அணுக் கதிர்வீச்சின் விளைவுகளை அக்னிஹோத்ரம் தடுக்க இயலுமா?

அக்னிஹோத்ரம் -- அணுகுண்டு தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அதன் திறனைப் பற்றிய ஒரு ஆன்மீக ஆராய்ச்சி
2019 முதல் 2023 வரையான ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் பாதிபேர் அதாவது (ஏறக்குறைய 350 கோடி மக்கள்) மூன்றாம் உலக போரினால் அழிந்து போவார்கள். —
– பராத்பர குரு டாக்டர் ஆடவலே (30 செப்டம்பர் 2007)

உங்கள் நகரத்தில் ஒரு அணுக்கதிர் கருவி வெடித்தது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். சுற்றுப்புறத்தின் சில பரப்பளவில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தது என்று கணிக்க இயலாது, ஏனெனில் அணுகக்திர்வீச்சு கருவி வெடித்தது என்று அறியும் முன்பே நாம் அழிந்துவிடுவோம். அப்படி அழிந்து போகிறவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சற்று தொலைவில் அதாவது ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கள் தீக்காயங்களால் பாதிக்கப்படுவார்கள் அல்லது கதிரியக்கப் பொருட்களின் வெளிப்பாட்டால் பாதிக்கப்படுவர். இது அவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் நீண்டகால தீங்கை விளைவிக்கும். இந்த நேரத்தில் அவர்கள் மனதில் சில எண்ணங்கள் ஒடிக்கொண்டிருக்கும்.

  • பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதம் வெடிப்பதை பார்த்தபின் நான் எந்த தங்குமிடத்திற்கு ஓடுவது?
  • இந்த சம்பவத்திற்கு மனதளவில் தயாராகி என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்றியிருக்க முடியுமா?

1. முன்னுரை

இணையதளத்தில் உள்ள பல கட்டுரைகளில், அக்னிஹோத்ரத்தின் சடங்கு அணுக்கதிர்வீச்சின் பாதகமான தாக்கத்தை குறைக்க உதவும் எளிய சடங்காக விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த அறிக்கை எங்களது ஆர்வத்தை தூண்டியது, ஏனெனில் நவீன அறிவியலுக்கு இது ஒரு அருமையான முன்மொழிவு ஆகும்; சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது, ஒரு மந்திரத்தை ஓதி செய்யப்படும் இந்த எளியச் சடங்கு உண்மையில் அணுசக்தி கதிர்வீச்சினால் உண்டாகும் தீங்கின் விளைவுகளைத் தணிக்கிறது. வரவிருக்கும் காலங்களைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி மூலம் நாம் பெற்ற வேறு சில தகவல்களுடன் இந்தச் சடங்கு குறிப்பாக பொருத்தமானதாகிறது.

பெரும்பான்மையான மக்களுக்கு அணுசக்தி தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ள உடல் மற்றும் உளவியல் ரீதியான முயற்சிகளுடன், ஆன்மீகமட்டத்திலும் நடவடிக்கைகள் உள்ளன என்பது தெரியாது. அணுகுண்டு தாக்குதலின் விளைவுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், விளைவுகளை தடுக்கவும் ஆன்மீக மட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பற்றி இந்தக் கட்டுரை விரிவுப்படுத்துகிறது.

ஆன்மீக ஆராய்ச்சியை பற்றிய கட்டுரையை படிக்கவும் | ஆன்மீக ஆராய்ச்சியை பற்றிய பயிற்சிக் காணொளியை காண்க

2. அக்னிஹோத்ரம் செய்யும் நபருக்கு அணு ஆயுத தாக்குதல்களிருந்து பாதுகாப்பு பெறுதல்

திரு. கேரி சப்லெடின் எழுதிய அணு வெடிப்பிற்கான விளைவுகள் மற்றும் www.nationalterroralert.com மூலம் இந்த பதிவுற்கான குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக நாங்கள் அணுவாயுத விளைவுகளை கணிக்கும் கால்குலேட்டரை பயன்படுத்தியுள்ளோம், இது திரு. கேரி சப்லெட் அவர்கள் குறிப்பிட்ட அளவிடுதல் சட்டங்களையும், அணு ஆயுதம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளையும் அடிப்படையாகக் கொண்டது, மேலும் இது அக்னிஹோத்ரத்தின் நன்மைகளைப் பற்றிய கண்ணோட்டத்தை வழங்க உதவுகிறது.

உடனடியான மற்றும் தாமதமான விளைவுகள் இரண்டையுமே அணுக்கரு வெடிப்புகள் ஏற்படுத்தும்.

  • உடனடி விளைவுகள் (வெடிப்பு, வெப்பக் கதிர்வீச்சு, அயனியாக்கும் கதிர்வீச்சு) ஆகியவற்றை உருவாக்கி அணு வெடித்த ஒரு சில நொடிகள் அல்லது நிமிடங்களிலேயே பெருமளவு பேரழிவை ஏற்படுத்துகின்றன.
  • தாமதமான விளைவுகள் (கதிரியக்க வீழ்ச்சி மற்றும் இதர சுற்றுச்சூழல் விளைவுகள்) பல மணிநேரங்கள் முதல் நூற்றாண்டுகள் வரை சேதத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் வெடிப்பு நடந்த இடம் மட்டுமல்லாமல் வெகு தொலைவில் உள்ள இடங்களிலும் கூட பாதகமான விளைவை ஏற்படுத்தலாம்.

அணுக்கரு வெடிப்புகளால் ஏற்படுத்தப்படும் சேதம் அந்த அணு ஆயுதத்தின் அளவு (கிலோடன் அல்லது மெகாடன்னில் அளவிடப்படுகிறது), அதில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் வகை, கருவியின் வடிவமைப்பு, காற்றில் அல்லது பூமியின் மேற்பரப்பில் வெடித்ததா, சுற்றியுள்ள புவியிர்ப்பு சூழ்நிலைக்கு ஏற்ப, அதாவது அது கோடை அல்லது குளிர்காலமா, பனிபடர்ந்த அல்லது தெளிவான சமயமா, இரவு அல்லது பகலா, காற்று அல்ல அமைதியான நேரமா என்பதை பொறுத்து மாறுபடும். காரணிகள் எதுவாக இருந்தாலும் மேலே குறிப்பிட்ட உடனடி மற்றும் தாமதமான விளைவுகளில் கொடுக்கப்பட்டுள்ளபடி வெடித்தவுடன் பல்வேறு வகையான ஆற்றலை அது வெளிப்படுத்தும்.

பின்வரும் வரைப்படம் 1 மெகாடன் அளவு அணுகுண்டு வெடித்ததன் விளைவுகளை கணித்தும் மேலும் பல்வேறு வகையான ஆற்றலின் தாக்கத்தையும் அதன் தூரத்தையும் காட்டியுள்ளது. 50% ஆன்மீக நிலையில் உள்ள ஒருவர் அக்னிஹோத்திரத்தை தவறாமல் கடைப்பிடித்ததால் அங்கு ஏற்படும் பாதுகாப்பு நிலை/ அழிவு நிலையையும் இது காட்டுகிறது.

ஒவ்வொரு ஆற்றலின் வகையையும், அக்னிஹோத்ரம் மூலம் பெறப்படும் பாதுகாப்பை பற்றியும் நாம் இப்போது கூர்ந்து தெளிவாக கவனிப்போம். (ஆதாரம்–எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆல் நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி)

  1. வெடிப்பு மண்டலம் :   அணுவெடிப்பினால் ஏற்படும் சேதத்தின் பெரும்பகுதி (சுமார் 50%) அதன் அதிர்ச்சி அலையின் விளைவாகும். காற்று உட்பட, வெடிப்பின் அலை அழுத்தம் கடந்து அது செல்லும் பொருட்களில் தனது ஆற்றலை செலுத்துகிறது. வெடிப்பின் அலையானது திடப்பொருட்களின் வழியாக செல்லும் போது எஞ்சியிருக்கும் ஆற்றலில் சேதம் ஏற்படுத்துகிறது.

    வெடிப்புச் சுற்றளவுற்குள் அக்னிஹோத்ராவை செய்பவர் பெறும் பாதுகாப்பு நிலை 0%.

  2. வெப்ப கதிர்வீச்சு : வெடிப்புடன் சுமார் 30-50% அழிவு வெப்ப கதிர்வீச்சினால் ஏற்படுகிறது. ஒருவர் குண்டுவெடிப்பிலிருந்து பல மைல்கள் தொலைவில் இருந்தாலும், வெடிக்கும் சமயம் உருவாக்கப்படும் ஒரு பிரகாசமான ஒளியை காண இயல்கிறது. தீவிர பிரகாசத்துடன் கூடுதலாக இந்த கதிர்வீச்சு தீவிர வெப்பத்தன்மையுடன் இருக்கும் (அதனால் தான் வெப்பம் என்று பெயர்). குண்டுவெடிப்பின் மூலத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் ஒருவர் மூன்றாம் நிலை தீக்காயங்களின் நிலையை அனுபவிப்பார்.மூன்றாம் நிலை தீக்காயங்கள், தோல் திசுக்களை மீண்டும் உருவாக்கத் தேவையான ஸ்டெம் செல்கள் உட்பட, தோல் முழுவதும் திசு மரணத்தை ஏற்படுத்துகின்றன. மூன்றாவது டிகிரி உடலில் 25% (அல்லது அதற்கு மேற்பட்டவை) எரிந்தால், சில நிமிடங்களில் அதிர்ச்சியை உண்டாக்கும் மற்றும் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும்.

    வெப்ப கதிர்வீச்சு ஆரத்திற்குள் அக்னிஹோத்திரத்தை செய்பவர் பெறும் பாதுகாப்பு நிலை 30%.

  3. அயனியாக்கும் கதிர்வீச்சு : ஒரு அணுக்கரு வெடிப்பு அணுக்கரு அல்லது அயனியாக்கும் கதிர்வீச்சின் பல வடிவங்களை உருவாக்குகிறது. வெடிப்பை ஏற்படுத்தும் அணுக்கருப் பிளவு (பிளவுபடும் அணுக்கரு) மற்றும் அணுக்கரு இணைவு (இணையும் அணுக்கருக்கள்) நேரடியாகவோ மறைமுகமாகவோ நியூட்ரான், காமா கதிர்கள், பீட்டா மற்றும் அல்ஃபா துகள்களை வெளியேற்றும்.    (1 மெகாடன் வெடிப்பின் போது, ​​அயனியாக்கும் கதிர்வீச்சின் விளைவு (500 ரெம்ஸில் அளவிடப்படுகிறது) தரை மட்ட பூஜ்ஜியத்திலிருந்து 3.1 கிமீ தொலைவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.)
    1. நியூட்ரான்கள் அணுக்களின் உட்கருவிலிருந்து வெளியாகும் கனமான துகள்கள் ஆகும். இந்தச் சிறிய “ஏவுகணைகளால்” திடமான பொருட்களை எளிதில் ஊடுருவ முடியும்.
    2. ஆற்றல்மிக்க ஃபோட்டான்களான காமா கதிர்கள் கதிர்வீச்சின் மற்றொரு ஊடுருவும் வடிவமாகும். இவ்விரண்டு வகையான கதிர்வீச்சுகளும் ஆபத்தானவை.
    3. ஆல்பா மற்றும் பீட்டா துகள்கள் குறைவான ஆபத்தானவை. அவை பல சென்டிமீட்டர் மற்றும் மீட்டர் வரம்பைக் கொண்டுள்ளன.
    4. ஆல்பா துகள்களை உட்கொண்டால் மட்டுமே தீங்கை விளைவிக்கும்.

    அயனிக்கும் கதிர்வீச்சின் ஆரத்தில் அக்னிஹோத்திரத்தை செய்பவர் அடையும் பாதுகாப்பு நிலை 0%.

  4. வீழ்ச்சி : அணு ஆயுதங்கள் பூமியின் மேற்பரப்பில் அல்லது அதற்கு அருகில் வெடிக்கும்போது ஏற்படும் விளைவுகளில் ஒன்று கதிரியக்க வீழ்ச்சியாகும். வெடித்த உடனேயே, வெடிப்பினால் கதிரியக்கமான பூமி மற்றும் குப்பைகள் அதிக அளவில் வளிமண்டலத்தில் கொண்டு செல்லப்பட்டு மாசுபட்ட (காளான்) மேகத்தை உருவாக்குகிறது. காற்றில் அந்த துகள்கள் நகர்ந்து படிப்படியாக மீண்டும் பூமிக்கு வந்து ஆயிரக்கணக்கான சதுர மைல்களை மாசுபடுத்துகிறது. வெடிப்பு பெரியதாக இருப்பின் அது அதிகமாகவும், வேகமாகவும் வீழ்ச்சியை உருவாக்குகிறது, மேலும் குறைந்த வளிமண்டலத்தில் இதன் வைப்பு விகிதம் சிறியதாக உள்ளது. இந்த வீழ்ச்சியால் அப்பகுதியில் அல்லது தொலைதூரத்தில் வாழும் மக்கள் பல ஆண்டுகள் தொடர் பாதிப்பிற்குள்ளவார்கள்.

    வீழ்ச்சி ஆரத்திற்குள் அக்னிஹோத்திரத்தை செய்பவர் பெறும் பாதுகாப்பின் அளவு 50%.

3. அக்னிஹோத்ரத்திற்கு பின்னால் உள்ள வழிமுறையைக் காட்டும் ஆன்மீக ஆராய்ச்சி

பூமியில் உள்ள நிகழ்வுகளனைத்தும் படைப்பின் கட்டுமான அடிப்படை தொகுதிகளைக் கொண்டு நிகழ்கின்றன. இந்த அடிப்படை கட்டுமான தொகுதிகள் பஞ்சபூத தத்துவங்கள் ஆகும். இதில் ஒன்று அல்லது பல தத்துவங்களால் தான் பிரபஞ்சத்தில் நிகழ்வுகள் சாத்தியமாகின்றன. அணுக்கருவி வெடிக்கப்படும்போது பிரதானமாக இருக்கும் பரிபூரண பஞ்சதத்துவம் அக்னி (தேஜதத்துவம்) ஆகும்.

அணுகுண்டு வெடிக்கும்போது ரஜ – தம அதிர்வலைகள் நிறைந்த அக்னி தத்துவம் வெளிப்படுகிறது. சூட்சும முரண்பாடான ஒலிகளும் இந்த அதிர்வலைகளுடன் வருகின்றன. இந்த நுணுக்கமான ஒலிகள் அணுசக்தி தாக்குதலுக்கு அருகில் இருக்கும் மக்களின் மனம் மற்றும் புத்தியில் சூட்சுமமான தீங்கை விளைவிக்கும். இது மனச்சோர்வு அல்லது எதிர்மறை எண்ணங்கள் மற்றும் புத்தியை திரையிட்டு மறைப்பது போன்ற எண்ணங்களை உருவாக்கலாம்.

அக்னிஹோத்ரச் சடங்கு செய்யப்படும் போது ஸத்வ அதிர்வலைகள் பிரதானமான பரிபூரண அக்னி தத்துவத்தை உருவாக்குகிறது. அக்னிஹோத்ரத்திலிருந்து உருவாகும் அக்னியானது ரஜ-தம துகள்களை சிதைத்து, ஆன்மீக மட்டத்தில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துகிறது. சடங்கு செய்யும் நபரை சுற்றி சூட்சும பாதுகாப்பு வளையத்தை இது உருவாக்குகிறது. இந்த வளையம் பரிபூரண அக்னி தத்துவம் தொடர்பான அனைத்தையும் உணரும் திறன் கொண்டது மேலும் சூட்சும பரிணாமத்தில் இருந்து காண்கையில் இந்த வளையம் சிவப்பு நிறத்தில் தெரிகிறது.

ரஜ-தம பிரதானமான பரிபூரண அக்னி துகள்கள் (அணுக்கருவி வெடித்தபோது சிதறுவது) மிகவும் கொடூரமாகவும், கடுமையான முறையிலும் தாக்குகின்றன. பாதுகாப்பு வளையத்திற்கு அருகில் அவை எப்போது வருகின்றன என்பதை உள்ளுணர்வோடு அறிந்து கொண்டு ஒரு பிரதிபலிப்பாக ஸாத்விக் பரிபூரண நெருப்பு அதிர்வெண்களை அதனுள் இருந்து ரஜ-தம நிறைந்த துகள்களை நோக்கி பெரும் சக்தியுடன் அனுப்புகிறது. இதன் விளைவாக வெடித்த அணு சாதனத்திலிருந்து தீங்கு விளைவிக்கும் பரிபூரண நெருப்பு அதிர்வெண்கள் அதன் சக்தியை இழக்கின்றன.

3.1 அணுசக்தி பேரழிவின் போது அக்னிஹோத்ரச் சடங்கின் செயல்திறனை எது தீர்மானிக்கிறது?

இங்கு விவாதிக்கப்படும் பாதுகாப்பு நிலைகள் அணுசக்தி பேரழிவு சூழலை கருத்தில் கொண்டு குறிப்பிடபட்டுள்ளன என்பதை நினைவில் கொள்வது அவசியம், ஏனெனில் அக்னிஹோத்ரச் சடங்கு வழங்கக்கூடிய பலன்கள் அமைதி நேர சூழ்நிலையை ஒப்பிடுகையில் பேரழிவு காலங்களில் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

3.1.1 ஒரு நபரின் ஆன்மீக நிலை மற்றும் அவரின் மனோபாவம்

ஒரு நபர் அக்னிஹோத்ரச் சடங்கை செய்யும்போது அணுசக்தி கதிர்வீச்சின் விளைவை நடுநிலையாக்க இந்தச் சடங்கு வரையறுக்கும் சில காரணிகளின் செயல்திறன் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

அக்னிஹோத்ரச் சடங்கை செய்யும்போது ஒரு நபர் (அவரது ஆன்மீக நிலை மற்றும் ஆன்மீக அணுகுமுறை நிலையை பொறுத்து) ஏற்படும் விளைவை கீழே உள்ள அட்டவணை காட்டுகிறது.

ஆன்மீக நிலை

அம்சம்

20%

50%

60%

செயல்படும் மனோபாவம்

சடங்கு வழிபாட்டை வெறும் செயலாக எண்ணி செய்தல்

ஆன்மீக உணர்வு மற்றும் பக்தியுடன் செய்தல்

சரணாகதியுடன் செய்தல்.

பாதங்களில் பாதுகாப்பு உறையின் பகுதி

1-2

10

30

சூழலில் சுத்திகரிப்பு % -இல்

.75

2

4

விளைவின் காலளவு

1 hour

2 hours

8 hours

  • ஆன்மீக நிலை :
    • ஒரு நபரின் ஆன்மீக நிலை மிக முக்கியமான அம்சமாகும்.
    • அணுசக்தி பேரழிவின் சமயம் நடைமுறையில் 50% மேல் ஆன்மீக நிலையில் உள்ள ஒரு நபர் மட்டும் அக்னிஹோத்ரம் செய்வதன் மூலம் கணிசமான பாதுகாப்பை பெற இயலும். சடங்கு செய்யும் நபரின் ஆன்மீக நிலை பொறுத்தே பலனும் அமைகிறது. ஆன்மீக நிலை குறைந்தால் பலனும் குறைகிறது. சராசரி ஆன்மீக நிலை கொண்ட ஒருவர் (20-30%) அக்னிஹோத்ரம் செய்வதன் மூலம் குறைவான பாதுகாப்புப் பலனையே பெறுகிறார்.
    • ஆன்மீக நிலை அதிகரிக்கும் போது, ​​அந்த நிலையே மனிதனின் பாதுகாப்பிற்கான முக்கிய அளவுகோலாக மாறுவதால், சடங்குகளைச் செய்வதற்கான தேவை குறைகிறது.
    • மகான்களை பொறுத்தவரை அணுகுண்டு வெடிப்பதற்கு முன்பே அவ்விடத்தை விட்டு வெளியேற எண்ணம் மனதில் ஓங்கும்.
  • ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவம் : ஆன்மீக நிலையை அதிகரிக்க, ஆறு அடிப்படை கோட்பாடுகளை கடைப்பிடித்து ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வதே சிறந்த வழியாகும். சரியான ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒரு நபர் தன் வாழ்நாளில் விரைவான ஆன்மீக வளர்ச்சியை அடைய முடியும்.
  • சடங்கு செய்யும் போது ஏற்படும் மனோபாவம்
    • ஆன்மீக உணர்வு மற்றும் பக்தி மனப்பான்மையுடன் இந்தச் சடங்கு செய்யும் போது அதன் விளைவு மற்றும் பலன் பன்மடங்கு.
    • ஆன்மீக நிலையில் கடவுளிடம் சரணாகதியடைந்து இந்தச் சடங்கை மேற்கொள்ளும் போது அதன் விளைவு இன்னும் அதிகமாகும்.
    • சராசரியாக 50% ஆன்மீக நிலைக்கு மேல் உள்ள ஸாதகர்கள் மட்டுமே ஆன்மீக உணர்வோடு சடங்குகளை செய்யும் ஆன்மீக திறனைக் கொண்டுள்ளனர்.

3.1.2 சடங்கைச் செய்பவரும் காண்பவரும் :

அக்னிஹோத்ரச் சடங்கை காண்பவரை விட செய்பவர் அதிலிருந்து அதிக பலனை அடைகிறார். தனிநபரின் பாதுகாப்பிற்காக இச்சடங்கு செய்யப்படுகிறது. இருப்பினும் சடங்கை காண்பவர், தானே அதை செய்கிறோம் என்ற ஆன்மீக உணர்வுடன் அதை கவனித்தால் அவருக்கும் அதே நன்மை மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்.

4. அணுசக்தி தாக்குதலிலிருந்து பாதுகாப்பில் ஆன்மீக பயிற்சி மற்றும் ஆன்மீக நிலையின் பங்கு

ஒரு நபரின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுமே கர்மவிதிப்படி ஊழ்வினையின் காரணமாகவே நடக்கின்றன. ஒரு ஆன்மீக பிரச்சனையான பாதகமான விதியை கடக்க ஆன்மீக பயிற்சி செய்வதே சிறந்த வழியாகும்.

தகுந்த அளவிலான ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்வதன் மூலம், ஒருவர் விதியை வெல்ல முடியும். உதாரணமாக, ஒருவருக்கு நடுத்தரமான ஊழ்வினைபயன் இருந்தால், தீவிரமான ஆன்மீக பயிற்சியால் (ஒரு நாளைக்கு சுமார் 10-12 மணிநேரம்) மட்டுமே எதிர்கொள்ள முடியும். ஒருவருக்கு கடுமையான ஊழ்வினைபயன் இருந்தால், ஒரு மகானின் அருளால் மட்டுமே விதியை வெல்ல முடியும்.

வரவிருக்கும் காலங்களில் ஒருவர் தங்கள் விதியின்படி இறக்க நேரிட்டாலும், அவர்களின் ஆன்மீக பயிற்சியின் காரணமாக, அவர்கள் மறுமைக்குச் செல்லும்போது, ​​ஸாதகர்களின் மனதில் பயத்தின் எதிர்மறை எண்ணமாவது ஏற்படாமல் இருக்கும். ஒரு நபர் எந்த விதமான ஆன்மீக பயிற்சியையும் செய்யாமல் இருந்தால், அணுசக்தி பேரழிவிற்கு பிறகு, துன்பம் மற்றும் மரணம் போன்ற எண்ணங்கள் அவர்களின் ஆழ் மனதில் பயத்தின் தாக்கங்களை ஏற்படுத்துகிறது, அதை கடக்க பல பிறவிகள் கழியலாம்.

5. முடிவுரை

  • அக்னிஹோத்ரச் சடங்கு செய்பவரின் ஆன்மீக நிலை அதன் ஆற்றலை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது.
  • அணுசக்தி பேரழிவின் சேதத்தைக் குறைக்க அக்னிஹோத்ரச் சடங்குடன் இணைந்து அந்நாட்டு மக்கள் தங்களது ஆன்மீக பயிற்சியை துவங்க உதவுமாறு பல்வேறு நாடுகளின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் கோரிக்கை விடுகிறோம்.
  • ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுடன் இணங்கி செயல்பட்டால் ஆன்மீக பயிற்சி மேலும் பலனுள்ளதாக இருக்கும்.