1. ஆன்மீக உணர்வின் வகைகள்
ஆன்மீக உணர்வு இரண்டு வகைப்படும். அவை வெளிப்பட்ட மற்றும் வெளிப்படாதவை ஆகும்.
- வெளிப்பட்ட ஆன்மீக உணர்வு என்ற பெயரிற்கு ஏற்றாற் போல் ஆன்மீக உணர்வு பார்க்கக்கூடிய வெளிப்பாடாக இருக்கும். அடுத்து வரும் பத்திகளில் பல்வேறு வகையான வெளிப்பட்ட ஆன்மீக உணர்வை பற்றி விரிவுபடுத்துவோம்.
- வெளிப்படையாக இல்லாது, மற்றவர்களுக்கு தெரியாமல் தோன்றும் ஆன்மீக உணர்வு, வெளிப்படாத ஆன்மீக உணர்வு ஆகும்.
இந்த இரண்டில், வெளிப்படாத ஆன்மீக உணர்வு உயர்ந்த நிலையில் உள்ளது. ஆன்மீக உணர்வை வெளிப்படுத்த தேவைப்படும் சக்தி விரயமாகாததால் இது உயர்ந்த நிலையில் உள்ளது. இந்த ஆன்மீக சக்தியை ஆன்மீக வளர்ச்சிக்கு பயன்படுத்துவதோடு, கடவுளுக்கும் குருவுக்கும் சேவை செய்யவும் ஆன்மீகத்தை பரப்புவதற்கும் பயன்படுத்தலாம்.
2. வெளிப்பட்ட ஆன்மீக உணர்வு
ஒருவர் ஆன்மீக உணர்வு அனுபவிக்கும் போது அது 8 வழிகளில் வெளிப்படலாம். அவ்வாறு வெளிப்படும் 8 வழிகள் பின்வருமாறு.
- இயக்கமற்று போதல் / அசைவின்றி நிற்கும் அனுபவம்
- வியர்வை அரும்புதல்
- முடி எழும்பி நிற்கும் / மெய் சிலிர்ப்பு
- குரல் நடுக்கம்
- உடல் நடுக்கம்
- வெளிரி போன நிலை / வெள்ளையாகுதல்
- கண்களிலிருந்து கண்ணீர் வழிதல்
- மயக்கமடைதல்
ஆன்மீக உணர்வின் இந்த வெளிப்பாடுகள் தன்னிச்சையாகவும் சிரமமின்றியும் எந்தவித ஆன்மீகம் அல்லாத காரணி பங்களிப்பு செய்யாமலும் வெளிப்படுகிறது. இந்த நிலையை அனுபவிக்கும் போது, ஒருவரின் நடத்தை வழக்கத்துக்கு மாறாக இருக்கும். மேலும் உடல் உணர்வு இல்லாது சிந்தனையற்ற நிலையிலும், ஒரு குறிப்பிட்ட மத ரீதியான ஊக்கம் ஒன்றில் நிலைத்து இருப்பதன் மூலம் சிந்தனையற்ற மனோபாவத்துடனும் இருப்பார். ஏதோவொரு காரணத்தினால் ஸாத்வீகமான நிலை திடீரென்று அதிகரிப்பதால் இவ்வாறு நிகழ்கிறது.
உதாரணமாக, ஸ்துதி பாடல்கள் பாடும் போதோ அல்லது குரு மற்றும் கடவுளை நினைவு கூரும் போதோ அல்லது அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு ஆன்மீக அனுபவங்களை நினைவுகூரும் போதோ ஆன்மீக உணர்வு ததும்பிய கண்ணீர் சொட்டுகளை ஒரு ஸாதகர் பெரும்பாலும் அனுபவிக்கிறார். எட்டு வகையான ஆன்மீக உணர்வுகளில் ஒன்றான ஆன்மீக உணர்வுடன் கூடிய கண்ணீர் என இதனை வகைப்படுத்தலாம். மேலே உள்ள எல்லா எட்டு அறிகுறிகளும் ஒரே சமயத்தில் வெளிப்படும்போது, எட்டு மடங்கு ஸாத்வீகமான ஆன்மீக உணர்வு (அஷ்ட ஸாத்வீகமான பாவ்) தூண்டபட்டதாக கருதப்படுகிறது.
ஆன்மீக உணர்வின் வெளிப்பாடான இந்த அனுபவம் எப்பொழுதும் குறுகிய காலத்திற்கு தான் வெளிப்படும். ஆனால் எப்போதாவது நீண்ட காலதிற்கு வெளிப்படலாம். உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ள ஸாதகர்கள் அல்லது பக்தி மார்க்கத்தினை சேர்ந்த மகான்கள் (பக்தியோகம்) சில அபூர்வமான ஆன்மீக அனுபவங்களை கடந்து வரும் பொழுது, இவ்வாறு நீண்ட காலம் ஆன்மீக உணர்வினை அனுபவிப்பார்கள்.
ஆன்மீக உணர்வு சார்ந்த அனுபவங்கள் பெறுவதனால் மட்டும் ஒருவர் உயர் ஆன்மீக நிலையில் இருப்பதாக அர்த்தமல்ல. மேலும் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் ஏற்படும் ஆன்மீக உணர்வின் வெளிப்பாடுகளுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. இக்கட்டுரையை காணவும் – உணர்வுக்கும் ஆன்மீக உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?