பழச்சாறு குடிப்பதால் ஏற்படும் ஆன்மீக ஆரோக்கிய விளைவு

வாசகர்களுக்கான குறிப்பு : இந்த கட்டுரையை நன்கு புரிந்துகொள்வதற்காக, ஆன்மீக ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள் எவை? என்ற கட்டுரையை படிக்க நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

பழச்சாற்றின் ஆன்மீக விளைவுகள் பற்றிய எங்கள் காணொளியை இங்கே பார்க்கவும் :

இந்த கட்டுரையில் நாங்கள் ஆன்மீக ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடம் மூலமாக பழச்சாறு ஈர்க்கும் மற்றும் வெளிப்படுத்தும் சூட்சும அதிர்வலைகளைப் பற்றி விவரித்துள்ளோம். இது அதிநுட்பமான ஆறாவது அறிவைக் கொண்ட ஸாதகரான பூஜ்ய திருமதி யோயா வாலே அவர்களால் வரையப்பட்டுள்ளது. இது சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களால் சரி பார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதிநுட்பமான ஆறாவது அறிவு மூலம் சரி பார்க்கப்பட்ட போது ஆன்மீக ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடம் 80% துல்லியமானது என்று கண்டறியப்பட்டது.

பழச்சாறு பற்றிய சூட்சும வரைபடம்

சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடத்தில் உள்ள பல்வேறு கூறுகளை, வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டு குறிப்பிடுவதற்கு உபயோகித்து, ஆன்மீக அதிர்வலைகளின் வண்ணங்களோடு பொருந்துமாறு நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். உதாரணமாக, தெய்வீக சைதன்யத்தின் ஆன்மீக அதிர்வலைகள், அதிநுட்பமான ஆறாவது அறிவின் மூலம் பார்க்கும்போது மஞ்சள் நிறத்தில் தெரியும். அதன்படி, தெய்வீக சைதன்யம் தொடர்பான விவரங்களைக் குறிக்க மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தியுள்ளோம்.

  • பழச்சாற்றில் ரஜ-ஸத்வ கூறுகளின் ஆதிக்கம் பிரதானமாக உள்ளது எனவே அது ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
  • நேர்மறை ஆன்மீக சக்தியை பழச்சாறு, ஈர்த்து வெளியிடுவதால், ஆன்மீகக் கண்ணோட்டத்திலிருந்து இது பரிந்துரைக்கப்படுகிறது,
  • இது பிராண சக்தியை வழங்குகிறது, இதனால் உடலை பலப்படுத்தி, செயலுக்கான ஆர்வத்தை உட்புகுத்தி சோம்பலைக் குறைக்கிறது.
  • பழச்சாறு பருகும் போது நாம் தீய சக்திகளால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
  • புதிதாக பிழிந்த பழச்சாற்றில் ஸாத்வீகத்தன்மை அதிக விகிதம் உள்ளதால் அது பெரிதும் விரும்பப்படுகிறது. இருப்பினும் தகர குப்புகளில் அல்லது பாட்டிலில் உள்ள பழச்சாறு கூட பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அதில் புதிதாக பிழிந்த பழச்சாற்றை விட சிறிதளவே குறைந்த ஸாத்வீகத்தன்மை இருக்கிறது.