சுய நிவாரண நுட்பம் – நியாஸ்
உடல் மற்றும் மனநல நோய்களுக்கான மருத்துவ சிகிச்சையுடன் வழக்கமான மருத்துவ சிகிச்சையைத் தொடர எஸ்.எஸ்.ஆர்.எஃப் அறிவுறுத்துகிறது.
எந்தவொரு ஆன்மீக குணப்படுத்தும் தீர்வையும் தங்கள் விருப்பப்படி எடுத்துக் கொள்ள வாசகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நியாஸ் என்பது சக்தியின் பிரவாகத்தை ஒன்று சேர்ந்த விரல் நுணிகள் மூலம் ஒருமைப்படுத்தும் ஒரு சுய நிவாரண நுட்பமாகும். நியாஸ் செய்வதால், நாம் நமது ஆன்மீக சக்தியை ஒன்று சேர்ந்த விரல்களால் குறிப்பிட்ட சக்தி மையத்தில் ஒருமைப்படுத்தலாம்.
அட்டவணை
1. ஒரு குண்டலினி சக்கரத்தில் (ஆன்மீக சக்தி மையம்) நியாஸ்:
உதாரணத்திற்கு, புருவ மையத்தில் (ஆக்ஞா சக்கரம்) நியாஸ் செய்யும் நிவாரணம் இப்படித் தெரியும்:
2. இரு குண்டலினி சக்கரங்களில் நியாஸ்
புருவ மைய சக்கரத்தில் மற்றும் இதய மைய சக்கரத்தில் (அநாஹத சக்கரம்) நியாஸ் செய்யும் நிவாரணம் இப்படித் தெரியும்:
நியாஸின் செயல் வழிமுறையின் நுட்பம்
நியாஸ் அல்லது மற்ற சுய நிவாரண நுட்பங்களை எப்போதும் நாமஜபத்துடன் இணைத்துச் செய்ய வேண்டும். நாமஜபத்தினால் நாம் கடவுளின் நாமத்தில் உள்ள தெய்வீக சக்தியை ஈர்த்துக் கொள்கிறோம். நியாஸ் செய்வதன் மூலம் நாமஜபத்தினால் ஏற்படும் தெய்வீக சக்தியை குறிப்பிட்ட ஆன்மீக சக்தி மையத்தில் சேர்க்கிறோம். அப்படிச் செய்தால் அந்த பகுதியில் இருக்கும் உறுப்பிற்கு சக்தி சென்றடைகிறது.
நியாஸ் செய்யும்போது உங்கள் கை வலித்தால் கையை கீழே கொண்டு வந்து சிறிது ஒய்வு எடுக்கச் செய்யலாம் அல்லது கையை மாற்றலாம்.