ஸ்தூலத்திலிருந்து (உருவம்) சூட்சுமத்திற்கு (அருவம்) முன்னேறுதல்

இந்தக்கோட்பாடு குறிப்பிடுவது யாதெனில், நம்முடைய ஆன்மீக பயிற்சி ஸ்தூலமான செயற்பாடுகளில் இருந்து மேம்பாடு அடைந்து சூட்சும ரீதியாக அமையவேண்டும் என்பதாகும்.

சூட்சும ஸாதனை (ஆன்மீக பயிற்சி) ஸ்தூலமான ஸாதனையை விட சக்தி வாய்ந்ததாகும். உதாரணத்திற்கு இரு நண்பர்கள் நட்பின் நிமித்தம் கைகுலுக்கிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் ஒருவரை ஒருவர் வெறுத்திருப்பார்கள். வெளிக்காட்டப்பட்ட நட்பானது வெறுமனே முகஸ்துதியாகும். மாறாக, இரு நபர்கள் ஒருவரையொருவர் நேரில் காணவில்லை எனினும் மனதார ஒருவர் மீது ஒருவர் நல்லெண்ணம் கொண்டிருப்பர்.

அதேபோல், ஆன்மீகத்தை பயிலும்போது பக்தி இல்லாது செய்யப்படும் வெளிப்படையான சமயச்சடங்குகளுக்கு பதிலாக உண்மையான ஆழ்பக்தியை அல்லது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உறுதியான விருப்பினை கொண்டிருக்க வேண்டும்.