உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். பரிந்துரைக்கிறது.
வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1. எஸ்.எஸ்.ஆர்.எப் ஊதுபத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட விபூதி சேர்க்கப்பட்ட அல்லது சக்தியூட்டப்பட்ட புனித தீர்த்தத்தின் பயன்கள் என்ன?
தெய்வீக சைதன்யத்திலிருந்து நல்ல சக்தியை இந்த புனித தீர்த்தம் பெற்றிருப்பதால், அந்த நல்ல சக்தியை பெறுவதற்கு நாம் இதை பயன்படுத்தலாம். இதனை தற்காப்பு முறையாகவும் ஆவிகளின் தீய கருப்பு சக்திகளை நீக்குவதற்கும் பயன்படுத்தலாம்.
புனித தீர்த்தத்தின் செயல்முறையை அறிய இந்த கட்டுரையை காண்க: ‘எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்தியின் மூலம் பெறப்பட்ட விபூதியில் இருந்து எவ்வாறு புனித தீர்த்தத்தை உருவாக்கி உபயோகப்படுத்துவது?’
பொதுவாக, எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஊதுபத்தியின் மூலம் பெறப்பட்ட விபூதி சேர்க்கப்பட்ட அல்லது சக்தியூட்டப்பட்ட புனித தீர்த்தத்தை ஒரு ஆற்றல் வாய்ந்த ஆன்மீக நிவாரணமாக மூன்று வழிகளில் உபயோகப்படுத்தலாம். அவை:
- ஒருவர் மீதும், ஒருவரைச் சுற்றியும், அவரின் படுக்கை மற்றும் இருக்கும் வளாகத்திலும்(குடியிருப்பு) தெளிக்கலாம்.
- உடல் நலிவுற்ற பகுதியில் பிரயோகப்படுத்தலாம்.
- நாமஜபத்தின் மூலம் சக்தியூட்டப்பட்ட புனித தீர்த்தத்தை ஆன்மீக நிவாரணமாக உட்கொள்ளலாம்.
2. ஒருவர் மீதும், ஒருவரைச் சுற்றியும், அவரின் படுக்கையின் மீதும் தெளித்தல்.
நாமஜபத்தின் மூலமோ அல்லது எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியின் விபூதியை சேர்ப்பதின் மூலமோ நேர்மறையாக சக்தியூட்டப்பட்ட புனித தீர்த்தத்தை ஒரு குவளையில் அல்லது ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். தெளிக்கப்படும் இந்த புனித தீர்த்தமானது ஆவிகளின் தீய கருப்பு சக்தியை அழித்து நல்லசக்தியை அளிக்கவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தொடங்க வேண்டும். பின்பு அந்த புனித தீர்த்தத்தை நம் மீதோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் மீதோ தெளிக்கவேண்டும்.
இந்த புனித தீர்த்தத்தை படுக்கச் செல்வதற்கு முன்பு படுக்கையின் மீதும் படுக்கையைச் சுற்றிலும் தெளிப்பதால் ஆவிகளினால் உருவாகும் தீய கருப்பு சக்தியின் தாக்குதல்கள் தடுக்கப்பட்டு நல்ல சக்திகளின் பயனை அடைகிறோம். கெட்டகனவு, தொடர் கனவுகளால் தூக்கம் தடைபடுவது மற்றும் ஆவிகள் அல்லது மூதாதையர்களின் தாக்கத்தால் ஏற்படும் தூக்கமின்மை வியாதி போன்றவற்றை போக்குவதற்கு இந்த நிவாரணம் மிகச்சிறந்தது.
இந்த வழியைப் பின்பற்றி நாம் படிக்கும்போதோ அல்லது வேலை செய்யும்போதோ, புனித தீர்த்தத்தை நம் மீதும் நம்மைச் சுற்றிலும் தெளித்து, ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, ஆவிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
தெளிக்கப்படும் இந்த புனித தீர்த்தத்தால் நாம் வசிக்கும் இருப்பிடம் சுத்தப்படுத்தப்பட்டு தூய்மையாகிறது.
3. ஆவிகளின் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்படுவதால் ஏற்படும் விளைவு.
புனித தீர்த்தத்தை தொடர்ந்து தெளிப்பதன் மூலம்,ஆவிகளுக்கு அதிக அளவு தொந்தரவு ஏற்பட்டு, இறுதியில் அந்த நபரிடமிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுத்தப்படுகிறது. எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்தியின் மூலம் உருவாக்கப்பட்ட புனித தீர்த்தத்தின் விளைவால் ஆவிகளிடமிருந்து வெளிப்படும் எதிர்வினைகளை பின்வரும் காணொளி காட்டுகிறது. இந்த ஆவிகள் தம்மை வெளிப்படுத்தியிருந்தாலும் வெளிப்படுத்தாவிட்டாலும் புனித தீர்த்தம் தெளிக்கப்படும்போது ஏற்படும் கணிசமான வலியை அவை பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆன்மீக அளவு 60%ற்கும் மேல் உள்ள நிவாரணம் அளிப்பவர் புனித தீர்த்தத்தை தெளிக்கும் போது அதன் மூலம் அந்த தீர்த்தத்தின் ஆற்றல் அதிக சத்தி வாய்ந்ததாக மாறுகிறது .
மேலும் விவரங்களுக்கு இந்த கட்டுரையைப் பார்க்கவும் ஆவிகளின் வெளிப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படுத்தப்படாத நிலை என்றால் என்ன?
4. புனித தீர்த்தத்தின் பயன்பாடு
உடலில் வலியுள்ள பாகங்களில் புனித தீர்த்தத்தை பயன்படுத்தும் போது அந்த வலி குறைகிறது, குறிப்பாக ஆவிகளின் தாக்குதல் போன்ற ஆன்மீகக் காரணங்களால் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது. ஆறாம் அறிவு கொண்டு இந்த வலியின் அடிப்படை காரணம் ஆன்மீகரீதியானது என்பதை அறியலாம். சிறந்த வழக்கமான ஆய்வுகளின் மூலம் நோயை கண்டறியமுடியாமல் அல்லது வழக்கமான சிகிச்சையினால் தீர்வு காண முடியாமல் இருந்தாலும், இந்த வலிகளுக்கு காரணம் ஆன்மீகக் காரணிகளே என்ற முடிவை எடுக்கலாம். புனித தீர்த்தத்தில் உள்ள தெய்வீக சைதன்யத்தால் பாதிக்கப்பட்ட உடல் பகுதியிலிருந்து அடிப்படை தம கூறுகள் நீக்கப்படுகிறது, அதேபோல அந்த குறிப்பிட்ட பகுதியில் வலியை உண்டாக்கும் தீய கருப்பு சக்திகளை அழிக்கிறது. புனித தீர்த்தத்தை கண்களில் பயன்படுத்துவது இயல்புக்கு மாறான தூக்கநிலையிலிருந்து விடுவிக்கின்றது.
5.தீர்த்தததை அருந்துதல்
சக்தியூட்டப்பட்ட புனித தீர்த்தத்தை அருந்துவதனால் நம் உடலில் அடிப்படை சத்வ கூறுகள் அதிகரித்து நேர்மறை தத்துவத்தை பெறுகிறோம். இதன் மூலம் ஆன்மீக நல்வாழ்வு அதிகரித்து, எதிர்மறை தன்மைகளை பிரதிபலிக்கும் பல்வேறு வகை கஷ்டங்களான வலி மற்றும் வேதனை, உடல் நலமின்மை, தூக்கமின்மை வியாதி, ஈடுபாடற்ற நிலை, மனஅழுத்தம், பொருளாதாரம் மற்றும் சமூக பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றோம். ஒரு தேக்கரண்டி அளவு புனித தீர்த்தத்தை தொடர்ந்து உட்கொள்வதனால், அந்த புனித தீர்த்தமானது ஒரு ஆன்மீக ஊட்டமருந்தாக செயல்பட்டு நேர்மறை சக்தியை அதிகரித்து, அதன் மூலம் தீய கருப்பு சக்திகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.