அட்டவணை
1. அறிமுகம்
சாராம்சத்தில் தத்துவப்பற்று உடையவராக இருப்பது என்பது உன்னத ஆன்மீக நிலையில் இருப்பவர்களால் பகிர்ந்து கொள்ளப்படும் ஆன்மீகக் கோட்பாடுகளை (தெய்வீகக் கோட்பாடுகள்) பின்பற்றுவதாகும்.
2. ஸ்தூலத்தில் பற்று கொள்ளாமல் இருத்தல்
ஆன்மீகத்தில், ஒரு ஆன்மீககுரு ஒருவரை மோக்ஷப்பாதையை நோக்கி வழிநடத்தி அதன்மூலம் நிரந்தர ஆனந்தம் அடைவதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். ஒரு குருவின் வழிகாட்டுதலின் கீழ், ஆன்மீக பயிற்சி மேற்கொள்ளும் போது, ஒரு ஸாதகர் குருவின் ஸ்தூல உருவத்தின் மேல் பற்று கொள்வது இயற்கையானது. ஏனென்றால், குருவே ஸாதகரை தொடர்ந்து கடவுளை நோக்கி வழிநடத்துவதோடு, அவரது ஆன்மீக மற்றும் உலகத் தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார். இருப்பினும், குருவின் மீதான பற்று இவ்வாறே தொடர்ந்தால், அது ஆன்மீக தேக்கத்திற்கு வழிவகுக்கும். ஆதலால் ஒரு ஸாதகர் கோட்பாடு சார்ந்தவராக இருக்க வேண்டும், நபர் சார்ந்தவராக இருக்கக்கூடாது. சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் எப்போதும், ‘எனது ஸ்தூல உருவில் பற்று கொள்ளாதீர்கள்’ என்று கூறுகிறார். சுருக்கமாகச் சொல்வதானால் அவரது ஸ்தூல உருவத்தில் பற்று கொள்ளாமல் ஆன்மீகத்தைப் பரப்பும் பணியைத் தொடர வேண்டும் என்று சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே பரிந்துரைக்கிறார். இவ்வாறு, அவர் நம்மை ஸ்தூல வடிவத்திலிருந்து (ஸகுண) அருவமான வடிவத்திற்கு (நிர்குண) அழைத்துச் செல்கிறார்.
3. கோட்பாடு சார்ந்தவர்களாக இருப்பதன் நன்மைகள்
3.1 ஆன்மீக தேக்கத்தைத் தவிர்ப்பது
ஒரு ஸாதகர் தனிநபர் சார்ந்தவராக இருந்தால் ஆன்மீக ரீதியாக தேக்கமடையலாம். ஆனால் அவர் கோட்பாடு சார்ந்தவராக இருந்தால் இது நடக்காது. ஸ்தூல உடலுடன் பற்றுதல் கொண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செயல்களைச் செய்ய முடியும், அதேநேரத்தில் வெளிப்படாத நிலையின் வழி செயல்படுபவர்களால் சூட்சுமமான நிலையிலும் செயல்களை மேற்கொள்ள முடியும். ஒரு ஒப்புமையாக பார்த்தால், ஒருவரின் பொழுதுபோக்கு தோட்டக்கலை என்றால், நீர் பாய்ச்சி பராமரிப்பு செய்யும் தோட்டத்தின் அளவு நமது உடல் கொள்திறனால் வரையறுக்கப்படும். பூமியில் உள்ள இயற்கையின் பரந்த பரப்பளவுடன் ஒப்பிடும்போது நாம் வளர்க்கக்கூடிய தோட்டத்தின் அளவு மிகக் குறைவு. இயற்கையின் அனைத்து தாவரங்களும் சூரியன் மற்றும் மழை போன்ற தத்துவங்களால் பராமரிக்கப்படுகின்றன. அதேபோல், ஆன்மீக பயிற்சியைச் செய்யும்போது ஸாதகர் தன்னை மட்டுப்படுத்தி கொள்ளாமல் அதாவது ஒரு நபரிடமோ அல்லது குருவிடமோ பற்றுதல் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளலாம். ஒருவர் குருவின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும், ஆனால் குருவிடம் பற்றுதல் கொள்ளக்கூடாது. நாம் கடவுளிடம் மட்டுமே பற்றுதல் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை பெற்று தெய்வீகத்துடன் இணைய முடியும்.
3.2 கோட்பாடு சார்ந்தவராக இருப்பதன் மூலம் பரந்த மனப்பான்மையை அடைதல்
ஒரு ஸாதகர் வரையறுக்கப்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கலாம் மற்றும் குரு அல்லது குருவின் ஸ்தூல உடலுடன் பற்றுதல் கொண்டிருக்கலாம்,அத்தகைய சூழ்நிலையில், குரு தத்துவம்(இறைவனின் போதனை தத்துவம்) மற்றவர்கள் மூலம் தனக்குப் போதிக்க முயற்சிக்கும் கற்றல்களை கற்க இயலாமல் இருக்கிறார். ஸாதகர், தன்னை கோட்பாடுடன் இணைத்துக் கொள்ளும் போது, பரந்து விரிந்த தன்மையை (கடவுளின் ஒரு குணம்) வளர்த்துக் கொள்கிறார், மேலும் முழு பிரபஞ்சமும் எனது வீடு, முழு உலகமும் எனது குடும்பம் என்ற மனப்பான்மையைக் கொண்டிருப்பார். இதன் விளைவாக, அவர் மற்றவர்களிடமிருந்தும், உயிரற்ற பொருட்களிலிருந்தும் கூட கற்றலை உள்வாங்க முடிகிறது.
3.3 இடம் மற்றும் காலத்தின் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படாதவர்
ஒரு நபர் இடம் மற்றும் காலத்தின் கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்; எனவே ‘படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல்’ என்ற அடிப்படை விதி அவருக்குப் பொருந்துகிறது. இருப்பினும், ஆன்மீகக் கோட்பாடுகள் இடம் மற்றும் காலத்தால் கட்டுப்படுத்தப்படுவதில்லை, எனவே அவை இந்த விதிகளுக்கு அப்பாற்பட்டவை.
3.4 பரிபூரணத்துவத்தை(முழுமையை) நோக்கிச் செல்வது
ஒவ்வொரு நபரும் தனித்துவமான அடிப்படை இயல்பைக் கொண்டுள்ளனர். அதுபோல ஒவ்வொரு இயல்பும் குறைகள் மற்றும் குறைபாடுகளை கொண்டுள்ளது. இருப்பினும், அருவமாக இருப்பதால் ஒரு ‘கோட்பாடு’ சொந்த இயல்பைக் கொண்டிருக்காது எனவே, அது எந்த குறைபாடுகளும் இல்லாதது
4. ஸகுண(உருவ) தத்துவத்திலிருந்து நிர்குணத்திற்கு(அருவ தத்துவத்திற்கு) மாறுவதன் முக்கியத்துவம்
நிர்குண என்பது எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த, சர்வ வல்லமை படைத்த கடவுளாகும்.