வாசகர்களுக்கான குறிப்பு : இந்த கட்டுரையை நன்கு புரிந்துகொள்ள, ஆன்மீக ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள் எவை மற்றும் ஸத்வ, ரஜ
மற்றும் தம – படைப்பின் மூன்று சூட்சும அடிப்படை கூறுகள் கட்டுரைகளைப் படிக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம்’.
1. முன்னுரை
காலையில் எழுந்தவுடன் படுக்கையிலேயே தேநீர் அல்லது காபி (பெட் டீ/ பெட் காபி) குடிப்பதை நம்மில் பலர் ஆவலாக எதிர்ப்பார்க்கின்றோம், சிலருக்கு அது இல்லாமல் முடிவதில்லை. மேலும், துணைக்கு(கணவர் (அ) மனைவி) படுக்கையிலேயே காலை உணவு பரிமாறுவது காதலின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. எனினும், நம் ஒவ்வொரு செயலும் நம் வாழ்வில் ஆன்மீக ரீதியில் நேர்மறை அல்லது எதிர்மறையை
ஈர்க்கக்கூடும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த சிறிய ஆனால் வழக்கமான பழக்கத்தைப் பற்றி நாங்கள் ஆன்மீக ஆராய்ச்சி செய்து பல அரிய தகவல்களை கண்டறிந்தோம்.
2. உறக்கத்தினால் வாயினுள்ள வெற்றிடத்தில் உண்டாகும் விளைவு
ஒருவர் உறங்கும்போது, அவரின் உடல் மந்தமான நிலையில் இருப்பதினால், அவரின் சூட்சும தாமஸீக தன்மை அதிகரிக்கின்றது. இதனுடன் உறங்கும்போது நம் ஆன்மீக பயிற்சி மிக குறைவாக உள்ளதால்,ஆன்மீக ரீதியில் அந்த நேரத்தில் நாம் மிக எளிதாக பாதிப்புக்கு உள்ளாகிறோம். மேலும், பகலின் வேறு எந்த நேரத்தையும் விட இரவில் தம பிரதான சூழல் அதிகமாக உள்ளது மற்றும் இந்த நேரத்தில் தீய சக்திகளும் மிகவும் சுறுசுறுப்பான நிலையில் உள்ளன. இதன் விளைவாக, நாம் உறங்கும்போது ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) தாக்குதல்களுக்கு எளிதில் ஆளாக நேரிடும்.
வாயினுள் உள்ள வெற்றிடம், பரிபூரண பிரபஞ்ச நீர் தத்துவத்துடன் (ஆப தத்துவம்) அதிக தொடர்புடையதாக இருப்பதால், இவ்விடம் குறிப்பாக தம அதிர்வலைகளினால் எளிதில் நிரம்புகின்றது. ஏனென்றால்,பரிபூரண பிரபஞ்ச நீர் தத்துவம் மிக அதிகமான எதிர்மறையான தம அதிர்வலைகளை தக்கவைத்துக்கொள்ளும் பண்பைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, இரவு முழுவதும் உறங்கி எழும்போது, வாயினுள் உள்ள வெற்றிடத்தில் துர்நாற்றமும் கஷ்டம் தரக்கூடிய தம அதிர்வலைகளும் அதிக அளவில் சேகரிக்கப்படுகின்றன.
3. படுக்கையில் காலை தேநீர் (பல துலக்குவதற்கு முன்) குடிப்பதால் ஆன்மீக ரீதியில் ஏற்படும் விளைவு
ஒருவர் அதிகாலையில் எழும்போது வாயினுள் உள்ள வெற்றிடத்தில் கஷ்டம் தரும் அதிர்வலைகள் பெருமளவில் இருப்பதால், அப்போது உட்கொள்ளும் பொருளும் சூட்சும தாமஸீக தன்மையை உள்வாங்குகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள, சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடத்தில், பல் துலக்காமல் ஒரு கோப்பை தேநீர் அருந்தும்போது ஏற்படும் சூட்சும எதிர்மறை அதிர்வலைகள் விளக்கப்பட்டுள்ளன. மேலும், இயற்கையாகவே தேநீர் ரஜ-தம பிரதானமாக இருப்பதால், இது கஷ்டம் தரும் அதிர்வலைகளை மேலும் அதிகரிக்கின்றது. எப்பொழுதெல்லாம் கஷ்டம் தரும் தம அதிர்வலைகள் அதிகரிக்கின்றதோ, அப்பொழுது ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) தாக்குதல்களுக்கு எளிதில் ஆளாக நேரிடுவதும் அதிகரிக்கின்றது.
சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடம், திருமதி.ப்ரியங்கா லோட்லிகரின் அதிநுட்பமான ஆறாவது அறிவு திறன் மூலம் வரையப்பட்டதாகும். இது சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதிநுட்பமான ஆறாவது அறிவைக் கொண்டு சரிபார்த்தபோது, சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடம் 80% துல்லியமாக இருப்பது கண்டறியப்பட்டது.
சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடத்தில் உள்ள பல்வேறு பரிபூரண பிரபஞ்ச தத்துவங்களைப் (பஞ்சதத்துவம்) பற்றிய விளக்கத்தை கீழ்வரும் அட்டவணையில் காணவும்.
| 1. | ரஜ-தம பிரதானமான தேநீரை நோக்கி கஷ்டம் தரும் சக்தியின் ஈர்ப்பு |
| 1 A. | கஷ்டம் தரும் சக்தியின் வளையம் உருவாக்கப்படுதல், பின்னர் அது செயல்படுத்தப்பட்ட நிலையில் சுழன்று கொண்டே இருத்தல் |
| 1 B. | சுற்றுச் சூழலில் கஷ்டம் தரும் சக்தியின் அதிர்வலைகள் பரவுதல் |
| 2. | மாயாவி சக்தியின் வளையம் உருவாக்கப்படுதல், பின்னர் அது செயல்படுத்தப்பட்ட நிலையில் சுழன்று கொண்டே இருத்தல் |
| 3. | அந்நபரை நோக்கி கஷ்டம் தரும் சக்தியின் ஈர்ப்பு |
| 3 A. | புத்தியில் கஷ்டம் தரும் சக்தியின் வளையம் உருவாக்கப்படுதல், பின்னர் அது செயல்படுத்தப்பட்ட நிலையில் சுழன்று கொண்டே இருத்தல் |
| 4. | வாயினுள் உள்ள வெற்றிடத்தில் கஷ்டம் தரும் சக்தியின் வளையம் உருவாக்கப்படுதல் |
| 4 A. | கஷ்டம் தரும் சக்தி உடலில் நுழைதல் |
| 4 B. | கஷ்டம் தரும் சக்தியின் வளையம் உருவாகுதல். அது செயல்படுத்தப்படும் நிலையில் சுழன்று உடலுக்குள் அடுக்கடுக்கான கஷ்டம் தரும் சக்தியை வெளியிடுதல். |
| 4 C. | உடலில் மற்றும் சுற்றுச் சூழலில் கஷ்டம் தரும் சக்தியின் செயல்படுத்தப்பட்ட துகள்கள் பரவுதல் |
| 4 D. | உடலில் கஷ்டம் தரும் சக்தியின் அதிர்வலைகள் பரவுதல் |
| 5. | உடலைச் சுற்றி ஒரு தடிமனான தீயசக்தியின் கோசம் உருவாக்கப்படுதல் |
இணையதளத்தைப் பொருத்தமட்டில், காலை உணவுக்கு, முன் அல்லது பின் பல் துலக்குவது சிறந்ததா என்பது குறித்து மருத்துவ மன்றங்கள் மற்றும் பல் மருத்துவ அதிகாரிகள் இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். எனினும் ஆன்மீகக்கண்ணோட்டத்தின்படி, ஒருவர் பல் துலக்குவதாலும் வாயைக் கொப்பளிப்பதாலும், இரவு முழுவதும் வாயினுள்ள வெற்றிடத்தில் உருவாகும் கஷ்டம் தரும் தம அதிர்வலைகள் குறைகின்றன. இதனாலேயே காலையில் பல் துலக்கிய பின்னரே நாம் ஏதேனும் சாப்பிடவேண்டும் அல்லது அருந்தவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகின்றது.
