பருத்தித் துணியும், பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகளின் ஆன்மீக பண்புகளும்

இக்கட்டுரையை நன்கு புரிந்துகொள்ள கீழே உள்ள கட்டுரைகளை முதலில் புரிந்துகொள்வது நல்லது:

1. பருத்தித் துணியின் ஆன்மீக பண்புகளைப் பற்றிய அறிமுகம்

பண்டைய காலங்களில் இருந்தே ஆடைகள் தயாரிக்க பருத்தி பயன்படுத்தப்படுகிறது. பருத்தி செடியிலிருந்து கிடைப்பதால் அதில் தயாரிக்கப்படும் ஆடைகள் முற்றிலும் இயற்கையானவை. இது சட்டைகள், ரவிக்கைகள், உள்ளாடைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் போன்றவற்றை அதிக அளவு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் பெறப்பட்ட பருத்தியின் ஆன்மீக பண்புகளை பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். ஒரு ஆடையை தயாரிக்க பயன்படுத்தப்படும் துணியின் வகை அந்த ஆடையின் ஆன்மீக தூய்மையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற முக்கியமான கண்டுபிடிப்பை ஆராய்ச்சியின் மூலம் பெற்றோம். இது ஆன்மீக நிலையில் அந்த ஆடையை அணியும் நபரையும் பாதிக்கிறது.

2. பருத்தித் துணியின் ஆன்மீக பண்புகள்

பருத்தி இயற்கையாகவே கிடைப்பதால், அதில் ஆன்மீக தூய்மை இயற்கையாகவே அதிகளவு உள்ளது என்று எஸ்.எஸ்.ஆர்.எஃப் -இன் ஆன்மீக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பருத்தி மற்றும் பட்டு போன்ற இயற்கையான இழைகளால் நெய்யப்பட்ட துணிகளில் தயாரிக்கப்படும் ஆடைகள் சுற்றுச்சூழலில் உள்ள தெய்வீகத்தை ஈர்க்க வல்லது. இவை செயற்கை இழைகளாலான ஆடைகளைக் காட்டிலும், அதிகளவு ஸாத்வீக அதிர்வலைகளை ஈர்த்து தக்கவைப்பதால், தீயசக்திகளிடமிருந்து ஒருவரைப் பாதுகாக்கும் திறனை கொண்டுள்ளன.

பருத்தி ஆடைகள் அணிவது சரும ஆரோக்கியத்திற்கும நல்லது. அவை சருமத்தில் இருந்து வரும் வியர்வையை விரைவாக ஈர்த்து ஆடைகள் சருமத்தோடு ஒட்டி உராயும் தன்மையைக் குறைகிறது. இதனால் சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் இருக்க உதவுகிறது.

3. பருத்தித் துணியுடன் தொடர்புடைய அதிர்வலைகளின் ஆன்மீக ஆராய்ச்சி

இப்பகுதியில், அதிநுட்பமான ஆறாவது அறிவு படைத்த திருமதி. பூஜ்ய யோயா வாலே அவர்கள் சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரைந்த ஓவியத்தை பகிர்ந்து கொள்கிறோம்.நாம் எளிதாக இவ்வுலகத்தை காண்பது போல் இறையருளாலும் பல ஆண்டு தொடர்ந்து ஆன்மீக பயிற்சி செய்ததாலும் ஆன்மீக பரிமாணத்தையும் அவரால் காண முடியும். சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்களை வரைவதன் மூலம் ஆன்மீக பரிமாணத்தை காணும் தனது திறனை பூஜ்ய யோயா அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவரது அனைத்து ஓவியங்களும் வெளியிடப்படுவதற்கு முன் சூட்சும நிலையில் துல்லியமாக உள்ளதா என்று சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்படுகின்றன.

சூட்சும ஞானத்தின் அடிப்படையில் உள்ள இந்த ஓவியம் 80% துல்லியமானது. இது சராசரி சூட்சும நிலை அல்லது தெளிந்த பார்வை கொண்ட கலைஞரின் திறனை விட மிக அதிகம்.

பருத்தித் துணியின் சூட்சும பண்புகள்

பருத்தியின் ஆன்மீக தூய்மை சுற்றுச்சூழலில் உள்ள தெய்வீக சைதன்யத்தை வசீகரிக்கிறது. தெய்வீக சைதன்யம் வசீகரிக்கப்படுவதையும், தக்கவைக்கப்படுவதையும் மேலுள்ள சூட்சும ஞானத்தின் அடிப்படையிலான வரைபடம் வரிசைப்படி விளக்குகிறது. மேலும் பருத்தி ஆடைகளை அணியும் ஒருவர் கடவுளின் காக்கும் சக்தியின் செயலாக்கத்தால் காக்கப்படுவதையும் விளக்குகிறது.

பருத்தி மற்றும் பட்டு போன்ற ஆடைகளை அணிவதன் மூலம், நம் ஆடைகள் மீதும், அதன் மூலம் நம் மீதும் ஏற்படும் தீய சக்திகளின் தாக்குதல்களின் விளைவைக் குறைக்கலாம்.

4. பருத்தி ஆடையை அணியும்போது நினைவில் இருக்க வேண்டிய குறிப்புகள்

செயற்கை இழையினாலான ஆடைகளைவிட பருத்தி ஆடைகள் ஸாத்வீகமானவையாக இருந்தாலும், பருத்தி மூலம் பெறப்படும் ஆன்மீக தூய்மையை குறைக்கும் அல்லது நீக்கிவிடும் பின்வரும் செயல்களை தவிர்க்கலாம்:

  • அழுக்கான அல்லது துவைக்கப்படாத பருத்தி ஆடைகளை அணிவது.
  • கருப்பு நிற ஆடைகள் அணிதல்: கருப்பு நிறத்தினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால், சமையல் செய்யும் போதும் பரிமாறும்போதும் கருப்புநிற ஆடை அணிவதை தவிர்க்கவேண்டும் என்று மஹான்கள் கூறியுள்ளனர். பொதுவாக தீயசக்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர் கருப்பு நிற ஆடைகளை அணியும்போது மகிழ்ச்சியாக உணர்கிறார்.
  • பருத்தி ஆடையில், மண்டையோடு, இரத்தம் போன்ற பயங்கரமான வடிவமைப்புகள் அச்சிடப்பட்டிருந்தால், அவை ஆன்மீக தூய்மையைக் குறைக்கின்றன.

இதற்கு மாறாக, கீழ்க்கண்ட அம்சங்களை நடைமுறைப்படுத்துவது நமக்கு உதவியாக இருக்கும்:

  • துவைத்து இஸ்திரி செய்யப்பட்ட ஒரே நிறமுடைய அல்லது மிதமான அச்சுகள் கொண்ட பருத்தி ஆடைகளை அணிவது, அந்த ஆடைகள் ஆன்மீக தூய்மையை வசீகரித்து தக்கவைத்து கொள்ள உதவுகிறது.
  • வெள்ளை, நீலம், மஞ்சள் போன்ற நிறங்கள் ஆடைகளின் ஆன்மீக தூய்மையை அதிகரிக்கிறது.
  • பண்டிகை காலங்கள் மற்றும் மத வழிபாடுகளின் போது சுற்றுச்சூழலில் அதிக தெய்வீக தன்மை இருப்பதால் பருத்தி ஆடைகளை அணிவது பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் செயற்கை இழைகளாலான ஆடைகளை விட பருத்தி ஆடைகள் நீண்ட நேரம் ஆன்மீக நேர்மறைத்தன்மையை தக்க வைத்துக்கொள்கிறது.

நமது ஒவ்வொரு செயல்பாடுகளும் ஸாத்வீக முறையில் இருந்தால் நமது ஆன்மீக நிலை மேம்பட்டு நம்மை கடவுளுடன் ஒன்றிணைய உதவும்.