ஆடைகளும் வாசனையும் – நல்ல மற்றும் தீய சக்திகள் ஆடைகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன

1. முன்னுரை
உங்கள் ஆடைகள் சுத்தமாக இருந்தாலும் விரும்பத்தகாத வாசனையைக் கொண்டிருப்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? உங்கள் தனிப்பட்ட உடமைகள் இயல்பாக இருக்கும் அளவை விட கனமாக இருப்பதை நீங்கள் எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா? இதற்கான காரணம் ஆன்மீக இயல்புடையதாக இருக்கலாம்.
ஆடைகள் மற்றும் நமது தனிப்பட்ட உடமைகள் நம் உடலிற்கு மிக அருகாமையில் இருப்பதன் காரணமாக அவை நம்மிடமிருந்து வெளிப்படும் சூட்சும அதிர்வலைகளை கிரகித்துக் கொள்கின்றன. ஆடைகளை துவைத்த பிறகு சுத்தமாகவும், சுகந்தமான வாசனையுடன் வைத்திருப்பதில் கவனமாக இருக்கிறோம். இருப்பினும், அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதையோ அல்லது அவற்றை அணிந்திருக்கும் போது சோர்வாக இருப்பதையோ நாம் உணரலாம்.
மறுபுறம், எஸ்.எஸ்.ஆர்.எஃப் இல் 60% ஆன்மீக நிலைக்கு மேல் மகான்கள் மற்றும் ஸாதகர்கள் பயன்படுத்தும் ஆடைகள் மற்றும் அவர்களது உடமைகளில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளையும் நாங்கள் கண்டிருக்கிறோம்.
இந்த நிகழ்வுகள் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களால் ஆடைகள் எவ்வாறு பாதிப்படைக்கின்றன என்பது பற்றிய கூடுதல் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு நம்மை ஆர்வப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் ஏற்பட்ட சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டு, அவற்றின் பின்னணியில் உள்ள ஆன்மீக அறிவியலை பற்றியும் இந்தக் கட்டுரையில் விளக்குகின்றோம்.
2. ஆடைகளில் கவனிக்கப்பட்ட மாற்றங்களின் ஆன்மீக அனுபவங்கள்
2.1 கண்களுக்கு புலப்படும் மாற்றங்கள்
ஆசிரியரின் குறிப்பு: படிப்பதற்கு முன், கீழே உள்ள படங்களைக் கவனித்து, நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள் என்பதை உணரவும்.
| நேர்மறை (நல்லவை) | எதிர்மறை (தீயவை) |
|---|---|
| ஒரு மகானின் ஆடை : இது பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் சட்டையாகும். இது தானாகவே இளஞ்சிவப்பு நிறத்தைப் பெற்றுள்ளது. அதற்கான காரணத்தைக் கண்டறிய ஆன்மீக ஆராய்ச்சி நடத்தப்பட்டபோது, அந்த இளஞ்சிவப்பு நிறமானது, அவரின் தெய்வீக குணமான எதிர்பார்ப்பற்ற ஆன்மீக அன்பின் வெளிப்பாடாக இருப்பது கண்டறியப்பட்டது (ப்ரீதி). தீய சக்திகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னால் இந்த சட்டை காட்டப்படும்போது ஆன்மீக நிவாரணம் நிகழ்கிறது. | ஒரு ஸாதகரின் ஆடை : 2003 ஆம் ஆண்டில், எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் ஸாதகரான திரு. நாக்நாத் முல்ஜே அவர்கள் ஒரு விசித்திரமான நிகழ்வை அனுபவித்தார். இரத்தம் தன்னிச்சையாக அவரது ஆடையில் தோன்றியது. இந்த இரத்தக் கறைகளின் தன்னிச்சையான தோற்றம் தீய சக்திகளின் தாக்குதலால் ஏற்பட்டது என்பதை ஆன்மீக பகுப்பாய்வு காட்டுகிறது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, அவர் தீய சக்திகளால் தனிமைப்படுத்தப்பட்டதால் மனச்சோர்வை அனுபவித்தார். அவரை மனோரீதியாக நிலைகுலையச் செய்து, அவரது ஆன்மீகப் பயிற்சியில் தடைகளை ஏற்படுத்துவதே இந்த தீய சக்திகளின் நோக்கமாக இருந்தது. |
அனுபவங்கள் : எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் வாசகர்களிடம் இந்தச் சட்டையைப் பார்க்கும்போது தாங்கள் உணர்ந்ததைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டபோது, அவர்கள் உள்ளே லேசான உணர்வை அனுபவித்ததாகவும், அவர்களின் நாமஜபம் தானாகவே நடக்கத் தொடங்கியதாகவும், மேலும் அதைப் பார்க்கும்போது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் விவரித்தார்கள். அவர்களின் சில அனுபவங்கள் அவர்களது சொந்த வார்த்தைகளில் கீழே உள்ளன.
|
நாக்நாத் தனது அனுபவத்தை விளக்குகிறார்: “எனது முதுகில் தீப்பிடித்தது போல் உணர்ந்ததை மற்ற ஸாதகர்களிடம் சொன்னேன். அவர்கள் என் முதுகைப் பார்த்தபோது, உடையில் இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டார்கள். உடனே என் முதுகில் இருந்து ஆடையை தூக்கி பார்த்தனர். ஆனால் என் முதுகில் இரத்தக் கறைகளை ஏற்படுத்தக்கூடிய புண்கள் அல்லது காயங்களை அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஆடையை அகற்றி கீழே இறக்கிய பின்னர் மேலும் சில இரத்தக் கறைகள் தோன்றின. பின்னர், ஒரு விசித்திரமான விஷயம் நடந்தது. அதாவது இரத்தக்கறை வெளிப்பட்ட 15 நிமிடங்களில், அது கருப்பாக மாறத் தொடங்கியது. |
2.2 ஆடைகளும் வாசனையும் – சூட்சும நிலையில் ஆடைகளில் ஏற்படும் மாற்றங்கள்
| நேர்மறை (நல்லவை) | எதிர்மறை (தீயவை) |
|---|---|
| ஸாதகர்களின் ஆடைகள் : 2010 ஆம் ஆண்டு ஒரு சூட்சும பரிசோதனையின் போது, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த திருமதி அவந்திகா டிகே அவர்கள் 60% ஆன்மீக நிலைக்கு மேல் இருந்த அவரது கணவர் திரு. அதுல் டிகேவின் உடைகளில் இருந்து ஸாத்வீக அதிர்வலைகள் வெளிப்படுவதை உணர்ந்தார். | ஒரு ஸாதகரின் ஆடைகள் : 2010 ஆம் ஆண்டில், தீய சக்திகளினால் பீடிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் ஸாதகரின் மஞ்சள் புடவையில் சூட்சும பகுப்பாய்வு நடத்தப்பட்டது. இந்த ஆடைகள் ஒரு சூட்சுமமான மந்திரவாதியால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டிருப்பது ஆன்மீக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. புடவையில் ஏற்பட்ட சூட்சும நிகழ்வுகள் பற்றி ஸாதகர் கீழே விவரிக்கின்றார். |
| அனுபவம் “ஆடைகளில் ஆன்மீக ரீதியான தூய அதிர்வலைகளை என்னால் உணர முடிந்தது. அவற்றை முகர்ந்த பிறகு, நேர்மறையான எண்ணங்களைப் பெற்று புதியதாக உணர ஆரம்பித்தேன். முன்பு நான் முகர்ந்த எனது சொந்த ஆடைகளைப் போலல்லாமல், இந்த முறை மிகவும் இனிமையான ஒன்றை அனுபவித்தேன். | அனுபவம் “நான் அதைத் தொடும் போது, அதிக வெப்பத்தை உணர்ந்து கஷ்டத்தை அனுபவித்தேன். மேம்பட்ட ஆறாவது அறிவைக் கொண்ட பல ஸாதகர்கள் புடவையிலிருந்து ஒரு வித துர்நாற்றத்தை அனுபவித்தனர். ஆடையிலிருந்து சில அடிகள் தூரம் தள்ளி நின்றாலும், மற்ற ஸாதகர்கள் தலையில் அழுத்தம், கண்கள், கைகள், மற்றும் கால்களில் பாரத்தை உணர்ந்தனர். |
3. நல்ல மற்றும் தீய சக்திகளின் விளைவாக ஆடைகளின் வாசனையில் ஏற்படும் மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள ஆன்மீக அறிவியல்
ஐம்புலன்களான, சொல், தொடுதல், வடிவம், சுவை, மணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சக்திகள் இணைந்திருக்கும் விதியின் படி, ஆடைகளும் நம் உடலின் சூட்சும பண்புகளைப் பெறுகின்றன. மகான்களிடம் உள்ள தெய்வீக உணர்வு (சைதன்யம்) காரணமாக, அவர்களின் ஆடைகள் அல்லது தனிப்பட்ட உடமைகள் சில சமயங்களில் தெய்வீக வாசனையை வெளியிடுகின்றன. கடவுள் மேல் ஆன்மீக உணர்வு அதிகமாக உள்ள, 60% ஆன்மீக நிலைக்கு மேல் உள்ள ஸாதகர்களிடமும் இது போன்று நிகழலாம்.
மகான்களிடமிருந்து வெளிப்படும் இத்தகைய நறுமணங்கள் தேவைக்கேற்ப நிகழ்கின்றன, அதாவது, சிலசமயம் சூட்சுமமான வாசனைகள் தோன்றும் அல்லது மறைந்துவிடும் அல்லது தேவைக்கேற்ப பல்வேறு வாசனைகள் (எ.கா. மல்லிகை, சந்தனம் போன்றவை) தோன்றலாம். அந்தத் தருணத்திற்குத் தேவையான சூட்சும வாசனையை இறைவன் வழங்குகிறார். தெய்வீக வாசனை, காக்கும் அல்லது அழிக்கும் தன்மையுடையதாக இருக்கும். ஒருவர் அழிக்கும் வாசனையை அதன் கூர்மையான மற்றும் கடுமையான வாசனையால் உணரலாம்.
இருப்பினும், இன்றைய காலகட்டத்தில், சராசரி மனிதர்களுக்கு ஆடைகள் மற்றும் தனிப்பட்ட உடமைகளில் இருந்து விரும்பத்தகாத அல்லது துர்நாற்றத்தை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்.
சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் தீய சக்திகளின் செயல்பாடு அதிகரித்து வருகிறது. அதன் தீய விளைவுகளை அனுபவிப்பதிலிருந்து யாருக்கும் விலக்களிக்கப்படவில்லை. அவை சமூகத்தை தொந்தரவு செய்ய மேலும் புதிய வழிகளைக் கண்டறிய முயல்கின்றன. சமூகத்தின் நலனுக்காக ஆன்மீக பயிற்சியில் ஈடுபடும் மகான்கள் மற்றும் ஸாதகர்கள் அவற்றின் தாக்குதல்களில் முதன்மையானவர்களாக உள்ளனர். ஆனால் மற்றவர்களும் கூடிய விரைவில் அவற்றை அனுபவிக்கத் தொடங்குவார்கள்.
நாம் உடுத்தும் ஆடைகள் மற்றும் நாம் பயன்படுத்தும் தனிப்பட்ட உடமைகளில் கருப்பு சக்திகளை பரப்பி நம்மை தாக்குவது தீய சக்திகளுடைய ஒரு வழியாகும். இதன் மூலம் நம்மை கருப்பு சக்திகளினுள் மூழ்கி இருக்க வைக்கிறது. நமது ஆடைகள் அல்லது தனிப்பட்ட உடமைகளில் அவை சேமித்து வைக்கும் கருப்பு சக்தி நம்மை மோசமாக பாதிக்கிறது. உதாரணமாக, இவை நம் உடல் பாரத்தை ஏற்படுத்தி நம் பிராணசக்தியை இழக்கச் செய்வதால், நாம் சோர்வாக உணர்கிறோம். மேலும் நம்மை தெளிவாக சிந்திக்க விடாமல் செய்து, ஆன்மீக பயிற்சி செய்வதையும் கடினமாக்குகிறது.
4. முடிவுரை
நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆன்மீக பரிமாணம் பாதிக்கிறது. இந்த கட்டுரையின் மூலம் நாம் அணியும் ஆடைகள் ஆன்மீக நிலையில் நம்மை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைப் பற்றிய புரிதலைப் பெற்றுள்ளோம். நமது அடுத்த கட்டுரையில், நமது ஆடைகளை ஆன்மீக ரீதியில் தூய்மைப்படுத்தவும், தீயசக்திகளின் தாக்குதல்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்கவும் நாம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைப் பற்றி பகிர்ந்துகொள்வோம்.

.jpg)