காலநிலை மாற்றம் சமீபத்திய தகவல் – காரணங்களும் தீர்வுகளும்


சுருக்கம்

சமீபத்திய காலங்களில் உலகில் பயங்கர அளவில் இயற்கை பேரழிவுகள் அதிகரித்துள்ளதைக் காண்கிறோம். ஆன்மீக ஆராய்ச்சியின்படி, பூகம்பம், வெள்ளம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரிப்பதன் மூல காரணம் பிரபஞ்சத்தில் காலப்போக்கில் நடக்கும் சுழற்சி செயல்முறையே ஆகும். இதுவரை நாம் கண்ட இயற்கை பேரழிவுகள் அழிவு காலத்தின் ஆரம்ப கட்டம் தான், 2023 வரை உள்ள 5 ஆண்டுகளில் இதன் தீவிரம் அதிகரிக்கும். பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தும் மூன்றாம் உலகப்போரையும் இவ்வழிவுகாலம் பார்க்கும்.  இக்கடினமான சூழ்நிலையில் உயிர் பிழைக்கும் ஒரே வழி ஆன்மீகத்தைப் பயில்வதே ஆகும்.

இக்கட்டுரை ஆங்கிலத்தில் 2007-ல் முதல்முறையாக வெளியிடப்பட்டு ஜூன் 2019-ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

இக்கட்டுரையை புரிந்து கொள்ள கீழ்க்கண்ட அடிப்படை கட்டுரைகளை படிக்க பரிந்துரைக்கிறோம்:

1. இயற்கை பேரழிவுகளின் அதிகரிக்கும் தீவிரம்

கடந்த பத்தாண்டில், உலகவில் நிகழும் இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் அதிகரித்துள்ளதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஊடகங்கள் மூலமாகவும், நம்மில் சிலர் நேரடியான அனுபவங்களில் இருந்தும், இயற்கையின் அபாரமான பலத்தை பார்த்துள்ளோம். சமீப காலத்தில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஜப்பானில் சுனாமி, பாகிஸ்தான், ஹைட்டி மற்றும் சீனாவில் பூகம்பம், வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் கத்ரீனா மற்றும் பிற சூறாவளிகள் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பேரழிவுகள் எதிர்ப்பாராத உயிரிழப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தி அவற்றின் அளவினால் நம் மனதையும் பாதித்துள்ளது.

இது மோசமடைய முடியுமா? ஆம் என்றால், நமக்கு எத்தனை நேரம் உள்ளது? இதற்கு ஏதாவது செய்ய முடியுமா?

உலகளவில், குறிப்பாக கடந்த 2 பத்தாண்டுகளில், பேரழிவுகளின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே இருப்பதை வரைபடத்தில் காணலாம்.

1970-திலிருந்து, பூமியின் மேற்பரப்பில் நிகழ்ந்த பூகம்பங்கள், நிலச்சரிவுகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற புவி இயற்பியல் பேரழிவுகள் ஓரளவு நிலையாக இருந்து வந்துள்ளது. ஆனால் காலநிலை சம்பந்தப்பட்ட பேரழிவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளது. இன்னும் சொல்வதென்றால், அணுசக்திப் போருக்கு அடுத்து, இந்த காலநிலை மாற்றமே மனிதகுலத்தின் இருப்பிற்கு பெரும் ஆபத்தாக  கருதப்படுகிறது.

பெரும்பான்மையான உலக விஞ்ஞானிகள், பூமி வெப்பம் அடைவதனால் தான் (மேலே வரைபடத்தை பார்க்கவும்) காலநிலை மாறுகிறது, மற்றும் இதன் முதன்மையான காரணம் கார்பன் டை ஆக்சைடு (CO2), மீத்தேன் (CH4) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) போன்ற பசுமை இல்ல வாயுக்களின் (greenhouse gases) இதுவரை காணாத உயர்வே ஆகும்  என கூறியுள்ளன. 2013-ல் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதன்முறையாக கார்பன் டை ஆக்சைடின் அளவு 400 பி.பி.எம்.-ஐ (10 லட்சத்த்தில் 400 பகுதிகள்) தாண்டியுள்ளது. இந்த ஏறுமுகம் தொடர்ந்து. மே 2019-ல் 411 பி.பி.எம். பதிவு செய்யப்பட்டுள்ளது ( NASA, 2019).

இதற்கு மாறாக, தொழில்துறை காலத்திற்கு முன்பு, வளிமண்டலத்தின் கார்பன் டை ஆக்சைடின் செறிவு கடந்த 8,00,000 ஆண்டுகளில் 300 பி.பி.எம்.-ஐ தாண்டியதே இல்லை. இதற்கு ஆதாரம் EPICA (ice core) தகவல் ஆகும் (கீழே  வரைபடத்தை பார்க்கவும்) (Lindsey, 2018). வளிமண்டலத்தில் CO2-இன் செறிவு தொழில்துறை கால முன்பகுதியில் (கி.பி 1000 – 1750) 280 பி.பி.எம்.-மிலிருந்து இன்று 400 பி.பி.எம்.-மிற்கும் மேலாக அதிகரித்துள்ளது (Lindsey, 2018).

இந்த ஆபத்தான போக்கினை உணர்ந்து, காலநிலை மாற்றத்தின் அறிவியலை மதிப்பிட, அரசுகளுக்கு இடையிலான காலநிலை மாற்றம் தொடர்பான குழுவினை  (IPCC) ஐக்கிய நாடுகள் அமைத்தது. IPCC தானாகவே ஆராய்ச்சிகளை நடத்துவதில்லை. ஆனால் தனது மதிப்பீட்டால் காலநிலை மாற்றத்தைப் பற்றிய அறிவின் நிலையை கண்டறிகிறது. இக்குழு காலநிலை மாற்றத்தைப் பற்றிய விஷயங்களில் அறிவியல் சமூகத்தினரிடையே எங்கே ஒருமித்த கருத்துள்ளது என்றும் எங்கே மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்றும்  அடையாளம் காண்கிறது.  ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், காலநிலை மாற்றத்திற்கு மனிதர்கள் தான் காரணமா? இதற்கு குழு அளித்த தீர்ப்பு கீழ்க்கண்டவாறு.

வளிமண்டலம் மற்றும் பெருங்கடல்களின் வெப்பமயமாதல், உலகளாவிய நீர் சுழற்சியில் மாற்றம், பனி குறைப்பு, உலகளாவிய சராசரி கடல் மட்ட உயர்வு மற்றும் சில தீவிர காலநிலைகளின் மாற்றத்தில் மனிதர்களின் தாக்கம்  கண்டறியப்பட்டது.  மனிதர்களின் தாக்கத்திற்கான ஆதாரம் மதிப்பீடு அறிக்கை 4 (AR4)-லிருந்து  அதிகரித்துள்ளது. 20-ஆம் நூற்றாண்டின் பின்பாதியிலிருந்து காணப்பட்ட வெப்பமதிகரிப்பின் மிக முக்கியமான காரணமாக மனிதர்களின் தாக்கம் இருக்க 95-100% வாய்ப்புண்டு.

-2014 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழுவின் (ஐபிசிசி) ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை (ஏஆர் 5)

மனிதர்கள், உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு இடையே உள்ள தொடர்பின் அளவைப்பற்றி உறுதியான ஆதாரம் இல்லையென காலநிலை மாற்ற கோட்பாட்டின் சந்தேகிப்பவர்கள் வாதிடுகின்றனர்.

அப்போது காலநிலை மாற்றத்தை உருவாக்குவது எது, இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கையும் தீவிரமும் உயர்வது ஏன்? இது  உலகளாவிய விளைவை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நிகழ்வாக இருப்பதால், மஹரிஷி ஆன்மீக பல்கலைகழகத்துடன் எஸ்.எஸ்.ஆர்.எஃப். இணைந்து, காலநிலை மாற்றம் மற்றும் அதிகரிக்கும் இயற்கை பேரழிவுகளின் தீவிரத்தின் மூல காரணத்தை அறிய ஆன்மீக ஆராய்ச்சி மேற்கொண்டது

2. இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணம் என்ன?

காலநிலை மாற்றத்தைப் பற்றி அத்துறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யும்போது, முதன்மையாக ஸ்தூல காரணங்கள் மற்றும் தீர்வுகளிலேயேகவனம் செலுத்துகின்றனர்.

இதற்கு மாறாக, அதிநுட்பமான ஆறாவது அறிவின் மூலம் செய்யப்படும் ஆன்மீக ஆராய்ச்சியில்,  காலநிலை மாற்றத்தின் மூல காரணங்களின் ஆய்வு ஒரு முழுமையான  முறையில் அணுகப்படுகிறது. இது மூன்று (உடல்ரீதியான, மனோரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான) பரிமாணங்களையும் கணக்கில் கொண்டு, காலநிலை மாற்றம் மற்றும் அதிகரிக்கும் இயற்கை பேரழிவுகள் மற்றும் அவற்றின் தீவிரம் ஆகியவற்றின் காரணங்களை ஆய்வு செய்கிறது.

ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் பெற்ற காலநிலை மாற்றத்தின் மூல காரணங்களை இவ்வரைபடம் விளக்குகிறது.

ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டவை :

 • காலநிலை மாற்றத்திற்கு மனிதர்கள் வெறும் 2% மட்டுமே காரணம் ஆவர்.
  • புதைபடிவ எரிபொருட்களை எரித்தல், காடழிப்பு போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஸ்தூல காரணங்கள்.
  • மக்களின் ஆளுமை குறைகள் போன்ற மனோரீதியான காரணங்கள்..
  • மக்களில் உள்ள அதிகமான அஹம்பாவம், உலகளாவிய கோட்பாடுகளின்படி ஆன்மீக பயிற்சி செய்யாமை, மனித குலத்தின் தாழ்ந்த சராசரி ஆன்மீக நிலை போன்ற ஆன்மீக காரணங்கள்.
 • காலநிலை மாற்றத்தின் 98% மூல காரணங்கள் பிரபஞ்சத்தின் பூமிப்பகுதியில் நடக்கும் சுழற்சி மாற்றங்களால் ஆகும். மனிதர்கள், சுற்றுச்சூழல் மற்றும் (ஆன்மீக பரிமாணம் எனும் கண்ணுக்கு புலப்படாத உலகத்தின்) சூட்சும சக்திகளின் மீது சுழற்சியின் தாக்கம் ஆகியவை சுழற்சி மாற்றங்களில் அடங்கியுள்ளது. தற்போதைய சுழற்சியின் தாழ்வான பகுதியே அவர்களை இவ்வாறு, அதாவது பொதுவாக நடந்துகொள்ளும் விதத்திற்கு மாறாக, நடந்து கொள்ள வைக்கிறது.

ஆனால் இதன் துல்லியமான அர்த்தம் என்ன ?

சிறிது விரிவாக இதை புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாம். இந்த அண்டம் படைத்ததில் இருந்து அழியும் காலம் வரை 4 தலைமை யுகங்களை கடக்கின்றது. நாம் இப்போது 4-ஆம் யுகமான கலியுகம், அதாவது கலவரம் நிறைந்த யுகத்தில் உள்ளோம். இந்த யுகத்தின் லட்சணம் என்னவென்றால், முந்தைய யுகங்களை காட்டிலும் இந்த யுகத்தில் அதிக அளவு ஆன்மீக மாசுப்பாடு (கீழே விளக்கியது போல்) இருக்கும். பிரபஞ்சத்தின் இந்த தலைமை யுகங்கள், குறு யுகங்கள் மற்றும் குறு யுகசுழற்சிகளை கொண்டுள்ளன. 1999 முதல் 2023 வரை உள்ள ஆண்டுகள் பிரபஞ்சத்தின் பூமிப்பகுதியில் ஒரு குறு யுகசுழற்சியின் முடிவை குறிக்கிறது. 2024 முதல் புதிய யுகசுழற்சி தொடங்குகிறது.

3. சூட்சும கூறுகளும் யுகசுழற்சிகளும்

ஒவ்வொரு யுகசுழற்சியும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் எனும்  நிலைகளை கடக்கிறது. ஒரு யுகசுழற்சி அடிப்படையில் ஆன்மீக இயல்புடையது, பிரபஞ்சத்தில் உள்ள 3 சூட்சும கூறுகளின் விகித மாற்றத்தால் இது ஏற்படுகிறது. ஸத்வ, ரஜ மற்றும் தம எனும் 3 சூட்சும கூறுகள் படைப்பின் அடிப்படையான கூறுகளாகும். நவீன விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டு, இந்த கூறுகள் உயிருள்ள-உயிரற்ற மற்றும் தொட்டுணரக் கூடிய-தொட்டுணர முடியாத அனைத்திலும் உள்ளன. ஸத்வ என்பது தூய்மை மற்றும் ஞானத்தையும், ரஜ என்பது செயல்பாடு மற்றும் ஆசையையும் மற்றும் தம என்பது  அறியாமை மற்றும் சோம்பலையும் குறிக்கின்றது.

ஸாத்வீக தன்மை அதிகரிக்கும்போது நல்வாழ்வும் வானிலையில் சமநிலையும் காணப்படும். ராஜஸீக தன்மை அதிகரிக்கும்போது அல்லது பரவும்போது, நிலையின்மை ஏற்பட்டு முடிவில் ஏதாவது தீமையோ அழிவோ ஏற்படும். தாமஸீக தன்மை அதிகரித்தால் ஆன்மீக மாசுப்பாடு ஏற்படும். ஸாத்வீக தன்மை அல்லது தாமஸீக தன்மை, இரண்டிற்கும் வேகத்தை அளிப்பது ராஜஸீக தன்மையாகும். ரஜ-தம அதிகரிக்கும்போது, ஆன்மீக மாசுப்பாடு அதாவது தாமஸீக தன்மை பரவுகின்றது.

3.1 ஒரு நுண் சுழற்சியின் உதாரணம் – பகலும் இரவும்

ஒரு நாளில் கூட நாம் ஒரு சுழற்சியை கடக்கின்றோம். அதாவது சூரியன் அதிகாலையில் உதித்து, பிறகு முற்பகல், நண்பகல், பிற்பகல், மாலை, அந்தி மற்றும் இரவு வரை முன்னேறி, அடுத்த நாள் அதிகாலையில் இந்த சுழற்சி முழுமையடைகிறது.

நாளின் ஒவ்வொரு பகுதிக்கும் அதன் தனி ஸ்தூல மற்றும் ஆன்மீக பண்புகள் உள்ளன. நாளின் அந்த நேரத்தை பொறுத்து ஒருவரது நடத்தையும் மாறுகிறது. உதாரணத்திற்கு, காலையில் விழித்திட மனமிருக்கும், புத்துணர்ச்சியுடன் விழிப்போடு வேலைக்கு தயாராக இருப்போம். பிற்பகலுக்குள் சோம்பலாக உணர்வோம். மாலையில் வெளியே செல்லவோ அல்லது ஓய்வெடுக்கவோ தோன்றும். இரவு நேரத்தில் மக்கள் கட்டுப்பாடின்றி நடக்க அதிக வாய்ப்பு உண்டு. புள்ளிவிவரங்களின்படி, மக்கள் செய்யும் வன்முறையான குற்றங்கள் வழக்கமாக இரவு 9-10 மணியளவில் உச்சமடைகின்றன, இதுபோன்ற நிகழ்வுகள் காலை 6 மணியளவில் மிக குறைவாக உள்ளன (ojjdp.gov). மேலும் இரவாக, நாம் களைப்படைந்து உறங்க நினைக்கிறோம். அதனால், நாளின் நேரமும் நமது நடத்தையை பாதிக்கிறது.

தின சுழற்சியின் முடிவை குறிக்கும் இரவு நேரம் மக்களின் நடத்தையை எதிர்மறையாக பாதிப்பது போல, ஒரு குறு யுகசுழிற்சியின் முடிவும் மனிதர்களின் நடத்தையை எதிர்மறையாக பாதிக்கிறது.

3.2 மனிதர்கள் மீது யுகசுழற்சியின் தாக்கம்

ஒரு யுகசுழற்சியின் தொடக்கத்தில் ஸாத்வீக தன்மை அதிக அளவு இருப்பதால், அப்பொழுது அமைதியும் நல்வாழ்வும் உள்ளது. மாறாக, பிரபஞ்சத்தின் எந்தவொரு யுகசுழற்சியும் முடிவுக்கு வரும்போது, சுற்றுச்சூழலில் ராஜஸீக மற்றும் தாமஸீக தன்மை அந்த யுகசுழற்சியின் மற்ற நேரங்களை விட உயர்ந்துள்ளன. இது மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலின் மீது தீங்கை விளைவிக்கும்.

இதை மேலும் எளிதாக புரிந்துக்கொள்ள, முன்பு விளக்கிய பகல்-இரவு எனும் நுண் சுழற்சிக்குச் செல்வோம். அதிகாலையில் சூட்சும ஸாத்வீக தன்மை அதிக அளவில் இருப்பதால் இது ஆன்மீக ரீதியில் அந்நாளின் மிகவும் தூய்மையான பகுதி என்று கருதப்படுகிறது. இதனால் மற்ற நேரங்களை விட காலையில், மக்களின் செயல்கள் மிக ஸாத்வீகமாக இருக்கும். ஆனால் இரவில் தாமஸீக தன்மை அதிகமாக இருப்பதால் மக்களின் நடத்தையை எதிர்மறையாக பாதிக்கிறது. இரவில் அதிக தாமஸீகமான செயல்களில் மக்கள் ஈடுபடுகின்றனர்.

உலகத்தின் தற்போதைய நிலைமையை போல், ஒரு யுகசுழற்சியின் முடிவில் உள்ள அதிகளவு ஆன்மீக மாசுபாடு மக்களை எல்லா வகையிலும் தகாத முறையில் செயல்பட வைக்கிறது (சுற்றுச்சூழல் ஆன்மீக ரீதியில் நேர்மறையாக உள்ளபோது மக்கள் மிகவும் தக்க முறையில் நடந்துக்கொள்கின்றனர்).

மண் மற்றும் நீர் பரிசோதனை

உலகம் முழுவதிலிருந்து பெறப்பட்ட மண் மற்றும் தண்ணீர் மாதிரிகளின் சூட்சும அம்சங்களை எஸ்.எஸ்.ஆர்.எஃப். மற்றும் மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகம் ஆராய்ந்தது. தற்போதைய உலக சூழ்நிலையை தெளிவாக வெளிப்படுத்தும் விதத்தில் கண்டுபிடிப்புகள் இருந்தன. ஜூன் 1, 2019 வரை 26 நாடுகளிலிருந்து 293 மண் மாதிரிகள் மற்றும் 287 நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. ஒளி மண்டலம் (aura) மற்றும் சக்தி ஸ்கேனரால் மாதிரிகளின் சூட்சும பண்புகள் அளக்கப்பட்டன. பாரதத்தின் வெளியில் இருந்து வந்த 80% மாதிரிகளில் எதிர்மறையான சூட்சும அதிர்வலைகள் காணப்பட்டன.  காலப்போக்கில் மாதிரிகளின் எதிர்மறை குணமும் அதிகரித்து வருகிறது என்பதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன.

தாமஸீக தன்மையின் அளவு அதிகரித்ததால் சுற்றுச்சூழலில் ஆன்மீக மாசுப்பாடு உயர்ந்திருப்பதாககண்டறிந்த ஆன்மீக ஆராய்ச்சியை இந்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றது.

மண் மற்றும் நீரின் மீது நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி பற்றி மேலும் படிக்கவும்.

4. காலநிலை மாற்றத்தில் தீய சக்திகளின் பங்கு

யுகசுழற்சியின் தாழ்வு நிலையின் பின்னால் ஆன்மீக பரிமாணத்தில் உள்ள  வலிமையான தீய சக்திகளின் பெரும் பங்கும் உள்ளது. யுகசுழற்சியின் தாழ்வு நிலையிலுள்ள ஆன்மீக மாசுபட்ட சுற்றுச்சூழலின் உதவிகொண்டு தீய சக்திகள் சமுதாயத்தை தங்கள் வசப்படுத்துகின்றன, முக்கியமாக மக்களின் ஆளுமை குறைகளால் இதை செய்கின்றன. தீய சக்திகள் தங்களுக்கு சாதகமாகும் வகையில் மக்களின் தவறான நடத்தையை இன்னும் அதிகப்படுத்துகின்றன, இதனால் தாமஸீக தன்மை அதிகரிக்கிறது. இதுதான் உலகத்தின் தற்போதைய நிலைக்கான  முதன்மையான காரணம் – யுகசுழற்சியின் தாழ்வுநிலை மற்றும் அதன் பின் உள்ள தீய சக்திகள் மற்றும் மக்களின் ஆளுமை குறைகள் ஆகியவற்றின் சக்திவாய்ந்த சேர்க்கை. மனிதன் தனது ஒரே வீடான பூமியின் சுற்றுச்சூழலை அலட்சியம் செய்து சேதப்படுத்திய தலைமை காரணமும் இதுதான்.

ஆகையால், யுகசுழற்சியின் தாக்கம் இல்லையென்றால், காலநிலை மாற்றத்திற்கு மனிதர்கள் 2% மட்டுமே பங்களிக்கிறார்கள்.

இருப்பினும், யுகசுழற்சி முடிவின் தாகத்தாலும் தீய சக்திகளின் தூண்டுதலாலும், இந்த ஸ்தூல பரிமாணத்தில் மனிதன்உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின்  ஒரு முக்கியமான கருவியாக உள்ளான். அதனால், காலநிலை மாற்றத்தின் முதன்மையான காரணம் புவி சுழற்சியாக இருந்தாலும், ஸ்தூல பரிமாணத்தில் இது மனிதர்கள் மூலமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, மற்றும் இது காலநிலை மாற்றத்தின் காரணங்களுக்கு  98% வரை பங்களிக்கிறது.

5. காலநிலை மாற்றத்தில் கார்பன் டை ஆக்சைடின் பங்கு

இதற்குமுன் 400 பி.பி.எம்.-மிற்கும் மேல் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு அதிகரித்துள்ளதை காட்டியுள்ளோம். கடந்த பல பத்தாண்டுகளில் பெரும்பாலான சராசரி வெப்பமயமாதலின் முக்கிய காரணம், வளிமண்டலத்தில் வெப்பத்தை தக்க வைக்கும் கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் (ucsusa.org, 2017). மறுபுறம் காலநிலை மாற்றத்தை சந்தேகிப்பவர், மனிதச் செயலினால் உண்டாகும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, பூமியின் தாவரங்களுக்கு கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு நல்லது என்று விவாதிக்கின்றனர். விவாதத்தின்படி, தாவரங்கள் உயிர்வாழ கார்பன் டை ஆக்சைடை சார்ந்துள்ளன, வளிமண்டலத்தில் இந்த வாயு அதிகமாக இருந்தால், இது தாவர வளர்ச்சியை தூண்டலாம்.

காலநிலை மாற்றத்தில் CO2-இன் பங்கை பற்றிய கேள்விகளும் ஆன்மீக ஆராய்ச்சியால் பெற்ற விடைகளும்.

1. காலநிலை மாற்றத்தையும் பூமியையும் CO2-இன் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பாதிக்கிறதா ?

விடை : ஆம்

2. இதுதான் காலநிலை மாற்றத்தின் முக்கிய காரணமா ?

விடை : ஸ்தூல ரீதியால் பார்த்தால் மட்டுமே இது நிஜம். இல்லையெனில் இதற்கு சுழற்சி மாற்றங்கள் பிரதான காரணமாகும்.

3. CO2 அளவின் அதிகரிப்பிற்கு மனிதர்கள் மட்டுமே காரணமா ?

விடை : இல்லை. CO2-இன் அதிகரிப்பு 70% சூட்சும காரணங்களாலும் 30% மனிதர்களாலும் ஏற்படுகிறது. மனிதர்களால்ஏற்படும் 30% ஸ்தூல மற்றும்  மனோரீதியான காரணங்களால் ஆகும். ஆனால் இவ்விகிதம் காலத்திற்கேற்ப மாறும்.

6. உலக வெப்பமயமாதலின் மூல காரணம்

National Oceanic and Atmospheric Administration (NOAA) உலக வெப்பத்தை கண்காணித்த 139 ஆண்டுகளில், 2014 முதல் 2018 வரையான ஐந்து ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டன. 2016-ஆம் ஆண்டு, பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாகும், இதன் வெப்பம் 1951 முதல் 1980 வரை இருந்த சராசரியை விட 0.98 செல்சியஸ் அதிகமாக இருந்தது (NASA, Global temperature, 2018). உலக வெப்பநிலை அதிகரிப்பை தொழில்துறை காலத்திற்கு முன்பு இருந்த  நிலைகளை விட 1.5° C அதிக அளவு வரை கட்டுப்படுத்த IPCC நாடுகளை வலியுறுத்தியுள்ளது, ஏனென்றால் இதற்கும் மேல் சென்றால் காலநிலை விளைவுகள் பயங்கரமாக இருக்கும் (IPCC. 2018).

ஸ்தூல அளவில், உலக வெப்பமயமாதல் ஸ்தூல காரணங்களால், முதன்மையாக பசுமை இல்ல விளைவால் (greenhouse effect), ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன, ஆனால் ஆன்மீக ஆராய்ச்சியால் காரணங்களை பகுப்பாய்ந்தால், மூன்று பரிமாணங்களில் மூல காரணங்களின் விகிதம் பின்வருமாறு.

 • 67% – யுகசுழற்சி (சூட்சும/ஆன்மீக) காரணங்களோடு பரிபூரண நெருப்புத் தத்துவத்தை பாதிக்கும் ராஜஸீக மற்றும் தாமஸீக தன்மைகளால்.
 • 33% – மனிதர்கள் தங்கள் புத்தியை  தவறாக உபயோகம் செய்து, உமிழ்வு, காடழிப்பு போன்றவற்றால் சுற்றுச்சூழலை மோசமாக பாதிப்பதால். மனோரீதியான நிலையில், மக்களின் ஆளுமை குறைகளினால் ஏற்படும் ஆன்மீக அசுத்தமும் இதில் சேரும்.
 • 0% – ஸ்தூல காரணங்கள். இதன் சதவிகிதம் பூஜ்ஜியம், ஏனென்றால் ஸ்தூல பிரச்சனைகளின் மூல காரணம் மனிதர்களின் தவறான சிந்தனை முறையே (மனோரீதியான மற்றும் புத்தி சார்ந்த அளவில்).

சிலர் 1.5°C அவ்வளவு அதிகமில்லை என்று நினைக்கலாம். ஒரு ஒப்புமையுடன் இதன் தாக்கத்தை விளக்கலாம், ஒரு நபருக்கு காய்ச்சல் வந்தது என்று வைத்துக்கொள்வோம். இவரின் உடல் வெப்பம் இயல்பான 37°C-சிலிருந்து அதிகரித்து 38°C-சை தாண்டினால் இவருக்கு காய்ச்சல் உள்ளது என்று அர்த்தம். வெறும் 1°C அதிகரிப்பே அவரை துன்பப்பட வைக்கிறது.

7. ஒரு யுகசுழற்சியின் முடிவும் இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் அழிவும்

புதிய யுகசுழற்சி தொடங்குவதற்கு முன் பழைய யுகசுழற்சியின் முடிவும் அதிகளவு பேரழிவுகளை ஏற்படுத்தும். தாமஸீக தன்மை அதிகரிக்கும்போது நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்தின் பரிபூரண பஞ்சபூத தத்துவங்களை எதிர்மறையாக பாதிக்கிறது. இந்த பஞ்சபூத தத்துவங்கள் இயற்கையின் அடிப்படைக் கூறுகள் ஆகும், மற்றும் நாமறிந்த இவ்வுலகத்தையும் வானிலையையும் தாங்குகின்றன.

 • நீர் தத்துவம் பாதிக்கப்பட்டால் வெள்ளப்பெருக்கு, சுனாமி மற்றும் நீர் பற்றாக்குறையால் வறட்சி ஏற்படுகிறது.
 • நெருப்பு தத்துவம் எதிர்மறையாக பாதிக்கப்பட்டால் தீவிர வெப்ப அலைகள், எரிமலை செயல்பாடு, காட்டுத்தீ அல்லது தீவிர குளிர்காலம் (வெப்பமின்மை) ஏற்படுகிறது. இவ்விதத்தில், பரிபூரண பஞ்சபூத தத்துவத்தால் பேரழிவு விளைவிக்கப்படுகிறது, மற்றும் இவ்வழிவே புதிய யுகம்/யுகசுழற்சிக்கு வழி வகுக்கிறது.

கீழேயுள்ள அட்டவணையில் பரிபூரண பஞ்சபூத தத்துவங்களும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட பேரழிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன:

பல பஞ்சபூத தத்துவங்களின் சேர்க்கையினாலும் பேரழிவுகள் ஏற்படலாம் என்று கவனம் கொள்ளவும்.

மனிதர்கள் தங்கள் உடல்ரீதியான, மனோரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான செயல்களால் நிலம், நீர் மற்றும் நெருப்பு ஆகிய கீழ்நிலை பஞ்சபூத தத்துவங்களை மட்டுமே பாதிக்க முடியும். உயர்நிலை பஞ்சபூத தத்துவங்கள் மனிதர்களின் செயல்களினால் குறைந்தளவு மட்டுமே பாதிக்கப்படுகின்றன. காற்று மற்றும் ஆகாயம் ஆகிய உயர்நிலை பஞ்சபூத தத்துவங்கள் அதிகளவு யுகசுழற்சி மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன

நம் வீட்டை ஒவ்வொரு தீபாவளிக்கு முன் முழுமையாக சுத்தப்படுத்தும் ஒப்புமையுடன் இதை நன்கு புரிந்துக்கொள்ளலாம். நாம் தினமும் நம் வீட்டை பெருக்கி துடைத்து நாள் முழுவதும் சேர்ந்திருக்கும் குப்பைகளை சுத்தம் செய்கிறோம்.ஆனாலும் சில மாதங்களுக்கு ஒருமுறை முழு வீட்டையும் பரிபூரணமாக சுத்தம் செய்கின்றோம். இதுவே இப்பொழுது  நிகழப்போகிறது – பூமியின் பரிபூரண சுத்தீகரிப்பு. இரண்டு வழிகளில் இது நிகழ்கிறது, இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப்போரின் மூலம். வித்தியாசம் என்னவென்றால், நாம் வீட்டை தூய்மை படுத்தும்போது ஸ்தூல ரீதியில் மட்டுமே இது நடக்கிறது. கடவும் பூமியை சுத்தப் படுத்தும்போது, பூமியை ஆன்மீக ரீதியில் தூய்மையாக்குவார், அதாவது தாமஸீக தன்மையை குறைத்து ஸாத்வீக தன்மையை உயர்த்துவது. அதிகளவு ஆளுமை குறைகள் உடையவர்கள் மற்றும் தம பிரதானமானவர்கள் இத்தகைய சுத்தீகரிப்புக்கு இரையாவார்கள்.

8. மூன்றாம் உலகப்போர் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவின் அளவு

ஸ்தூல உலகில் வெப்பம் மற்றும் போக்குக்கோடுகள் (trend lines) வரைவது போல் உடல்ரீதியான, மனோரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான அம்சங்களையும் கணக்கிட்டு போக்குக்கோடுகளும் முன்கணிப்பும் வரையலாம். நம் வாசகர்களுக்கு அழிவின் அளவை புரியவைக்க ஒரு உதாரணம் – 2004-ல் ஆசியாவை தாக்கிய சுனாமியின் பேரழிவு, 2019 முதல் 2023 வரை வரவிருக்கும் அழிவில் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.

வரவிருக்கும் காலங்களில் அழிவு தீவிரமாவதை இந்த வரைபடத்தின் வளைவு காண்பிக்கிறது. வரைபடத்தின் தொடக்கத்தில் காட்டப்பட்டுள்ள அழிவின் அளவு, 1999 முதல் 2019 வரையான ஆண்டுகளின் ஒட்டுமொத்த அழிவாகும். அடுத்த 4 ஆண்டுகளில் மூன்றாம் உலகப்போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால் நடக்கவிருக்கும் அழிவின் பங்கு கிட்டத்தட்ட சரிபாதியாக இருக்கும், இது வரைபடத்தின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் உலகப்போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால் உலகத்தின் 70%   உள்கட்டமைப்பு (கட்டிடங்கள், சாலைகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள்) அழிந்துவிடும். உலகத்தின் பெரும்பான்மையான நகரங்கள் முழுமையாக அழிந்துவிடும். இதற்குமுன் பூமியளவில் இத்தகைய பேரழிவு குத்துமதிப்பாக 30,000 ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது என்று ஆன்மீக ஆராய்ச்சியினால் கண்டறிந்தோம்.

வரவிருக்கும் காலங்களில், இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப்போரினால் உண்டாகும் ஸ்தூல அழிவு ஏறத்தாழ சமமாக இருப்பினும், இயற்கை பேரழிவுகளை காட்டிலும் மூன்றாம் உலகப்போரினால் அதிக மக்கள் இறப்பார்கள். இந்த காலகட்டத்தில் உலகத்தின் கிட்டத்தட்ட பாதி ஜனத்தொகை அழிந்துவிடும்.

8.1 அழிவில் பங்களிக்கும் இயற்கை பேரழிவுகளின் வகை

எதிர்பார்க்கப்படும் இயற்கை பேரழிவு வகைகளின் தாக்கத்தை ஆன்மீக ஆராய்ச்சியினால் நன்கு புரிந்துக்கொள்ள முடிந்தது.

இயற்கை பேரழிவுகள் (2019 – 2023) ஒட்டுமொத்த ஸ்தூல அழிவில்,  இந்த வகை பேரழிவினால் ஏற்படும் அழிவின் சதவிகிதம்
எரிமலைகள் 10
பூகம்பங்கள் 6
சுனாமிகள் 2
கடல் மட்ட உயர்வு 3
வெள்ளம் 22
வெப்பமண்டல புயல்கள்/சூறாவளி 8
வறட்சி 30
கடும் வெப்பம் 10
காட்டுத்தீ 3
மற்றவை 6
மொத்தம் 100

ஆதாரம்: ஆன்மீக ஆராய்ச்சி, ஜூன் 2019

8.2 காலநிலை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்?

வானிலை அமைப்புகளும் இயற்கை பேரழிவுகளும் 2025 ஆண்டிற்கு பிறகு சீரடையத் தொடங்கும், மற்றும் 2025-ல் இருந்து 50-60 ஆண்டுகளில் இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த காலகட்டத்தில் பிறப்பெடுக்கும் புதிய தலைமுறையில் அதிக ஸாத்வீகமான மக்கள் பிறப்பார்கள்.

9. உயிரியல் பேரழிவுகள்

ஆன்மீக ஆராய்ச்சியினால் நாங்கள் கண்டறிந்த மற்றோரு சுவாரஸ்யமான உண்மை யாதெனின், எய்ட்ஸ், எபோலா, பறவை காய்ச்சல் போன்ற நோய்க்கிருமிகளால் ஏற்படும் உயிர்பறிக்கும் நோய்களின் காரணம் உயர்நிலை தீய சக்திகள் ஆகும். 2025-திற்கு பிறகு புதிய யுகசுழற்சி தொடங்கும்போது,நோய்க்கிருமிகளால் ஏற்படும் புதிய உயிர்பறிக்கும் நோய்களின் அறிமுகம் இருக்காது. ஆனால், ஏற்கனவே தீய சக்திகள் உருவாக்கிய நோய்க்கிருமிகள் பூமியில் இருக்கும், அதற்கான நிவாரணங்களை கண்டுபிடிக்க வேண்டும்.

10. பாதகமான கூட்டு விதி

நமது வாழ்க்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத அம்சம் விதி எனப்படும், இது நம்  முற்பிறவிகளின் செயல்களினால் வந்ததாகும். ஒருவர் தனது முற்பிறவியில் ஏகப்பட்ட தீய செயல்களை செய்து மற்றவர்களுக்கு துன்பம் அளித்திருந்தால் இப்பிறவியில் அவரது விதி இன்னல்கள் மற்றும் துயரங்களுடன் இருக்கும். நம் வாழ்க்கையின் சில பகுதிகள் நம் சுய விருப்பத்திற்கு கட்டுப்பட்டது, இதை நாம் இஷ்டப்பட்டபடி உபயோகிக்கலாம்.

எனினும் விதியின் மற்றோரு அம்சம் கூட்டு விதி எனப்படும். பொதுவாக இது மக்களின் குழுவிற்கோ அல்லது நகரம் அல்லது நாட்டிற்கோ பொருந்தும்.

வாழ்க்கையின் அம்சம் பொதுவான காலங்கள் (%) 2019 முதல் 2023 வரை (%)
1. கூட்டு விதி 10 30
2. தனிமனித விதி 60 45
3. சுய விருப்பம் 30 25
மொத்தம் 100 100

ஆதாரம்: ஆன்மீக ஆராய்ச்சி, மே 2019

மேலேயுள்ள அட்டவணையை நீங்கள் பார்த்தால், தற்போதைய யுகத்தில் சாமான்ய நபருக்கு கூட்டு விதி குத்துமதிப்பாக 10% இருக்கும், ஆனால் தனிமனித விதி 60% மற்றும் மீதி 30% சுய விருப்பமாக இருக்கும். ஆனால் யுகசுழற்சியின் இறுதி கட்டத்திற்கு நாம் செல்லும்போது கூட்டு விதி நம் வாழ்வில் அதிக பாதிப்பை உண்டாக்கும், அதாவது 30% வரை. ஆகையால், 2019 முதல் 2023 வரை விதிக்கப்பட்ட நிகழ்வுகள் (பெரும்பாலும் பாதகமானவை) நம் வாழ்வில் 75%-மாக இருக்கும். கூட்டு விதி மிகக் கொடியதாக இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள், மிக தீவிர இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப்போரால் ஏற்படும் அதிகளவு அழிவுகளை சந்திக்க நேரிடும்

11. இதற்கு நாம் என்ன செய்யலாம்?

இக்கட்டுரையின் நோக்கம், பூமியின் வரலாற்றில் வெகுவிரைவில் ஏற்படும் அழிவுகாலத்தைப் பற்றி எச்சரித்து உயிர்பிழைப்பதற்கான தீர்வுகளை வழங்குவதே தவிர பயமுறுத்துவது இல்லை.

உலகெங்கும் தற்போது உள்ள காலநிலை மாற்றத்தின் கண்ணோட்டத்தை பற்றி மற்றோரு முறை பார்க்கலாம்.

சந்தேகிப்பவர் ஒருமித்த கருத்தும் IPCC-யும் எஸ். எஸ். ஆர். எஃப்.
காலநிலை மாறுகிறதா ? ஆம், ஆனால் அது எப்பொழுதும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது தெளிவான ‘ஆம்’ ஆம் மற்றும் இது விரைவான தீவிரமடைதலின் தொடக்கம்
மனிதன் பங்களிக்கிறானா? இதில் மனிதனின் பங்குள்ளதா ? இருக்கலாம், எவ்வளவு என்று சொல்ல முடியாது ஆம் – பிரதானமாக  பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வால் மனிதனால் 2% மட்டுமே, முக்கியமாக மனிதன் மற்றும் சூழல் மேல் உள்ள காலத்தின் பதிப்பு
இதனால் தீவிர கஷ்டகாலம் உண்டாகுமா ? உண்டாகலாம், சாத்தியம் தான், ஆனால் நாங்கள் எச்சரிக்கைவாதிகள் அல்ல தற்போதைய வழியிலேயே சென்றால், சந்தேகமின்றி ஆம் ஆம், வெகு குறுகிய காலத்தில் நடக்கும்
குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த நம்மால் ஏதாவது செய்ய முடியுமா ? இல்லை ஆம், உமிழ்வுகளை கட்டுப்படுத்தி உலகளாவிய சராசரி வெப்பத்தின் அதிகரிப்பை தொழில்துறை காலத்திற்கு முன்பு இருந்த  நிலைகளை ஒப்பிடுகையில் 2° C-ஐ விட மிகவும் குறைவாக வைத்தால் அபாயத்தையும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும் குறைத்து விடலாம். இல்லை, ஆனால் ஆன்மீக பயிற்சி செய்தால் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்

இந்த குறு யுகசுழற்சியின் மாற்றம் என்பது நாம் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும் சகல பூமியையும் பாதிக்கும் இம்மாற்றங்கள் ஆன்மீக ரீதியானவை. பூமியில் ஸாத்வீகத்தை (ஆன்மீக தூய்மை) திரும்ப கொண்டு வருவதே இந்த எழுச்சியின் (இயற்கை பேரழிவுகள் அல்லது மூன்றாம் உலகப்போர்) தெய்வீக குறிக்கோள் ஆகும். ஆகையால், இந்த புதிய யுகத்தில் ஒருவர் நுழைய முன் நிபந்தனை என்னவென்றால், அவர் அதிகளவு ஸாத்வீகத்தை கொண்டிருக்க வேண்டும். ஆன்மீக பயிற்சியே (உலகளாவிய கோட்பாடுகளின்படி) ஒருவரது ஆன்மீக நிலை மற்றும் ஸாத்வீக தன்மையை உயர்த்த சிறந்த வழியாகும். இந்த கொடிய காலத்தின் துயரங்களை தடுக்க முடியாவிட்டாலும், நாம் ஆன்மீகத்தை பயில தீவிர முயற்சிகள் செய்து உயிர்பிழைக்க முயற்சிக்கலாம்.

இக்காலகட்டத்தில் உயிர்பிழைக்க உதவ, கீழ்வரும் 4 விஷயங்களை நமது வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

 1. கடவுளின் நாமத்தை ஜபித்தால். வரும் காலங்களில் பாதுகாப்பிற்காக 2 நாமஜபங்களை பரிந்துரைக்கிறோம்.
  1. ஓம் நமோ பகவதே வாஸுதேவாய (தற்போதைய காலத்தில் 2023 வரை ஆன்மீக ரீதியில் உகந்த நாமஜபம்)
  2. ஸ்ரீ குருதேவ தத்த (மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து மீண்டுவர). இந்த நாமஜபத்தை ஒரு நாளில் குறைந்தபட்சம் 2 மணிநேரம் செய்ய பரிந்துரைக்கிறோம்.
 2. ஆளுமை குறைகளை களையும் செயல்முறையால் ஒருவரது ஆளுமை குறைகளை அகற்றல். இது ஒருவரது மன நிம்மதியை அதிகரித்து சூட்சும தாமஸீக தன்மையை குறைக்கும்.
 3. ஆன்மீக பயிற்சியை தொடர்ந்து செய்யவும் அதிகப்படுத்தவும் தேவையான சக்தியையும் உறுதியையும் பெற பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள். உலக சுகங்களுக்கான பிரார்த்தனைகளுக்கு ஆன்மீக மதிப்பே கிடையாது.
 4. ஆன்மீக பிரசாரத்திற்காக உழைக்கவும். இதற்குப் பெயர் ஸத்சேவை. ஆன்மீக  பிரசாரத்திற்காக சிஷ்ய குணங்களுடன் (பணிவு, ஆன்மீக உணர்வு போன்றவை) உழைப்பதே இறையருள் பெற விரைவான ஒரு வழியாகும்.

இக்கட்டுரையை படிக்கும்போது அளவுக்கதிகமாக எச்சரிக்கையூட்டும் விதத்தில் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம், ஏனென்றால் உலகில் நிகழ்பவை தீயதாக இருப்பினும் இக்கட்டுரை கூறுவது போல் அவ்வளவு மோசமாக இல்லை. “நமக்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது, வெள்ளமும் வறட்சியும் எங்கோ தொலைவில் தானே நிகழ்ந்துள்ளது, மற்றும் தற்போது நடந்துக் கொண்டிருக்கும் யுத்தங்கள் நம்மை பாதிக்கவில்லை” என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் சூழ்நிலை விரைவில் மோசமடையும். பிரளய அளவு அழிவின் இறுதிப் நிலையில் நாம் உள்ளோம். உலக அரசாங்கங்களும் சரி, காலநிலை விஞ்ஞானிகளும் சரி, எதிர்பார்த்ததை விட மிகக் குறுகிய காலத்திற்குள் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு தயாராக இருக்க முடியாது. உலகத்திடம் நாங்கள் வேண்டுவது என்னவென்றால், இக்கட்டுரையில் இருக்கும் செய்தியை தீவிரமாக எடுத்து ஆன்மீக பயிற்சி செய்ய முயற்சிக்கவும்.

தயைகூர்ந்து கவனிக்கவும் : சில உயிர்பிழைப்பிற்கு தேவையான தகவல்கள் மற்றும் நிவாரண முறைகளை பற்றி நாங்கள் உயிர்பிழைப்பு வழிகாட்டிகள் என்ற பக்கத்தில் வெளியிட உள்ளோம்.

12. குறிப்பேடுகள்

IPCC. (2018). Global Warming of 1.5 ºC. Retrieved from IPCC: https://www.ipcc.ch/sr15/chapter/summary-for-policy-makers/

Lindsey, R. (2018, August 01). Climate Change: Atmospheric Carbon Dioxide. Retrieved from Climate.gov: https://www.climate.gov/news-features/understanding-climate/climate-change-atmospheric-carbon-dioxide

NASA. (2018). Global temperature. Retrieved from Global Climate Change: https://climate.nasa.gov/vital-signs/global-temperature/

NASA. (2019, May). Carbon Dioxide. Retrieved from Global Climate Change: https://climate.nasa.gov/vital-signs/carbon-dioxide/

ojjdp.gov. (2018, October 22). Comparing Offending by Adults & Juveniles. Retrieved from Office of Justice Programs: https://www.ojjdp.gov/ojstatbb/offenders/qa03401.asp?qaDate=2016

ucsusa.org. (2017, August 1). How Do We Know that Humans Are the Major Cause of Global Warming? Retrieved from Union of Concerned Scientists: https://www.ucsusa.org/global-warming/science-and-impacts/science/human-contribution-to-gw-faq.html