மெழுகு மற்றும் எண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்துவது பற்றிய ஒரு ஆன்மீகக் கண்ணோட்டம்

1. எண்ணெய் விளக்கா அல்லது மெழுகுவர்த்தியா – எது சிறந்தது?

ஒருச்சுடரை ஏற்றுவதற்கு உபயோகிக்கப்படும் எரிபொருளைப் பொறுத்து அச்சுடரிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உமிழப்படும் அதிர்வுகள் வேறுபடுகின்றன மற்றும் சுற்றுச்சூழலின் ஆன்மீகத் தூய்மையையும் பாதிக்கின்றன. சுடரிலிருந்து எழும் அதிர்வுகள் அதைத் தக்கவைக்கும் எரிபொருளின் ஆன்மீக சூட்சும அடிப்படை குணங்களுடன் தொடர்புடையவையாக இருக்கும். சத்வ, ரஜ மற்றும் தம படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள் என்ற கட்டுரையை மேலும் விவரங்களுக்கு பார்வையிடவும்.

கீழேயுள்ள அட்டவணையில் நமது வீட்டையும் சுற்றுச்சூழலையும் ஒளிமயமாக்க உதவும் சில பிரபலமான எண்ணெய்கள் மற்றும் மெழுகு வகைகளை கொடுத்துள்ளோம்.

எரிபொருள்

சுற்றுச்சூழலில் உமிழப்படும் பிரதான சூட்சும அதிர்வுகள்

நெய் விளக்கு (நாட்டு பசுமாட்டின் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட நெய்) ஸத்வ
நல்(எள்) எண்ணெய் விளக்கு ஸத்வ-ரஜ
தேங்காய் எண்ணெய் விளக்கு ரஜ-ஸத்வ
சூரியகாந்தி எண்ணெய் விளக்கு ரஜ-ஸத்வ
கடலையெண்ணை விளக்கு ரஜ-தம
ஆளிவிதை எண்ணெய் விளக்கு ரஜ-தம
ஆலிவ் எண்ணெய் விளக்கு ரஜ-தம
கடுகு எண்ணெய் விளக்கு தம-ரஜ
தேன்மெழுகிலான மெழுகுவர்த்தி தம
பாராஃபின் மெழுகுவர்த்தி தம 
மண்ணெண்ணெய் தம 

வெவ்வேறு எண்ணெய்களை நாங்கள் ரஜ-தம, ஸத்வ-ரஜ என வகைப்படுத்தி இருந்தாலும் ஒவ்வொன்றிலும் உள்ள ஸத்வ, ரஜ மற்றும் தம குணங்களின் விகிதம் மாறுபட்டதாகும் என நீங்கள் கவனிக்க வேண்டும். எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு சுடரிலிருந்து எழும் ஆன்மீக அதிர்வுகளை புரிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை ஒரு பொதுவான வழிகாட்டியாகும்.

2. தேன்மெழுகு மட்டும் தாமஸீகமானது, ஆனால் அதே தேனியிலிருந்து வரும் தேன் மட்டும் ஸாத்வீகமானது எப்படி?

தேனீக்கள் பொதுவாக தம குணம் படைத்தவை. பணிபுரியும் தேனீக்கள் தனது வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ள சுரப்பியின் மூலம் தேன்மெழுகைச் சுரக்கின்றன. தேனீக்களிடமிருந்து தேன்மெழுகு வருவதால் அதுவும் தாமஸீகமானது ஆகும்.

இதற்கு மாறாக பூக்களின் மதுரசத்திலிருந்து தேன் உருவாவதால் அது ஸாத்வீகமானது. தனது நீண்ட உறிஞ்சிகுழாய் போல உள்ள நாக்கைப் பயன்படுத்தி மலர்களில் உள்ள மதுரசத்தை தேனீக்கள் உறிஞ்சியெடுத்து அதன் “தேன் வயிற்றில்” சேர்த்து வைக்கும். உண்மையில் தேனீக்களுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன, ஒன்று அதன் வழக்கமான வயிறு, மற்றொன்று மதுரசத்தை சேகரிப்பதற்கான ஒரு வயிறு. தேன்கூட்டிற்கு திரும்பும் தேனீ ஏப்பமிட்டு அதன் வாய்வழியாக அந்த மதுரசத்தை மற்றொரு தேனீக்கு கொடுக்கும். பகுதியளவு செரிக்கப்பட்ட இந்த மதுரசத்தை இறுதியாக தேன்கூட்டில் இருப்பு(டெபாசிட்) வைத்து மேலும் ஆவியாகி நமக்கு கிட்டும் தேனாக தயாராகும் வரை இந்த மீளுருவாக்க (ஏப்பமிட்டு வாய்க்கு கொண்டு வரும்) முறையை தேனீக்கள் மீண்டும் மீண்டும் செய்கிறது. தேனுக்குள் இனிப்பான பண்டத்தை அமைக்கும் தேனீயின் அந்த ஜீரண நொதிகள் சக்கரை கலவையைத் தேனாக மாற்றி இறுதியாக ஸாத்வீகத்தின் தாக்கத்தை தேனில் அதிகரிக்கிறது.

இவ்வனைத்திலிருந்தும் நமக்கு புரிவது என்னவென்றால் நாட்டு பசுமாட்டின் ஸாத்வீகத்தன்மையின் காரணமாக அதன் பாலில் இருந்து செய்யப்பட நெய்யும் ஸாத்வீகமாகின்றது. ஆனால் தேன் மெழுகு தாமஸீகமானது, ஏனென்றால் அதை தயாரிப்பதற்கு உதவும் மூலப்பொருளான தேனீ ஒரு தம குணம் படைத்த பூச்சி ஆகும்.