயர்த்துகிறது.

நான் எனது குலதெய்வ நாமஜபத்தைக் காட்டிலும் எனது இஷ்ட தெய்வத்தின் நாமஜபத்தை செய்ய விரும்புகிறேன் – அது சரிதானா ?

சில சமயங்களில் சிலர் அவர்களின் குலதெய்வத்திடமோ அல்லது அவர்கள் பிறப்பினால் சார்ந்த மதத்தை சேர்ந்த இறைவனிடமோ அல்லாது மற்ற ஏதோ ஒரு தெய்வத்திடம் அளவு கடந்த பக்தியும் விசுவாசமும் வைத்திருப்பதைக் காணலாம்.

உதாரணமாக, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் பூஜித்து வணங்குவது மாதா மேரி என்னும் பெண் தெய்வம்; ஆயினும் இந்தப் பிரிவை சேர்ந்த சிலர் புத்தரின் தெய்வீக தன்மையினால் கவரப்பட்டு அவரது நாமத்தை ஜபிக்கலாம். அதேபோல் ஒருவர் ஹிந்துவாக இருந்தால் அவரது குலதெய்வ நாமஜபத்தை விட மற்றொரு ஹிந்து கடவுளான கிருஷ்ணனின் நாமத்தை ஜபிப்பதில் விருப்பமுள்ளவராக இருக்கலாம்.

ஒருவர் ஒரு கடவுளிடம் அதிக பக்தியும் விசுவாசமும் கொண்டவராக இருப்பது அவரது முடிவடையாத முற்பிறவியின் வாசனையினால் இருக்கலாம் அல்லது அந்த குறிப்பிட்ட தெய்வத்தின் தன்மைகள், காரியங்கள் மற்றும் புகழ் ஆகியவற்றைப் பற்றி புத்தகங்களில் படித்து, கதைகளின் மூலமாக கேட்டு கவரப்பட்டதால் இருக்கலாம்.

 • குலதெய்வ நாமஜபத்திற்கும் இஷ்ட தெய்வ நாமஜபத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை ஒரு எளிமையான உதாரணத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் வைட்டமின் ஏ குறைவாக இருந்தால் வைட்டமின் ஏ மாத்திரை உட்-கொள்வதன் மூலம் அதை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் எல்லா சத்துக்களும் நிறைந்த ஒரு டானிக் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு தேவையான எல்லா விதமான வைட்டமின்களும் தாதுக்களும் கிடைத்து விடும். இங்கு வைட்டமின் ஏ என்பது இஷ்ட தெய்வம் அல்லது நாம் மாறிய மதத்தின் கடவுளைப் போன்றது. மாறாக நம் குலதெய்வ நாமஜபம் எல்லா சத்துக்களும் நிறைந்த டானிக்கிற்கு ஈடாகும்.

2. குறைந்தபட்ச பாதிப்பு

இறைவனின் நாமம் மிக சக்தி வாய்ந்ததும் புனிதமானதும் ஆகும். நாம் நாமஜபம் செய்யத் துவங்கும் ஆரம்ப காலத்தில் சில சமயம் நமக்கு அசௌகரியமான நிலை தோன்றக் கூடும். நமக்கு அந்த புனிதத்தை தாங்கக் கூடிய சக்தி இல்லாமையால் லேசான தலைவலி, குமட்டல் உணர்வு போன்ற சிறு சிறு உபாதைகள் நேரக் கூடும்.

ஒருவரது குலதெய்வமோ அல்லது பிறந்த மதம் சார்ந்த தெய்வமோ பரிபூரண பூமி தத்துவத்தை சார்ந்ததாக இருப்பதால் மேற்கூறியவாறு தொந்தரவு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். மாறாக ஒருவர் காயத்ரி போன்ற மிகவும் சக்தி வாய்ந்த அதாவது தேஜ தத்துவம் நிறைந்த மந்திரங்களை ஜபிக்கத் துவங்கினால் மேற்-குறிப்பிட்ட உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

3. ஆன்மீக அனுபவங்கள்

 • ஒருவர் ஆன்மீக பயிற்சி செய்யத் துவங்கும் பொழுது அவருக்கு ஆன்மீக அனுபவங்கள் கிட்டுகின்றன.

 • மற்ற தத்துவங்களை விட பரிபூரண பூமி தத்துவம் சம்பந்தமான ஆன்மீக அனுபவங்கள் ஒருவருக்கு கிட்டும் வாய்ப்பு அதிகம். பரிபூரண பூமி தத்துவத்துடன் சம்பந்தப்பட்ட ஆன்மீக அனுபவம் என்னவென்றால் சூட்சும சுகந்தத்தை உணர்வது (உதாரணம் சந்தன மணம்). ஒருவரது குலதெய்வம் பரிபூரண பூமி தத்துவத்துடன் சம்பந்தப்பட்டதால் குலதெய்வ நாமஜபம் செய்யத் துவங்கிய சிறிது காலத்திற்-குள்ளாகவே சூட்சும சுகந்தத்தை உணரும் ஆன்மீக அனுபவம் கிடைக்கிறது. இந்த அனுபவம் நமது நம்பிக்கையை வலுப்படுத்தி நம் ஆன்மீக பயிற்சியை தொடர ஊக்கத்தை அளிக்கிறது.

 • இதற்கு மாறாக, தேஜ தத்துவம் நிறைந்த இறைவனின் தரிசனம் கிடைப்பதற்கு நீண்ட காலம் அதாவது வருடக்கணக்கில் ஆன்மீக பயிற்சி செய்ய வேண்டும். இதனால் ஒருவர் இடையிலேயே நம்பிக்கை இழந்து ஆன்மீக பயிற்சியை தொடராது விட்டுவிட நேரலாம்.

ஆன்மீக அனுபவங்கள் என்ற நமது பகுதியை தயைகூர்ந்து பார்க்கவும்.