நமது வாழ்வின் பல பரிமாணங்களில் ஏற்படும் பிரச்சனைகளின் மேலோட்டமான மற்றும் மூல காரணங்களின் உதாரணங்கள் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வனைத்து உதாரணங்களும் நிஜ வாழ்வு நிகழ்வுகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன மற்றும் இந்த பிரச்சனைகளுக்கான மூல காரணம் ஆன்மீக ரீதியானவை என்று எஸ்.எஸ்.ஆர்.எஃப் கண்டறிந்துள்ளது.
நாம் ஒரு பிரச்சனைக்கான தீர்வை தவறான இடத்தில் தேடும் போது அதை சரி செய்ய முடியாது, ஏனெனில் அதன் மூல காரணம் ஆன்மீக மட்டத்தில் இருப்பதால் அவ்வழியிலேயே தான் அதை குணப்படுத்த முடியும்.
1. தனிநபர் அல்லது குடும்பங்களை பாதிக்கும் பிரச்சனைகள்
ஆய்வுக்கட்டுரை 1 : திருமண பந்தத்தில் ஏற்படும் பிரச்சனைகள்
திருமண பந்தத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் ஒரு தம்பதி மனத்தளர்ச்சி அடைந்து, பேசித் தீர்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் மனநலத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு திருமண ஆலோசகரிடம் செல்வார்கள்.
திருமண பந்த பிரச்சனைக்கு ஆன்மீகக் காரணம் என்ன?
மறைந்த மூதாதையர்களின் ஆவி திருமண பந்தத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், இதனால் மனத்தளர்ச்சி உண்டாகும். ஆகையால் மூதாதையர்களின் சூட்சும-ஆவிகள் உண்டாக்கும் கஷ்டம் தான் மனத்தளர்ச்சிக்கு மூல காரணம். மறுமையில் அவர்கள் படும் துன்பங்களுக்கு நாம் ஆன்மீக ரீதியில் ஏதாவது செய்வோம் என்பதற்காக நமது கவனத்தை அவர்கள் இவ்வாறு ஈர்க்கிறார்கள்.
ஆய்வுக்கட்டுரை 2 : நெஞ்சுவலி
நாம் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டால் நம்மை எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.ஸி.ஜி), நெஞ்சின் எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை போன்றவற்றை செய்யச் சொல்வார்கள். பரிசோதனையின் முடிவில் ஏதும் தெரியவில்லை என்றால் உளவியல் ரீதியாக சஞ்சலம் இருந்ததால் இதயத்தை பாதித்தது என்று மருத்துவர்கள் சொல்லி விடுவார்கள்.
நெஞ்சுவலிக்கு ஆன்மீக மூல காரணம் என்ன?
நவீன அறிவியலால் குணப்படுத்த முடியாத தொடர்ச்சியாக ஏற்படும் நெஞ்சுவலியின் மூல காரணம் பொதுவாக ஆன்மீக ரீதியில் இருக்கும்.
இதற்கு ஒரு ஆன்மீக காரணம் என்னவென்றால் உடலின் குண்டலினியில் அடைப்பு இருப்பதாகும். ஆன்மீக பயிற்சியின்மை காரணமாக இந்த அடைப்பு ஏற்பட்டிருக்கும்.
ஆய்வுக்கட்டுரை 3 : பொருளாதாரப் பிரச்சனைகள்
பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் ஒரு நபர் வணிகத்தில் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்கு திறமையில்லா ஊழியர்களை காரணம் காட்டுவார்கள், அதனால் ஒரு ஆலோசகரின் உதவியை நாடுவார்கள்.
ஊழியர்களின் திறமையில்லா உற்பத்திக்கு ஆன்மீக மூல காரணம் என்ன?
அலுவலக வட்டாரத்தில் தீய சக்திகள் இருப்பதால் சிறந்து செயல்பட்டாலும் வணிகத்தில் விளக்கமுடியாத இழப்புகள் ஏற்பட அதுவே ஒரு காரணமாகலாம்.
ஒரு மூடப்பட்ட குடிலில்(வீட்டில்) ஒரு ஆற்றல்(தீய) இருக்கும். கட்டிட அமைப்பு மற்றும் மரச்சாமான்கள், இயந்திரங்கள் வைக்கப்பட்ட முறையின் காரணமாக தீய அதிர்வுகள் ஏற்படலாம். இதனால் ஊழியர்களின் செயல்திறன் குறைதல் அல்லது அவர்களுக்கிடையே ஒற்றுமையின்மை உண்டாகலாம்.
ஆய்வுக்கட்டுரை 4 : போதைப் பழக்கம்
போதைக்கு அடிமையானவர்களை நாம் கண்டிருப்போம். ஆனால் ஏன் அப்படி ஆனார்கள்? மனத்தளர்ச்சி அல்லது ஆளுமை குறை என்று மறுவாழ்வு மையத்தில் சொல்வார்கள்.
போதைப் பழக்கத்தின் எல்லா வழக்குகளிலும் அதன் மூல காரணம் அந்நபரை ஆவி அல்லது பேயின் ஆக்கிரமிப்பு என ஆன்மீக ஆராய்ச்சி கண்டறிந்தது.
ஆய்வுக்கட்டுரை 5 : ஒரு விபத்தில் தன் பெற்றோர்களை இழந்த சிறுமி
பல தடவை வாழ்க்கை மிகக் கொடூரமாகத் தெரியும் – ஒரு விபத்தில் பெற்றோர்கள் இருவரும் இறந்து சிறு குழந்தை மற்றும் உயிர் தப்பியது. எனக்கு ஏன் இப்படி நடந்து, நான் என்ன தவறு செய்தேன் என்றெல்லாம் இப்படிப்பட்ட சம்பவத்திற்கு பிறகு பொதுவாக மக்கள் கேள்வி கேட்பார்கள். பல நேரம் இக்கேள்விகளுக்கு யாராலும் விடையளிக்க முடியாது. குறைந்த பட்சம் அக்குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து இந்தக் கொடிய நிகழ்விலிருந்து மீண்டுவர உதவலாம்.
வாழ்க்கை நிகழ்வுகளை விதி என்ற வலுவான அம்சம் முடிவு செய்யும். அது நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு அம்சமாகும். ஒரு விதத்தில் பிறப்பு, இறப்பு, திருமணம்,பெரும் விபத்து போன்ற நமது வாழ்வின் பெரிய நிகழ்வுகள் முன்பே விதிக்கப்பட்டவை.
மேலும் அறிய இந்தக் கட்டுரையைப் படிக்கவும்: விதி மற்றும் தன்னிச்சையான செயல் என்றால் என்ன?
2. சமூகத்தை பாதிக்கும் பிரச்சனைகள்
ஆய்வுக்கட்டுரை 6 : பள்ளிக்கூடத்தில் வன்முறை
பெரிதளவு சமூகத்தை பாதிக்கும் பிரச்சனைகள் எப்படிப்பட்டவை, அதன் விளைவுகள் என்னென்ன, அதற்கு தீர்வு எவ்வாறு காண்பது?
உதாரணத்திற்கு பள்ளிக்கூடங்களில் அதிகம் நிகழும் வன்கொடுமைகள்? இதற்கு காரணம் மரியாதையின்மை, சகிப்புத்தன்மையின்மை என்று நாம் கூறலாம். பிறரை மதிக்கவும், சகிக்கவும், அன்போடு பழக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது ஒரு தீர்வாகலாம்.
சமூக மட்டத்தில் தர்மம் சரிந்தால் குழந்தைகளின் நடத்தையில் அது வெளிப்படும்.
உன்னத மகானாகிய ஆதிசங்கராச்சாரியர் தர்மம் 3 பணிகளை சாதிக்கின்றது என விளக்கியுள்ளார் :
- சமூக அமைப்பை சிறந்த நிலையில் வைத்திருத்தல்
- ஒவ்வொரு உயிருக்கும் உலகளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்
- ஆன்மீக ரீதியிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.
ஆய்வுக்கட்டுரை 7 : அதிகரித்து வரும் இயற்கை பேரழிவுகளின் தீவிரம்
நகரங்களை மூழ்கடிக்கும் வெள்ளப்பெருக்கு, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்தால் புவியியல் காரணங்கள் என நாம் சுட்டிக்காட்டுவோம். பல ஆண்டுகள் மற்றும் கோடிக்கணக்கான பணம் செலவழித்தும் அடுத்த இயற்கை பேரழிவை கணிக்க புவியியலாளர்கள் முயற்சித்தும் பலனற்று போகிறது.
இன்றைய செய்திகளில் பெரும்பாலும் மனித இனத்தின் மீது தாக்குதல், இயற்கை பேரழிவு, வெள்ளம், பூகம்பம், தொற்றுநோய் போன்றவற்றையே காண்போம்.
இவற்றின் உயர்வின் மூல காரணம் ஆன்மீக ரீதியில்(மட்டத்தில்) தான் உள்ளது. பைங்குடில் வாயுக்கள் போன்ற ஸ்தூல அம்சங்கள் வெறும் 30% தாக்கத்தை மட்டுமே உண்டாக்குகிறது.
உலகத்தில் ரஜ-தம குணங்களின் அதிகரிப்பு என்பது நம் வீட்டில் தூசியும் அழுக்கும் சேர்ந்திருப்பது போல். இயற்கை பேரழிவுகள், தொற்றுநோய்கள், போர் போன்றவை அண்டத்தை தூய்மைப்படுத்த இயற்கை மேற்கொள்ளும் ஒரு வழியாகும்.
இயற்கை பேரழிவுகளின் உயரும் தீவிரத்தின் காரணங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் அதிகமாக விளக்கியுள்ளோம்.
3. சுருக்கம்
சுருக்கமாக சொல்லப்போனால், பல தினசரி வழக்கமான பிரச்சனைகளின் மூல காரணங்கள் ஆன்மீக ரீதியில் தான் உள்ளன என எஸ்.எஸ்.ஆர்.எஃப் கண்டறிந்துள்ளது. உடலின் சிறு புண் அல்லது கொப்பளத்தில் இருந்து வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தவறான முடிவுகள் வரை இதில் அடங்கும்.
அடுத்த கட்டுரையில் ஆன்மீக உலகத்தின் பிரச்சனைகளின் பல்வேறு மூல காரணங்களையும் நம் மீது அதன் தாக்கத்தின் வாய்ப்பை பற்றியும் சுருக்கமாக விளக்கியுள்ளோம்.






