அட்டவணை
1. அறிமுகம்
எமது சில கட்டுரைகளில் பிரபஞ்சத்தின்(பிரம்மாண்டம்) காலம்(வயது) மற்றும் ஸத்யயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளோம். பிரபஞ்சம்(பிரம்மாண்டம்) என்றால் என்ன, நவீன அறிவியல் தொடர்பாக அது எவ்வளவு பழமையானது என்று எங்களது சில வாசகர்களிடமிருந்து கேள்விகளைப் பெற்றுள்ளோம். ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் பெற்ற தெய்வீக ஞானத்தின் படி பிரம்மாண்டத்தின் வயதும் பழமையையும் பற்றிய கேள்விகளுக்கு எல்லாம் விளக்கமாக பதிலளிக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.
தலையங்கக் குழுவினரின் குறிப்பு : ஒரு கொள்கையாக எஸ்.எஸ்.ஆர்.எஃப் மிகவும் நடைமுறைக்கேற்ற கட்டுரைகளையே வெளியிடும், இதனால் மக்கள் அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். படைப்பை புரிந்துகொள்வது பெரும்பாலும் தத்துவார்த்த முயற்சியே ஆகும், இதனால் நடைமுறையில் நமது ஆன்மீக பயணத்தில் எந்தவொரு மதிப்பும் ஏற்படுவதில்லை. ஆகையால் தயைகூர்ந்து பிரம்மாண்டத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள மற்ற கட்டுரைகளுக்கு இந்தக் கட்டுரையை துணையாக மட்டுமே கருதுங்கள். பிரம்மாண்டத்தை குறிக்கும் மற்ற கட்டுரைகளில் இருக்கும் எந்தவொரு ஐயத்தையும் தீர்க்க இந்த விஷயத்தைப் பற்றி சில முக்கிய புள்ளிகளை மட்டுமே நாங்கள் பகிர்ந்துள்ளோம்.
2. பிரபஞ்சத்தின்(பிரம்மாண்டம்) வரையறை
பிரம்மாண்டத்தின் பழமையை புரிந்துகொள்ள, முதலில் எஸ்.எஸ்.ஆர்.எஃப் அதன் பொருளை விளக்குகிறது. ஒட்டுமொத்தமாக காணப்படும் மற்றும் காணப்படாத உலகையே பிரம்மாண்டம் என எஸ்.எஸ்.ஆர்.எஃப் வரையறுக்கிறது. அதாவது பூமியுடன் கூடிய சூரியமண்டலமும் வானத்தில் காணக்கூடிய விண்மீன் கூட்டங்களையும் அடக்கியதாகும். ஆனால் இவைகூட பிரம்மாண்டத்தில் கடுகளவே ஆகும். இதோடு மரணத்திற்கு பின் என்ன ஆகும் என்ற கட்டுரையில் விளக்கியது போல் ஈரேழ் பதினான்கு லோகங்களும் அதில் அடங்கும்.
3. பிரபஞ்சம்(பிரம்மாண்டம்) எவ்வளவு பழமையானது?
பிரம்மாண்டத்தின் பழமையைப் பற்றி அறிவதற்கு முன் ஒரு அடிப்படை ஆன்மீக சட்டத்தை அறிந்துகொள்ள வேண்டும். அண்டமும் அதனுள் இருக்கும் அனைத்துமே முதலில் படைக்கப்பட்டு, குறிப்பிட்ட காலம் வரை காக்கப்பட்டு கடைசியில் அழிக்கப்படும். கல்தோன்றி மண்தோன்றா காலங்களிலிருந்தே பிரம்மாண்டமும் அதனுள் இருக்கும் அனைத்தும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற தொடர் முறைகளை கண்டுள்ளன.
இந்த முழு பிரம்மாண்டமுமே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் சுழற்சியை பல தடவை சந்தித்துள்ளது என்று பிரம்மாண்டத்தின் பழமையை அறிவதற்கு செய்த ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் கண்டறிந்தோம். பிரம்மாண்டத்தின் பகுதியளவு அழிவுக்கு பிரளயம் என்று பெயர், வரவிருக்கும் பகுதிகளில் இதை நாங்கள் விளக்கியுள்ளோம்.
பிரபஞ்சம் படைக்கப்பட்டு அழிவதற்கு முன் (அதாவது காக்கப்படும் காலம்) பல சுழற்சிகளை கடக்கும். இவற்றுள் சிறிய சுழற்சிக்கு மட்டுமே 4 யுகங்கள் உள்ளன, அவை சத்தியயுகம் (கிருதயுகம்), திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகும் (1 மகாயுகம் அல்லது பர்யாயம் = 4 யுகங்கள்).
ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் பிரம்மாண்டத்தின் பழமையை புரிந்துகொள்ள ஒரு மகாயுகத்தில் ஒவ்வொரு யுகமும் குறிப்பிட்ட ஆண்டுகள் நிலைக்கும் :
| ஒரு சுழற்சி/ பர்யாயின் (மகாயுகம்) யுகங்கள் | |
|---|---|
| யுகம் | ஆண்டுகள் |
| சத்தியயுகம் (கிருதயுகம்) | 1,728,000 |
| திரேதாயுகம் | 1,296,000 |
| துவாபரயுகம் | 864,000 |
| கலியுகம் | 432,000 |
| மொத்தம் | 4,320,0001 |
அடிக்குறிப்புகள்:
- அதாவது நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம் ஆண்டுகள்
நடப்பு மகாயுகத்தில் 2025 ஆண்டன்று கலியுகத்தின் (துயரத்தின் யுகம்) 5125 ஆண்டுகளை நாம் கடந்துள்ளோம். ஆகையால், நடப்பு மகாயுகம் தொடங்கி நாம் குத்துமதிப்பாக 38 இலட்சம் ஆண்டுகள் கடந்து வந்துள்ளோம், இன்னும் 4,20,000 கலியுக ஆண்டுகள் உள்ளன. கலியுகம் முடியும்போது அடுத்த சத்தியயுகம் (கிருதயுகம்) தொடங்குவதற்கு முன்பு ஒரு சிறிய அழிவு ஏற்படும். இது பெரும்பாலும் யுத்தங்கள், இயற்கை பேரழிவுகள், உயிரிழப்புகள் போன்ற பெரும் அழிவை அடக்கியுள்ளது. பிரளயம் என்னும் பிரம்மாண்டத்தின் அழிவைக் காட்டிலும் இவ்வழிவு கடுகளவு ஆகும்.
சமூகத்திலுள்ள ஸாத்வீகமும் மனிதகுலத்தின் சராசரி ஆன்மீக நிலையே இவ்வனைத்து யுகங்களுக்கும் உள்ள வேறுபாடு ஆகும். ஒரு மஹாயுகத்தின் ஒவ்வொரு யுகத்திலும் மானிடரின் ஆன்மீக நிலை சுழற்சியை கீழுள்ள அட்டவணை காட்டுகிறது.
| ஒவ்வொரு யுகத்திலும் மானிடரின் ஆன்மீக நிலை | |
|---|---|
| யுகம் | சராசரி ஆன்மீக நிலை விகிதம் |
| சத்தியயுகம் (கிருதயுகம்) | 80% |
| திரேதாயுகம் | 70% |
| துவாபரயுகம் | 50% |
| கலியுகம் | 20% |
4. பிரம்மாண்டத்தின் தலைமை சுழற்சிகள்
இவ்வண்டத்தின் பழமையைப் பற்றி அறிய அண்டம் கடக்கும் மற்ற தலைமை சுழற்சிகள் கீழ்வருமாறு :

4.1 பிரம்மாண்டத்தின் அழிவு
பிரம்மாண்டத்தில் அவ்வப்போது நிகழும் அழிவின் வகைகள் பின்வருமாறு :
4.1.1 பிரளயம் (ஒவ்வொரு 4.32 பில்லியன்(தொள்ளுண்) வருடங்களுக்கு ஒருமுறை)
- பிரளயம் என்றால் பிரம்மாண்டத்தின் அழிவு எனப்படும்.
- எது அழிக்கப்படுகிறது? பிரளயம் நிகழும்போது பூலோகம் (விண்மீன் மண்டலங்களையும் கூட்டி), புவர்லோகம், ஏழு பாதாளலோகங்கள் மற்றும் சொர்க்கலோகம் அழிகிறது.
- எது நிலைக்கிறது? உயர்நிலை தெய்வீக வானுலகங்களான மஹர்லோகம், ஜனலோகம், தவலோகம் மற்றும் ஸத்யலோகம் (பிரம்மலோகம்) நிலைக்கிறது. மும்மூர்த்திகள் (நான்முகனும் திருமாலும் ஈசனும்) அப்படியே இருப்பார்கள்.
- எப்போது நிகழ்கிறது? 432 கோடி (4.32 தொள்ளுண்) ஆண்டுகளில் ஒருமுறை, அதாவது 1000 மஹாயுகங்கள், பிரம்மனின் ஒரு பகல்(1 கல்பம்).
- பிரளயம் நிகழ்ந்த பிறகு படைத்தல் உருவெடுத்து கிருதயுகம் (சத்தியயுகம்) தொடங்க 4.32 மெய்யாயிரம் ஆண்டுகள் கழியவேண்டும். இதற்கு சில நேரம் ஆகும், பிரளயத்திற்கு பிறகு உடனடியாகவே படைத்தல் தொடங்கிவிடும், ஆனால் ஸ்தூல மட்டத்தில் 4.32 மெய்யாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் தோன்றும்.
4.1.2 மஹாபிரளயம் (432 தொள்ளுண் ஆண்டுகளுக்கு ஒருமுறை)
-
நான்முகனின் வாழ்வில்(பிரம்மா) 100 நாட்கள் முடிந்தபின் (432 தொள்ளுண் ஆண்டுகள்) மஹாபிரளயம் நிகழும்.
-
மஹாபிரளயத்தின் போது ஈரேழ் பதினான்கு உலகங்களுடைய மொத்த பிரம்மாண்டமும் அழியும். மும்மூர்த்திகளான நான்முகன், திருமால் மற்றும் ஈசனும் அழிவார்கள்.
-
நிர்குண (வெளிப்படாத) உருவத்தில் இருக்கும் எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே நிலைப்பார்.குறிப்பு: தமிழ் எண்களை இங்கே அறிந்துகொள்ளவும்
5. பிரம்மாண்டத்தின் பழமையை குறித்து நவீன அறிவியல் மற்றும் ஆன்மீக பார்வைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள்
பிரம்மாண்டம் 13 தொள்ளுண் ஆண்டுகள் பழமையானது என நவீன அறிவியல் கூறுகிறது (விக்கிபீடியா). இதற்கும் ஆன்மீக ஆராய்ச்சியினால் பெறப்பட்ட ஞானத்திற்கும் உள்ள வேறுபாட்டின் காரணம் என்னவென்றால் பிரம்மாண்டத்தின் படைத்தல், காத்தல், அழித்தலை புரிந்துகொள்ள ஆறாவது அறிவின் குறைந்த திறனே(திறனின்மை) ஆகும் (மகான்களோடு ஒப்பிடும்போது).

6. மனிதகுலம் மற்றும் அண்டத்தின் பழமையை பற்றிய இதர புள்ளிகள்
ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் பிரம்மாண்டத்தின் பழமையைப் பற்றிய மற்ற முக்கிய தகவல்கள் பின்வருமாறு.
கே: மானிடர்கள் வாழும் தற்போதைய நிலையை அடைய பூமி எவ்வளவு காலம் கடந்தது?
ப: பிரம்மாண்டம் ஸ்தூல கண்களுக்கு புலப்பட்டு உடனேயே முழுமையாக வெளிப்படுகிறது. பூமியில் உயிர் தோன்றி சத்தியயுகம் தொடங்க எந்தவொரு வளர்காலமும் இல்லை.
கே: பூமியில் மானிடர்கள் தோன்றியது எப்போது?
ப: சத்தியயுகம் தொடங்கிய முதற்கட்டத்திலேயே பூமியில் மானிடர்கள் தோன்றினார்கள். நவீன அறிவியலின் பிரபல கருத்தின்படி விலங்கினத்திலிருந்தோ அல்லது மற்ற உயிரினங்களிலிருந்தோ தோன்றவில்லை. உதாரணத்திற்கு, நியண்டர்தால்(கற்கால) மனிதன் என்னும் ஹோமோ நியண்டர்தால் வழியாக நாம் வளரவில்லை. அவர்கள் வேறுபட்ட இனங்கள் ஆவர்.
சராசரி ஆன்மீக நிலை 80% மற்றும் 20% என்பதே கிருதயுகம் மற்றும் கலியுகத்தின் மனிதர்களுக்கிடையே உள்ள வேறுபாடு ஆகும். கிருதயுகத்தில் ஸாத்வீகம் உச்சகட்டத்தில் இருந்ததால் வயதாகும் விகிதம் மெதுவாக இருந்தது. உதாரணத்திற்கு கிருதயுகத்தில் மக்கள் சராசரி 400 வருடங்கள் வாழ்ந்தார்கள், உயரமாகவும் இருந்தார்கள். ஆனால் கலியுகத்தில் ஆயுட்காலம் 70-80 ஆண்டுகளாக குறைந்தது, உயரமும் குன்றியது. கலியுகத்தில் எவ்வளவு அதிகம் ரஜ-தம குணங்கள் வளருமோ அவ்வளவு அதிகமாக அழிவின் விகிதமும் வளரும்.
நான்கு யுகங்களைப் பற்றிய இன்னும் சில அம்சங்களை கீழுள்ள அட்டவணை சொல்கிறது.
| அம்சம் | சத்தியயுகம்/ கிருதயுகம் | திரேதாயுகம் | துவாபரயுகம் | கலியுகம் |
|---|---|---|---|---|
| 70% ஆன்மீக நிலை அடைந்த மக்கள் சதவிகிதம் | 70% | 50% | 20% | 0.000001 / புறக்கணிக்கப்பட்டது |
| பாவ புண்ணிய விகிதம் | ||||
| பாவங்கள் | 2% | 20% | 40% | 80% |
| புண்ணியங்கள் | 98% | 80% | 60% | 20% |
டைனோசார் போன்ற இனங்கள் முந்தைய பல மஹாயுகங்களில் வாழ்ந்து வந்தன. தற்போதைய மஹாயுகத்திலும் வாழ்ந்து அழிந்திருக்கலாம், அதாவது திரேதாயுகத்தில் கூட இருந்திருக்கலாம். உயரமான மனிதர்களும் அப்படிதான். ஆன்மீக பயிற்சி செய்து முக்தி அடையும் வரை பல யுகங்களாக மீண்டும் மீண்டும் சூட்சும தேகங்கள் மனிதர்களாக அவதரிக்கும். அதேபோல் சில விலங்குகள் கலியுகத்தில் குன்றிவிட்டது, சிலவை மறைந்தன. ஆனால் அடுத்த சுழற்சியில் அவை மீண்டும் தோன்றும்.