ஆன்மீக நிவாரண முறைகளின் செயல்திறனை பாதிக்கும் காரணிகள்

Factors affecting the effectiveness of spiritual healing remedies

உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது.

வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

ஆன்மீக நிவாரண முறையின் செயல்திறனை பாதிக்கும் காரணிகள் பல்வேறுபட்டவை மற்றும் பல அம்சங்களைப் பொறுத்தது ஆகும். இந்த பல்வேறு அம்சங்களுக்கு இடையேயான தொடர்பு சிக்கலானது மற்றும் ஆன்மீக நிவாரணத்தின்   செயல்திறனுக்கான முக்கிய அடிப்படைக் காரணி, ஒரு நபரின்  ஆன்மீக பயிற்சியின் தரம் மற்றும் அதன்  அளவும் ஆகும். புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட, மேம்பட்ட உணர்வு  (எக்ஸ்ட்ராசென்சரி(ESP)) அல்லது ஆறாவது அறிவு கொண்ட ஒரு நபர் மட்டுமே ஒருவரின்  பல்வேறு பிரச்சனையின் நிலையற்ற பங்கை உண்மையில் புரிந்து கொள்ள முடியும்.

இந்த பல்வேறு அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஆன்மீக நிவாரணத்தை பாதிக்கும் காரணிகள் என்ன?
1. பாதிக்கப்பட்ட நபர்
2. காரண காரணிகள். அதாவது, ஆன்மீக மூல காரணத்தின் வகை
3. பிரச்சனையை ஏற்படுத்துவது.
4. பயன்படுத்தப்படும் ஆன்மீக நிவாரண முறை
5. ஆன்மீக நிவாரணம் அளிப்பவர்

1. பாதிக்கப்பட்ட நபர்

A. அந்த நபரின் விதி

ஒரு நபரின் குறைந்த, மத்யம அல்லது தீவிர விதியை பொறுத்தே  அவரது பிரச்சனையின் நிவாரண அளவு மற்றும் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஒருவர் தீவிர விதியால் துன்பப்பட வேண்டியிருப்பின், அவருக்கு முதலில் ஆன்மீக நிவாரணத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வராமல் போகலாம் அல்லது அவருக்கு அது கிடைக்காமலும் போகலாம். அவரிடம் அதைப் பற்றி எடுத்துரைத்தாலும் பிடிவாதமாக அதில் நம்பிக்கை இல்லை என்றும் கூறலாம்.

ஆன்மீக நிவாரணத்தின் பல்வேறு முறைகள் மூலம் குணமடைவதற்கான சாத்தியகூறுகளில் விதியின் விளைவு குறித்த அட்டவணையைப் பார்க்கவும்.

B. ஒரு நபரின் ஆன்மீக பயிற்சி மற்றும் ஆன்மீக நிலை

ஒரு நபரின் ஆன்மீக நிலை மற்றும் அவர் செய்யும் ஆன்மீக பயிற்சி கடவுளிடமிருந்து எவ்வளவு பாதுகாப்பை அவர் பெற முடியும் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணிகளாகும். ஒரு நபருக்கு கடவுளை உணர்வதற்கான விருப்பம் அதிகமாக இருந்தும், அவரது ஆன்மீக நிலை குறைவாக இருப்பின் அது அவருடைய ஆன்மீக பயிற்சிக்கு ஒரு தடையாக இருக்கலாம், ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து கடந்து வர கடவுளும் அவருக்கு உதவுகிறார். இங்கே கடந்து வருதல் என்பதன் பொருள், பிரச்சனை தீர்க்கப்படும் அல்லது அந்த நபர் அதைத் தாங்கும் வலிமையைப் பெற்று, அதிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

ஆன்மீக பயிற்சியை மேற்கொள்பவர்கள்

  • ஆன்மீக பயிற்சியின்  ஆறு அடிப்படைக் கொள்கைகளுக்கு இணங்குவது
  • ஆன்மீக பயிற்சியை அதிகரிக்கப் படிப்படியாக முயற்சி செய்வது

மற்றும் ஆன்மீக நிவாரண முறையின் மூலம், முழுமையாகவும், நிரந்தரமாகவும் பலன் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

C. ஆன்மீக நிவாரண முறையில் நம்பிக்கை

ஆன்மீக நிவாரண முறையில் நம்பிக்கை உள்ளவர்கள்,நம்பிக்கை இல்லாதவர்களை விட விரைவாகவும், முழுமையாகவும் பயனடைகிறார்கள். இருப்பினும் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட முழுமையாக இல்லாவிட்டாலும், ஆன்மீக நிவாரண முறையின்  மூலம் சிறிதளவேனும் பயனடைகிறார்கள்.

D. ஆன்மீக நிவாரண செய்வதில் ஒழுங்குமுறை மற்றும் தீவிரம்

ஆன்மீக நிவாரணமுறையில், அதன் குணப்படுத்தும் வேகமானது அதை ஒழுங்காகவும், தீவிரத்துடனும் செய்வதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

E. ஆன்மீக நிவாரணமுறை எவ்வளவு அறிவியல் பூர்வமாக அல்லது துல்லியமாக செய்யப்படுகிறது

ஆன்மீக நிவாரணமுறையை ஆன்மீக ரீதியில் சரியாக பயன்படுத்தாவிட்டால்,அதன் செயல்திறன் குறையும் அல்லது மிகக் குறைவான நன்மையை அளிக்கும். ஆன்மீக நிவாரணமுறை மற்றும் அவற்றின் சரியான பயன்பாட்டிற்குப் பின்னால் உள்ள ஆன்மீக அறிவியலை அறிந்துக்கொள்வதின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.

F. பிரச்சனை தொடங்கிய பிறகு எவ்வளவு வேகமாக ஆன்மீக நிவாரணமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது

ஆன்மீக உலகில் அதன் மூல காரணத்தைக் கொண்ட பிரச்சனையின் தொடக்கத்திற்குப் பிறகு, ஆன்மீக நிவாரணமுறை எவ்வளவு வேகமாக அறிமுகப்படுத்தப்படுகிறதோ, அவ்வளவு சிறப்பாக அதன் விளைவும் இருக்கும்.

G. ஆன்மீக நிவாரணமுறை ஒருவரின் சுயவிருப்பமாக எடுக்கப்படுகிறதா அல்லது ஒரு மகானின் வழிகாட்டுதலின் மூலம் எடுக்கப்படுகிறதா?.

ஆன்மீக நிவாரணமுறையை சொந்தமாகச் செய்வதைக் காட்டிலும் ஒரு மகானின் ஆலோசனைப்படி செய்வது சிறந்த பலனைத் தரும். ஏனென்றால் அவரின் ஆலேசனையின்போது அவரின் ஸங்கல்பம் அந்த ஆன்மீக நிவாரணத்தின் பின்னால் இருக்கும். ஒரு மகான் ஒரு குறிப்பிட்ட நிவாரண முறையை அறிவுறுத்திய பிறகு, அதை  உடனடியாக நடைமுறைப்படுத்துவது அதன் விளைவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

H. பாதிக்கப்பட்ட நபரைச் சுற்றியுள்ள கருப்பு சக்தியின் அளவு

ஒரு நபரைச் சுற்றியுள்ள கருப்புசக்தியின் அளவு அதிகமாக இருப்பின், அவரது ஆன்மீக நிவாரணமுறையின்  பலன் தரும் காலமும் அதிகரிக்கிறது. உண்மையில் அந்த நபரின் கருப்புப்படலத்தை குறைக்க ஆரம்பத்தில் இந்த நிவாரணம் செயல்படுகிறது, அதன்மூலம் அவரால் ஆன்மீக நிவாரணத்தின் தீர்வான விளைவை பெற முடிகிறது.

2. காரண காரணிகள்

1. பாதிக்கும் காரணியான மூதாதையர்(பித்ருக்கள்) அல்லது ஆவிகளின் வலிமை

பாதிக்கும் காரணியான மூதாதையர் அல்லது ஆவிகள் வலிமை குறைவாக இருந்தால், ஆன்மீக நிவாரண முறையின் குணப்படுத்தும் தன்மை  விரைவாகவும் முழுமையாகவும் அந்த நபரின்  பிரச்சனைகளை  சரிசெய்கிறது. ஆரம்பத்தில் ஒரு நபருக்கு மூதாதையர் மற்றும் ஆவிகளால் பாதிப்பு ஆகியவை அதிகமாக இருப்பின், ஆன்மீக நிவாரணத்தை  எதிர்க்கும் தன்மையும் அதிகரித்து காணப்படும் இதன் காரணமாக ஆன்மீக நிவாரணத்தினால் உண்டாகும் விளைவுகளையும் அல்லது தீர்வுகளையும்  அவர்களால் எதிர்க்க முடியும்.

2. ஒன்று அல்லது பலதரப்பட்ட காரண காரணிகள்.

ஒரே ஒரு ஆன்மீக காரணியால் பிரச்சனை ஏற்பட்டால், அந்த பிரச்சனைக்கு எதிராக  ஆன்மீக நிவாரண முறை நன்றாக செயல்படும். உதாரணமாக, மூதாதையர் பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்ட ஒருவர், ‘ஸ்ரீ குருதேவ தத்தா’ என்ற நாமஜபத்தை  ஆரம்பித்த பின்பு, மெல்போர்னில் உள்ள எங்களின் பயிலரங்கு ஒன்றில் கலந்து கொண்ட ஒரு பங்கேற்பாளரை, போல அரிக்கும் தோலழற்சி ஒரு வாரத்திற்குள் மறைந்துவிடும். ஆனால் அதே நிகழ்வு ஆவிகளின் தாக்குதலால் சிக்கலானதாக இருந்தால், ஆன்மீக நிவாரண முறை உடனடி முடிவுகளைத் தராது.

3. காரணம் முற்றிலும் உடல் அல்லது மனோரீதியான பரிமாணத்தில் இருத்தல்

பிரச்சனைக்கான காரணம் உடல் அல்லது மனோரீதியான பரிமாணத்தில் இருந்தால், ஆன்மீக நிவாரணமுறையின் விளைவு ஆன்மீக உலகில் இருப்பதைப் போல வியத்தகு முறையில் இருக்காது. எடுத்துக்காட்டாக, மூதாதையர் பிரச்சனைகளால் போதைக்கு அடிமையான ஒருவர், எங்கள் துபாய் பயிலரங்கின்  பங்கேற்பாளரைப் போல ஒரு வாரத்திற்குள் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடலாம். அவர் உடல் அல்லது மனோரீதியான காரணத்தால் போதைக்கு அடிமையாகி இருந்தால், நிவாரணத்தின் குணமாக்கும் திறன் வியத்தகு முறையில் இருந்திருக்காது.

இருப்பினும், உடல் மற்றும் மனோரீதியான  காரணமாக இருந்தாலும், ஆன்மீக நிவாரண முறை அந்த நபருக்கு நன்மையைத் தருகிறது. இது உடல் அல்லது மனோரீதியான  சிகிச்சையின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகிறது. மேலும், அந்த நபரைச் சுற்றியுள்ள கருப்பு ஆற்றல் அகற்றப்பட்டு, அந்த நபரின் வாழ்வை மேம்படுத்தி வழக்கமான சிகிச்சைகளை செயலாற்றுவதற்கும் உதவுகிறது.

4. காரண காரணிகளால் ஒருமுறையோ அல்லது தொடராகவோ பாதிப்பு ஏற்படுகிறதா?

ஆன்மீக காரண  காரணி ஒருமுறை மட்டுமே அந்த நபரை பாதிக்கிறது என்றால், ஆன்மீக நிவாரண முறையின் விளைவு வேகமாகவும், வரையறுக்கப்பட்ட அமர்வில் முழுமையாகவும் இருக்கும். ஆனால் இந்த காரண காரணி ஒரு நபரை தொடர்ந்து பாதிக்கிறது என்றால், அது செயலில் இருக்கும் வரை ஆன்மீக நிவாரண முறையை  தொடர்ந்து  செய்யவேண்டும்.

ஆவிகள் இருக்கும் ஒரு வீட்டிற்குச் சென்றதால் அங்குள்ள கருப்பு சக்தியால் பாதிக்கப்பட்டு அசாதாரண நடத்தையை வளர்த்துக் கொண்ட ஒரு நபரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் ஒரு குறுகிய கால ஆன்மீக நிவாரண முறை மூலம் பயனடைவார்.

ஆனால் அவர் அந்த வீட்டில் உள்ள ஆவிகளால் பீடிக்கப்பட்டு , பின்னர் அசாதாரண நடத்தையை வளர்த்துக் கொண்டால், பிரச்சனையின் அறிகுறிகள் மறைந்து, அதன் பிடியிலிருந்து முற்றிலும் வெளிவர,உண்மையில் மிக நீண்ட காலத்திற்கு ஆன்மீக நிவாரண முறையை தொடர வேண்டியிருக்கும்.

3. பிரச்சனை

1. ஒன்று அல்லது பல பிரச்சனைகள்

ஒரு நபருக்கு ஆவிகளின் தாக்குதல் காரணமாக அரிக்கும் தோலழற்சி இருந்தால், அது அசாதாரண நடத்தையுடன் கூடிய அரிக்கும் தோலழற்சி பிரச்சனையின் நிவாரணத்தை விட வேகமாக நிவாரணம் அடையக்கூடும்.

2. மீளக்கூடிய அல்லது மீள முடியாத தீங்கு

ஆன்மீக நிவாரண சிகிச்சையின் வேகம் மற்றும் அளவு ஆகியவை மீள முடியாத தீங்கு  ஏற்பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, ஆவியின்  தாக்குதலால் ஒருவரது சிறுநீரகத்திற்கு மீள முடியாத சேதம் ஏற்பட்டால், அவர் ஒரு உயர்நிலை ஆன்மீக நிவாரணமுறையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை மாற்றியமைப்பது சாத்தியம், ஆனால் அதற்கு ஒருவர் தீவிர ஆன்மீக பயிற்சியுடன் உயர் நிலை ஆன்மீக நிவாரண முறையையும்  மேற்கொள்ள வேண்டும்.

4. ஆன்மீக நிவாரண சிகிச்சை முறையை  பயன்படுத்துவது

1. பயன்படுத்தப்படும் ஆன்மீக நிவாரண முறையின் வகை

ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படைக் கொள்கைகளுக்கு இணங்கி தொடர்ந்து செய்யப்படும் ஆன்மீக பயிற்சியே சிறந்த ஆன்மீக நிவாரண முறை ஆகும்.

மற்ற ஆன்மீக நிவாரணமுறைகளுள், பரிபூரண பிரபஞ்ச தத்துவத்தோடு தொடர்புடையவை, தாழ்வானவற்றைக் காட்டிலும் விரைவான முடிவுகளைத் தருகின்றன.

எடுத்துக்காட்டாக, வாசனை திரவியங்களை பயன்படுத்தி செய்யும் ஆன்மீக நிவாரண முறை மிகவும் தாழ்வான பரிபூரண பிரபஞ்ச தத்துவமான பூமியுடன் ஒத்திருக்கிறது, அதாவது பரிபூரண நில தத்துவம் . இந்த முறை  உப்பு நீர் நிவாரணத்தை  விட தாழ்வானது, ஏனெனில் உப்பு நீர் முறையானது பரிபூரண நீர் தத்துவத்தோடு ஒத்திருக்கிறது.

2. இந்த சிகிச்சை முறை குறிப்பிட்ட பரிசோதனையின் படி தேர்வு செய்யப்பட்டதா அல்லது  நோக்கமற்ற முறையில் தேர்வு செய்யப்பட்டதா?

காரணக் காரணியின் குறிப்பிட்ட பரிசோதனைக்கு பிறகு அளிக்கப்படும்  ஆன்மீக நிவாரணமானது விரைவான மற்றும் முழுமையான முடிவுகளை அளிக்கிறது. இதன் காரணமானது மிகவும் மேம்பட்ட புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு  அல்லது ஆறாவது அறிவைப் பயன்படுத்துவதன் மூலம், சரியான காரண காரணி அல்லது காரணிகள் மற்றும் பிரச்சனைக்கு பின்னால் இருந்து தூண்டும் தீய ஆற்றலின் சரியான காரணத்தை நாம் குறிப்பாக கண்டறிய முடியும். இது தகுந்த ஆன்மீக நிவாரணத்தை தேர்ந்தெடுப்பதற்கு வழி வகுக்கிறது. இது விரைவான முழுமையான மற்றும் நிரந்தர முடிவுகளை அளிக்கிறது. இருப்பினும், ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஆன்மீக நிவாரணமுறையை தற்செயலாக அல்லது சொந்தமாக எடுத்துக் கொண்டால், அது 100% பயனுள்ளதாக இருக்கக்கூடிய வாய்ப்பு குறைவு. சமுதாயத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் ஆறாவது அறிவு வளர்ச்சியடையாமல் இருப்பதால், காரண காரணியை துல்லியமாகக் கண்டறிவது சாத்தியமில்லை. இதன் விளைவாக, தகுந்த ஆன்மீக நிவாரணம்  கிடைக்காமல் போகலாம்.  அப்படியிருந்தும், ஆன்மீக நிவாரண முறையைப் பயன்படுத்துவதன் மூலம், நம் பிரச்சனைகளைத் தணிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறோம்.

3. ஒன்று அல்லது பல நிவாரண முறையை  பயன்படுத்துதல்

ஆன்மீக நிவாரண முறையை கூட்டாகப் பயன்படுத்தும் போது அதிக பலன்களைத் தருகின்றன. உதாரணமாக,விபூதி, உப்பு நீர் நிவாரணம்  செய்வது மற்றும் கடவுளின் நாமத்தை ஜபிப்பது போன்ற  பரிகாரங்கள்  அனைத்தையும்  செய்வது தனித்தனியாக அவற்றை செய்வததை விட சிறந்த பலனைத் தரும்.

4. ஆன்மீக நிவாரணத்திற்கு பயன்படுத்த கிடைக்கும் பொருட்கள்

நிவாரணத்திற்கு  உதவ கிடைக்கும் தேவையான மற்றும் உண்மையான பொருட்கள் அதன் முடிவுகளை சிறப்பான வகையில் உறுதி செய்கிறது. உதாரணமாக, மாட்டுக் கோமியத்தைக்(கோமூத்திரம்) கொண்டு செய்யும் ஆன்மீக நிவாரணத்திற்கு, கலப்பினமற்ற பசுவின் புதிய கோமியத்தை  பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.

5. நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் திறன்

ஆன்மீக நிவாரணத்தின் பலன், அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தூய்மை மற்றும் திறனைக்கொண்டு  தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, விபூதியை  ஆன்மீக நிவாரணத்திற்குப் பயன்படுத்தும் போது, பூஜை மேடையில்  எஸ். எஸ். ஆர். எஃப் ஊதுபத்தியை எரிப்பதன் மூலம் கிடைக்கும் விபூதியானது, பூஜை மேடையில் எரிக்கப்பட்ட மற்ற  ஊதுபத்தி  மூலம் பெறப்பட்ட விபூதியை விட அதிக திறன் கொண்டதாக இருக்கும்.

6. நிவாரணத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் மீதுள்ள கருப்பு படலத்தின் (avaran) அளவு

விபூதி, தீர்த்தம் போன்ற ஆன்மீக நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்ற  அனைத்து பொருட்களையும் ரஜ-தம சூழலில் வைத்திருந்தால், அதன்மீது ரஜ-தமாவின் படலம் தானாக உருவாகும் நிலையுள்ளது. கூடுதலாக, அந்த இடத்தில் உள்ள ஆவிகள் அல்லது அந்த நபரைப் பாதிக்கும் ஆவிகள்  அவற்றின் மீது கருப்பு ஆற்றலின் படலத்தை உருவாக்கலாம். இரண்டு நிகழ்வுகளிலும், ஆன்மீக நிவாரண பொருட்களின் செயல்திறன் மிகவும் குறைவாகிறது.எனவே, பூஜை மேடை போன்ற ஸாத்வீீக சூழலில் பொருட்களை வைத்திருக்கவும், மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வது போன்ற ரஜ-தம தாக்கங்களிலிருந்து விலகி இருக்கவும் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீக நிவாரணத்தில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன் இந்த பொருட்களை சுத்திகரிக்க நடவடிக்கை எடுப்பது நல்லது. இதை சுத்திகரிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வதன் மூலமும், கோமியம்(கோமூத்திரம்) அல்லது தீர்த்த நீர் போன்றவற்றை தெளிப்பதன் மூலமும் செய்யலாம்.

5. ஆன்மீக நிவாரணம் அளிப்பவர்

1. நிவாரணம் அளிப்பவரின் ஆன்மீக நிலை மற்றும் திறன்

ஆன்மீக நிவாரண முறைகளை கடைபிடிக்கும் அனைத்து நிவாரணம் அளிப்பவர்களும் குறைந்தபட்சம் 50% ஆன்மீக நிலையில் இருப்பது அவசியம். இந்த நிலையில் நிவாரணம் அளிப்பவரின் மனது லகித்து ஒருநிலைப்படுகிறது , எனவே அவர் விருப்பப்படி  பிரபஞ்ச ஆற்றலை (இச்சா-சக்தி) அணுகத் தொடங்குகிறார். இந்த சூட்சும ஆற்றலை அவர் அணுகுவதால், அவரது ஆன்மீக நிவாரணமளிக்கும் திறன் மிகவும் அதிகரிக்கிறது.

மறுபுறம், 50% ஆன்மீக நிலைக்கு கீழே உள்ள நிவாரணமளிப்பவர் குறைந்தபட்ச ஆன்மீக நிவாரணமளிக்கும் திறன்களைக் கொண்டிருப்பதோடு, உயர்நிலை ஆவிகளால் பீடிக்கப்படும் அபாயத்திலும் இருக்கிறார்கள். எனவே அவர்களின் சேவைகளைப் பெறுபவர்களும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆன்மீக நிவாரணமுறையில் விபூதியை ஊதுவது போன்ற செயலில், பயன்படுத்தப்படும் உயிரற்ற பொருட்களின் பங்கு, அந்த ஆன்மீக நிவாரண செயல்திறனில் 5% மட்டுமே, அதாவது இந்த எடுத்துக்காட்டில் உள்ள விபூதியை போன்று. 95% செயல்திறன்  நிவாரணமளிப்பவர்  விபூதியை ஊதுவதைப் பொறுத்தது.

2. நிவாரணமுறை பற்றிய ஞானமும் புரிதலும்

சில நேரங்களில் நிவாரணம் அளிப்பவர் உள்ளார்ந்த ஆன்மீக நிவாரணமளிக்கும் திறனைக் கொண்டுள்ளவர்களாகவும், பெற்றோர் அல்லது வழிகாட்டியிடமிருந்து ஆன்மீக நிவாரண நுட்பங்களைக் கற்றுயுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இதற்குப் பின்னால் உள்ள ஆன்மீக அறிவியலைப் பற்றிய அறிவும், குறிப்பாக நிவாரணங்கள், மற்றும் பொதுவான ஆன்மீக நிவாரணத்தை பற்றி புரிதலும் இல்லை என்றால், நிவாரணமளிப்பவரின் ஆன்மீக சிகிச்சையளிக்கும்  திறன் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

3. சூட்சும உணர்வு மற்றும் கர்மேந்த்ரியங்களின் திறன்

அதிக சூட்சும உணர்திறன் கொண்ட நிவாரணமளிப்பவர்களால் சிக்கலை மற்றும், அதன் காரண காரணியை சிறப்பாகக் கண்டறியவும் முடியும். (மேலும் அறிய ஆறாவது அறிவு (உளவியல்)திறன்களால் எவ்வளவு உணர முடியும் என்ற எங்கள் கட்டுரையைப் பார்வையிடவும்) இதன் அடிப்படையில் காரணி பொருளை வெளிப்படுத்துவதால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ளமுடியும், மேலும்  குறிப்பிட்ட ஆன்மீக நிவாரணமுறையை சிறப்பாக திட்டமிடவும் இது உதவுகிறது.

உயர்ந்த சூட்சும கர்மேந்த்ரியங்களின் திறன் கொண்ட நிவாரணமளிப்பவர்கள் உயர் நிலை ஆவிகளை வெளிக்கொணர்ந்து  அவற்றை வெற்றிகரமாக முறியடிக்க முடியும்.

4. ஆன்மீக வழிகாட்டுபவரின் அருள்.

ஒரு குரு அல்லது மகானின் அருளைப் பெற்ற ஒரு நிவாரணமளிப்பவர் செய்யும் ஆன்மீக நிவாரண முறையானது, அதே அனுபவமும் ஆன்மீக நிலையும் கொண்ட ஆனால் ஒரு குருஅல்லது மகான் அருள் இல்லாமல் ஒரு நிவாரணமளிப்பவர் செய்யும் அதே சிகிச்சையை விட விரைவான மற்றும் முழுமையான முடிவுகளைத் தருகிறது, ஏனென்றால், குரு அல்லது மகானின் அருளுடன் நிவாரணமளிப்பவர் தெய்வீக சக்தியின் ஆதரவைப் பெறுகிறார். எனவே அவரது நிவாரணப்படுத்தும் சக்திகளும் மேன்மையடைகிறது .

 5. உயர் நிலை  ஆவிகளால் பீடிக்கப்படுத்தலில் இருந்து நிவாரணம்.

சில சமயங்களில் நிவாரணம் அளிப்பவர் ஒரு சூட்சும -மந்திரவாதி (மந்திரீகம்) போன்ற உயர் நிலை ஆவியால் ஆட்கொள்ளப்படுகிறார் இது எப்போது நிகழும் என்றால்.

  • நிவாரணமளிப்பவரின் ஆன்மீக நிலை 50% க்கும் குறைவாக உள்ளபோது
  • நிவாரணமளிப்பவர் புகழ், அதிகாரம் மற்றும் பணம் போன்ற மாயைகளால் சூழப்பட்டவராக இருக்கும் போது
  • மகான் அல்லது குருவின் மேற்பார்வையின்றி நிவாரணமளிப்பவர் தானே செயல்படுபவராக இருக்கும் போது.
  • நிவாரணமளிப்பவர் தனது ஆன்மீக பலத்தை விட அதிக வலிமை கொண்ட ஆவிகளை நிவாரணப்படுத்த அல்லது அதை ஓட்ட முயற்சி மேற்கொள்ளும் போது

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நிவாரணமளிப்பவர்கள் தங்கள் சொந்த திறனுக்கு அப்பாற்பட்ட சிறந்த முடிவுகளைத் தருவதாகத் தோன்றலாம். இது முழுமையாகக் கூட தோன்றினாலும் உண்மையில் அந்த பீடிக்கப்பட்ட ஆவி பிரச்சனையைத் தணிக்கும் போர்வையில் நிறைய கருப்பு சக்தியை பாதிக்கப்பட்ட நபரிடம் செலுத்துகிறது.

6. பிற காரணிகள்

1. இருக்கும் இடத்தின் ஸாத்வீகத் தன்மை

ஸாத்வீக வளாகத்தில் செய்யப்படும் ஆன்மீக நிவாரண முறையானது, சுற்றுச்சூழலில் உள்ள ரஜ-தமவைக் கடப்பதில் எந்த ஆற்றலும் இழக்கப்படாமல் இருப்பதால், விரைவாகவும், சிறப்பாகவும் முடிவுகளைத் தருகிறது. எனவே வீட்டில் உள்ள அனைத்து ரஜ-தம தாக்கங்களையும் நீக்கி, வீட்டை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.

2. ஒரு நபரின் வாழ்க்கை முறை

ஒரே மாதிரியான பிரச்சனைக்கு, ஒரே மாதிரியான  நிவாரணத்தின் பலனை ஒரு ஸாத்வீகமற்ற நபர் பெறுவதை விட, ஒரு ஸாத்வீகமான நபர் மிக வேகமாகப் பெறுகிறார்.