ஆறாவது அறிவு (உளவியல்) திறன் கொண்டு நம் மனதால் நாம் எவ்வளவு உணர முடியும்?ஆறாவது அறிவு (உளவியல்) திறன் கொண்டு நம் மனதால் நாம் எவ்வளவு உணர முடியும்?

நாம் இணையதளத்தில் பேய்களின்( ஆவிகளின்), படம் அல்லது புகைப்படங்களை அடிக்கடி பார்க்கிறோம்.இந்த புகைப்படங்கள் நம்மைச் சுற்றியுள்ள அமானுஷ்ய செயல்பாடுகளின் தெளிவற்ற ஒரு பார்வையை வழங்குகின்றன. உண்மை என்னவென்றால், நாம் அறிந்தோ அறியாமலோ எப்போதும் ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீயசக்திகள்போன்றவை) தாக்கங்களுக்கு உள்ளாகிறோம். சிலசமயங்களில் ஆவிகளால் பீடிக்கப்பட்ட நபர் வன்முறையாக  நடந்துகொள்வது, அல்லது கண்ணுக்குத் தெரியாத ஒரு நபரால் இரவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அனுபவம் போன்ற வித்தியாசமான தாக்கங்கள் நிகழக்கூடும். மற்றநேரங்களில், ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீயசக்திகள்போன்றவை) சூட்சும நிலை தாக்கத்தை ஏற்படுத்தி, வாழ்வில் நிதி நெருக்கடி அல்லது திருமணத்தடை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

அமானுஷ்ய செயல்பாட்டைப் படம் பிடித்தல் அல்லது பேயின் மங்கலான முகத்தைப் பார்க்கும் திறன் ஆகியவை சூட்சுமபரிமாண புரிதலின் துவக்கமாகும். அதாவது, இது பேய்களின் செயல்பாட்டைப் பற்றிய மிக மேலோட்டமான புரிதல் ஆகும்.நமது ஆறாவதுஅறிவு (சூட்சுமஉணர்திறன்) வளர்ச்சியடையும்போது, இது ஏன் நடக்கிறது என்பதோடு, இந்தச் செயலை இன்னும் விரிவாகப் புரிந்துகொள்ளவும், உணரவும் தொடங்குகிறோம்.

ஆவிகளின் இந்த அமானுஷ்ய உலகத்தைப் பற்றி ஆழமான ஆறாவது அறிவு (சூட்சும புலனுணர்வு அல்லது மனநலத்திறன்) கொண்டு படிப்படியாக பல்வேறு வகையில் ஆராய்வோம்.

 • நிலை 1 : இந்தநிலையில், ஆவிகள் ஏற்படுத்தும்  (பேய்கள், பிசாசுகள், தீயசக்திகள், முதலியன) ஸ்தூல பாதிப்பை நமது மனநலத்திறன்களின் மூலம் உணரமுடியும் – சூட்சும காரணிகளால் ஏற்படும் சில குறிப்பிட்ட  பிரச்சனைகள்,அதாவது     திருமண வாழ்வில் முரண்பாடுகள்  அல்லது  தோல் அல்லது சுவரில் கீறல் போன்ற அடையாளங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.பல்வேறு நிலைகளுக்கு இடையிலான  ஒப்பீட்டு வேறுபாட்டைப் புரிந்துகொள்வதற்காக, இந்தநிலையில் உணரும் திறன் 1 அலகு எனக் கருத்தில் கொள்வோம். புகைப்படத்தில் எடுக்கப்பட்ட பேய்களின் பல்வேறு வகையான படங்கள் நிலை 1 மற்றும் 2 க்கு இடையில்வரும்.
 • நிலை 2 : இந்தநிலையில் ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீயசக்திகள் போன்றவற்றின்) சூட்சும வடிவத்தின் மேலோட்டமான அல்லது ஸ்தூல விவரங்களை நம்மால் உணரமுடிகிறது. உதாரணமாக, பேய் (ஆவி) எப்படி இருக்கும் என்பதை நுணுக்கமாக பார்க்கலாம். நிலை 1 உடன் ஒப்பிடும்போது, இதை உணரும் ஆறாவது அறிவுதிறன் 1000 அலகுகளுக்கு சமமாக இருக்கும்.
 • நிலை 3 : இங்கு நாம் ஒரு ஆவியின் (பேய், பிசாசு, தீயசக்திகள் போன்றவற்றின்)மனதின் நிலையைப் பற்றி உணரமுடியும். அதாவது அவற்றின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைஉணரமுடியும்.உதாரணமாக, பாதிக்கப்பட்ட நபரை ஆவி கோபமாகப் பார்ப்பதை நாம் உணரலாம். இதை உணரக் கூடுதல் ஆறாவது அறிவுத் திறன் வேண்டும். நிலை ஒன்றுடன் ஒப்பிடும்போது 100,000 அலகுகளுக்குசமமாகஇருக்கும்.
 • நிலை 4 : இன்னும் உயர்ந்தநிலையில், ஆவிகளின்(பேய், பிசாசு, தீயசக்திகள், முதலியனவற்றின்) அறிவுத்திறன் பற்றிய விவரங்களை நாம் உணரமுடியும். உதாரணமாக, ஆவி குறிப்பிட்ட சூட்சும ஆயுதத்தால் ஒருநபரைத் தாக்குகிறது. நமது மனநலத்திறன்களின் மூலம் இதைப் புரிந்துகொள்வது,நிலை ஒன்றோடு ஒப்பிடும்போது 10 மில்லியன் யூனிட்டுகளுக்குச் சமமாக இருக்கும்.
 • நிலை 5 : பேயின் குறிப்பிட்ட செயலுக்கான காரணத்தைப் புரிந்துகொள்வது. இந்ததிறன் 1 பில்லியன் யூனிட்டுகளுக்கு சமமாக இருக்கும்.
 • நிலை 6 : பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கும்படி கீழ்நிலை ஆவிக்கு கட்டளையிட்ட மேல்நிலை ஆவி அல்லது மாந்த்ரீகனை உணர்ந்து கொள்ளமுடியும். மேல்நிலை மாந்த்ரீகன் மேல்நிலை ஆவிக்கு கட்டளையிடுவதுடன் கஷ்டங்களை தருவதற்குத் தேவையான கருப்புச் சக்தியை வழங்குகிறது. இதன் திறன் முடிவற்றது அதாவது எல்லையற்ற  நிலை கொண்டிருக்கும் கடவுள் அல்லது ஆன்மீகத்தில் உயரிய நிலையில் உள்ளவர்களால் மட்டுமே இவற்றை அறிய முடியும்.

கீழே உள்ளவரைபடம், ஒருவருடைய உணரும் ஆற்றலின் பல்வேறு நிலைகளையும், அதை உணருவதற்கு தேவையான ஆறாவது அறிவுத்திறனையும் காட்டுகிறது

மேலே உள்ள வரைபடத்திலிருந்து, பேய்களின் தாக்குதலைப் பற்றி உணர பலநிலைகள் இருப்பதை நாம் புரிந்துகொள்வோம். இதுபோன்ற பல்வேறு வகையான காரணகாரணிகளை பற்றி உணர, நமக்கு அதிவேகமான ஆறாவதுஅறிவு அல்லது மனநலத்திறன்கள் தேவை.

ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) வழிகாட்டுதலின் கீழ் ஆன்மீகப்பயிற்சியை மேற்கொள்ளும் ஸாதகர்கள், தங்களின் மேம்பட்ட    ஆறாவது அறிவு திறன் கொண்டு பேய்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி உணர்ந்து தாக்கல் செய்த அறிக்கை பின்வருமாறு :

 1. ஆவியின்வகை(பேய், பிசாசுகள், தீயசக்திகள்போன்றவை) அதாவது சாதாரண ஆவியாகிய இயந்திர மனிதன்/பொம்மை ஆகிய இரண்டில் எதுவாயினும், அவற்றின் எண்ணிக்கை (குறிப்பிட்ட தாக்குதலில் எத்தனை பேய்கள் ஈடுபட்டுள்ளன)
 2. தாக்கும் ஆவிகள் எந்த சூட்சும பகுதியை சேர்ந்தவை .
 3. ஆவி (பேய், பிசாசுகள், தீய சக்தி போன்றவை) பயன்படுத்திய கருப்பு சக்தியின் அளவு (சதவீதம்)
 4. குறிப்பிட்ட உண்மையான தாக்குதல்/பாதிப்பு..
 5. தாக்குதலின்நோக்கம்.
 6. தாக்குதலின்செயல்முறை:
  1. ஐந்து பரிபூரண பஞ்சத்துவதத்துவங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் விகிதம்
  2. சூட்சும அமானுஷ்ய அறிவியல், மந்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துதல்
  3. கருப்பு சக்திகளின் பல்வேறு கூறுகளான சூட்சுமமண்டை ஓடுகள், முதுகெலும்புகள் போன்றவற்றின் பயன்பாடு.
  4. உண்மையான தாக்குதலும் ,அதன் முக்கிய அம்சங்களும்.
 7. பாதிக்கப்பட்ட நபரைத் தாக்குவதற்கு மற்ற ஆவிகள் அவர்களுக்கு  உதவுகின்றனவா.
 8. சூட்சும தாக்குதலின் ஸ்தூல மற்றும் சூட்சும விளைவுகள்
 9. ஆவிகளின் கருப்புசக்தி குறைதல்.

ஒருவரையொருவர் அறியாத பல ஸாதகர்களிடம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் சூட்சும விபரங்களை கேட்கும் போது, அவர்கள் கூறிய அளவீடுகள் எல்லாம் மேலே விவாதிக்கப்பட்ட பல்வேறு மாறிகள் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது.

நம்மீது தொடுக்கப்படும் தாக்குதல் அல்லது நம்மை தாக்கும் ஆவிகள் பற்றிய விபரங்கள் தெரிந்தால் மட்டுமே, அவைகளை எதிர்த்து நிற்பது அல்லது விலகிச் செல்வது போன்ற தகுந்த முடிவுகளை எடுக்கமுடியும்.