1. அறிமுகம்
சுகாதாரத்தையும், சுத்தத்தையும் பராமரிக்க நமது உடம்பை தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும். இதை செய்வதற்கு உலகம் முழுவதும் பல்வேறு வழிகள் நடைமுறையில் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாக நம்மில் பலர் தூவாலை(ஷவர்) மூலம் குளிப்பதை விரைவான மற்றும் வசதியான விருப்பமாகத் தேர்ந்தெடுகிறோம். நம்மில் பலர் அமைதியின் இடமாக குளியலறையை எண்ணுகிறோம், சிலர் வேலைக்குத் தயாராகும் முன் அதை ஒரு கடமையாக நினைத்து செயல்படுகிறார்கள். தூவாலை வழி சிதறும் நீரில் குளிப்பது தளர்வான(ஓய்வளிக்கும் முறை) மற்றும் பொதுவான சிகிச்சை அளிக்கும் செயல்பாடு என்ற நற்பெயரையும் பெற்றுள்ளது.
ஆன்மீக ஆராய்ச்சியின் வழி ஆன்மீக ரீதியாக தூவாலை குளியலின் மூலம் ஏற்படும் தாக்கத்தை நாங்கள் ஆய்வு செய்தோம்.
2. பின்னணி
இந்த கட்டுரையை நன்கு புரிந்து கொள்ள, நாங்கள் கீழ்கண்ட கட்டுரைகளை படிக்க பரிந்துரை செய்கிறோம்
- ஸாத்வீக வாழ்க்கைக்கான வழிகாட்டி
- ஸாத்வீக, ராஜஸீக, தாமஸீக என்னும் பிரபஞ்சத்தின் 3 அடிப்படை சூட்சும கூறுகள்
அழுக்கில், இயற்கையாக ரஜ–தம ஆதிக்கம் பிரதானமாக உள்ளது, எனவே ஆன்மீக நிலையில் அது தூய்மையற்ற அதிர்வலைகளை ஈர்க்கிறது. நமது தேஹங்களில் அழுக்கு சேர்வதால், நம்மிலும் நம்மைச் சுற்றியும் இந்த அதிர்வலைகள் அதிகரிக்கின்றன.. இயற்கையில் எதிர்மறையான எண்ணங்களுக்கும் இதே கொள்கை பொருந்தும் இது நமது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க கடினமாக இருக்கலாம். இதன் விளைவாக நம்மில் பலர் நமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும்போது எதிர்மறை அதிர்வலைகளை சேகரிக்கின்றோம்.
ஸாத்வீகமான வாழ்க்கைமுறை கருப்பு சக்தி ஆவரணத்தை குறைக்க உதவும். ஸாத்வீக வாழ்க்கைமுறை பற்றிய எங்களது கட்டுரை தொடரில் எவ்வாறு தூங்குவது, எந்த பானம் சிறந்தது, எவ்வாறு வாழ்த்துவது போன்ற அன்றாட வாழ்க்கையின் சில அம்சங்களை விரிவாகக் கூறியிருக்கிறோம். நேர்மறை சக்தியை உள்வாங்கி கொள்ள நமக்கு உதவும் வகையில் இந்த செயல்களை எவ்வாறு செய்வது என்பதை நாங்கள் விளக்கியிருக்கின்றோம்.
இந்த கட்டுரைத்தொகுப்பில், குளிக்கும் விதம் தொடர்பான எங்களது ஆன்மீக ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம்.
மற்றொரு கட்டுரையில், குளியல் தொட்டியில் குளிப்பதால் ஏற்படும் ஆன்மீக விளைவு பற்றிய விவரங்களை கொடுத்திருக்கின்றோம்.
3. நின்று கொண்டே தூவாலை(ஷவர்) மூலம் குளிப்பதைப் பற்றிய ஆன்மீகக் கண்ணோட்டம்
நம்மில் பலருக்கு தூவாலை மூலம் குளித்தல் நேரத்தை மிச்சப்படுத்தும், திறமையான மற்றும் இனிமையான குளியல் முறையாகத் தோன்றலாம். இருந்தபோதும் அது ஆன்மீக நிலையில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை கொண்டிருக்கிறது என்று ஆன்மீக ஆராய்ச்சி மூலமாக நாங்கள் கண்டறிந்தோம்.
தூவாலை மூலம் குளிப்பதன் ஆன்மீக விளைவை புரிந்துகொள்ள, அதிநுட்பமான ஆறாவது அறிவை கொண்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகரான பூஜ்ய திருமதி யோயா வாலே அவர்களின் உதவியைப் பெற்றோம். தூவாலை மூலம் குளிப்பதன் செயலை அவர் ஆராய்ந்து ஆன்மீக பரிமாணத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த தனது கண்டுபிடிப்புகளை கீழே உள்ள சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைப்படத்தின் வடிவத்தில் வழங்கினார். சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைப்படத்தின் துல்லியம் சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களால் சரிப்பார்க்கப்பட்டுள்ளது.
அதிநுட்பமான ஆறாவது அறிவு மூலம் பெறப்பட்ட தூவாலை வழி குளித்தல் பற்றிய முக்கிய அவதானிப்புகள் பின்வருமாறு.
- தெய்வீக சக்தி தூவாலை மூலம் குளிக்கும் நபரை நோக்கி செயல்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. தெய்வீக சக்தியின் ஒரு கோசம் அவரைச் சுற்றி உருவாக்கப்படுகிறது.
- அதே சமயத்தில் கஷ்டம் தரும் சக்தியின் அலைகள் சுற்றுச்சூழலிருந்து தூவாலையில் ஈர்க்கப்பட்டு அந்த நபரின் மீது கடத்தப்படுகிறது. கஷ்டம் தரும் சக்தியின் துகள்கள் அந்த நபரால் உள்வாங்கப்படுகிறது.
- கருப்பு சக்தியின் வளையம் இதய சக்கரம் (அநாஹத சக்கரம்) மற்றும் புருவ மைய சக்கரம் (ஆக்ஞா சக்கரம்) ஆகியவற்றைச் சுற்றி உருவாக்கப்படுகிறது. இதய சக்கரத்தைச் சுற்றி மாயாவி சக்தியும் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. தூவாலை மூலம் குளிக்கும் போது இன்பத்தின் எண்ணங்கள் அதிகரிப்பதால் இது ஏற்படுகிறது.
ஆன்மீகக் கண்ணோட்டத்திலிருந்து, நின்று கொண்டே தூவாலை மூலம் குளிப்பது குறித்த சில கூடுதல் அவதானிப்புகள் பின்வருமாறு.
- நிற்கும் போது, உருவாகும் சக்தியானது மிகவும் சுறுசுறுப்பானது அல்லது இயற்கையில் ராஜஸீக தன்மைக் கொண்டது. தேஹம் பற்றிய அதிக விழிப்புணர்வும் உள்ளது, மேலும் ஒருவரின் இன்ப உணர்வுகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இவைகள் உள்ளே உள்ள ஆத்ம தத்துவத்தோடு ஒருவரின் தொடர்பில் தடைகளை உருவாக்கலாம்.
- நின்ற நிலையில் தூவாலை மூலம் குளிப்பதால், உலக வாழ்க்கை தொடர்பான எண்ணங்கள், வேலை, உறவுகள், குழந்தைகளை சரியான நேரத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்வது போன்ற எண்ணங்கள் தொடர்ச்சியான ஓட்டத்தில் எழுகின்றன. இந்த எண்ணங்கள், இயற்கையில் அதிக ராஜஸீக-தாமஸீக தன்மை கொண்டவை, மனதை தொந்தரவு செய்து, ஒரு நபரின் ஸாத்வீகத்தை குறைக்கலாம்.
- நிற்கும் தோற்றப்பாங்கில் குளிப்பதன் மூலம், குளிக்கும் போது உள்ளீர்க்கப்படுகின்ற அனைத்து நேர்மறை அதிர்வலைகளும் பாதம் வழியாக வெளியேற்றப்படுகின்றன.
4. தூவாலை குளியல் மூலம் ஏற்படும் ஆன்மீக தீய விளைவுகளை எவ்வாறு தவிர்ப்பது
- தூவாலை குளியலில் இருந்து அதிக நன்மைகளை பெற ஒரு வழி, குளிக்கும்முன் பிரார்த்தனை செய்வது ஆகும். தூவாலை குளியலுக்கு முன் பிரார்த்தனை செய்வதன் மூலம் நமது சுறுசுறுப்பான சக்தி குறைகிறது, எனவே எண்ணங்கள் குறைவதால் நாம் அதிக அமைதியை உணர்கிறோம். தூவாலை மூலம் குளிப்பதற்கு முன் நாம் சொல்லும் பிரார்த்தனை பின்வருமாறு இருக்கலாம்: “ஓ கடவுளே தயைக்கூர்ந்து எனது தேஹம், மனம் புத்தியிலிருந்து அனைத்து தீய சக்தியும் இந்த தூவாலை குளியல் மூலம் கரைந்து போகட்டும். பரிபூரண நீர் தத்துவம் என்னை முழுவதுமாக சுத்தப்படுத்தி நாள் முழுவதும் நான் ஸாத்வீகத்தன்மையுடன் நிரப்பப்பட்டு இருக்க உதவுமாறு வேண்டுகிறேன்.”
- நாம் தூவாலை மூலம் குளிக்கும் போது கடவுளின் நாமஜபத்தை செய்ய மனப்பூர்வமாக முயற்சி செய்யலாம்.
5. முடிவுரை
ஆன்மீக நிலையில் குளியல் தொட்டியை பயன்படுத்துவதை விட தூவாலை மூலம் குளிப்பது குளிப்பதற்கு சிறந்த வழி என்றாலும் கால்களை குறுக்கே மடக்கிய நிலையில் உட்கார்ந்திருக்கும் போது குளிப்பது தான் சிறந்த முறையாகும். நாங்கள் இந்தத் தொடரின் மற்றொரு கட்டுரையில் உட்கார்ந்துகொண்டு குளிப்பதன் ஆன்மீக விளைவுகளை விளக்கியுள்ளோம்.
குளியல் என்பது நம்மைச் சுத்திகரித்து தூய்மைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒரு செயலாக இருந்தாலும், அது நமது உள் தூய்மையை அதிகரிக்கும் நோக்கில் நாம் எடுக்கும் எந்த முயற்சியையும் எளிதில் தடம் புரளச் செய்யலாம். நாம் குளிக்கும் முறையை மாற்றுவது நமது அன்றாட ஆன்மீக வாழ்வாதாரத்திற்கு முக்கியமான வளிமண்டலத்திலிருந்து நேர்மறைத்தன்மையை எளிதில் உள்வாங்க உதவும். இருப்பினும் நேர்மறைத்தன்மையை உள்வாங்கி நாள் முழுவதும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான சிறந்த வழி தொடர் ஆன்மீக பயிற்சி ஆகும்.
