
இந்த படம், பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்(பிராண சக்தி நிவாரணமுறையை உருவாக்கியவர்),ஒரு ஸாதகருடன் தொலைபேசி மூலமாக, நோய் நிலையை கண்டறிவதை காட்டுகிறது. பிராண சக்தியில் உள்ள தடைகள் கண்டறியப்பட்ட பிறகு, அந்த ஸாதகருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தக் கட்டுரையில், பிராண சக்தியில் உள்ள ஆற்றல் தடைகளை(அடைப்பை) எவ்வாறு கண்டறியலாம் என்பதை நாங்கள் பகிர்ந்துள்ளோம்.
அட்டவணை
- 1. பிராண சக்தி நிவாரணமுறை பற்றிய அறிமுகம்
- 2. பிராணசக்தி நிவாரணம் – செயல்படும் முறை
- 3. இந்த சுய நிவாரணமுறையின் பயன்கள்
- 4. பிராண சக்தி நிவாரணத்தின் சுருக்கமான முன்னோட்டம்
- 5. படி 1 – பிராண சக்தி நிவாரணமுறை – கருப்புசக்தி படலத்தை அகற்றுதல்
- 6. படி 2 – பிராணசக்தி நிவாரணமுறை – பாதிக்கப்பட்ட பகுதி அல்லது சக்கரத்தை கண்டறிவது
- 7. சுருக்கம்
1. பிராண சக்தி நிவாரணமுறை பற்றிய அறிமுகம்
எங்களது, ‘குண்டலினி என்றால் என்ன, மற்றும் குண்டலினி விழிப்புணர்வு எவ்வாறு நிகழ்கிறது?’ என்ற கட்டுரையில், நாங்கள் மனித உடலில் உள்ள சூட்சுமசக்தி அமைப்புகளை பற்றி விளக்கியுள்ளோம் குறிப்பாக உடல், மனம், புத்தி மற்றும் சூட்சும அகம்பாவம்,ஆகியவற்றுக்கு உயிர் சக்தி கொடுக்கும் பிராண சக்தி பற்றி விவாதித்து இருக்கின்றோம்.இந்த பிராண சக்தி, உண்மையில் கடவுளின் சக்தியே. இது வழக்கமாக நம் உடலின் இருப்பை தக்கவைத்து கொள்ளவும், அதை இயக்கவும் மற்றும் நிவாரணசக்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆன்மீக அறிவியலின் படி, உடல், மனம் மற்றும் புத்தியுடன் தொடர்புடைய எந்தவொரு நோயும் அல்லது பிரச்சனையும் முதலில் சூட்சும நிலையில் தொடங்கி, பின்னர் நமது உடல் மட்டத்தில் வெளிப்படுகின்றன.
அதே ஆன்மீகக் கோட்பாட்டைப் பயன்படுத்தி பார்ப்போமென்றால், உடலுக்குள் பிராண சக்தியின் ஓட்டத்தில் தடைகள் ஏற்பட்டால், அது உடல், மனம், மற்றும் ஆன்மீக மட்டங்களில் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது. இந்த தடைகளை நாம் கண்டறிந்து, சூட்சும சக்தி நிலையில் சரிசெய்ய நினைத்தால் என்னவாகும்? இது நோய்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளைத் தடுப்பதில் பெரிதும் உதவும்.
இந்தக் கட்டுரையில், நாங்கள் ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கிய ஒரு மேம்பட்ட ஆன்மீக நிவாரணமுறையை பற்றி விளக்கியுள்ளோம். இந்த முறை, உடலின் பிராண சக்தி அல்லது உயிர்சக்தியில் உள்ள தடைகளை கண்டறிந்து, நோய்கள், உளவியல் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீக சிக்கல்களை கடக்க உதவுகிறது.
2. பிராணசக்தி நிவாரணம் – செயல்படும் முறை
பிராண சக்தி நம் விரல்கள் வழியாக நாள் முழுவதும் இடையறாது வெளியேறுகிறது. இந்த சக்தியை உபயோகித்து நமது நோய்களை நிவர்த்தி செய்வதே பிராண சக்தி நிவாரணத்தின் சாராம்சமாகும். இது தொடுதல்(உடலின் எந்த பாகத்தையும் தொடாமல்) இல்லாது சுயமாகச் செய்யும் ஒரு ஆன்மீக நிவாரணம் ஆகும்.
பிரமிட் நிவாரணம், ரைக்கி நிவாரணம், பிராணிக் நிவாரணம் போன்ற பல்வேறு நிவாரணசிகிச்சை முறைகளில் பிராணசக்தி பயன்படுத்தப்பட்டாலும், இங்கு இதன் தனித்துவமானது, நாமஜபங்கள் மற்றும் முத்திரைகள்(குறிப்பிட்ட கை நிலைகள்) இரண்டும் கலந்த ஒரு ஆன்மீக நடவடிக்கைகளின் தொகுப்பாக விளங்கி,வழிப்படுத்தவும்,நிவாரணமளிக்கவும் உதவுகிறது. மேலும் நிவாரணமளிக்கும் முறையை செயலாக்க இதில் ஐந்து பரிபூரண பிரபஞ்ச தத்துவமும் அடங்கியுள்ளது.
3. இந்த சுய நிவாரணமுறையின் பயன்கள்
இந்த நிவாரணமுறை, எவ்விதத்திலும், மருத்துவ சிகிச்சைக்கு பதிலாக செயல்படுவதில்லை. இருப்பினும், இது நோயாளிக்கு ஒரு இணைவு சிகிச்சை முறையாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட உறுப்பிற்கு நேர்மறை சக்தியை செலுத்துவதன் மூலம் நோயை சமாளிக்கவும், குணமாக்கவும் உதவுகிறது. மேலும், உடனடி மருத்துவ சேவைகள் கிடைக்காத சூழ்நிலையில், ஒரு முதலுதவி உத்தியாக, பிராண சக்தி நிவாரணத்தை பயன்படுத்தி ஒருவரின் துன்பத்தை குறைக்க முடியும். பிராண சக்தி நிவாரணத்தை, எஸ்.எஸ்.ஆர்.எஃப் வலைத்தளத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிற ஆன்மீக சுய நிவாரண முறைகளுடன் (உப்புத்தண்ணீர் சிகிச்சை, வெற்றுப்பெட்டி நிவாரணம் போன்றவை) இணைத்து பயன்படுத்தலாம்.
4. பிராண சக்தி நிவாரணத்தின் சுருக்கமான முன்னோட்டம்
இது மூன்று படிநிலைகள் அடங்கிய செயல்முறையாகும்
- கருப்பு சக்தி படலத்தை நீக்குதல் : முதலில், நம் உடலில் இருக்கக்கூடிய பிராண சக்தி ஓட்டத்தில் உள்ள தடைகளை நாமே சுயமாக கண்டறிகிறோம். துல்லியமான கண்டறிதலைப் பெற, முதலில் நம்மைச் சுற்றி தடையாக இருக்கக்கூடிய கருப்பு சக்தி படலத்தை நீக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட சக்கரம் அல்லது பகுதியைக் கண்டறிதல் : பின்னர், உடலைத் தொடாமல், நம் விரல்களின் உதவியுடன் ஒரு எளிய 2–3 நிமிட சூட்சும சோதனையை நடத்திப் பார்த்து, எந்த சக்கரம் அல்லது உடல் பகுதியில் தடை ஏற்பட்டு இருக்கிறது என்பதை கண்டறிகிறோம். மேலும் அறிய சக்கரங்கள் என்றால் என்ன என்ற கட்டுரையைப் படிக்கவும்.
- தடையை நீக்க நிவாரணத்தை பயன்படுத்துதல் : தடை ஏற்பட்டுள்ள இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்தப் பகுதியில் பிராண சக்தி ஓட்டத்தைச் செலுத்தும் ஒரு குறிப்பிட்ட நிவாரணம் அளிக்கக்கூடிய நாமஜபம் மற்றும் முத்திரையை (குறிப்பிட்ட கை அமைப்பை) பயன்படுத்தி, அந்த தடையை நீக்குகிறோம்.
5. படி 1 – பிராண சக்தி நிவாரணமுறை – கருப்புசக்தி படலத்தை அகற்றுதல்
கருப்பு சக்தி படலம் என்பது, தீயசக்திகளால் உருவாக்கப்பட்டு, நம்முடைய உடலையும், குண்டலினி சக்கரங்களைச் சுற்றியும் இருக்கக்கூடிய ஒரு சூட்சுமமான படலமாகும்.இத்தகைய படலத்தை உருவாக்கும் முதன்மை நோக்கம், கஷ்டம் தரும் அதிர்வலைகளால் ஒருவரை மோசமாகப் பாதிப்பதற்கு தான்.பிராண சக்தி நிவாரணமுறைப்படி, இத்தகைய சூட்சுமமான கஷ்டம் தரும் ஆவரணம், நிவாரணம் செய்யவேண்டிய பகுதியை அடையவும், அல்லது அதை சரியாகக் கண்டறியவும் நமக்கு இடையூறாகச் செயல்படுகிறது மேலும்இது, நிவாரணத்தின் விளைவையும் குறைக்கின்றது.

இந்த கருப்பு படலத்தை அகற்ற, முதலில் தலை முதல் கழுத்து வரை உள்ள பகுதியில் நிவாரணமுறையை தொடங்குங்கள். அதன் பிறகு, கழுத்து முதல் இடுப்புவரை, பின்னர் இடுப்பு முதல் கால்கள் வரை செல்லுங்கள்.
இது பல்வேறு முறைகளில் செய்யக்கூடிய ஒரு எளிய நிவாரணமுறையாகும்.
கருப்பு சக்தி படலத்தை எவ்வாறு முழுமையாக அகற்றுவது என்பதற்கான விரிவான தகவல்களுக்கு, ஒருவரைச் சுற்றி தீயசக்திகளால் உருவாக்கப்பட்ட கருப்பு படலத்தை ஆன்மீக ரீதியில் அகற்றுவது என்ற கட்டுரையைப் படிக்கவும்.
6. படி 2 – பிராணசக்தி நிவாரணமுறை – பாதிக்கப்பட்ட பகுதி அல்லது சக்கரத்தை கண்டறிவது
கருப்புப் படலத்தை நாம் அகற்றிய பின்பு ஒரு சூட்சும பரிசோதனை மூலமாக நமது உடலிலுள்ள பிராணசக்தி அடைப்பை கண்டறிய தயாராக உள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதி அல்லது சக்கரத்தை கண்டுபிடிக்க இது உதவும்.
6.1 குண்டலினி சக்கரங்களைப் பற்றிய ஒரு கோட்பாடு
இதன் நடைமுறையான பகுதிக்குச் செல்வதற்குமுன் குண்டலினி சக்கரங்களின் செயல்பாடுகளை பற்றி எடுத்துரைக்கிறோம்.
பிராணசக்தியின் கிடங்காக குண்டலினி சக்கரங்கள் திகழ்வதோடு, உடலுறுப்புகள், மனம், புத்தியின் செயல்பாடுகளுக்கு சூட்சும ஆற்றலையும் அளிக்கிறது. ஒவ்வொரு உறுப்புடனும் தொடர்புடைய ஒரு குண்டலினி சக்கரம் உள்ளது. ஒருவரின் குண்டலினி சக்கரம் பிராணசக்தியை உள்வாங்கி விநியோகித்து அந்தந்த உறுப்புகளுக்கு அனுப்புகிறது. பல்வேறு சக்கரங்களுடன் தொடர்புடைய உடலுறுப்புகளை பற்றி கீழ்வரும் அட்டவணை கொடுக்கிறது:
| நோய் | தொடர்புடைய குண்டலினி சக்கரம் (ஆன்மீக ஆற்றல் மையம்) |
|---|---|
| 1. உடல்சார்ந்த நோய்கள் | |
| அ. தலை மற்றும் கண்களின் நோய் | ஆக்ஞா சக்கரம் (புருவ மைய சக்கரம்) |
| ஆ. வாய், செவி, மூக்கு மற்றும் தொண்டை தொடர்புடைய நோய்கள் | விஷுத்தி சக்கரம் (தொண்டை சக்கரம்) |
| இ. நெஞ்சுடன் தொடர்பான நோய்கள் | அநாஹத சக்கரம் (இதய சக்கரம்) |
| ஈ. வயிறு தொடர்பான நோய்கள் | மணிபூரக சக்கரம் (நாபி சக்கரம்) |
| உ. அடிவயிறு தொடர்பான நோய்கள் | ஸ்வாதிஷ்டான் சக்கரம் (திருவெலும்பு சக்கரம்) |
| ஊ. மலவாய் தொடர்புடைய நோய்கள் | மூலாதார சக்கரம் (மூல சக்கரம்) |
| எ. கைகள் மற்றும் தலையிலிருந்து நெஞ்சு வரையான பகுதியின் நோய்கள் (அ மற்றும் இ புள்ளிகளில் குறிப்பிடாதவை) | அநாஹத சக்கரம் (இதய சக்கரம்) |
| ஏ. கால்கள் மற்றும் நெஞ்சுக்கு கீழுள்ள பகுதிகளின் நோய்கள் (ஈ மற்றும் உ புள்ளிகளில் குறிப்பிடாதவை) | மணிபூரக சக்கரம் (நாபி சக்கரம்) |
| ஐ. முழு உடல் தொடர்பான நோய்கள் (உதாரணத்திற்கு, சோர்வு, காய்ச்சல், பருமன், உடல் முழுவதும் பரவிய சரும நோய்) | 1. ஸஹஸ்ரார சக்கரம் (கிரீட சக்கரம்) 2. அநாஹத சக்கரம் (இதய சக்கரம்) மற்றும் மணிபூரக சக்கரம் (நாபி சக்கரம்) |
| ஒ. சோர்வு | மூலாதார சக்கரம் (மூல சக்கரம்) |
| 2. உளவியல் நோய்கள் | 1. ஸஹஸ்ரார சக்கரம் (கிரீட சக்கரம்) 2. அநாஹத சக்கரம் (இதய சக்கரம்) |
எந்தவொரு குண்டலினி சக்கரத்திலும் பிராணசக்தி ஓட்டத்தின் தடை இருந்தால் அந்த சக்கரத்துடன் தொடர்புடைய உறுப்புகள் பிராணசக்தி இன்றி இருக்கும். தீயசக்திகள் முக்கியமாக குண்டலினி சக்கரங்களை தாக்கி கஷ்ட சக்திகளை அங்கு சேமிக்கும். ஆகையால் குண்டலினி சக்கரங்களில் அத்தகைய அடைப்புகளை கண்டறிவது அவசியமாகும்.
6.2 குண்டலினி சக்கரங்கள் மூலமாக பிராணசக்தி ஓட்டத்தின் அடைப்புகளை கண்டறியும் முறை
1. அமரும் இடம்: இப்பயிற்சிக்கு நாம் வடக்கு நோக்கி அமரவேண்டும். இறைவனின் அழிக்கும் சக்தியை வட திசை ஈர்ப்பதால் நிவாரணத்திற்கு உகுந்தது. தென் திசை நோக்கி அமரக்கூடாது, அது அபசகுனமாகும். இறைவனின் காக்கும் சக்தி தேவை என்றபோது கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவேண்டும். கைகளுக்கு அசௌகரியம் இல்லாது வசதியாக அமரவேண்டும். பிறகு கண்களை மூடியவாறு மூச்சில் கவனம் கொள்க.
2.பிரார்த்தனை: அடைக்கப்பட்ட சக்கரத்தை கண்டறிய திறமையும் சரியான நிவாரணத்தையும் வேண்டி கடவுளிடம் ஆழமாகப் பிரார்த்திக்கவும்.
3. சக்கரங்களை ஆராய்வது:
அ. செயல்பாடு : உங்கள் கட்டை விரலைத் தவிர்த்து மற்ற நான்கு விரல்களையும் உங்கள் உடலிலிருந்து ஓரிரு சென்டிமீட்டர் தொலைவில் ஒரு நேர்க்கோட்டில் தளர்வாகப் பிடித்து மூச்சில் கவனம் செலுத்தியபடி ஸ்வாதிஷ்டான சக்கரம் (திருவெலும்பு சக்கரம்) முதல் ஸஹஸ்ரார சக்கரம் (கிரீட சக்கரம்) வரை விரல்களை மேலும் கீழுமாக நகர்த்தவும்.
ஆ. எதைக் கண்டுபிடிக்க வேண்டும் : எந்த சக்கரத்தில் விரல்களை கொண்டுவரும்போது மூச்செடுப்பது கடினமாகிறதோ அங்குதான் நிவாரணம் செய்யவேண்டும். சில அசௌகரிய அறிகுறிகள்: இதயத்துடிப்பு அதிகரித்தல், அவ்விடத்தில் வலி, மூச்செடுப்பது கடினம், சோர்வு போன்றவை இருக்கலாம். அதிகமான அசௌகரியம் ஏற்படும் சக்கரத்தை குறிவைக்கலாம். சில நேரங்களில் இரண்டு சக்கரங்களில் அசௌகரியத்தை அனுபவிக்கலாம். இரண்டு சக்கரங்களுக்கு மேல் அசெளகரியம் ஏற்பட்டால், நாம் இடத்தை சரியாக கண்டறிவில்லை எனப் புரிந்துகொண்டு செயல்முறையை மீண்டும் செய்யவேண்டும்.
இ. சரியான இடத்தை கண்டறிவது : இந்த இடத்தில் நிறுத்தி உங்கள் விரல்களை அசெளகரியப்பட்ட இடத்திலிருந்து 2-3 சென்டிமீட்டர் மேலும்-கீழுமாக நகர்த்தி அடைப்பு ஏற்பட்ட சரியான இடத்தைக் கண்டறியவும். அடைப்பிருக்கும் இடத்தை தேடும்போதே ஆன்மீக நிவாரணம் ஏற்படுவதால் கொட்டாவி விடுதல், ஏப்பம், சருமத்தில் எரிச்சல் போன்ற கஷ்டசக்தி வெளிப்பாடை காணலாம். ஆகையால் நியாஸ் செய்ய அவ்விடம் உத்தமமானது என்று கருதலாம்..
4. மற்ற உடற்பகுதிகளை ஆராய்தல்: குண்டலினி சக்கரங்களில் அடைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பல்வேறு நாடிகளில் அடைப்பு இருக்கலாம், இதனால் அதன் தொடர்புடைய உடலுறுப்புகள் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற கஷ்டத்தை உணரலாம்.
அத்தகைய நேரங்களில் நாடிகளிலுள்ள அடைப்புகளை கண்டறிய விரல்களை தலை, கழுத்து, நெஞ்சு, வயிறு, கைகள் மற்றும் பாதம் போன்ற அனைத்து உடலுறுப்புகள் மீது நகர்த்தவும்.
5. இடத்தை என்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்ன செய்ய? குண்டலினி சக்கரம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் பிராணசக்தி ஓட்டத்தின் அடைப்புகளை உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஒரு கையின் பின்புறத்தை மற்றொரு கையின் உள்ளங்கைக்குள் வைத்து இரு கைகளின் விரல்களால் அடைப்புள்ள இடத்தை கண்டறிய முயற்சிக்கவும் (படத்தை காணவும்).
இரு கைகளின் விரல்களையும் இணைத்து உடலில் மேலும்-கீழுமாக நகர்த்தி
இடத்தை கண்டுபிடிக்கும் முறை
7. சுருக்கம்
இக்கட்டுரை குறிப்பாக குண்டலினி அமைப்பின்,சக்கரங்கள் மற்றும் நாடிகள் தொடர்பாக பிராணசக்தி ஓட்டத்தின் அடைப்பை கண்டறிய நமது வாசகர்களுக்கு உதவுகிறது. இத்தகைய அடைப்புகளை அகற்றுவதால் நோயாளிக்கு நிவாரணம் ஏற்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி உலகளாவிய கொள்கைகளுக்கு ஏற்ப, தொடர் ஆன்மீக பயிற்சி மேற்கொள்வது பிராணசக்தி அடைப்புகளை கண்டறியும் ஒருவரின் திறனை அதிகரிக்கிறது. அடைப்புள்ள இடத்தை கண்டறிந்தவுடன் மூன்றாம் படி, அதாவது நிவாரண முறையை செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு விரைவில் வெளிவர இருக்கும் பிராணசக்தி நிவாரண முறையால் ஆன்மீக நிவாரணம் என்ற கட்டுரையைப் படிக்கவும்.



