நிபந்தனைகளற்ற அன்பு, எதிர்பார்ப்பில்லாத ஆன்மீக அன்பு

சாதாரணமாக ஒருவர் யாரையாவது விரும்பும்போது அதில் ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும், நிபந்தனையும் இருக்கும். ஆனால் ஆன்மீக அன்பு (ப்ரீதி) என்பது எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் நிபந்தனைகளற்றது. இது போன்ற அன்பு தெய்வீகமானது. மிகுந்த ஆன்மீக பயிற்சிக்கு பின்பு இறைவனை எல்லோரிலும் உணரும் பக்குவம் ஏற்படும்போதே இத்தகைய ஆன்மீக அன்பு மலரும்.  அதோடு நம் அன்பு எதிர்பார்ப்புகளால் கலப்படமாகாமல் நீர்த்துப் போகாமல் இருக்கும்போது மகிழ்ச்சி நிரம்பியவர்களாக இருப்போம்.

நிபந்தனைகளற்ற அன்பு, எதிர்பார்ப்பில்லாத ஆன்மீக அன்பு

மேற்கண்ட வரைபடம் எவ்வாறு உலக அன்பு அதாவது எதிர்-பார்ப்புடன் கூடிய அன்பு மற்றவரிடம் உள்ள ஒத்த இயல்புகளை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் காண்பிக்கிறது. ஆனால் நம்முடைய எல்லா தன்மைகளும் மற்றவரின் தன்மைகளுடன் முழுமையாக ஒத்துப் போகும் என்பதைக் கூற இயலாது. இந்த வேறுபாட்டை அடையாளம் காணும்போதே சண்டையும் சங்கடமும் ஆரம்பிக்கின்றன.

நிபந்தனைகளற்ற அன்பு, எதிர்பார்ப்பில்லாத ஆன்மீக அன்பு

இதற்கு மாறாக, ஆன்மீக அன்பு என்றும் மாறாத ஆத்மாவை அடிப்படையாகக் கொண்டது. இது பல்வேறு வடிவமைப்பு, நிறம் மற்றும் அளவுகளைக் கொண்ட மணிகளைக் கோர்த்து மாலையாக்கும் நூலைப் போன்றது. இதில் வெளிப்புற தன்மை முக்கியமன்று. ஒவ்வொரு மணியிலும் உள்ள துளை நம் ஆத்மாவை ஒத்தது. அதாவது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பது. ஒருவரிடம் உறையும் இறைவன் எந்த விதத்திலும் மற்றவரிடம் உறையும் இறைவனிலிருந்து வேறுபட்டதன்று.