உணவிற்கு முன் பிரார்த்தனை – ஒரு ஆன்மீக கண்ணோட்டம்

இந்தக் கட்டுரையை நன்கு புரிந்து கொள்வதற்கு அதற்கு முன்னோடியாக உள்ள கீழ்க்கண்ட கட்டுரைகளைப் படித்து தெரிந்து கொள்வது நல்லது :

1. அறிமுகம்

உயிர் வாழ்வதற்கு உணவே அடிப்படை. தினசரி வாழ்க்கை நடத்துவதற்கு நமது உடலுக்குத் தேவையான போஷாக்கையும் சக்தியையும் நாம் உண்ணும் உணவே நமக்குத் தருகிறது. உணவுப் பொருட்களைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்யப்படுவதால் உணவு வகைகளில் உள்ள ஊட்டச்சத்துகள் என்ன என்பது நமக்கு நன்கு தெரியும். நமது சொந்த அனுபவத்தின் மூலமாக நமக்கு மிகவும் பிடித்த உணவை உண்பதால் கிடைக்கும் மனோரீதியான திருப்தி பற்றியும் நமக்குத் தெரியும். இருந்தாலும் இவற்றுடன் ஒப்பிடு-கையில் ஒரு சாதாரண வழக்கமான உணவிற்கு முன் செய்யப்படும் பிரார்த்தனையின் பலன்களைப் பற்றி மிகக் குறைந்த அளவே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

தற்கால அவசர வாழ்க்கை நடைமுறையில், நம்மிடம் அதற்கு வேண்டிய நேரமும் பொறுமையும் இல்லாததால் உணவிற்கு முன் பிரார்த்தனை செய்வது என்பது நம்மில் சிலருக்கு ஒரு தேவையற்ற செயலாகத் தோன்றுகிறது. இது பற்றி அறியாத ஏனையோருக்கு இது ஒரு அறிமுகமில்லாத அனுபவமாக இருக்கலாம்.

ஆன்மீக கண்ணோட்டப்படி உணவிற்கு முன் பிரார்த்தனை செய்வதால் என்ன நடக்கிறது மற்றும் பிரார்த்தனை செய்யாமல் உணவு உட்கொள்வதால் என்ன நடக்கிறது ஆகியவற்றை ஒப்பிட்டு அதிநுட்பமான ஆறாவது அறிவைக் கொண்டு ஆன்மீக ஆராய்ச்சி செய்துள்ளோம்.

2. உணவிற்கு முன் பிரார்த்தனை பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி

கீழ்க்கண்ட சூட்சும சித்திரத்தை எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஐ சேர்ந்த பூஜ்ய (திருமதி) யோயா வாலே அவர்கள் தன் அதிநுட்ப ஆறாவது அறிவால் கிடைத்த சூட்சும ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு வரைந்துள்ளார்.

யோயாவிற்கு சூட்சுமத்தைப் பார்க்கும் ஆற்றல் உள்ளது. இந்த சூட்சும ஞானத்தை  அடிப்படையாகக் கொண்ட சித்திரங்களை அவர் தனது ஆன்மீக பயிற்சியின் ஒரு பகுதியாக, இறைவனுக்கு ஆற்றும் ஸத்சேவையாக செய்கிறார். சூட்சும ஞானத்தைக் கொண்டு வரையப்-பட்ட இந்த சித்திரங்கள் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்படுகிறது.

இந்த சித்திரம் பிரார்த்தனை செய்யாமல் உணவு உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை காண்பிக்கிறது.

உணவிற்கு முன் பிரார்த்தனை – ஒரு ஆன்மீக கண்ணோட்டம்

சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தின் மூலம் நமக்குத் தெரிய வருபவை பின்வருமாறு :

  • நாம் உண்ணும் உணவில் சைதன்யம் ஆகர்ஷிக்கப்படுகிறது. அதை உண்ட பின் உண்பவரை சுற்றி ஒரு சைதன்ய கவசம் உருவாகிறது.
  • பிரார்த்தனை செய்யாது, இறைவனுடன் தொடர்பு கொள்ளாது உணவு உட்கொள்வதால் கஷ்டம் தரும் சக்தி ஆவரணம் உண்பவரை சுற்றி ஏற்படுகிறது. பின்பு கஷ்டம் தரும் சக்தி உணவுடன் கலந்து உண்பவரின் உடலுக்குள் செல்கிறது.
  • அதன் பலனாக நமது உள் உறுப்புகளும் மனமும் கஷ்டம் தரும் சக்தியால் சூழப்படுகிறது. அத்துடன் அஹம்பாவத்துடன் பிரார்த்தனை செய்யாது உணவு உட்கொண்டதால் அநாஹத சக்கரத்தில் (இதயத்தில்) கஷ்டம் தரும் சக்தி வளையம் உருவாகிறது. ஏனென்றால் பிரார்த்தனை செய்யாதபோது மனம் செயற்பாட்டில் இருப்பதால் பல வேண்டாத எண்ணங்கள் ஏற்பட்டு மனம் வெளிமுகமாகிறது. 

அதனால் பிரார்த்தனை செய்யாது ஒருவர் உணவு உண்டால் கஷ்டம் தரும் சக்தி அவரின் சூட்சும உடலுக்குள் நுழைந்து கஷ்டத்தை அதிகப்படுத்துகிறது.

இதோடு கூட ஒருவர் உணவு உண்ணும்போது சத்தமிட்டு பேசுவதால் அவருடைய வெளிமுக சுபாவம் அதிகமாகி ரஜ-தம அதிர்வலைகளும் கவரப்படுகின்றன. அதனால் நம் சக்தி குறைந்து அந்த எதிர்மறை அதிர்வலைகளை நாள் முழுவதும் சுமக்கிறோம்.  

3. பிரார்த்தனை செய்த பின் உணவு உட்கொள்வதால் ஏற்படும் பலனின் சூட்சும சித்திரம்

பிரார்த்தனை செய்த பின் உணவு உட்கொள்வதால் என்ன நடக்கிறது என்பதை சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு பூஜ்ய (திருமதி) யோயா வாலே அவர்கள் வரைந்த படத்தை இப்பொழுது பார்க்கலாம்.

உணவிற்கு முன் பிரார்த்தனை – ஒரு ஆன்மீக கண்ணோட்டம்

சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தின் மூலம் நமக்குத் தெரிய வருபவை பின்வருமாறு :

  • பிரார்த்தனை செய்வதால் ஒருவருள் ஆன்மீக உணர்வு விழிப்படைகிறது. இறைவனுடன் தொடர்பும் உறுதிப்படுகிறது. இதன் மூலம் உணவு மற்றும் உண்பவரை நோக்கி சைதன்யம் ஆகர்ஷிக்கப்படுகிறது.
  • உணவில் தெய்வீக சக்தி விழிப்படைவதால் அது அவரின் சூட்சும தேஹத்தை அடைந்து ஒரு பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்துகிறது.
  • இறுதியாக, உணவு உட்கொண்ட பின்பு நம் உடலில் பிராண-சக்தி அதிகரிக்கிறது. 

அதனால் ஆன்மீக கண்ணோட்டத்தில், உணவிற்கு முன் பிரார்த்தனை செய்வது சிறந்தது. உணவிற்கு முன் இது போன்ற பிரார்த்தனைகளை செய்யலாம் :

  • “இறைவா, இவ்வுணவு உன்னுடைய பிரசாதம் என்ற ஆன்மீக உணர்வுடன் நான் இதை உட்கொள்ள வேண்டும். அதன் மூலம் எனக்கு தெய்வீக சக்தி மற்றும் சைதன்யம் கிடைக்கட்டும்.”
  • “இறைவா, இவ்வுணவில் ஏதாவது கருப்பு சக்தி இருந்தால், அதை அழித்து உன்னுடைய சைதன்யத்தை இந்த உணவுத் துகள்களில் ஏற்று.”
  • “இறைவா, உன்னுடைய நாமமாகிய பாதுகாப்பு கவசம் உணவு உண்ணும்போது என்னை சுற்றி ஏற்படட்டும்.”

4. சுருக்கம் – உணவிற்கு முன்பு பிரார்த்தனை

உணவு உண்பதற்கு முன்பு பிரார்த்தனை செய்யும் எளிய செயலால் நாம் இறைவனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதுடன் சைதன்யத்தையும் பாதுகாப்பு கவசத்தையும் பெற்று உடலின் செயல்பாடுகளுக்குத் தேவையான பிராண சக்தியையும் பெற முடிகிறது. இது நம் ஆன்மீக பயிற்சிக்கு ஒரு தொடர்ச்சியைத் தருகிறது; அத்துடன் உணவு உட்கொள்ளுதல் போன்ற தினசரி நடவடிக்கைகளிலும் பிரார்த்தனை நடைபெறுகிறது.

அதோடு கூட உணவு உண்ணும் சமயத்திலும் நாமஜபம் செய்வது அதிக ஆன்மீக பலனைத் தரும்.