நிவாரணமளிக்கும் நாமஜபங்கள்

Healing Chants

உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது.

வாசகர்கள் தங்கள் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப எந்த ஆன்மீக நிவாரணத்தையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாமஜபம் செய்யும்போது உடல் வெப்பம் அல்லது அசௌகரியத்தை யாராவது அனுபவித்தால் நாமத்தின் முன்பு உள்ள “ஓம்” -ஐ தவிர்க்கலாம். “ஓம்” என்ற பிரணவ மந்திரம் நிர்குண சக்தியை படைத்திருப்பதால் சிலருக்கு அசௌகரியம் ஏற்படலாம். யாருக்கு அசௌகரியம் உண்டாகவில்லையோ அவர்கள் “ஓம்” -உடன் நாமஜபத்தை தொடரலாம்.

நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் நோய் மற்றும் அதன் தொடர்பான அமைப்பு/ செயல்பாட்டைத் தேர்வு செய்யவும்

படி 1 - ஒரு வகை/ உடல் அமைப்பை தேர்வு செய்யவும்.

 

ஆன்மீக நிவாரண நாமஜபங்களை கண்டறிந்து அதை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்

இப்பகுதியில் பல்வேறு நோய்களை நாங்கள் வகைப்படுத்தி, குறிப்பிட்ட நோயை உண்டாக்கும் ஆன்மீக அம்சங்களை எதிர்கொள்ள ஆன்மீக நிவாரண நாமஜபங்களும் மந்திரங்களும் கொடுத்துள்ளோம். இப்பகுதியை உபயோகிக்கும் முறையைப் பற்றிய வழிமுறைகள் கீழ்வருமாறு:

  1. படி 1: எங்கு “படி 1” என்று எழுதியுள்ளதோ அதன் கீழ் இருக்கும் பட்டியலை அழுத்தவும். ஆன்மீக நிவாரணத்தை அறிய அந்த நோயின் வகை அல்லது உடலமைப்பை தேர்வு செய்க.
  2. படி 2: நீங்கள் படி 1 -இல் வகையை தேர்வு செய்த பின்பு படி 2 செயல்படும். பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட நோய் அல்லது அறிகுறிகளை நீங்கள் எதிர்பார்க்கும் தகவலுக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.
    • மருத்துவ ரீதியாக ஒரு நோய் அல்லது அறிகுறியைப் பற்றி புரிந்துகொள்ள உங்கள் மருத்துவரை அல்லது அந்த துறை சார்ந்த ஒரு நிபுணரை நீங்கள் அணுகலாம். சில இடங்களில் நோயைப் பற்றி விளக்க சில குறிப்பிகள் கொடுத்துள்ளோம்.
    • பட்டியலில் நாங்கள் நோயுடன் அதற்கான அறிகுறிகளையும் கொடுத்துள்ளோம், ஏனென்றால் சில அறிகுறிகள் ஆன்மீக காரணங்களால் ஏற்படலாம்.
    • நீங்கள் எதிர்பார்க்கும் நோய் இல்லையென்றால் படி 2 -இல் “மற்ற எல்லா…..” என்ற வகை தொடர்பான உடலமைப்பை தேர்வு செய்யலாம்.
  3. நாமஜபங்களைப் பற்றி: நமது உடலின் ஒவ்வொரு அமைப்பும் குறிப்பிட்ட தெய்வத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ஆரோக்கியத்திற்கான நாமஜபங்கள் என்ற பக்கத்தில் இதைப்பற்றி நீங்கள் மேலும் படிக்கலாம். நீங்கள் தேர்வு செய்த நோய்க்கு கீழே நாமஜபம் செய்யவேண்டிய தெய்வத்தின் பெயரும் பீஜ (விதை) மந்திரமும் காண்பிக்கப்படும். கூடுதலாகத் தற்போதைய காலகட்டத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கோட்பாடு அதிக செயலில் உள்ளது, அதனால் குறிப்பிட்ட உடலமைப்பை நிர்வகிக்கும் தெய்வத்தின் நாமத்தோடு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தையும் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும்.
  4. நாமஜபங்களை தேர்வு செய்தல்: தெய்வத்தின் பெயர் அல்லது பீஜ மந்திரம் இரண்டில் எதை உச்சரிப்பது என்று நீங்கள் தேர்வு செய்யலாம். உங்களது மருத்துவ பிரச்சனைக்கு ஏற்ப ஒரு தெய்வத்தின் நாமத்தை நீங்கள் தேர்வு செய்து இருந்தாலும், நாளொன்றில் நாமஜபத்திற்காக ஒதுக்கப்பட்ட பாதி நேரம் அந்த நாமத்தையோ அல்லது பீஜ மந்திரத்தையோ உச்சரிக்கலாம். அடுத்த பாதியில் நீங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய || என்ற நாமத்தை உச்சரிக்கலாம்.
    • பீஜ மந்திரத்தை துல்லியமாக உச்சரித்தால் மட்டுமே பலன் கிட்டும் என்பதை நினைவில் கொள்ளவும். சரியான உச்சரிப்பை கேட்க பீஜ மந்திரம் என்பதன் அருகிலுள்ள ஸ்பீக்கர் சின்னத்தை அழுத்தவும், ஏனென்றால் ஒரு மந்திரத்தை ஜபிக்க இது மிகவும் முக்கியமாகும். ஒரே ஒரு எழுத்து என்பதால் பீஜ மந்திரத்தை உச்சரிப்பது மிக சுலபம் என்று தோன்றலாம் ஆனால் ஒலியைக் கேட்டு சரியான உச்சரிப்பை தெரிந்துகொள்ள நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாமஜப நிபுணர்கள் கூட பீஜ மந்திரத்தை சரியாக உச்சரிக்க திணறுவார்கள்.
    • இதே கண்ணோட்டத்தில் பார்த்தால் பல சொற்கள் இருந்தும் தெய்வத்தின் நாமத்தை உச்சரிப்பது எளிதாகும். இங்கு உச்சரிப்பு சரியாக இல்லாவிட்டாலும் அந்த தெய்வத்தின் பெயரை நாமஜபம் செய்வதால் நன்மை கிட்டும். தெய்வத்திற்கு உருவம் இருப்பதாலும் பக்தியை வளர்த்து நாமஜபத்தின் திறனை மேம்படுத்த ஒருவருக்கு சுலபமாகும்.
    • சில இடங்களில் குறிப்பிட நோய்க்கு 2 அல்லது அதற்கு மேலான தெய்வத்தின் மற்றும் பீஜ மந்திர நாமஜபம் இருந்தால் உங்களுக்கு உச்சரிக்க எளிதாக உள்ள நாமஜபம் அல்லது பீஜ மந்திரத்தையே தேர்வு செய்யலாம்.
  5. செயல்திறன்: தெய்வத்தின் நாமத்தைவிட பீஜ மந்திரம் தான் செயல்திறனை பொறுத்த வரை பல மடங்கு பலனளிக்கக் கூடியதாக இருக்கும். கடவுளின் வெளிப்படாத (நிர்குண) ரூபத்தோடு பீஜ மந்திரம் இணைந்துள்ளது, ஆனால் தெய்வத்தின் நாமம் என்பது கடவுளின் வெளிப்பட்ட (ஸகுண-நிர்குண) ரூபத்தை குறிக்கிறது. எந்தவொரு நாமத்தை ஜபிக்க நினைத்தாலும் நாமஜபம் செய்யும்போது ஆன்மீக உணர்வை தூண்டுவதற்கு அடிக்கடி முயற்சி செய்தால் அதுவே நாமத்தின் உண்மையான திறனை வெளிப்படுத்தி அதை செயல்படுத்த உதவுகிறது.
  6. எவ்வளவு நேரம் நாமஜபம் செய்வது?: தெய்வத்தின் நாமம் அல்லது பீஜ மந்திரத்தையும், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தையும் நாள் முழுவதுமாக இயன்றவரை ஜபிக்கவும். நாளொன்றில் நாமஜபத்திற்கு நீங்கள் ஒதுக்கிய நேரத்தில் பாதி நேரம் நீங்கள் தெய்வத்தின் அல்லது பீஜ மந்திர நாமஜபத்திற்கு செலவிடலாம், மறு பாதி பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய || என்ற நாமஜபத்திற்கு செலவிடலாம். நாமஜபத்தை சத்தமாகவோ அல்லது மனதளவிலோ ஜபிக்கலாம். மனதளவில் செய்தால் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும். ஸ்தூலத்தில் (உருவத்தில்) இருந்து சூட்சுமத்திற்கு (அருவம்) முன்னேறுதல் என்ற எங்கள் கட்டுரையைப் படிக்கவும்.
  7. எப்போது நாமஜபம் செய்வது?: நாளொன்றில் எப்போது வேண்டுமானாலும் நாமஜபம் செய்யலாம் என்றாலும் காலையில் நாமஜபம் செய்ய பரிந்துரைக்கிறோம், ஏனென்றால் அப்போது தடைகள் குறைந்தளவாக இருக்கும். தீய சக்திகள் அல்லது மூதாதையர்கள் பிரச்சனையால் போன்ற ஆன்மீக காரணிகளால் ஒருவர் நோய்வாய்ப்பட்டு உள்ளார் என்றபோது காலையில் நாமஜபம் செய்வது பலனளிக்கும். சூரியன் அஸ்தமித்த பிறகு தீய சக்திகளின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உங்கள் நாமஜபத்தின் அனைத்து முயற்சிகளையும் அவை முறியடித்து விடலாம்.
  8. தெய்வத்தின் படங்கள்: நாமஜபத்தோடு தெய்வத்தின் படம் கொடுக்கப்பட்ட இடங்களெல்லாம், அந்தப்படத்தை பார்த்துக்கொண்டே நாமஜபம் செய்வது பயனுள்ளதாக இருக்கும், அதன்மூலம் அந்த தெய்வத்தின் அல்லது மந்திரத்தின் மீது ஆன்மீக உணர்வை விழிப்பித்து வளர்க்க உதவியாய் இருக்கும்.

 

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உலகியல் காரணிகளை காட்டிலும் ஆன்மீக ரீதியில் எனது நோய்க்கு காரணிகள் உண்டு என்பதை நான் எவ்வாறு அறிவது?

பதில்: நாங்கள் நடத்திய ஆன்மீக ஆராய்ச்சியில் கிட்டத்தட்ட எல்லா சூழல்களிலும் நாம் அனுபவிக்கும் நோய்க்கு ஆன்மீக அம்சம் உள்ளது என கண்டறிந்தோம். ஆகையால் வழக்கமான மருந்துகளோடு ஆன்மீக நிவாரண முறைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது. எனக்கு ஏற்பட்டிருக்கும் நோய்க்கு, பேய்கள் அல்லது மூதாதையர்களின் தாக்கம்தான் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன? என்ற கட்டுரையைப் படிக்கவும்.

 

 

 

நவீன அறிவியல் அடிப்படையில் (அலோபதி) எனது சிகிச்சையைத் தொடர வேண்டுமா?

பதில்: ஆம், உடல் மற்றும் உளவியல் ரீதியான நோய்களின் சிகிச்சைக்காக ஆன்மீக நிவாரண முறைகளோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் மேற்கொள்ள எஸ்.எஸ்.ஆர்.எஃப் பரிந்துரைக்கிறது. உங்களது மருத்துவ சிகிச்சையை அதிக திறனாக்க இந்த நாமஜபங்களை துணைக்கொள்ளவும்.

 

 

 

ஆன்மீக நிவாரண நாமஜபங்களை எவ்வளவு காலம் வரை நான் செய்ய வேண்டும்?

பதில்: பிரச்சனை தீரும் வரை நாமஜபம் செய்யவேண்டும். அறிகுறிகளின் தீவிரத்திற்கு ஏற்றவாறு ஆன்மீக நிவாரண முறைகளை தினசரி வெவ்வேறு கால இடைவெளிகளில் செய்வது நல்லது.

  • இலேசான நோய் என்றால், நாளொன்றில் ஒரு அமர்விலோ அல்லது பல அமர்வுகளிலோ 1-2 மணி நேரம் ஆன்மீக நிவாரண நாமஜபம் செய்யலாம்.
  • மிதமான அறிகுறிகளுக்கு ஒருவர் நாளொன்றில் 3-4 மணி நேரம் செய்ய வேண்டியிருக்கும்.
  • தீவிரத்தன்மை அதிகமாக இருந்தால் தினமும் இயன்றவரை அதிகம் நாமஜபம் செய்யவும் (ஒரு நாளில் குறைந்தளவு 8-10 மணி நேரம்).

மேலே உள்ள கடைசி குறிப்பிற்கு கீழ்வருமாறு நாமஜபம் செய்யலாம்:

  • ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாதி நேரம் நோய்க்கான குறிப்பிட்ட தெய்வத்தின் நாமஜபம் செய்யவேண்டும்.
  • மீதி நேரத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய || என்ற நாமத்தை ஜபிக்க வேண்டும்.

 

 

நான் பிறந்த மதத்திற்கு தகுந்த நாமத்தை உச்சரிப்பதா அல்லது இக்கட்டுரையில் கொடுத்தபடி செய்வதா?

பதில்: ஆன்மீக நிவாரண நாமஜபங்களை செய்து முடிக்க ஒருவர் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலே கொடுத்துள்ளபடி தேவையான அளவுக்கு நாமஜபம் செய்த பின்பு உங்கள் மதத்தின்படி நாமஜபம் செய்யலாம்.

 

 

 

நான் குணமடைய எவ்வளவு காலம் ஆகும்?

ஆன்மீக காரணங்களால் ஏற்பட்ட பிரச்சனையை குணமாக்க சில நொடிகளிலிருந்து பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். உதாரணத்திற்கு, மூதாதையர்கள் ஏற்படுத்திய தோல் அரிப்பு இடத்தில், தீர்த்தம் (புனித நீர்) அல்லது கோமூத்திரத்தை (பசுமாட்டின் சிறுநீர்) உபயோகித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கலாம். ஆனால் புகைப்பிடிக்கும் பழக்கம் சிறிதளவு ஒருவரது விருப்பத்தாலும் (உளவியல் ரீதியாக), பின்னர் சிறிதளவு பேய்களின் பீடிப்பால் (ஆன்மீக ரீதியாக) இருந்தால் இப்பழக்கத்திலிருந்து விடுபட பல ஆண்டுகள் ஆன்மீகப்பயிற்சி செய்ய வேண்டும்.

குணமடையும் காலம் பல அம்சங்களைப் பொறுத்து இருக்கும்:

  • நோயாளியின் விதியின் தீவிரம்
  • ஆன்மீக நிவாரண முறைகளை பயன்படுத்துவதில் நிலைத்தன்மை
  • ஆன்மீகப்பயிற்சியின் தீவிரம்
  • ஒருவரை ஆக்கிரமிக்கும் தீய சக்தியின் வலிமை

ஒரு நபரின் ஆளுமை குறைகளின் அளவும் எண்ணிக்கையும் குணமாக்கும் காலத்தை பாதிக்கும். ஏனென்றால் குறைபாடுகளான கோபம், அச்சம் மற்றும் இதர உணர்ச்சிகளை தீய சக்திகள் பயன்படுத்திக்கொண்டு சுலபமாக நுழைந்து ஒருவரை பீடிக்க அவர்களது மனதில் கருப்பு சக்தி மையங்களை ஏற்படுத்துகின்றன.
ஆன்மீக நிவாரண முறைகளின் திறனை பாதிக்கும் அம்சங்கள் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

 

 

 

 

நாமஜபம் என்ற ஆன்மீக பயிற்சியை மேலும் திறமை வாய்ந்ததாக்க நான் என்ன செய்ய வேண்டும்?

மனதை அதிகம் ஒருமுகப்படுத்தி, நாமஜபத்தில் நம்பிக்கையை உயர்த்தி, ஆன்மீக உணர்வோடும் நிரந்தர பிராத்தனைகளோடும் நாமஜபத்தை ஒருவர் செய்து வந்தால் அதன் திறனை அதிகரிக்கலாம். உடல் நலத்திற்கான நாமஜபம் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

 

 

 

நோயாளி ஆழ்மயக்கத்தில் (கோமா) இருப்பதால், நாமஜபம் செய்ய முடியாதபோது என்ன செய்வது?

இத்தகைய சூழலில் ஆழ்மயக்கத்தில் இருக்கும் நோயாளியின் ஒரு உறவினர் அவருக்காக நாமஜபம் செய்யலாம். நாமஜபம் தொடங்குவதற்கு முன்பு உறவினர் இவ்வாறு பிரார்த்தனை செய்து கொள்ளவேண்டும் “நான் செய்யும் இந்த நாமஜபத்தை (இன்னார்)-க்கு அர்ப்பணிக்கிறேன், அவரது நோயின் ஆன்மீக காரணங்களில் இருந்து விடுபட வேண்டும்”.

 

 

 


எனது நோய் இப்பட்டியலில் இல்லாதபோது என்ன செய்ய?

படி-2 என்ற பட்டியலில் உங்களது குறிப்பிட்ட நோய் இல்லையென்றால் நீங்கள் அந்த உடலமைப்பின் “மற்ற எல்லா….” என்பதை தேர்வு செய்யலாம்.

 

 

 

வரவிருக்கும் காலங்களில் ஆன்மீக நிவாரண முறைகளின் முக்கியத்துவம் என்ன?

தற்போதைய உலகம் கொந்தளிப்பு நிலையில் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாம் உலகப்போரின் வாய்ப்பும் எதிர்பாராத இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்று பல மஹான்கள் கணித்துள்ளனர். இப்போரினால் பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். தொழிற்சாலைகள் மூடப்பட்டு மருந்துக்கள் கிடைக்காமல் போகும். அத்தருணத்தில் நோயை குணமாக்க ஒருவர் ஆன்மீக நிவாரண முறைகள் மற்றும் மாற்றுச் சிகிச்சையை தான் சார்ந்து இருக்கவேண்டும். இதனாலேயே தான், இப்போதிலிருந்தே ஆன்மீக நிவாரண முறைகளை கற்று பயிற்சி செய்வது முக்கியமாகும்.