பரிந்துரைக்கப்பட்ட நாமஜபங்கள் என்றால் என்ன?

உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது.

வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

ஒரு பிரச்சினையின் மூல காரணம் ஆன்மீகப்பரிமாணத்தில் இருப்பின்,அச்சூழ்நிலையை கடந்து செல்ல உபயோகிக்கும் நாமஜபங்களைப் பரிந்துரைக்கப்பட்ட நாமஜபம் என்பர். இவை ஒரு விதத்தில் ஆன்மீக நிவாரண வழிகளாக செயல்பட்டு, ஆன்மீக வளர்ச்சிக்காக பயன்படும் நாமஜபங்களிலிருந்து வேறுபடுகின்றன.

இந்த கருத்தை ஒரு உவமானம் மூலம் புரிந்துகொள்ள முயற்சிப்போம். நாம் நோய்வாய்ப்படும்போது ஒரு மருத்துவரிடம் செல்கிறோம். நோய்க்கான குறிப்பிட்ட மருத்துவ காரணத்தை கண்டறிந்து, அதிலிருந்து விடுபட உதவும் மருந்து சீட்டை அவர் நமக்கு வழங்குகிறார்.

உதாரணமாக :

  • தொற்று நோய் ஏற்படும்போது, தொற்றுநோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழித்து நோயைத் தணிக்கும் நுண்ணுயிர் கொல்லி மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
  • உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது, பல்வேறு வழிகளில் வேலை செய்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

மருந்து கண்டுபிடிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட இடம் எதுவாக இருந்தாலும்,நோயாளியின் கலாச்சாரம் அல்லது மதத்தை பொருட்படுத்தாமல், மருந்துகள் அனைவர் மீதும் பொதுவான விளைவை ஏற்படுத்தும் என்பதே இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

அதேபோல், ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் குறிப்பிட்ட ஆன்மீக பிரச்சனைகளைத் தணிக்கும் நாமஜபங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். உதாரணமாக, ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபம் திருமணம் தள்ளிப்போவது, மணமுறிவு(திருமணப்பந்தத்தில் வேற்றுமை), குழந்தையின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கான ஆன்மீக மருந்தாகும். இப்பிரச்சனைகள் மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்களின் வெளிப்பாடுகளாகும். குறிப்பிட்ட உடல் மற்றும் மன நோய்களை தணிக்கும் பல்வேறு பரிந்துரைக்கப்பட்ட நாமஜபங்கள் எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிட்ட நாமஜபங்களின் பலன்கள் பொதுவானவை மற்றும் கலாச்சார அல்லது மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.