ஸந்த் பக்தராஜ் மஹராஜ் அவர்களின் சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடம்

ஸந்த் பக்தராஜ் மஹராஜ் அவர்கள் பரம் பூஜ்ய அனந்தானந்த சாயீஷ் அவர்களின் சீடராவார். எவரின் ஆசியினால் எஸ்.எஸ்.ஆர். எப். நிறுவப்பட்டதோ, அந்த பராத்பர குரு டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் குரு (உன்னத ஆன்மீக வழிகாட்டி) ஸந்த் பக்தராஜ் மஹராஜ் ஆவார். இவரின் எண்ணற்ற பக்தர்கள் மற்றும் ஸாதகர்கள் அவரது முன்னிலையில் இருப்பதன் மூலமோ அல்லது அவரைப் பற்றி சிந்திப்பதன் மூலமோ பல்வேறு வகையான ஆன்மீக அனுபவங்களைப் பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.ஆர். எப். ஆராய்ச்சி மையத்தில், ஸாதகர்கள் பெரும்பாலும் அவரது புகைப்படத்தை ஆன்மீக நிவாரணமளிக்கும் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். உயிரியல் பின்னூட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி அவரது புகைப்படம் ஒரு நபரின் சக்கரங்களில் வியத்தகு நேர்மறையான மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் பதிவு செய்துள்ளோம்..

கீழே, அவரிடமிருந்து வெளிப்படும் பல்வேறு ஆன்மீக அதிர்வுகளைப் பற்றிய சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரைபடத்தைக் காட்டியுள்ளோம். சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடம், அதிநுட்பமான ஆறாவது அறிவுத்திறன் கொண்ட பூஜ்ய திருமதி யோயா வாலே அவர்களால் உருவாக்கப்பட்டது. சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடம், பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டது.

1 ஆக்ஞா சக்கரத்தில் (புருவ மைய சக்கரம்) தெய்வீக சைதன்யத்தின் ஓட்டம் ஈர்க்கப்படுதல்
1அ அநாஹத சக்கரத்தில் (இதய சக்கரம்) தெய்வீக சைதன்யத்தின் ஓட்டம் ஈர்க்கப்படுதல்.
1ஆ முகத்தைச் சுற்றி ஒரு தெய்வீக சைதன்யத்தின் வளையம் உருவாக்கப்படுகிறது
1இ அநாஹத சக்கரத்தில் தெய்வீக சைதன்யத்தின் ஒரு வளையம் உருவாகுதல்
2 குரு தத்துவத்தின் வளையம் ஒன்று உருவாகுதல்
2அ குரு தத்துவ ஓட்டத்தின் வெளிப்பாடு
2ஆ குரு தத்துவத்தின் வளையம் ஒன்று உருவாகுதல்
3 பரமானந்தத்தின் உருவாக்கம் மற்றும் வெளிப்பாடு
3அ முகத்தைச் சுற்றி பரமானந்தத்தின் ஒரு வளையம் உருவாகுதல்
3ஆ பரமானந்த துகள்களின் வெளிப்பாடு
4 நிபந்தனையற்ற அன்பு (ப்ரீதி) உருவாகி செயல்படுதல்
5 பக்தியின் வளையங்கள் உருவாகி வெளிபடுதல்
5அ முகத்தைச் சுற்றி பக்தியின் ஒரு வளையம் உருவாகுதல்
5ஆ பக்தியின் துகள்கள் சுற்றுச்சூழலில் பரவுதல்
6 வெளிப்படாத தெய்வீக சைதன்யத்தின் வளையங்கள் உருவாகி வெளிப்படுதல்
7 ஆக்ஞா சக்கரத்தில் தெய்வீகத்துடன் ஒன்றியிருக்கும் வளையம் ஒன்று உருவாகுதல்
8 தெய்வீக ஞான ஓட்டம் மற்றும் அதன் துகள்களின் ஈர்ப்பு
8அ தெய்வீக ஞான ஓட்டம் மற்றும் அதன் துகள்களின் ஈர்ப்பு
8ஆ வழிகாட்டுதலுக்கான தெய்வீக வார்த்தைகள் உருவாகி அவற்றை ஸந்த் பக்தராஜ் மஹராஜ் உள்வாங்கிக் கொள்கிறார்.

அடிக்குறிப்புகள்:
* கடவுள் தொடர்பான அதிர்வுகள்/ஆற்றலைக் குறிக்க தெய்வீக சைதன்யம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளோம்.