ஒரு ஆன்மீக நிவாரண நிபுணர் எவ்வாறு நிவாரணம் அளிக்கவேண்டும் ?

 

உடல் மற்றும் மனநோய்களுக்கான ஆன்மீக  நிவாரண முறையுடன் வழக்கமாக  எடுத்துக்கொள்ளும் மருத்துவ  சிகிச்சையும் தொடருமாறு  எஸ். எஸ். ஆர். எஃப் பரிந்துரைக்கிறது.

வாசகர்கள் தங்கள் விருப்பப்படி எந்தவித ஆன்மீக நிவாரண முறையையும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 ஆன்மீக நிவாரணம் அளிப்பவர் பின்பற்ற வேண்டிய இரண்டு முக்கியமான  தத்துவங்கள்

ஆரம்பத்தில், இரண்டு முக்கியமான தத்துவங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்:

  • ஒரு நபர் தனக்கென ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வதே சிறந்த ஆன்மீக நிவாரண முறையாகும். இதனால் ஆன்மீகப் பரிமாணத்தின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க நமது சொந்த ஆன்மீக இருப்புக்களை உருவாக்குகிறோம். ஆன்மீக ரீதியில் சில வகையான நிவாரணமுறைகளை பயன்படுத்தி குணமாக்கப்படுவதை விட வழக்கமான ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வதே  மிகவும் நிலையான பாதுகாப்பு நடவடிக்கையாகும். ஆன்மீக நிவாரணமளிப்பவர்கள் தங்களிடம் தொடர்ந்து  வரும் மக்களிடம்   முடிந்தளவு அவர்களின் ஆன்மீக பயிற்சியைத் தொடங்கி அதில் நிலையாக இருக்க ஊக்குவிக்க வேண்டும். ஆன்மீக பயிற்சியானது பிரச்சனைகளை அகற்றுவதில்  ஆன்மீக நிவாரணமளிப்பவரின் முயற்சிகளை பூர்த்தி  செய்கிறது.
  • வாழ்வின்நோக்கம் பற்றிய எங்களது கட்டுரையில், ஆன்மீக வளர்ச்சியில் இறைவனோடு ஒன்றிணைவதே நமது வாழ்க்கையின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளோம். அதன்படி, ஆன்மீக நிவாரணம்  அல்லது  மற்ற  நமது எல்லா செயல்களும் நமக்கும், மற்றவர்களுக்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் சீரமைக்கப்பட்டால், நமது முயற்சிகளால் அதிகபட்ச பலனைப் பெறுவோம்.

2 ஆன்மீக நிவாரணம் அளிப்பவர்  யாரை குணப்படுத்த வேண்டும்?

மேற்கூறியவற்றின் அடிப்படையில், ஒரு ஆன்மீக நிவாரணம் அளிப்பவரின் நேரமும், ஆற்றலும், ஆன்மீக பயிற்சி செய்யும் மக்களுக்கு ஏற்படும் ஆன்மீக தடைகளை அவர் கடக்க உதவும் போது சிறப்பாக செலவிடப்படுகிறது. இதன்  மூலம்  மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு அவர்கள் உதவுகிறார்கள்.

ஆன்மீகக் கண்ணோட்டத்தின் படி, ஆன்மீகப் பயிற்சியைத் தொடங்கும் எண்ணம் இல்லாதவர்களிடம்  ஆன்மீக நிவாரணமளிக்கும் சக்தியைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அது அவர்களுக்கு  தற்காலிக நிவாரணத்தையே தரும். மேலும் அந்த நபரின் வாழ்க்கையில் ஒருசில விஷயங்களில் அது பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது பிற தீயசக்திகளால் அவர்  மீண்டும் மீண்டும் பாதிக்கப்படலாம். ஆன்மீக நிவாரண அளிப்பவர்கள்  தங்கள் ஆன்மீக நிலைக்கு ஏற்ற வகையில் உலகளாவிய  சக்தியை அணுக முடியும்.  அத்துடன் வாழ்க்கையின் முக்கிய நோக்கமான ஆன்மீக ரீதியாக மக்களை முன்னேற உதவும் ஒரு பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. இந்த பொறுப்பை  ஆன்மீக நிவாரண அளிப்பவர் நிறைவேற்றவில்லை என்றால், அவரது  ஆன்மீக நிலை தேக்கமடையக் கூடும், மேலும் அவர் தீயசக்திகளால் ஆட்டுவிக்கப்படுவார்.

மக்கள் நிவாரணமடையவேண்டும் என்பதற்காக குணப்படுத்துவதில் அதிக ஈடுபாடு கொள்ளாமல் இருப்பது நல்லது என்று பரிந்துரைப்படுகிறது. ஏனெனில் அந்த நபரின் விதிப்படி  ஒரு குறிப்பிட்ட அளவு துன்பம் அவர் அனுபவிக்க வேண்டியிருந்தால், ஆன்மீக நிவாரணமானது  அவரது துன்பத்தை தற்காலிகமாகவே குறைக்கிறது. மேலும் அனுபவிக்க வேண்டிய துன்பத்தின் ஒதுக்கீட்டை அவர் அனுபவித்தே  ஆக  வேண்டும். அதற்கு பதிலாக, ஒரு நபருக்கு நிவாரணமளிப்பதன் நோக்கம், அந்த நபருக்கு ஆன்மீக பரிமாணம் உள்ளது என்ற நம்பிக்கையை வளர்ப்பதாக இருந்தால் அது ஆன்மீக ரீதியில் நன்மை பயக்கும், ஏனெனில் இது அவரது ஆன்மீக பயிற்சியைத் தொடங்க அவரைத் தூண்டுகிறது.

சில உலக ஆசைகளை நிறைவேற்ற ஆன்மீக நிவாரண ஆற்றலைப் பயன்படுத்துவது  பொருத்தமற்ற தீர்வாகும். பின்வரும்  ஓட்ட விளக்கப்படம் ஒரு நிவாரணமளிப்பவர் மேலும், மேலும் ஆன்மீக ஆற்றலைப் பெறத் தொடங்கும் போது அவரிடம்  உள்ள  பலவிதமான தேர்வுகளைக் காட்டுகிறது.

ஆன்மீக நிலையில் 50% மற்றும் அதற்கு மேல் உள்ள ஒருவரின் ஆன்மீகத் தேர்வுகள்.

 

3 எப்போது ஒருவர் ஆன்மீக நிவாரணம் மூலம் மற்றவருக்கு உதவ வேண்டும்?

கடவுளின் ஸாதகர்கள் ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ளும்போது, சில சமயங்களில் அதை தடுக்கும் நோக்கத்தைக் கொண்ட  சக்தி வாய்ந்த தீய சக்திகளால்  தாக்கப்படுகிறார்கள். ஸாதகரின் ஆன்மீக ஆற்றல் அத்தகைய தாக்குதல்களைத் எதிர்கொள்ள போதுமானதாக இருக்காது. எனவே, பின்வரும் சூழ்நிலைகளில் ஆன்மீக நிவாரணம் முறை மூலம் அவர்களின்  ஆன்மீக சக்தியை மேம்படுத்துவது அவசியமாகிறது:

  • தடைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்போதும், அவசரத் தலையீடு தேவைப்படுகிறது.
  • அவர்கள் மனரீதியாக அல்லது ஆன்மீக ரீதியாக பலவீனமாக இருக்கும்போது,தங்களை தாங்களே நிவாரணப்படுத்திக் கொள்ள முடியாது.
  • ஒருவரால் உடல்ரீதியாக நிவாரணம் செய்ய இயலாத போது, ​​உதாரணமாக, அவர் சுயநினைவின்றி இருக்கும் நேரம்
  • ஒரு நபர் குறிப்பிட்ட நிவாரண முறை பற்றி நன்கு அறியாதவராக இருக்கும் போது.

4 சுருக்கமாக-ஒரு ஆன்மீக நிவாரணமளிப்பவர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

உலகம் முழுவதும் உள்ள பல மக்கள் ஆன்மீக நிவாரண முறையை பயிற்சி செய்கின்றனர். ஆன்மீக நிவாரணப்படுத்துதலை நிர்வகிக்கும் தத்துவங்களைப் புரிந்துகொள்வதன் மூலமும் ‘யார்’, ‘எப்போது’ நிவாரணமடைய வேண்டும் என்பதில் ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் இருப்பதன் மூலமும் ஆன்மீக நிவாரணமளிப்பவர்கள் வாழ்க்கையின் நோக்கத்துடன் கருத்து ஒன்றியவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த முடியும். இவர்கள்  வழக்கமான ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வது மிகவும் முக்கியம், மேலும்  இது  ஆன்மீக நிவாரணமளிப்பவராக பயிற்சி செய்யும் ஒருவருக்கு மிகவும் தீங்கு விளைவிக்ககூடிய  அகம்பாவம் அதிகரிப்பதைத் தவிர்க்க உதவுகிறது. ஆன்மீக நிவாரணமளிப்பவர் செய்யும்  வழக்கமான ஆன்மீக பயிற்சியானது  அவரை தீய சக்திகளின்  தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கிறது.

தங்கள் நோயாளிகளுக்கு ஆன்மீக பயிற்சியைத் தொடங்க  உதவுவதே  ஆன்மீக நிவாரண அளிப்பவர்கள் கொடுக்கும் உயர்ந்த பரிசாகும், இதன்மூலம் ஆன்மீக நிலையில் அவர்கள் மேற்கொண்டு சுயமாக தங்களுக்கு உதவ இயலும். இது ‘ஒரு நபருக்கு தினமும் மீன் அளிப்பதற்கு பதில் அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதற்கு’ சமமாகும். இதனால் அவர்கள்  சுதந்திரமாக இருக்க உதவுகிறது.

ஆன்மீக நிவாரண அளிப்பவர்களுக்கு இந்த கட்டுரை அல்லது ஆன்மீக நிவாரணப்படுத்தும் தத்துவங்கள் பற்றிய  ஏதேனும் கேள்விகள் இருந்தால், லைவ் சாட்(live chat) செயல்பாடு மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.