மூன்றாம் உலகப் போர் – உயிர் பிழைப்பதற்கான ஒரு வழிகாட்டி

மூன்றாம் உலகப் போர் - உயிர் பிழைப்பதற்கான ஒரு வழிகாட்டி

1. முன்னுரை

“மூன்றாம் உலகப் போர் 2015 -ல் தொடங்கி 2023 வரை சுமார் 9 ஆண்டுகள் தொடரும் என்று எஸ். எஸ். ஆர்.எஃப், 2007 -ல் கணித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தொடுக்கப்படும் அனைத்து போர்களும் ஒன்றோடோன்று தொடர்புடையவையாகவே இருக்கும். இருப்பினும், அது உலகிற்கு வெளிப்படையாக தெரியாது. இந்த காலகட்டத்தின் முடிவில், அணு ஆயுதங்கள் உட்பட பல்வேறு வெகுஜன அழிவு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்”. கூடுதலாக, இந்த காலகட்டத்தில் சுனாமி, பூகம்பங்கள், வெள்ளம் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை பேரழிவுகளின் நிகழ்வுகளையும் உலகம் அனுபவிக்க நேரிடும்.

ஆதாரம்: ஆன்மீக ஆராய்ச்சி, எஸ்.எஸ்.ஆர்.எஃப்

2007 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை வேகமாக முன்னோக்கி பார்த்தோமானால், நாம் மீண்டும் மீண்டும் பேரழிவுகரமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும் உலகில் வாழ்கிறோம் என்பதை அறிவோம். 2016 ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் அதிகரித்த இயற்கை பேரழிவுகள், அதி வெப்பமான காலநிலை மாற்றம், சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டு போர், பயங்கரவாத அமைப்புகளால் உருவாக்கப்பட்ட பரவலான அழிவு / குண்டுவெடிப்பு, புலம்பெயர்ந்தோர் நெருக்கடி, உலக வல்லரசுகள் அணு ஆயுதங்களை கையகப்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல், சர்வதேச அங்கீகாரத்தை எதிர்நோக்கும் பிற அரசாங்கங்கள் போன்ற நிகழ்வுகளால் நிலைமை மோசமாக உள்ளது. நாஸ்ட்ரடாமஸ் எனும் பிரான்ஸ் நாட்டின் தீர்க்கதரிசி, மூன்றாம் உலகப் போர் நிகழும் என கணித்துள்ளார். மேலும் பல ஆதாரங்கள் நாஸ்ட்ரடாமஸீன் கணிப்புகளை விளக்கியுள்ளன. குழந்தைகளின் விளையாட்டு போல் தோன்றும் முதல் இரண்டு உலகப் போர்களை காட்டிலும், மூன்றாம் உலகப் போர் பிரம்மாண்டமான அளவில் துன்பகரமான பேரழிவுகள் எதிர்கொள்ளும் என்று கணித்துள்ளனர். ஆன்மீக ஆராய்ச்சி மற்றும் பல மகான்களின் வழிகாட்டுதல் மூலம், மூன்றாம் உலகப் போர் உடனடியாக நிகழும் என்பதையும், அதன் தாக்கம் எங்கும் இருக்கும் என்பதையும் கண்டறிந்துள்ளோம். சில பயங்கரமான நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதால், மக்கள் உலகப் போர் நடக்கும் என்றே எதிர்பார்க்கிறார்கள். ‘மூன்றாம் உலகப் போர் என்பது பெரும்பாலானோர் தற்போது கூகிளில் தேடும் ஒரு முக்கிய சொற்றொடராக உள்ளது. இந்த தேடல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர, குறைவதற்கான அறிகுறிகளே இல்லை. மூன்றாம் உலகப் போரின் சாத்தியத்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளதையே இது குறிக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் பெரும்பாலான மக்கள் மூன்றாம் உலக போரிலிருந்து எவ்வாறு மீள்வது அல்லது அணுசக்தி வீச்சு தொடர்பான சொற்களை தேடவில்லை. வளர்ந்த நாடுகளில் உள்ள நமக்கு, இந்த நெருக்கடி சில தொலைதூர மத்திய கிழக்கு நாடுகளில் அல்லது ஆபிரிக்கா கண்டத்தில் தான் உள்ளது என்பதே கருத்தாகும். எவ்வாறாயினும், ஐரோப்பாவில் இப்போது தொடங்கி இருப்பதை போன்ற ஒரு காலம், நாம் எங்கிருந்தாலும் விரைவில் நம் தெருக்களையும், நம் வீட்டு வாசலையும் எட்டும். அப்பொழுது, மிகவும் தாமதமாகவே இருந்தாலும், மக்கள் உயிர்வாழும் உத்திகளை தேடுவார்கள். அத்தகைய அளவில் நடக்கும் எந்தவொரு யுத்தம் / கிளர்ச்சி இணையற்ற எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் சேதங்களை உருவாக்கும்.

2. மூன்றாவது உலகப் போரின் பின்விளைவுகள்

ஆன்மீக ஆராய்ச்சி மூலம், இந்த காலகட்டத்தின் பின் விளைவுகள் பற்றிய சில உண்மைகளையும், இது எவ்வாறு நாம் எதிர்கொள்ள வேண்டிய பேரழிவின் அளவைக் காட்டுகிறது என்பதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். பின்வருபவை நாம் அனைவரும் விரைவில் எதிர்கொள்ள வேண்டிய உலகத்தின் நிலையாகும்.

  • முதலாவதாக, 2019-2023 க்கு இடையிலான ஆண்டுகளில் நிகழ்வுகள் மிக வேகமாக சீர்குலைய ஆரம்பிக்கும்.
  • உலக மக்கள்தொகையில் 1/3 (அதாவது இருநூறு கோடிக்கும் அதிகமான மக்கள்) அணு ஆயுத பேரிடர்களால் மாண்டு விடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கதிரியக்க மாசுபாடு, அணுசக்தி வீச்சு மற்றும் பிற காரணங்களால் பத்து இலட்சத்திற்கு அதிகமானவர்கள் மாண்டு விடுவார்கள். மொத்தத்தில், பாதிக்கும் மேலான உலக மக்கள்தொகை போரின் மூலம் நேரடியாகவோ அல்லது இயற்கை பேரழிவுகள் மற்றும் அதன் பின்விளைவு காரணமாக அழிய நேரிடும்.
  • அவசர சேவைகள் மற்றும் அரசாங்க உதவி அறவே இல்லாத நிலை அல்லது பேரழிவு மற்றும் அழிவின் சீற்றத்தை சமாளிக்க இயலாத நிலை இருக்கும்.
  • உலகின் 70% அடிப்படை வசதிகள் அழிக்கப்படும். உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நகரங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும்.
  • மருத்துவப் பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்படும். அதோடு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை அணுகுவதற்குண்டான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
  • கதிரியக்க வீச்சினால் மக்கள், விலங்குகள், மீன் மற்றும் நிலம் மாசு அடையும்.
  • கதிரியக்க வீச்சின் விளைவாக, நீர்நிலைகள் அடுத்த வரும் 12 மாதங்களுக்கு மாசடைந்தே இருக்கும். சுத்தமான குடிநீர்க்கு பற்றாக்குறை ஏற்படும், மேலும் நீரினால் பரவும் நோய்கள், பெருவாரியாக பரவும் தொற்று நோய்களை ஏற்படுத்தும்.
  • 10 ஆண்டு காலத்திற்கு உணவு பற்றாக்குறை நீடிக்கும். *
  • 10 ஆண்டுகளுக்கு கடுமையான பெட்ரோல் பற்றாக்குறை இருக்கும். * இதனால் அனைத்து வகையான மோட்டார் வாகன போக்குவரத்து, மோசமாக பாதிக்கப்படும்.
  • 10 ஆண்டுகளுக்கு கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும். *
  • மக்கள் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் துக்கம் போன்ற பல்வேறு மன நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.
  • சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து, எல்லா இடையூறுகளுக்கும் எதிராக உயிர்வாழ வேண்டிய அவசியம், மக்களின் மோசமான நடத்தையை வெளிகொணரும். கொள்ளையடிப்பது, குற்றம் செய்வது மற்றும் பிழைப்புக்காக போராடுவது என்பது தவறாமல் நித்தமும் நிகழும். இதுபோன்ற நெருக்கடி காலங்களில், மக்களின் உண்மையான நடத்தை, அது நல்லதோ அல்லது கெட்டதோ வெளிப்படும்.
  • இந்த யுத்தத்தின் தாக்கம் 30 ஆண்டுகள் வரை நீடிக்கும். இதிலிருந்து மறுகட்டமைப்பு செய்து மீண்டு வர சுமார் 100 ஆண்டுகள் ஆகும்

* இந்த காலம் ஒப்பீட்டளவில் குறுகியதாக இருப்பதேனென்றால், அந்த நேரத்தில் உலக மக்கள்தொகையில் பாதி மட்டுமே பல்வேறு வசதிகளை வழங்குவதற்கும் உணவளிப்பதற்கும் எஞ்சியிருக்கும்.

3. மூன்றாம் உலகப் போரிலிருந்து தப்பியவர்களுக்கு அதன் அர்த்தம் என்ன

இது வரவிற்கும் சூழல் மற்றும் நிலைமை எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு பார்வை ஆகும். அத்தகைய சூழ்நிலையில் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் கற்பனை செய்து பாருங்கள். பொதுவாக, இதுபோன்ற பயங்கரமான மற்றும் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் அனைவரின் மனதிலும் உள்ள எண்ணங்கள், ‘என் அன்புக்குரியவர்களும் நானும் எப்படி உயிர்வாழ முடியும்?’ மற்றும் ‘எவ்வாறு என்னையும் எனது அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பேன்?’ என்பவையாகவே இருக்கும். உதவிக்கு அரசாங்கத்தையோ அல்லது நிவாரண சேவை அளிப்பவர்களையோ எதிர்பார்க்காமல், அனைவரும் தன்னை தானே பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையே இருக்கும்.

உலகம் ஒரு முக்கியமான மாற்றத்திற்கு உட்படும். மூன்றாம் உலகப் போரிலிருந்து தப்பியவர்கள் ஒரு எதிர்மறையான மற்றும் குழப்பமான சூழலின் நடுவில்  மனிததன்மை மற்றும் சகிப்புத்தன்மையின் வரம்புகளை சோதிக்கும் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பார்கள். “தன் கையே தனக்கு உதவி” என்பதற்கேற்ப மூன்றாம் உலக போரில் தப்பியவர்களுக்கு, உண்மையில் உதவப்போவது அவர்கள் தன்னம்பிக்கை அடைவதுதான்; அதாவது, சரிந்து வரும் சமூக அமைப்புகளைச் சார்ந்து இராமல் உயிர்வாழ்வதற்கான கருவிகளைக் கற்றல். போதுமான பொருட்களை சேமித்து வைப்பது என்பதை போன்ற அடிப்படை விஷயங்களும், பல்வேறு நெருக்கடிகளை கையாள்வதற்கான உடல் வலிமை மற்றும் மனத்திறன் ஆகியவற்றைக் கொண்டிருத்தல், மற்றும் கதிரியக்க வீச்சிலிருந்து உண்டாகும் மாசுபாட்டை எவ்வாறு கையாள்வது என்பதை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவை நம்மை நல்ல நிலையில் வைத்திருக்கும். இத்தகைய காலங்களில் உயிர்வாழ்வதற்கான கருவிகள் மற்றும் அவற்றை பற்றிய அறிவு, உயிர் வாழ்வதற்க்கும் இறப்புக்கும் உள்ள இடைவெளியை அதிகப்படுத்தி பேரழிவை சந்திப்பதிலான உங்களின் தயார்நிலையை அதிகப்படுத்தும்.

4. மூன்றாம் உலகப் போரில்  உயிர்பிழைத்து வாழ்வதற்கும் பேரிடர் மேலாண்மைக்குமான கையேடு

இந்த காரணத்தினாலேயே, இந்த பகுதியில் வரவிருக்கும் காலங்களில் தன்னை தயார்படுத்திக் கொள்ளவும், தற்காத்துக் கொள்ளவும், உயிர்பிழைத்து வாழ்வதற்கு உடல், உளவியல் மற்றும் ஆன்மீக நிலையில் உதவும் உயிர்வாழும் கருவிகள் மற்றும் பயிற்சிகளை உங்கள் உதவிக்காக பகிர்ந்து கொள்கிறோம். கீழே உள்ள ஒவ்வொரு படக்காட்சி பக்கங்களோடும் அதன் அம்சத்தை விரிவாக விளக்கும் பகுதி இணைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில், கீழேயுள்ள அட்டவணையில் உள்ள தலைப்புகளை அதன் துணைப்பிரிவுகளுடன் தொடர்ந்து இணைப்போம். எனவே மூன்றாம் உலகப் போரிலிருந்து உயிர் பிழைத்து வாழ, பேரிடர் ஆயத்த நிலை பற்றியும் அவசரகால அத்தியாவசியங்கள் குறித்த உங்கள் அறிவை புதுப்பித்துக் கொள்ளவும் மீண்டும் மீண்டும்  இந்த கட்டுரையை பார்க்கவும்.

தயவுகூர்ந்து கவனிக்கவும்: ஒவ்வொரு துணை தலைப்பும் எஸ். எஸ்.ஆர்.எஃப் இணையதளத்தில் உள்ள அத்தலைப்பின் பொதுவான தகவலுடனான கட்டுரையுடன்  தற்காலிகமாக இணைக்கபட்டுள்ளன. மூன்றாம் உலகப் போர் மற்றும் பேரழிவு மேலாண்மையுடன் கீழே உள்ள ஒவ்வொரு துணை தலைப்பையும் பின்னர் இணைக்க உள்ளோம்.

வரிசை எண் நிவாரணம்
1 நாமஜபம்
2 வெற்றுப்பெட்டி நிவாரணம்
3 அக்யுப்ரெஷர் (அழுத்தமுறை வைத்தியம்)
4 சிவ ஸ்வரோதயா (சூரிய நாடி மற்றும் சந்திர நாடி)
5 யந்த்ரம்
6 பிராணாயாமம் மற்றும் யோகாசனம்
7 ஆயுர்வேதம்
8 பிராணசக்தி ஓட்ட நிவாரணம் (நியாஸ் மற்றும் முத்ரா உட்பட)
9 மந்திரங்கள்
10 வர்ம சிகிச்சை -உடலில் உயிர்நிலை புள்ளிகளை செயல்படுத்துகிறது
11 அக்னிஹோத்ரம்
12 தீயணைப்பு
13 முதலுதவி
14 இயற்கை பேரழிவு மேலாண்மை மற்றும் உயிர்பிழைத்தல்
15 ரிஃப்லெக்ஸோலஜி
16 மனோவசிய சிகிச்சை முறை (ஆளுமை குறைகளை களைதல் மற்றும் அஹம்பாவம் களைதல்)
17 வளர்க்க வேண்டிய தாவரங்கள் அல்லது மூலிகைகள்
18 உடற்பயிற்சி சிகிச்சை
19 மலர் நிவாரணங்கள்
20 இசை சிகிச்சை
21 வண்ண போத்தல்களில் நீர் சிகிச்சை (குரோமோபதி)

5. மூன்றாம் உலக போரிலிருந்து உயிர்பிழைத்து வாழ்வதற்கு உடல், உளவியல் மற்றும் ஆன்மீக நிலையில் எடுக்க வேண்டிய படிகளின் முக்கியத்துவத்தை அதிகரித்தல்

பேரிடர் ஆயத்த நிலை என்று வரும்போது, நம்மில் பெரும்பாலோர் ஸ்தூலமான செயல்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இருப்பினும் ஆன்மீக ஆராய்ச்சி / ஆன்மீகக் கோட்பாடுகளின் படி, சூட்சும நிலையில் எடுக்கும் முயற்சிகள் ஸ்தூலமான முயற்சிகளை விட பல மடங்கு பயனுள்ளதாக இருக்கும். அதுவும் பேரிடர் ஆயத்த நிலை என்று வரும்போது இது மிகவும் முக்கியமாகும்.

  • ஸ்தூலமான நடவடிக்கைகள் (மாற்று சிகிச்சை வகைகள், முதலுதவி நுட்பங்கள் பற்றிய அடிப்படை அறிவை கொண்டிருத்தல், தீயணைப்பு நுட்பங்கள் போன்றவை) ஸ்தூல நிலையில் மட்டுமே உள்ளன.
  • ஸ்தூலமான நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது உளவியல் நடவடிக்கைகள் (மனோவசிய சிகிச்சை முறை போன்றவை) சூட்சுமமானவை.
  • ஆன்மீக நடவடிக்கைகள் (நாமஜபம் செய்வது, மந்திரங்களை ஓதுவது, அக்னிஹோத்ரம் போன்ற ஆன்மீக சடங்குகளை செய்வது மற்றும் சீரான ஆன்மீக பயிற்சி மேற்கொள்வது போன்றவை அதி சூட்சுமமானவை).

சூட்சும நிலை, ஸ்தூலமான நிலையை விட பல மடங்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் சாராம்சம் என்னவென்றால், வரவிருக்கும் காலங்களை எதிர்கொள்வதற்கும், உயிர்பிழைத்து வாழ்வதற்கும், ஸ்தூலமான நடவடிக்கைகளை மட்டும் பயன்படுத்தினால் போதாது. விச்வகோட்பாடின் படி செய்யப்படும்  தீவிரமான ஆன்மீக பயிற்சி கடவுளின் அருளை ஈர்த்து, ஸ்தூலமான பாதுகாப்பை விட பல மடங்கு பாதுகாப்பை அளிக்கிறது.

பராத்பர குரு டாக்டர் ஆடவலே போன்ற மிக உயர்நிலை மகான்கள், அவர்களது தெய்வீக தொலை நோக்கு பார்வையால், குழப்பமான இந்த காலகட்டத்தில், ஆன்மீக நிவாரண முறைகள் மூலம் மனிதகுலத்தை வழி நடத்துவது, அடுத்தடுத்த நிகழும் பேரழிவு காலங்களில் மக்களின் உயிர்காக்கும் என்பது திண்ணம். நாமஜபங்கள், நிவாரண தீர்வுகள் மற்றும் ஆன்மீக பயிற்சியை உடனடியாக தொடங்குமாறு வாசகர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் மூன்றாம் உலகப் போரிலிருந்து உயிர்பிழைத்து வாழ்வதற்கும், உடல் மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக சிறப்பான தயார் நிலையில் எதிர்கொள்வதற்கும் முறையான ஆன்மீக பயிற்சியை தொடங்குவது அல்லது தொடர்வது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.