ஒருவர் எவ்வாறு நாமஜபத்தை படிப்படியாக அதிகரிப்பது?

ஆன்மீக பயிற்சிக்கான அஸ்திவாரமாக கடவுளின் பெயரை நாமஜபம் செய்வதை எஸ்.எஸ்.ஆர்.எஃப். பரிந்துரைக்கிறது. சரியான கால இடைவெளியில் நாமஜபத்தை தரத்திலும் அளவிலும் படிப்படையாக அதிகரித்து வருவது முக்கியம். இது ஆன்மீக முன்னேற்றத்தையும் உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள் பெறுவதையும்  எளிதாக்குகிறது.

ஒரு ஸாதகர் இந்த ஆன்மீக பயிற்சி பாதையில் பொதுவாக கடந்து செல்லும் பல்வேறு நடவடிக்கைகள் அல்லது மைல்கற்களை கூர்ந்து கவனிப்போம். ஒருவரின் ஆன்மீக நிலையை பொறுத்து ஒவ்வொரு மைல்கல்லையும் அடைய சில மாதங்கள் முதல் இரு வருடங்கள் வரை தேவைபடலாம்.

ஒருவர் எவ்வாறு நாமஜபத்தை படிப்படியாக அதிகரிப்பது?

 

நமது வாசகர்கள் பலர் இந்த வலைதளத்தை வாசித்தபின் முதன்முறையாக தங்களது வாழ்வில் கடவுளின் பெயரை நாமஜபம் செய்ய தொடங்கியுள்ளனர். பொதுவாக இந்த வாசகர்கள் ஒரு நாளைக்கு ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே நாமஜபம் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் இப்பயிற்சியினை ஆரம்பித்து தொடரும் பொருட்டு ஒரு நாளைக்கு குறைந்தது 10 நிமிடங்கள் நாமஜபத்திற்கான நேரமாக ஆரம்பத்திலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். அங்கிருந்து நாமஜத்தை படிப்படியாக அதிகரிக்கும் செயல்முறை மெதுவாக தொடங்குகிறது.

ஒருவர் எவ்வாறு நாமஜபத்தை படிப்படியாக அதிகரிப்பது?

 

அடுத்த நிலை சும்மா இருக்கும் ஒருவர் விழிப்புணர்வுடன் நாமஜபம் செய்ய நினைவுபடுத்திக் கொள்வதாகும். இது இன்னொருவருக்காக காத்திருத்தல் அல்லது வரிசையில் நிற்றல் போன்றவற்றை கூறலாம்.

 

 

ஒருவர் எவ்வாறு நாமஜபத்தை படிப்படியாக அதிகரிப்பது?

 

இதற்குப் பிறகு, ஒருவர் ஸ்தூல செயல்களான குளித்தல், சமைத்தல், நடைபயிற்சி, பேருந்து அல்லது ரயிலில் பயணித்தல் ஆகியவற்றின் போது நாமஜபம் செய்ய முயற்சிக்க வேண்டும். இவை பழக்கவழக்கங்களின் செயல்திறனால் செய்யப்படும் அன்றாட வேலைகளாகும், எனவே அதிகம் சிந்திக்கத் தேவையில்லை. ஆதலால் நாமஜபம் செய்வது எளிதாகிறது.

ஒருவர் எவ்வாறு நாமஜபத்தை படிப்படியாக அதிகரிப்பது?

 

அடுத்த உயர்ந்த நிலை, நம் அன்றாட வாழ்வில் செய்தித்தாள் வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற முக்கியமில்லாத மனம் சார்ந்த நடவடிக்கைகளின் போது, கடவுளின் பெயரை நாமஜபம் செய்வதாகும். எனவே இத்தகைய நேரங்களில் ஒருவர் மனதளவில் நாமஜபம் செய்ய முடியும்.

 

இதன்பிறகு தினசரி வாழ்க்கையில் முக்கியமான மனோரீதியாக பணிகளை செய்யும் போது, உத்தியோகபூர்வ ஆவணங்களை வாசித்தல் அல்லது எழுதுவது போன்ற நேரங்களிலும் நாமஜபம் செய்தல் மேலும் மேன்மையான நிலையாக கருதப்படுகிறது. அத்தகைய பணிகளை செய்யும் போது கண்கள், புத்தி மற்றும் கைகள் செயலில் உள்ளன, எனவே மனதளவில் நாமஜபம் செய்வது   சாத்தியமாகிறது. ஆன்மீக பயிற்சியை மேலும் மேலும் படிப்படியாக அதிகரிப்பதால் ஆன்மீக வளர்ச்சி அடைவதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

எந்த விதமான செயல்களைச் செய்யும் போதும் நாமஜபம் செய்வது எப்படி தொடர்ந்து சாத்தியமாகிறது என்று விளக்கும் கட்டுரையை தயவு செய்து பார்க்கவும்.

தற்போதைய காலங்களில், ஒருவர் தமது மதத்தின் கடவுளின் பெயரை நாமஜபம் செய்வதற்கு மேலாக, மறைந்த முன்னோர்களால் ஏற்படும் பிரச்சனைகளிருந்து காத்து கொள்ள குறைந்தது 2 மணி நேரம் ஸ்ரீ குருதேவ தத்தாவின் நாமஜபத்தை அனைவரும் செய்யும் படி எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது.