வாசகர்களுக்கான குறிப்பு : இந்தக் கட்டுரையை நன்கு புரிந்துகொள்ள, சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடம் என்றால் என்ன? என்ற கட்டுரையைப் படிக்க பரிந்துரைக்கிறோம்.
இந்தக் கட்டுரையில், ஒரு இந்திய பசுவின் பால், ஈர்க்கும் மற்றும் வெளிப்படுத்தும் சூட்சும அதிர்வுகளை, சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரைபடம் மூலம் விவரித்துள்ளோம். இந்த வரைபடம் , அதிநுட்பமான ஆறாவது அறிவு திறன் கொண்ட பூஜ்ய திருமதி யோயா வாலே அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த வரைபடம், சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதிநுட்பமான ஆறாவது அறிவால் சரிபார்க்கப்பட்டபோது, சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடம் 80% துல்லியமானது என்று கண்டறியப்பட்டது.

சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடத்தில் உள்ள பல்வேறு கூறுகளை, வெவ்வேறு வண்ணங்கள் கொண்டு குறிப்பிடுவதற்கு உபயோகித்து, ஆன்மீக அதிர்வலைகளின் வண்ணங்களோடு பொருந்துமாறு நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். உதாரணமாக, தெய்வீக சைதன்யத்தின் ஆன்மீக அதிர்வலைகள், அதிநுட்பமான ஆறாவது அறிவின் மூலம் பார்க்கும்போது மஞ்சள் நிறத்தில் தெரியும். அதன்படி, தெய்வீக சைதன்யம் தொடர்பான விவரங்களைக் குறிக்க மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தியுள்ளோம்.
ஆன்மீக ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட பசும்பாலின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
- சிறந்த ஸாத்வீகமான பானங்களில் ஒன்றாக பசும்பால் இருக்கிறது. மற்ற நாட்டு பசுக்களின் பால், இந்திய பசுவின் பாலை விட 50% குறைவான ஸாத்வீகத்தன்மை உடையவை. பசும்பால் தெய்வீக சைதன்யத்தை ஈர்க்கும் திறன் கொண்டது மற்றும் தெய்வீக சக்தி அதிர்வலைகளை வெளிப்படுத்துகிறது.
- இதன் விளைவாக, நாம் ஒரு இந்திய பசுவின் பாலை குடிக்கும்போது, உடலில் உள்ள உயிரணுக்கள் பாலில் உள்ள ஸாத்வீகத்தால் சக்தியூட்டப்படுகின்றன.
- சமஸ்கிருதத்தில் ஒரு ஆன்மீக பழமொழி உள்ளது, அது‘நமது எண்ணங்கள் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து உருவாகின்றன’ என்று கூறுகிறது. இவ்வாறு நாம் ஸாத்வீக உணவு மற்றும் பானங்களை உட்கொள்ளும்போது, முழு உடலிலும் சுத்திகரிப்பு உண்டாகிறது. இதன் காரணமாக நமது எண்ணங்களிலும் நேர்மறையான மாற்றம் ஏற்படுகிறது. ஸாத்வீக எண்ணங்கள், ஒரு நபர் தர்ம(நியாயமான) செயல்களை மட்டுமே செய்ய வழிவகுக்கிறது.
- ஒரு இந்திய பசுவின் பால் மற்ற விலங்குகளின் பாலை விட ஸாத்வீகமானது.