உயிரியல் பின்னூட்ட இயந்திரத்தின் மூலம் பராத்பர குரு டாக்டர்.ஆடவலே அவர்களால் நீருற்றப்பட்ட மற்றும் நீருற்றப்படாத துளசிச் செடிகளுக்கு இடையே ஒரு ஒப்பீட்டு ஆய்வு

PIP Tulsi landing

 

1. துளசியின் ஆன்மீக நன்மைகளின் ஆய்வைப் பற்றிய ஒரு அறிமுகம்

எல்லா தாவரங்களிலும் மிக புனிதமானதாக துளசி கருதப்படுகிறது. அத்தியாவசிய எண்ணெய், மருத்துவம் மற்றும் ஆன்மீக தேவைகளுக்காக இது வளர்க்கப்படுகிறது. தென்னாசியாவில்பிரபல மருத்துவத் தாவரமாக அறியப்படும் இது ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. பாரதத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆயுர்வேதம்ஒரு பாரம்பரிய மற்றும் மாற்று சிகிச்சை மருத்துவமுறையாகவும் திகழ்கிறது.

சுற்றுச்சூழலில் துளசிச்செடியின் விளைவைப் பற்றி அறிய ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையால் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. துளசிக்கு யார் நீரூற்றினார்கள் என்பதைப் பொறுத்து சுற்றுச்சூழலில் ஏதாவது தாக்கம் ஏற்படுகிறதா என்றறிய மேலும் சோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் 2 துளசிச் செடிகள் உபயோகிக்கப்பட்டது:

  • துளசிச்செடி ‘அ’:சாதாரண நபரால் நீரூற்றப்பட்ட துளசிச் செடி.
  • துளசிச்செடி ‘ஆ’: 90% மேற்பட்ட ஆன்மீக நிலைகொண்ட மஹான் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் நீரூற்றிய துளசிச்செடி

அதிநுட்பமான ஆறாவது அறிவின் மூலமாக மட்டுமே ஒருவரின் ஆன்மீக நிலையை அறிய முடியும். இருந்தாலும் சுற்றுச்சூழல் மீது துளசியின் தாக்கத்தை ஆராய ரெசோனன்ட் ஃபீல்டு இமேஜிங் (Resonant Field Imaging ஆர்.எஃப்.ஐ(RFI)) மற்றும் பாலிகான்றாஸ்ட் இண்டர்ஃபிரென்ஸ் ஃபோட்டோகிராஃபி (Polycontrast Interference Photography பி.ஐ.பி(PIP)) என்ற 2 இயந்திரங்களை எஸ்.எஸ்.ஆர்.எஃப் உபயோகித்தது.

2. துளசிச்செடி மற்றும் மஹான்களைப் பற்றிய பின்னணி தகவல்

தற்போதைய கலியுகத்தில் ஆன்மீக பயிற்சியே செய்யாத நபரின் சராசரி ஆன்மீக நிலை 20% முதல் 25% வரை இருக்கும். ஆன்மீக பயிற்சியை ஒருவர் தொடங்கி தினசரி தவறாமல் முயற்சித்தால் அவரது ஆன்மீக நிலை உயரும். 70% ஆன்மீக நிலையை ஒருவர் கடந்தால் அவர் மஹான் நிலை அடைந்துவிட்டார் என்று பொருள். 100% ஆன்மீக நிலை என்பது ஒருவர் முற்றிலுமாக இறை தத்துவத்தோடு இணைந்துவிட்டார் என்று பொருள்.

ஒருவரின் ஆன்மீக நிலை அவருக்குள் இருக்கும் முக்குணங்களின்  விகிதத்தை பொறுத்தது.  அதிகளவு ஸத்வ குணம் ஆன்மீக மட்டத்தின் தூய்மையைக் குறிக்கும் என்பதால் அவரது ஆன்மீக நிலையும் அதிகமாக இருக்கும். மஹான்களிடமுள்ள அதிகளவு ஸாத்வீகத்தன்மை மற்றும் அவர்களது இருப்பு மூலம் எல்லாவற்றையும், அனைவரையும் நேர்மறையாக மாற்றிவிட முடியும். பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் உன்னத மஹான் என்பதால் அவர் மூலமாக வெளிப்படும் தெய்வீக சைதன்யத்தால் அவர் உபயோகித்த பொருட்களெல்லாம் மாறுவதை கவனித்தோம். நேர்மறை ஆன்மீக ஆற்றலினால் பொருட்கள் படிப்படியாக மாறுவதைப் பற்றி இங்கே படிக்கவும்.

எல்லா தாவரங்களிலும் துளசி மட்டுமே உச்சக்கட்ட ஸத்வ குணத்தை படைத்துள்ளது என எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆன்மீக ஆராய்ச்சி சொல்கிறது. அக்டோபர் 2013 அன்று பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் தனது பால்கனியில் நீரூற்றிய துளசிச்செடியின் ஒவ்வொரு இலையிலும் பல நாட்களுக்கு தெய்வீகத் துகள்கள் தோன்றியது. பராத்பர குருவிலிருந்து எழும் தெய்வீக சைதன்யம் துளசிச்செடியின் மீது படுவதே இதன் காரணமாகும்.

3. உயிரியல் சித்திரிப்பு இயந்திரங்களை வைத்து ஒரு ஆய்வு

ஒருவருக்கு அதிகளவு ஆறாவது அறிவுத் திறன் இருந்தால் எளிதாக பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் நீரூற்றிய துளசிச்செடியின் ஆன்மீகத் தூய்மையையும் அது உமிழும் தெய்வீக அதிர்வலைகளையும் உணரலாம். ஆர்.எஃப்.ஐ(ரெசோனன்ட் ஃபீல்டு இமேஜிங்) மற்றும் பி.ஐ.பி (பாலிகாண்ட்ராஸ்ட் இண்டர்ஃபிரென்ஸ் ஃபோட்டோகிராஃபி) போன்ற உயிரியல் பின்னூட்டக் கருவிகள் ஒரு பொருளைச் சுற்றியுள்ள அதிர்வுகளை எடுத்து ஓவிய வடிவில் காண்பிக்கும். எந்தவொரு பொருளையும் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒளிமண்டலத்தை ஒரு சராசரி நபர் தனது கண்முன்னே காண ஒரு வாய்ப்பையும் இது அளிக்கிறது.

3.1 ஆர்.எஃப்.ஐ அளவீடு

அளவெடுக்க வேண்டியவை:

அளவீடு (மெகாஹர்ட்ஸ்)

என்ன அர்த்தம்?

சராசரி நபரால் நீருற்றப்பட்ட துளசிச்செடியை வைப்பதற்கு முன் இருக்கும் இடத்தின் நிலை

121.2 MHz

ஆர்.எஃப்.ஐ கருவியின் படி இந்த அதிர்வலையின் நிறம் செம்மஞ்சள் (ஆரஞ்சு), அது ஆன்மீக ரீதியாக தூய்மையற்ற தம ஆதிக்கம் செலுத்தும் அதிர்வுகளை குறிக்கிறது.தம சூட்சுமக் கூறுகள் ஆன்மீகத்தூய்மையற்ற நிலை, அறியாமை மற்றும் மந்த நிலையைக் குறிக்கிறது.

சராசரி நபர் நீரூற்றிய துளசிச்செடியை வைத்தவுடன் இருக்கும் இடத்தின் நிலை

121.2 MHz

ஆர்.எஃப்.ஐ கருவியின் பட்டியலில் இதன் நிறம் செம்மஞ்சள் ஆகும், சுற்றுச்சூழலில் அழுத்தம் மற்றும் எதிர்மறைத்தன்மையை இது குறிக்கிறது

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் நீருற்றிய துளசிச்செடியை  வைத்தவுடன் இருக்கும் இடத்தின் நிலை

125.0 MHz

பொன்னிறமாக காணப்படுவதால் உயர்தர நேர்மறையான அதிர்வலைகளை குறிக்கிறது.

3.2 பி.ஐ.பி அளவீடு

பி.ஐ.பி உயிரியல் சித்திரிப்பு கருவியால் கீழ்வரும் மூன்று அளவீடுகளை நாங்கள் எடுத்தோம்:

  1. துளசிச்செடி இல்லாத ஒரு சுற்றுப்புறம்

  2. சராசரி நபர் நீரூற்றிய துளசிச்செடி இருக்கும் சுற்றுப்புறம்

  3. பராத்பர குரு டாக்டர் ஆடவலே நீரூற்றிய துளசிச்செடி இருக்கும் சுற்றுப்புறம்

பி.ஐ.பி கருவி காண்பித்த ஒவ்வொரு ஒளிமண்டலத்தையும் இப்போது ஆராய்வோம்.

3.2.1 துளசிச்செடி இல்லாத சுற்றுப்புறம்

துளசிச்செடி இல்லாமல் வெற்றிடமாக இருந்த சுற்றுப்புறச் சூழலின் ஒளிமண்டலப் படம் இது. கீழுள்ள படத்தை பார்த்தால் செம்மஞ்சளும் ஊதாவும் தலைமை நிறமாக உள்ளன. இவை எதிர்மறையை குறிக்கிறது. நேர்மறையை குறிக்கும் பச்சையை செம்மஞ்சள் நிறம் பின்தள்ளியதை கவனிக்கலாம். துளசிச்செடி ‘அ’ வைப்பதற்கு முன் சுற்றுப்புறத்தின் அடிப்படை அளவீடு இதுதான்.

துளசிச்செடி 'அ' வைப்பதற்கு முன் சுற்றுப்புறத்தின் அடிப்படை அளவீடு

3.2.2 சாதாரண நபர் நீரூற்றிய துளசிச்செடி வைக்கப்பட்ட சுற்றுப்புறம் – துளசிச்செடி ‘அ’

பரிசோதனையின் அடுத்த கட்டத்தில் சாதாரண நபர் நீரூற்றிய துளசிச்செடி அதே சுற்றுப்புறத்தில் வைக்கப்பட்டது. வெறும் ஐந்தே நிமிடங்களில் ஒளிமண்டலத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தை படத்தில் காணலாம். எதிர்மறையை குறிக்கும் நிறங்கள் மறைந்து நேர்மறையை குறிக்கும் பச்சை மற்றும் இளம் நீல நிறங்கள் அதிகமாகக் காணப்படுகிறது. சுற்றுச்சூழலில் நேர்மறை தாக்கத்தை துளசி ஏற்படுத்தும் என்று நிரூபணமாகிறது.

சாதாரண நபர் நீரூற்றிய துளசிச்செடி

சாதாரண நபர் நீரூற்றிய துளசிச்செடியை எடுத்த பிறகு பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் நீரூற்றிய துளசிச்செடி வைப்பதற்கு முன்பான சுற்றுப்புறம்

துளசிச்செடி 'ஆ' வைப்பதற்கு முன் சுற்றுப்புறத்தின் அடிப்படை அளவீடு

3.2.3 பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் நீரூற்றிய துளசிச்செடி வைக்கப்பட்ட சுற்றுப்புறம் – துளசிச்செடி ‘ஆ’

இறுதியாக சாதாரண துளசிச்செடியை நகர்த்திவிட்டு பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் நீரூற்றிய துளசிச்செடி வைக்கப்பட்டது. கீழுள்ள ஒளிமண்டலப் படத்தில் பார்த்தால் இளம் நீல நிறம் அதிகளவு உயர்ந்துள்ளது. பி.ஐ.பி கருவியின் படி பச்சை நிறத்தைவிட அதிகம் நேர்மறையாக இளம் நீல நிறம் கருதப்படுகிறது. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் நீரூற்றிய துளசிச்செடி சாதாரண துளசிச்செடியைவிட அதிகளவு நேர்மறையானது என்று நிரூபிக்கப்படுகிறது.

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் நீரூற்றிய துளசிச்செடி

3.2.4 முடிவுரையின் சுருக்கமும் முக்கியத்துவமும்

ஆறாவது அறிவினால் பெறப்பட்ட துளசிச்செடியின் ஆன்மீகத் தூய்மை மற்றும் ஒரு மஹான் இருப்பதன் நன்மையை பற்றிய தகவல்களை உயிரியல் சித்திரிப்பு கருவிகள் உறுதியாக்குகின்றன. இந்தப் பரிசோதனையின் முக்கிய விவரங்கள் கீழ்வருமாறு:

  • துளசிச்செடி அதீத நேர்மறையானதாகவும் மற்றும் சுற்றுப்புறத்தில் குறைந்த நேரத்திலேயே அதிக நேர்மறை விளைவையும் ஏற்படுத்துகிறது.

  • ஒருவரது வீட்டில் அல்லது தோட்டத்தில் துளசியை வளர்ப்பது சுற்றுச்சூழலில் ஆன்மீக நிவாரணத்தை அதிகரித்து இல்லத்தில் வாழ்பவர்களுக்கு நன்மை அளிக்கிறது.

  • ஆன்மீக பயிற்சி செய்தால் ஒருவரது ஆன்மீக நிலை உயர்ந்து சுற்றுச்சூழலையும் நேர்மறையாக மாற்றுகிறது

  • ஒருவர் மஹான் என்ற ஆன்மீக நிலையை அடைந்துவிட்டால் அவர் இருக்கும் இடம், பொருட்கள், மக்கள் அனைவரும் நேர்மறை சக்தியை பெறுகின்றனர்.

இவ்வனைத்து அளவீடுகள் மற்றும் ஆய்வுகளும் திரு. சந்தோஷ் ஜோஷியின் (உலகளாவிய ஆற்றல் பரிசோதனையாளர், மும்பை) உதவியுடன் செய்யப்பட்டது

கோவாவிலுள்ள ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு விளக்கப்படாத நிகழ்வுகளை ஆராயும் முயற்சியில் எங்களுடன் இணைந்து செயல்பட விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களுக்கு எஸ்.எஸ்.ஆர்.எஃப் கோரிக்கை விடுக்கிறது.