தெற்கு நோக்கி கால்களை வைத்து உறங்குதல் மற்றும் வடக்கு-தெற்கு திசையில் படுக்கையை வைத்திருத்தல்

தெற்கு நோக்கி கால்களை வைத்து உறங்குதல் மற்றும் வடக்கு-தெற்கு திசையில் படுக்கையை வைத்திருத்தல்

1. வடக்கு-தெற்கு திசையில் படுக்கை விரித்து தூங்கும் முறையை பற்றிய ஒரு முன்னுரை (தெற்குத்திசை நோக்கி இருக்கும் பாதங்கள்)

ஸாத்வீக வாழ்க்கை பற்றிய இக்கட்டுரையில், நாம் நன்றாக தூங்குவது எப்படி என்பது தொடர்பான பல்வேறு அம்சங்கள் மற்றும் அளவுருக்களைப் பார்க்கலாம். இந்தக் கட்டுரையில், நம் கால்களைத் தெற்கு நோக்கி வைத்து தூங்குவதன் விளைவைப் பற்றி படிப்போம். நன்றாகத் தூங்குவது எப்படி என்பது பற்றிய இந்த ஆய்வு முற்றிலும் ஆன்மீகக் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டுள்ளது. நம் பாதங்களின் திசை எவ்வாறு இருந்தால் நமக்கு நன்றாக தூக்கம் வரும் என்பதை பற்றி ஒரு அறிவுபூர்வமான முடிவை எடுக்க இது உதவும்.

1.1 நன்றாகத் தூங்குவது எப்படி என்பது பற்றிய ஒரு ஆன்மீக ஆராய்ச்சி – நம் கால்களை தெற்கு நோக்கி வைத்து தூங்குவதன் விளைவு

நன்றாக தூங்கும் முறையை கண்டறிய, நம் கால்களைத் தெற்கு நோக்கி வைத்து தூங்குவதன் விளைவை அதிநுட்பமான ஆறாவது அறிவு அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு (இ.எஸ்.பி.) கொண்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் ஸாதகர்களால் ஆன்மீக மட்டத்தில் ஆராயப்பட்டது. மேலும், அவர்கள் பெற்ற தெய்வீக ஞானம் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டது

2. தெற்கு நோக்கி கால்களை வைத்து தூங்குவதன் ஆன்மீக விளைவு

2.1 கீழ்நோக்கும் மற்றும் திரியக்(வளைந்த) அதிர்வலைகளின் செயல்பாட்டில் அதிகரிப்பு

வளிமண்டலத்தில் இயல்பாகவே பல்வேறு அதிர்வலைகள் உள்ளன. அவற்றின் இருப்பு மற்றும் ஓட்டம் சில திசைகளில் பிரதானமாக இருக்கும். நமது உடல் அவற்றின் ஓட்டத்தின் திசையுடன் சீரமைக்கப்படும்போது, ​​நாம் அவற்றின் களத்தில் நுழைகிறோம், மேலும் நாம் அவற்றின் களத்தில் இல்லாதபோதும், இருப்பதை விட அதிகமாக பாதிக்கப்படுகிறோம். இந்த அதிர்வலைகள் இரண்டு  வகையான கஷ்டம் தரும் அதிர்வலைகள் அல்லது  எதிர்மறையான அதிர்வலைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் ஒரு வகை கீழ்நோக்கி பாய்ந்து நரகத்தை(பாதாளம்) நோக்கிச்செல்லும் அதிர்வலைகள், மற்றொன்று திரியக் அதிர்வலைகள் எனப்படும். திரியக் என்றால் வளைந்த என்று பொருள். இந்த அதிர்வலைகள் வளைந்திருப்பதால், அவை கஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. இந்த இரண்டு அதிர்வலைகளும் தெற்கு திசையை நோக்கி நகர்வதால் அந்த திசையில் எதிர்மறையான  அதிர்வலைகள் மேலோங்குகிறது.

நாம் தெற்கு நோக்கி கால்களை வைத்து தூங்கும்போது, ​​நமது உடல் கீழ்நோக்கிய அதிர்வலைகள் மற்றும் திரியக் அதிர்வலைகளின் ஓட்டத்திற்கு ஆளாகிறது. இது உடலின் உள் மற்றும் வெளியே உள்ள  சூட்சுமமான அடிப்படை ரஜ-தம துகள்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இந்த அதிகரித்த செயல்பாடு  ஆவிகள்(பேய்கள், பிசாசுகள், தீயசக்திகள் போன்றவை)செயல்பாட்டிற்கு உதவுகிறது. இதன் விளைவாக, நமக்கு ஆவிகளால்(பேய்கள், பிசாசுகள், தீயசக்திகள் போன்றவை) பாதிக்கப்படும் அல்லது பீடிக்கப்படும் அபாயம் அதிகரிக்கிது

2.2 மரணப் பகுதியிலிருந்தும் நரகப் பகுதியிலிருந்தும் வரும் அதிர்வுகளின் அதிகரித்த ஓட்டம்

தெற்கு திசையானது, சூட்சுமமான அடிப்படை ரஜ-தம அதிர்வலைகள் மற்றும் துன்பம் சார்ந்த மரணப் பகுதியுடன் (யமலோகம்) தொடர்புடையது,. நாம் தெற்கு நோக்கி நமது கால்களை வைத்து தூங்கும்போது, ​​மரணப் பகுதியிலிருந்தும் மற்றும் நரகத்திலிருந்தும் வரும் அதிர்வுகள் ஒன்றாக இணைகின்றன.

இதன் காரணமாக நாம் சூட்சுமமான அடிப்படை ரஜ-தம அதிர்வலைகள் மற்றும் ஆவிகள்(பேய்கள், பிசாசுகள், தீயசக்திகள்) போன்றவற்றை ஈர்க்கிறோம். மேற்கூறியவற்றின் ஒருங்கிணைந்த விளைவாக, தூங்குவதில் சிரமம், தீய கனவுகள், தூங்கும்போது பயம் அல்லது பயத்தில் விழித்தெழுதல் போன்ற வடிவங்களில் நாம் கஷ்டத்தை அனுபவிக்கலாம்

3. உரைச்சுருக்கம்

எனவே, ஸாத்வீக முறையில் நன்றாக தூங்குவதற்காக, வீட்டின் அமைப்பைத் திட்டமிடும்போது நமது படுக்கையின் திசையைக் கணக்கில் எடுத்துக்கொள்வது மிக முக்கியம். நாம் வெளியே அல்லது தங்கும் விடுதியில் அல்லது வேறொருவரின் வீட்டில் முகாமிட்டிருந்தாலும் கூட, வடக்கு-தெற்கு திசையில் (குறிப்பாக நமது பாதங்கள் தெற்கு நோக்கி) தூங்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

நன்றாக தூங்குவது எப்படி என்பது குறித்த இந்தத் தொடரின் பின்வரும் கட்டுரைகளில், நமது கால்களை மற்ற திசைகளை நோக்கி வைத்து தூங்குவதன் விளைவைப் பற்றி மேலும் அறியலாம்.