
ஆன்மீக பயிற்சியின் மூலம் நமது ஆறாவது அறிவு விழிப்படைகிறது. இதனால் நாம் ஆன்மீக பரிமாணத்தை உணரத் தொடங்குகிறோம்.
நமது ஆறாவது அறிவு வளரத்தொடங்கும் போது நாம் எதை உணரக்கூடியவர் ஆகிறோம்?
ஆன்மீக பரிமாணத்திலிருந்து அதிர்வலைகளை உணரும் நமது திறன் செயல்படுத்தப்படும் வரிசை கீழ்வருமாறு :
- ஆன்மீக பரிமாணத்திலிருந்து நாம் உணரும் முதல் அதிர்வலைகள், எதிர்மறை அதிர்வலைகள் ஆகும். ஏனென்றால் தாழ்நிலை ஆவிகளின் அதிர்வலைகள் அதிகளவு ஸ்தூல மட்டத்தில்(அதாவது சூட்சுமமற்ற தன்மை) தான் இருக்கும், இதனால் நமது ஆறாவது அறிவினால் எளிதில் உணரலாம். உயர்நிலை ஆவிகளின் அதிர்வலைகளை உணர நமக்கு அதிநுட்பமான ஆறாவது அறிவு தேவை.
- இதற்கடுத்த நிலை அதிர்வலைகள் நேர்மறையானவை ஆகும் :
- நேர்மறையாக நாம் உணரக்கூடிய முதல்நிலை அதிர்வலைகள் தெய்வீக சக்தி கொண்டவை.
- தெய்வீக ஆற்றலை உணர்ந்த பிறகு ஒருவர் ஆன்மீக உணர்வின் அதிர்வலைகளை உணர முடியும்.
- நேர்மறை அதிர்வலைகளின் நிலையில் அடுத்தப்படியாக நாம் தெய்வீக சைதன்யத்தை உணரமுடியும்.
- நான்காவது மிகச் சூட்சுமமான அதிர்வலைகள் ஆனந்தத்தின் ஆகும்.
- ஆன்மீக உலகத்தில் மிகச் சூட்சும அதிர்வலைகள் சாந்தி ஆகும், இது எல்லாம்வல்ல இறைவனின் ஒரு குணம் இது.
மஹான்களை பொறுத்தவரை தனது ஆன்மீக நிலைக்கு ஏற்றவாறு நேர்மறை அதிர்வலைகளை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் அதிர்வலைகளை கீழே காணலாம்.
- 70% மஹான்: தெய்வீக ஆற்றல்
- 80% மஹான்: ஆனந்தம்
- 90% மஹான்: சாந்தி
சராசரி ஆறாம் அறிவு மற்றும் ஆன்மீக நிலை 30-35% உள்ள ஒருவரால் பொதுவாக பேய்(பூதம்) போன்ற தாழ்நிலை ஆவிகளின் அதிர்வலைகளை மட்டுமே உணர முடியும். நேர்மறை (மேல்) உலகின் எந்தவொரு பகுதியையும் அவர்களால் உணர முடியாது. பல நேரங்களில் அவர்கள் நேர்மறை சக்தியாக உணர்ந்த ஒன்று தீய சக்தியாக(ஆவிகள்,பேய்கள், பிசாசுகள்) இருந்து அது அவர்களுக்கு நேர்மறை சக்தியாக கூட தோற்றமளித்து இருக்கலாம். ஒரு மஹானின் அதிர்வலைகளை சராசரி ஆறாம் அறிவு உடையவரால் உணரவே முடியாது.