எதிர்பார்பற்ற அன்பு செலுத்துவதற்குப் பயிற்சி செய்வது என்பது மிகவும் கடினம். ஆனால் அதை யாராவது வெளிப்படுத்தும்போது, அது அவர்களின் தெய்வீக இயல்பைக் குறிக்கிறது. கடவுளை அடைய விரும்பும் நமக்கு, சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் எதிர்பார்பற்ற அன்பின் உருவமாக இருக்கிறார், அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அட்டவணை
- 1. அறிமுகம் – சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் ப்ரீதி (எதிர்பார்பற்ற அன்பு)
- 2. இளமை பருவத்திலேயே ஆன்மீகத்தின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார்
- 3. அவரது ஆன்மீக பயணத்தை ஆரம்பித்தல்
- 4. மனிதகுலத்தின் மீதான சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் ப்ரீதி (எதிர்பார்ப்பற்ற அன்பு)
- 5. முடிவுரை
1. அறிமுகம் – சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் ப்ரீதி (எதிர்பார்பற்ற அன்பு)

உலக வரலாற்றில் அவ்வப்போது, ஆன்மீக ரீதியாக பரிணமித்த மிக சிறந்த உன்னதமான மஹான் பிறக்கிறார், அவர் முழு மனிதகுலத்தையும் ஆன்மீக முன்னேற்றத்தில் இறைவனோடு ஒன்றிணையச் செய்யும் ஆன்மீக திறனுடன் பிறக்கிறார்.
சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் அத்தகைய மரியாதைக்குரிய உன்னதமான மஹான் ஆவார்கள்
அவர் ஆயிரக்கணக்கான ஸாதகர்கள், தங்கள் வாழ்க்கையில் சிறந்த ஆன்மீக முன்னேற்றம் அடைய அவர்களை வழிநடத்தியுள்ளார். அவருடைய வழிகாட்டுதலானது ஒரு மிகச் சிறந்த மஹானால் மட்டுமே செய்யக்கூடிய துல்லியம், மென்மை, கருணை, மற்றும் பேரறிவுடன் கூடியதாகும். அவரது ஆன்மீக பயிற்சியின் வழிகாட்டுதலின் பயனாக, 100க்கும் மேற்பட்ட ஸாதகர்கள் மஹான் நிலையை அடைந்துள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் மஹான் நிலையை அடைவதற்கான நிலையில் (வழியில்) உள்ளனர். இது உலக ஆன்மீக வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையாகும்.
ஸாதகர்களை கேளுங்கள், அவர்கள் தங்களுடைய ஆன்மீக பயணங்களில் சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகளையும் அனுபவங்களையும் உங்களுக்குச் சொல்ல முடியும். அவரை ஸாதகர்கள் பரம் பூஜ்ய டாக்டர் என்று அன்புடன் அழைக்கிறார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோரே தங்களின் மிகப்பெரிய பலம் என நினைப்பதை போல ஸாதகர்கள் தங்களின் ஆன்மீக நல்வாழ்வு மற்றும் ஆன்மீக கஷ்ட காலங்களில் பரம்பூஜ்ய டாக்டர் அவர்களே மிக பெரிய பலம் என கருதி அவரை மனதிலும் நாவிலும் எப்பொழுதும் நிலை நிறுத்தி இருக்கிறார்கள்.
இருப்பினும், நமது பரம்பூஜ்ய டாக்டர் அவர்களின் பொதுவான ஒரு தெய்வீக குணம், ஸாதகர்கள் அனைவர் நினைவிலும் நிற்கும் மற்றும் ஸாதகர்களுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து விதமான தடைகளையும் கடக்கும் வலிமையை அளிக்கும் தெய்வீக குணம் எனில் அது அவரது ப்ரீதியாகும். (அதாவது அவரது தெய்வீக எதிர்பார்பற்ற அன்பு). பரம்பூஜ்ய டாக்டர் அவர்களின் மிகவும் அன்பான தெய்வீக குணமாகிய ப்ரீதியானது பூக்கள் தேனீக்களை ஈர்ப்பது போல, உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஸாதகர்களை ஈர்த்து, அவர்களின் ஆன்மீக பயிற்சியில் விடாமுயற்சியுடன் இருக்க அவர்களைத் தூண்டுகிறது.
இந்தக் கட்டுரையில், சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஆயிரக்கணக்கான ஸாதகர்களுக்கு, மனிதநேயமுள்ள கடவுளாக, அன்பின் திருஉருவமாக திகழ்வதற்கு காரணமான அவரது (ப்ரீதியின்) எதிர்பார்பற்ற அன்பை பற்றிய சிறுகதைகளை உங்களுக்கு பணிவுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
2. இளமை பருவத்திலேயே ஆன்மீகத்தின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார்

சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே மருத்துவரான பிறகு, ஒருவரது மனம் தான் அவரது துன்பத்திற்கு காரணம் என்பதையும், மேலும் மனமே உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் மிக விரைவாக உணர்ந்தார். எனவே, மக்களுக்கு இன்னும் முழுமையான உதவி செய்வதற்காக, அவர்களது மனதை, குறிப்பாக ஆழ் மனதை ஆராயத் தொடங்கினார். அவரது இந்த பயிற்சியின் போது, சில நேரங்களில் நோயாளிகளிடம் இவருக்கு கட்டணம் செலுத்த பணம் இருக்காது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்களிடம் சிகிச்சைக்காக கட்டணம் வசூலிக்காமல், இலவசமாக மருந்துகளை வழங்குவதோடு, அவர்கள் வீடு திரும்புவதற்கான பேருந்து கட்டணத்தையும் வழங்குவார்.
சில நோயாளிகள் வழக்கமான மருந்துகளால் குணமடைவதில்லை. அவர்கள் மாற்றுவழிகளை தேடி, ஆன்மீக வழியில் குணமடைய முயற்சித்து, ஆன்மீக நிவாரணம் அளிப்பவர்கள் மற்றும் மஹான்களை சந்தித்து அவர்கள் வழங்கிய ஆன்மீக உபாயத்தால் குணமடைந்தனர். பின்னர், அவர்கள் மீண்டும் சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களை சந்தித்தபோது, ஆன்மீக வழியில் தாங்கள் எவ்வாறு குணமடைந்தோம் என்பதை அவரிடம் பகிர்ந்து கொண்டார்கள். அந்த நேரத்தில் சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் தான் ஒரு நாத்திகராக இருந்தபோதிலும், மக்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தால், அவர் தனது தனிப்பட்ட நம்பிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் கூறிய ஆன்மீக நடைமுறைகள் மற்றும் நிவாரணங்களை ஆராயத் தொடங்கினார். அப்போது அவர் நவீன அறிவியலின் பார்வைக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய உலகத்தை கண்டறிந்தார். அந்த தருணத்திலிருந்து அவரது தெய்வீக ஆன்மீகப் பணி ஆரம்பமானது. அதன் பிறகு நடந்தவை வரலாறு தான்!
3. அவரது ஆன்மீக பயணத்தை ஆரம்பித்தல்
ஒருவர் ஆன்மீக பயிற்சியைத் தொடங்கும்போது, பெரும்பாலும் அவர் தன்னைப் பற்றியே சிந்திக்கிறார். ஆனால் சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களுடைய விஷயத்தில் அது முற்றிலும் மாறுபட்டது. ஆரம்பத்திலிருந்தே, அவர் தனது ஆன்மீக பயிற்சியை தனக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் உரிய ஒரு பணியாக எடுத்துக் கொண்டார். ஆன்மீகம் என்பது அவருக்குத் தெரியாத ஒரு உலகமாக இருந்தது (அவரது அறிவியல் பின்னணி காரணமாக). ஆரம்ப காலத்தில், அது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் நீண்ட தூரம் காரில் பயணம் செய்து பல்வேறு மஹான்களை சந்தித்து ஆன்மீகம் குறித்து ஏராளமான கேள்விகளைக் கேட்டு அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்தார். அந்தக் காலத்தில் தனிநபர் கணினிகள் இல்லாத நிலையில், அவர் தனது குறிப்புகளை ஒரு தட்டச்சுப்பொறியில் கவனமாகப் பதிவு செய்து பின்னர், பிறரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த குறிப்புகளை நகல்கள் (சைக்கிளோஸ்டைல்) செய்து பகிர்ந்தார்.
விரைவில் அவர் தனது குருவான ஸந்த் பக்தராஜ் மஹராஜை (உயர்ந்த நிலையிலுள்ள மஹான்) சந்தித்தார்.


குறுகிய காலத்திலேயே, அவரது ஆன்மீக பயிற்சி மற்றும் சேவையில் மகிழ்ச்சி அடைந்த அவரது குரு, அவரை ஆசீர்வதித்து, தற்போதைய காலகட்டத்தில் ஆன்மீக பயிற்சியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து மக்களுக்கு வழிகாட்ட ஆன்மீக நூல்களை எழுதச் சொன்னார்.
4. மனிதகுலத்தின் மீதான சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் ப்ரீதி (எதிர்பார்ப்பற்ற அன்பு)
மனிதகுலத்தின் மீதான சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் எதிர்பார்பற்ற அன்பு, ஒவ்வொரு ஜீவனும் (ஜீவாத்மா) ஆன்மீக ரீதியாக முன்னேற வேண்டும் என்று அவர் மேற்கொண்ட அவரது அயராத முயற்சிகளில் அடங்கியுள்ளது. அவர் தனது குருவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி சமூகத்தை ஆன்மீக ரீதியாக உயர்த்த வேண்டும் என்ற ஆழ்ந்த தாபத்தை பிரதிபலிக்கும் சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. அர்ப்பணிப்புடன் ஆன்மீக புனித நூல்களை எழுதுதல்

அத்தியாயம் 3-இல் கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அவரது குருவின் ஒரே ஒரு வாக்கை அடிப்படையாகக் கொண்டு, அந்த தருணத்திலிருந்து சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் தனது முழு வாழ்க்கையையும் ஒரு சாதாரண மனிதனால் புரிந்துகொள்ளக்கூடிய ஆன்மீக புனித நூல்களை எழுதுவதற்கு அர்ப்பணித்தார். இன்றுவரை 300 க்கும் மேற்பட்ட ஆன்மீக புனித நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த நூல்களில் உள்ள ஞானம், வெறுமனே மற்ற புனித நூல்களை மேற்கோள் காட்டுவதில்லை. இது தனித்துவமான ஞானம். இதில் உள்ள குறைந்தது 50-70% ஞானம் உலகில் வேறு எங்கும் கிடைக்காத அதிநுட்பமான ஆறாவது அறிவு மூலம் பெறப்பட்ட தெய்வீக ஞானம். இந்த நூல்கள் கலியுகத்தின் எஞ்சிய காலத்திற்கு மனிதகுலத்தை வழிநடத்தும். அவர் உடல்நிலை சீரற்ற நேரங்களிலும் கூட, புத்தகங்களை எழுதும் ஸத்சேவையில் (கடவுளுக்கு சேவை) இடைவிடாது தொடர்ந்து ஈடுபடுகிறார். இந்த நூல்கள் மக்கள் பயன்பெறும் வகையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
2. மனிதகுலத்திற்கு குருவின் அருள் பாதையை (குருக்ருபாயோகம்) வழங்குதல்
குரு-சிஷ்ய பரம்பரை என்பது பண்டைய இந்தியாவின் ஆன்மீக மரபாகும். இது, ஒரு சிஷ்யன் தனது குருவின் வழிகாட்டுதலின்படி ஆன்மீக பயிற்சிக்காக தீவிர முயற்சிகளை மேற்கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. முந்தைய யுகங்களில் சிஷ்யர்கள், ஆன்மீக முன்னேற்றம் பெற மிகுந்த தவம் மற்றும் தியாகங்களை மேற்கொண்டு கடுமையாக முயற்சித்தனர். அந்த முயற்சிக்கு பிறகே உண்மையான குருக்கள் அவர்களை ஏற்றுக்கொண்டு இறைவனை உணரும் நிலையை அடையும் வரை அவர்களை வழிநடத்தினார்கள்.
இருப்பினும், சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள், அனைத்து மனிதகுலமும் முன்னேற வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தினாலும், தனது குருவின் ஆசீர்வாதத்தாலும், குரு அருளின் பாதையை (குருக்ருபாயோகம்) நிறுவினார். கடவுளை அடைவதற்காக உள்ள அனைத்து பாதைகளிலும் இது மிகவும் சிறந்தது. இந்தப் பாதையின் தனிச்சிறப்பு என்னவென்றால், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தவொரு ஸாதகரும் தன் வாழ்நாளிலேயே (இந்த ஒரே ஜென்மத்திலேயே) விரைவான ஆன்மீக முன்னேற்றத்தை அடைந்து கடவுளை உணர முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், ஆன்மீக ரீதியாக வளர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஜீவனும் ஆன்மீக ரீதியாக வளர ஒரு நல் வாய்ப்பை வழங்கியுள்ளார். இதுவே உண்மையான ஆன்மீக அன்பு ஆகும்
அவர் மேற்கொண்ட ஆழ்மனம் மற்றும் வெளிமனம் பற்றிய ஆராய்ச்சியின் காரணமாக, ஆளுமை குறைபாடு நீக்குதல் (PDR) என்ற செயல்முறையை முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். இந்த செயல்முறை மனதைத் தூய்மைப்படுத்தவும் விரைவான ஆன்மீக வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கவும் உதவுகிறது. இந்த செயல்முறை குறித்த வழிகாட்டுதல் இலவசமாக வழங்கப்படுகிறது. இது பலருக்கு மன உறுதியைப் பெறவும், அவர்களின் ஆளுமைகள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டங்களை மேம்படுத்தவும் உதவியுள்ளது
3. ஆன்மீக நிலையில் மக்களை வழிநடத்தி, அவர்களின் துரித முன்னேற்றத்திற்கு உதவுகிறார்

ஒருவரின் விருப்பங்களுக்கு ஏற்ப மனோரீதியான(உளவியல்) மட்டத்தில் அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதும் அதன்மூலம் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க செய்வதும் எளிதாகும். இதன் வழியாக பெரிய சீடர்களின் கூட்டத்தை உருவாக்கலாம். இருப்பினும், இந்த அணுகுமுறையினால், ஆன்மீக முன்னேற்றம் சீராக நிகழுவதில்லை. சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் அணுகுமுறை எப்போதும் ஆன்மீக நிலையில் மட்டுமே ஸாதகர்களை வழி நடத்துவதாகும். காலம் விலைமதிப்பற்றது அதில் ஒரு க்ஷணம் கூட வீணாகக்கூடாது. ஆன்மீக நிலையிலான வழிகாட்டுதல் மட்டுமே ஒருவர் வேகமாக முன்னேற உதவும். அவரது வழிகாட்டுதல் எளிமையானது மற்றும் நேரடியானது, இதனால் ஸாதகர்களின் நேரம் வீணாகாது. கடினமான பாதையாக இருந்தாலும், ஆளுமை குறை நீக்கும் செயல்முறையை அனைவரும் பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
4. மனிதகுலத்திற்கான ஆன்மீக ஆராய்ச்சி
நாம் அனைவரும் நவீன அறிவியல் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையின் வழிவந்தவர்கள். துரதிஷ்டவசமாக, இம்முறையானது ஆன்மீக அம்சத்தை முற்றிலுமாக புறக்கணிக்கிறது. இருப்பினும், நம் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி நாம் மகிழ்ச்சியாக வாழப்போகிறோமா அல்லது துன்பத்தில் துவளப்போகிறோமா என்று ஆன்மீக அம்சம்தான் தீர்மானிக்கிறது என்பதை பெரும்பாலான மக்கள் அறியவில்லை. இதற்காக, சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆன்மீக ரீதியாக ஆராயும் முழுமையான ஆய்வு துறையை உருவாக்கியுள்ளார்.

இந்த ஆன்மீக ஆராய்ச்சி ஒளி மண்டலம் மற்றும் எனர்ஜி ஸ்கேனர்களைப் பயன்படுத்தி, மேம்பட்ட ஆறாவது அறிவு கொண்ட ஆன்மீக ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஸாதகர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இக் குழுவிற்கு சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் வழிகாட்டுவதோடு, ஆய்வின் முடிவுகளை உறுதிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆன்மீக பரிமாணத்தைப் பற்றிய அவரது ஆழமான சூட்சும அறிவு காரணமாகவே, முதலில் எந்த பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்பது பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்கிறோம். உதாரணமாக, ஒரு நவீன ஆராய்ச்சியாளர், இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்கள் கருப்பு நிறம் பயன்படுத்த வேண்டுமா, வேண்டாமா என்று ஆராய்வதை ஒருபோதும் நினைக்க மாட்டார். ஏனென்றால், இன்று கருப்பு நிறம் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், அது எதிர்மறையான ஆன்மீக விளைவுகளைக் உண்டாக்கும் என்ற எண்ணம் அவரது ஆராய்ச்சிக்கான தலைப்பாக கூட இருக்காது.

இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம், மக்களின் செயல்களும் பழக்கவழக்கங்களும் அவர்களை ஆன்மீக நிலையில் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதாகும். உதாரணமாக, “வண்ணம், இசை, கலை, உணவு போன்றவை ஆன்மீக நிலையில் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன?” மக்கள் அன்றாடம் செய்யும் எத்தனை விஷயங்கள் உண்மையில் எதிர்மறை அதிர்வலைகளை வெளியிடுகின்றன என்பதை தெரிந்துகொள்ளும் போது ஆச்சரியப்படுகிறார்கள், இது இறுதியில் பல பிரச்சனைகளுக்கும், வேதனைகளுக்கும் காரணமாகின்றது
இதனுடன், நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி, ஆன்மீக பரிமாணத்தைப் பற்றியும், தீய சக்திகள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் சீர்குலைவை பற்றியும், நேர்மறை சக்திகளும் தெய்வங்களும் (இறை தத்துவம்) ஆன்மீக நல்வாழ்வை வழங்க முடியும் என்பதையும் விளக்கமாக காட்டியுள்ளது. 1999 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், ஆன்மீக பரிமாணத்தில் ஒரு பெரிய சூட்சும யுத்தம் நடந்துள்ளது, இதன் விளைவுகள் பூமியில் உள்ள மனித வாழ்க்கையை மிகவும் கடுமையாக பாதிக்கும் என்பதை உலகிற்கு உணர்த்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்தப் போர் இறுதியில் மூன்றாவது உலகப் போராக முடியும்
தீய சக்திகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டு முறைகள் பற்றிய ஞானம், உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக இயல்புடைய பிரச்சினைகளை அடையாளம் காண உதவியுள்ளது. சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அத்துடன் நிற்கவில்லை. எளிமையான, ஆனால் சக்திவாய்ந்த சுய-நிவாரண முறை மற்றும் ஆன்மீக பயிற்சி மூலம் ஆன்மீக பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த உயிர் காக்கும் ஞானத்தை வழங்கியுள்ளார். இது உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. எங்கள் எஸ்.எஸ்.ஆர்.எஃப் வலைத்தளம், அனைத்து தரப்பு மற்றும் பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களின் உடல்ரீதியான, மனோரீதியான மற்றும் ஆன்மீக நிலையில் உதவி பெறும் பல வழக்கு ஆய்வுகளால் நிரம்பியுள்ளது. இந்த ஆன்மீக ஆராய்ச்சியின் காரணமாக, தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் பயனுள்ள ஆன்மீக பயிற்சி மற்றும் ஆன்மீக நிவாரணங்கள் பற்றி அவர்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.

இந்த பூமியில் (கண்களுக்கு புலப்படும் உலகம்) உள்ள பொருட்கள், சூட்சும லோகங்களில் (கண்ணுக்குத் தெரியாத உலகம்) உள்ளவற்றால் பாதிப்படைக்கின்றன அல்லது கையாளப்படுகின்றன. அத்தகைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு ஆன்மீக ஆராய்ச்சி மையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் தொலைநோக்கு பார்வையினால் மட்டுமே அத்தகைய பொருட்களை நாம் அடையாளம் காணவும், பகுப்பாய்வு செய்யவும், எதிர்கால சந்ததியினருக்காக அவற்றை சேமிக்கவும் முடிந்தது.
உலகின் ஏதாவதொரு பகுதியில் நடக்கும் சில அதிசய நிகழ்வுகள் பற்றிய கதைகளை நாம் அவ்வப்போது கேள்விப்படுகிறோம், மேலும் அதைக் காண செல்லும் பக்தர்களின் கூட்டம் கூடிக்கொண்டே இருப்பதையும் பார்க்கிறோம். இருப்பினும், ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் இது போன்ற நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பல்வேறு நிகழ்வுகளை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். உண்மையில், உயர் நிலையிலுள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகளால் தினமும் பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறை ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆன்மீக நிகழ்வுகளின் பெருக்கத்தைக் கண்டறிந்து உணர்வதற்கான சாத்தியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது எனில் அதற்கு சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் இருப்பும் மற்றும் அவரது வழிகாட்டுதலுமே காரணமே ஆகும்.
இந்த நேர்மறை மற்றும் எதிர்மறை நிகழ்வுகள் அனைத்தும் கவனமாக பதிவுசெய்யப்பட்டு ஆன்மீக அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டுள்ளது.
5. மனிதகுலம் தங்களது துன்பங்களைக் குறைக்க ஆன்மீக ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஆழ்ந்த தாபம் கொண்டிருத்தல்
எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) வலைத்தளத்தில், இறந்த பிறகு உடலை புதைப்பது மற்றும் தகனம் செய்வது என்ற இரண்டு முறைகளின் நன்மை-தீமைகள் குறித்து விவரிக்கும் ஒரு கட்டுரை உள்ளது. இதில், ஆன்மீக அறிவியலின் அடிப்படையில் அனைத்து சடங்குகளும் சரியாக மேற்கொள்ளப்பட்டு தகனம் செய்யும் போது (மந்திரங்களை ஓதுதல், குறிப்பிட்ட சில சடங்கு முறைகளைச் செய்தல், முறையான விறகை பயன்படுத்துதல்) கிடைக்கும் நன்மைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒரு நாள் ஒரு ஸாதகர், வெளிநாட்டில் (இந்தியாவிற்கு வெளியே) ஒருவர் தகனம் செய்ய விரும்பினால், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி தகனத்திற்குரிய சடங்குகள் ஏதும் செய்யாமல் மயானத்தில் தகனம் செய்வதுதான் என்று எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அத்தகைய மயானங்களில், சடங்குகள் நடத்தப்படுவதில்லை, மந்திரங்களை ஓதுவதில்லை. மேலும் அம் மந்திரங்கள் மறுவாழ்வின் முன்னோக்கிய பயணத்திற்கு அந்த சூட்சும தேஹத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றிய புரிதலும் இல்லை

ஷான் இந்த விஷயத்தை சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களிடம் குறிப்பிட்டார். பல்வேறு வகையான இறுதிச் சடங்கு முறைகளை பற்றி சூட்சுமமாக ஆராய்ந்த பின்பு மந்திரங்களுடன் கூடிய இறுதிச் சடங்கு முறையின் ஆன்மீக நன்மை மயானத்தில் பயன்படுத்தப்படும் செயல்முறையை விட பல மடங்கு அதிகம் என்று கூறினார். பின்னர் சிறிது யோசித்து விட்டு, “மயானத்தில் தகனம் செய்யப்படுபவர்களின் சூட்சும தேஹத்திற்கு நாம் எவ்வாறு உதவ முடியும்?” என்று கேட்டார். மேலும் தொடர்ந்த அவர், அதற்கு தேவையான மந்திரங்களை உடனே இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கூறினார்.” ஷான் அவரிடம், தயாரிப்பு செலவுகளை ஈடுகட்ட ஆடியோ கோப்புகளுக்கு ஒரு பெயரளவு கட்டணம் வசூலிக்கலாமா? என்று கேட்டபோது, அவர் பதிலளித்து, “வேண்டாம், அதை சமூகத்திற்கு இலவசமாக அளியுங்கள். இந்த மந்திரங்களுக்கு எங்களால் எந்த பதிப்புரிமையும் கோர முடியாது,” என்றார் .மேலும் தொடர்ந்த அவர், இந்த மந்திரங்கள் பண்டைய பாரதத்தின் மனிதகுலத்திற்கான பரிசுகளாகும் என்றும், அவற்றின் மீது யாருக்கும் அதிகாரம் இல்லை, அவை அனைத்து மனித குலத்திற்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்
இதை சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, ஷானின் ஆன்மீக உணர்வு விழித்தெழுந்தது. சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் சமூகத்தின் மீதான எதிர்பார்பற்ற அன்பை (ப்ரீதி) ஆழமாக உணர்ந்தார். இந்த நிகழ்வு, சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே எப்போதும் எவ்வாறு உலகின் பல பாகங்களில் உள்ள மக்களும், மறுமையிலிருந்து வரும் சூட்சும தேஹங்களும், ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் கிடைக்கும் ஆன்மீக ஞானத்தின் மூலம் பயனடைய முடியும் என்பதைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கிறார் என்ற எண்ணம் ஷானின் மனதில் வலுவாகப் பதிந்தது. இது ஆன்மீக கஷ்டத்தினால் ஏற்படும் துன்பத்தைக் குறைக்க உதவுகிறது.
6.அடுத்த தலைமுறையை தன்னிறைவை அடையச் செய்வதும், ஸாதகர்கள் தங்களது துறைகளில் ஆன்மீக நிபுணத்துவம் பெற உதவுவதும்

சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே மிகவும் மேம்பட்ட ஆறாவது அறிவையும் தெய்வீக ஞானத்தை அணுகும் திறனையும் கொண்டிருப்பதால், பல்வேறு துறைகள் மற்றும் கலைகளில் உள்ள ஸாதகர்களையும் வழி நடத்தும் தனித்துவமான திறனை கொண்டுள்ளார். ஒவ்வொரு துறையிலும் அவருக்கு ஆன்மீக ஞானமும், நிபுணத்துவமும் இருப்பதை பல ஸாதகர்கள் நேரில் பார்த்து அனுபவித்துள்ளனர். அவரால் எந்த துறையின், எந்த ஒரு திட்டத்திலும் ஆன்மீக ரீதியாக நேர்மறையான அதிர்வலைகளை ஈர்க்கவும் உருவாக்கவும் முடியும். இருப்பினும், அவரது நிபந்தனையற்ற அன்பும் மகத்துவமும், அத்துடன் நில்லாமல் ஒவ்வொரு துறையிலும் ஸாதகர்களும் மஹான்களும் தன்னிறைவு அடைந்து, தன்னம்பிக்கையுடன் தாங்களாகவே செயல்படக்கூடிய அளவுக்கு உருவாக்குவதே அவரது உண்மையான நோக்கமாக உள்ளது.

இது நடைபெறுவதற்காக, ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள சிறிய நுணுக்கத்தையும் அவர் கவனமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் ஆய்வு செய்து பார்க்கிறார். இதனால் ஒவ்வொரு ஸாதகரின் புரிதலையும், அந்தந்தத் துறையைப் பற்றிய நுண்ணறிவையும் அவர் வழிநடத்தி வளர்க்க முடியும். திட்டம் நிறைவடையும் போது, அது அவருடைய வழிகாட்டலால் நிறைவேறியிருந்தாலும், அவர் முழு புகழையும் இறைவனுக்கும், அந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஸாதகர்களுக்கும் அர்ப்பணிக்கிறார்.
7. தத்துவமயமாக இருப்பது
சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே எப்போதும் ஸாதகர்கள் தத்துவார்த்தமாக (கொள்கையை சார்ந்து) இருக்க கற்றுத்தந்துள்ளார். மேலும் ஆன்மீகத்தை நிர்வகிக்கும் பிரபஞ்சக் கொள்கைகளில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம், ஸாதகர்கள் அவரை மட்டுமே சார்ந்து இல்லாமல், ஆன்மீக அறிவியலை முழுமையான நம்பிக்கையுடன் நடைமுறைப்படுத்த கற்றுக் கொண்டார்கள். உதாரணமாக, ஒரு ஸாதகர் ஆன்மீக துன்பத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், ஸாதகர்கள் சென்று அவரை குணப்படுத்த வேண்டும் என்ற ஒரு கலாச்சாரத்தை உருவாக்காமல், அந்த ஸாதகருக்கு தானாகவே ஆன்மீக நிவாரண முறைகளை கற்றுக்கொண்டு தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் மனப்பாங்கு வளர வேண்டும் என்று அவர் ஊக்குவிக்கிறார்
தனது ஆன்மீக அன்பினால், சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள், ஸாதகர்கள் அவருடைய ஸ்தூல வடிவத்தை சார்ந்து இருப்பதை விட, என்றென்றும் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும் தனது குரு தத்துவத்தை (நித்திய வடிவத்தை) சார்ந்து வாழ வேண்டும் என்று ஸாதகர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார். வெளிப்படாத குரு தத்துவத்திற்கு கால மற்றும் இட வரம்புகள் இல்லாததால், அது எல்லா சூழ்நிலைகளிலும் ஸாதகர்கள் நிலையாக இருக்க உதவுகிறது.
8. அதிகமானோர் தெய்வீக ராஜ்ஜியத்தை காண வேண்டும் என்ற அவருடைய ஆழமான ஆவலும், எதிர்பார்பற்ற அன்பும்

சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் பணியின் முக்கிய அம்சங்களில் ஒன்று, பூமியில் ஆன்மீக விழிப்புணர்வின் புதிய யுகத்தை ஆரம்பிக்க வழி அமைப்பதே ஆகும். இந்த யுகம், “பூமியில் தெய்வீக ராஜ்ஜியம்” என்று பல முறை குறிப்பிடப்பட்டு உள்ளது. இருப்பினும், 2024 இல் ஆரம்பமாகும் இந்த புதிய யுகத்திற்கான பாதை, உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் அழிந்து போவதற்கான பேரழிவுகளும், பல்வேறு சீற்றங்களும் நிரம்பியதாக இருக்கும்.
எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) இணையதளத்தில், 2024 வரை நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகளின் (மைல்கல்) தேதிகள் 2007 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டன. ஆரம்பத்தில், 2015 முதல் 2023 வரையிலான ஆண்டுகள் கடுமையான அழிவின் காலம் என்று கணிக்கப்பட்டது. ஒரு நபர் புதிய யுகத்தைக் காணும்படி வாழ்வதற்கான தகுதி, அவர் ஆன்மீக வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்து தான் இருக்கும் என்று சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் எப்போதும் கூறியுள்ளார். நாட்கள் கடுமையான அழிவு காலத்தை நெருங்கியபோது, ஒரு நாள் அவர், எஸ்.எஸ்.ஆர்.எஃப்(SSRF) இணையதளத்தில் அழிவுகளுக்கான காலக்கட்டத்தை 2015 – 2023 என்பதிலிருந்து 2019 – 2023 ஆக மாற்றுமாறு கூறினார்.
இதை கேட்டதும் அங்கிருந்த ஸாதகர்கள் தங்கள் ஆன்மீக உணர்வு விழித்தெழுந்ததை உணர்ந்தனர். மனிதகுலத்தின் மீதான அவரது ஆழமான அன்பையும், அவருடைய ஆன்மீக சக்தியையும் உணர்ந்தனர், ஏனெனில் மனிதகுலம் ஒரு மிக மோசமான காலத்திலிருந்து விடுபடுவதை அவர்கள் நேரில் கண்டனர். இவ்வாறு மனித வரலாற்றின் போக்கில் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த, உயர் நிலையிலுள்ள ஒரு மஹானின் சங்கல்பம் (தீர்மானம்) மூலமாக மட்டுமே சாத்தியமாகும். அவ்வாறு மாற்றும்போது, மிகவும் மோசமான காலப்பகுதியை சுருக்கி, எதிர்காலத்திற்கு மனிதகுலம் தயார் ஆகும் வாய்ப்பை அளித்ததாக நாங்கள் உணர்ந்தோம். அந்த தருணத்தின் மகத்துவமும், அதில் உள்ள புனிதமும் நேர்மையும், ஸாதகர்கள் நேரில் கண்ட அதிசய அனுபவமும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மனதில் நிழல்போல நிலைத்திருக்கும்.
5. முடிவுரை
வரலாறு இந்த காலத்தை மீண்டும் ஓருமுறை திருப்பி பார்க்கும் போது, ச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலேயின் மகத்துவத்தை, மனிதகுலத்தின் ஆன்மீக மேம்பாட்டிற்காகவும், சமூகத்தின் ஆன்மீக விழிப்புணர்வுக்கும், ஆன்மீக பரிமாணத்தைப் புரிந்துகொள்வதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி பேசும். அவர் மிகவும்அரிதானவர் – ஒரு சமஷ்டி பராத்பர குரு (அதாவது, முழு மனித சமூகத்தையும் இறைவனின் வழியில் அழைத்துச் செல்லக்கூடியவர்). இவ்வளவு பெரிய மகத்தான பணியை மேற்கொண்டிருந்தாலும் கூட, அவர் தனது அன்றாட விவகாரங்களில் காட்டும் பணிவும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்ற அன்பும், நாம் எல்லோரும் வாழ்வில் பின்பற்ற வேண்டிய உன்னதமான பண்புகளாகும்.
அனைத்து ஸாதகர்களுக்கும், அவருடன் ஏற்பட்ட தொடர்புகள் மற்றும் உறவுகளின் நினைவுகள் மிகவும் சிறப்பானவை. ஏனெனில் அவர்கள் அனைவரும் அவர் காட்டிய எதிர்பார்பற்ற அன்பினால் கண்டுண்டவர்கள். அவரை நேரடியாக பார்த்து உணர்ந்து, அனுபவித்த ஸாதகர்களாகிய நமக்கு, அவரது அரவணைப்பில் வாழ கிடைத்த இந்த வாய்ப்புக்கு நாம் என்றென்றும் நன்றியுடன் இருப்போம். அவர் நமக்குத் தரும் அன்பு நமது இதயங்களில் என்றும் நிலைத்து இருக்கும். தலைமைத்துவம் என்பது மற்றவர்கள் மீதான எதிர்பார்பற்ற அன்பின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என்ற தத்துவத்தின் உருவகமாகவே அவர் திகழ்கிறார்.
அவர் நமக்கு வழி காட்டியபடி மனிதகுலத்தை நேசித்து சேவை செய்யவும், அதை நடைமுறையில் கடைப்பிடிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை. நாம் அவரை சிறிதளவாவது பின்பற்றினாலே, அது ஒரு நல்ல அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும்.