உண்மையான மன்னிப்பு என்றால் என்ன? – ஒரு ஆழமான பார்வை

ஆன்மீகக் காரணிகளின் காரணமாக உங்களுக்குத் தவறிழைத்தயொருவரை மன்னிப்பது கடினமாகதாக இருக்கலாம், ஆனால் கர்மா மற்றும் ஆன்மீக நல்வாழ்விற்காக அவர்களை மன்னித்து முன்னேறுவது அவசியமானதாகும்.

உண்மையான மன்னிப்பு என்றால் என்ன?

சுருக்கம்

ஒருவர் நம்மை மனதளவில் ஆழமாக காயப்படுத்தியிருந்தால், அவரை மன்னிப்பது எளிதான செயல்ல, அதனால் நம் மனதில் கோபமும், பழிவாங்கும் எண்ணமும் நிறைந்திருப்பது இயற்கையே. ஆனால் இத்தகைய எண்ணங்கள் நமக்கு மட்டுமே தீங்கை விளைவிக்கும். மன்னிப்பு என்பது அத்தகைய எண்ணங்களிலிருந்து நம்மை விடுவிப்பதாகும். இதைச் செயல்படுத்துவதை விட சொல்வது எளிது, ஏனென்றால் இது ஒருவரின் ஆளுமை மற்றும் மற்ற நபருடனான கர்மாவை (கொடுக்கல் வாங்கல் கணக்கை) பொறுத்தது, இதனால் அவருடைய மன்னிக்கும் தன்மை சமரசம் செய்யப்படலாம். ஒரு சம்பவத்தினால் ஏற்படும் கர்மாவிலிருந்து உண்மையில் விடுபட, அந்த சம்பவத்தை மனதார மன்னிப்பதோடு அதை முற்றிலும் மறந்துவிடவும் வேண்டும். ஆன்மீக பயிற்சியில் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.

1. மன்னிப்பு ஒரு அறிமுகம்

ஒருமுறை தலாய் லாமாவிடம் ஒரு நிருபர், திபெத்தை கைப்பற்றியதற்காக சீனர்கள் மேல் கோபம் ஏற்பட்டதா என்று கேட்டார். அதற்கு அவர், “எங்களிடமிருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்ட அவர்கள் என் மனதையும் (எண்ணங்களையும்) ஆட்கொள்ள அனுமதிக்க முடியுமா?” என்று பதில் அளித்தார்

ஒருவரின் மன அமைதி மற்றும் நல்வாழ்வுக்கு, கோபத்தையும் வெறுப்பையும் விட்டுவிடுவது உண்மையான பலனைத் தரும்.

இருப்பினும், மன்னிப்போம் மறப்போம் என்ற பழைய பழமொழி உண்மையில் சாத்தியமா? மன்னிப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும், ஆனால் மறக்க முடியுமா? அது புத்திசாலித்தனமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஒரு மேற்கோளை நினைவு கூர்வோம், ‘வரலாற்றில் இருந்து பாடம் கற்க முடியாதவர்கள் அதைத் திரும்பத் திரும்ப செய்யக்கூடும்’ அதாவது, ‘தம் கடந்த காலத்தை நினைவில் கொள்ளாதவர்கள் தங்கள் தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்யத் தூண்டப்படுகிறார்கள் ’ என்றும் பொருள்படும்.

எனவே, உண்மையில் மன்னிப்பது என்றால் என்ன, மறப்பது விவேகமானதா?

2. மன்னிப்பு- வரைவிலக்கணம் என்ன?

மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் அதன் நன்மைகள் பற்றி உடல் (ஸ்தூல) மற்றும் மனோரீதியில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கு தகுந்தவாறு மாறுபடும்.

இருப்பினும் உண்மையான மன்னிப்பின் வரைவிலக்கணத்தில், குற்றவாளியிடம் நேர்மறை உணர்வுகள் தேவையா என்பது குறித்து அதிக விவாதம் நடந்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான வல்லுநர்கள், குறைந்தபட்சம் கோபம், பழிவாங்குதல் மற்றும் வெறுப்பு போன்ற ஆழமான எதிர்மறை உணர்வுகளை விட்டுவிடவேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். இதில், மற்றவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை விட்டுவிடுவதும் அடங்கும்.

எல்லாவற்றையும் போலவே, ஒரு உறுதியான மற்றும் முழுமையான வரைவிலக்கணத்தைப் பெற, அதை உடல் மற்றும் மனோரீதியில் மட்டும் பார்க்காமல் ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டியது அவசியம். ஏனென்றால், நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளில் (நல்லது அல்லது கெட்டது) பெரும்பகுதி நாம் அனுபவிக்க வேண்டிய கர்மா அல்லது விதியின் படி நடக்கிறது. பாதகமான கர்மா அல்லது விதி ஒரு ஆன்மீகப் பிரச்சனையாகும். எனவே, நம் வாழ்வில் நடக்கும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றில், நாம் பாதிக்கப்பட்டதாகவே உணர்கிறோம். கர்மா தொடர்பான இவற்றை கடந்து செல்ல நாம் மன்னிப்பதைக் கற்றுக்கொள்ள பழக வேண்டும்.

உண்மையான மன்னிப்பு என்றால் என்ன?

ஆன்மீகக் கண்ணோட்டத்தில் உண்மையான மன்னிப்பு என்றால் என்ன என்பதற்கான வரைவிலக்கணத்தை எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் வழிகாட்டி மற்றும் ஆன்மீக ஆராய்ச்சி குழுவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பராத்பர குரு டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் வழங்கியுள்ளார். பராத்பர குரு என்பதன் பொருள் 90% ஆன்மீக நிலைக்கு மேல் உள்ள மிக உயர்ந்த நிலையில் உள்ள குரு என்பதாகும்.

உண்மையான மன்னிப்பு என்பது கோபம் மற்றும் பழிவாங்கும் உணர்வுகளை மறப்பது மட்டுமல்ல, அந்த சம்பவத்தையே மறப்பதாகும்.”

பராத்பர் குரு டாக்டர் ஆடவலே

ஒரு சராசரி மனிதனுக்கு இது சாத்தியமற்றதாக தோன்றினாலும், ஆன்மீகக் கண்ணோட்டத்தில் எல்லா கர்ம பந்தங்களையும் துறந்து தெய்வீகத்துடன் இணைவதற்கு இத்தகைய மன்னிப்பின் அளவு தேவைப்படுகிறது. எனவே, ஆன்மீகக் கண்ணோட்டத்தில் கடவுளோடு ஒன்றிணைவதற்கு மன்னிப்பதும் மறப்பதும் மிகவும் தேவையான ஒன்றாகும்.

3. மன்னிப்பு பற்றிய ஆழமான நுண்ணறிவை பெறுதல்

ஆன்மீகக் கண்ணோட்டத்தில் மன்னிப்பு என்ற கருத்தை புரிந்து கொள்வதற்கு, முதலில் நாம் கர்மா அல்லது விதியை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஞானத்தை பல்வேறு புனித நூல்களிலிருந்தும், மேம்பட்ட ஆறாவது அறிவைப் பயன்படுத்தி ஆன்மீக ஆராய்ச்சி மூலமும் பெறமுடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாமனைவரும் ஒரு குறிப்பிட்ட அளவு விதியுடன் பிறந்தவர்கள். நம் வாழ்க்கையின் ஒரு பகுதியான விதி, நமது கட்டுப்பாட்டில் இல்லை. நாம் முற்பிறவிகளில் செய்த செயல்களின் தாக்கத்தின் அடிப்படையில், விதியின் நிகழ்வுகள் நம் வாழ்வில் நிறைந்துள்ளன. நம் வாழ்வில் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் அலகுகளைத் அது தீர்மானிக்கின்றது. இது முந்தைய வாழ்க்கையில் நாம் பெற்ற தகுதிகளை அதாவது நன்மை மற்றும் தீமைகளை அடிப்படையாகக் கொண்டது. தற்போதைய யுகத்தில், நம் வாழ்க்கையில் ஏறக்குறைய 65% நிகழ்வுகள் விதிப்படியும் 35% வாழ்க்கை நமது தனிப்பட்ட செயல்களின் படியும் இருக்கும்.

ஒருவர் வாழ்வில் நடக்கும் திருமணம், நல்ல மற்றும் கெட்ட உறவுகள், விபத்துக்கள் மற்றும் பெரிய நோய்கள் போன்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளும் பெரும்பாலும் ஒருவரின் விதியால் ஏற்படுகின்றன. எனவே, விதியின் காரணமாக நாம் அனுபவிக்க வேண்டிய துன்பங்களும் வலிகளும் பெரும்பாலும் நிகழ்வுகளின் மூலம் வெளிப்படுகின்றன. அதேபோல், நம் வாழ்வில் நமக்கு அதிக பட்ச துன்பம் அல்லது மகிழ்ச்சியைத் தருபவர்கள், முந்தைய வாழ்க்கையின் கணக்குகளைத் தீர்க்க, பெரும்பாலும் அவ்வாறு செய்கிறார்கள்.

நமது மனம், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் இருப்பிடமாக வரையறுக்கப்படுகிறது. வெளிமனம் மற்றும் ஆழ்மனம் என்ற பிரிவுகளை கொண்ட நமது மனதில் வெளிமனம் மிக சிறியதாக இருப்பினும் அதுவே நாம் அறிந்த மனமாகும். ஆனால் மறுபுறம், நமது சிறிய அளவிலான புரிதல் மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய நமது ஆழ்மனம், வெளிமனதில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது குணங்கள், குறைபாடுகள் மற்றும் ஆளுமை பண்புகளை வரையறுக்கும் பல்லாயிரக்கணக்கான பதிவுகள் இதில் உள்ளன.

விதிக்கப்பட்ட நிகழ்வுகளின் அனைத்து பதிவுகளும் நமது ஆழ் மனதில், கொடுக்கல் வாங்கல் கணக்கு மையம் எனப்படும் சூட்சும மையத்தின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. நாம் புத்திசாலித்தனமாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் கணக்கு மையம் இரண்டு நபர்களிடையே கர்ம கணக்கு எப்படி இருக்கிறதோ அதன்படி செயல்பட வைக்கிறது.

கொடுக்கல் வாங்கல் கணக்கு மையம் நமது முடிவெடுக்கும் திறனில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய விரிவான தகவலுக்கு, கொடுக்கல்வாங்கல் கணக்கின் செயல்பாட்டு வழிமுறை என்ற கட்டுரையைப் படிக்கவும்.

எனவே, ஆன்மீகக் கண்ணோட்டத்தில் மன்னிப்பு பற்றிய நமது தலைப்புடன் இவை அனைத்தும் எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது? 2 காட்சிகளின் அனுமான உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

காட்சி 1 : முற்பிறவியில் நபர்நபர்க்கு தீங்கு விளைவித்து அவருக்கு 5 அலகுகள் வலியைக் கொடுத்தார் என்று வைத்துக்கொள்வோம். இதனால் அங்கு ஒரு கர்மக் கணக்கு உருவாக்கப்படுகிறது, அதில்நபர்நபரிடமிருந்து 5 அலகு வலியைப் பெற வேண்டும். சில காரணங்களுக்காக அக்கணக்கு அப்பிறவியில் தீர்க்கப்படாவிட்டால், அது அடுத்த பிறவிக்கு மாற்றப்படும். எனவே, அடுத்தடுத்த பிறவியில் நபர்மற்றும் நபர்இருவரும் ஒன்றாக ஒரு சூழ்நிலையிலிருக்க தள்ளப்படுவார்கள். இந்த சூழ்நிலையில், நபர்‘ (அவரது கொடுக்கல் வாங்கல் கணக்கு மையத்தின் தாக்கத்தால்) நபர்க்கு 5 யூனிட் வலி அல்லது கஷ்டத்தை கொடுப்பார்.

காட்சி 2 : நபர்இப்பிறவியில் முதல்முறையாகநபரை சந்திக்கிறார் என்றும் முற்பிறவிகளில் அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் வைத்துக்கொள்வோம். இப்போது நபர்‘, இப்பிறவியில் 5 யூனிட் வலியைக் கொடுத்துநபருக்கு தீங்கு விளைவித்தால், அவர்நபருடன் புதிய கர்ம கொடுக்கல் வாங்கல் கணக்கைத் தொடங்குகிறார்.

எவ்வாறு இந்த இரண்டு காட்சிகளும் நபர்நபரை மன்னிக்கும் திறனை பாதிக்கிறது?

காட்சி 1 இல், இப்பிறவியில், நபர்க்கு 5 யூனிட் வலியை திருப்பி அளித்த பிறகு, அவர் (நபர்‘) நபர்வை மன்னிப்பதை எளிதாகக் கருதுவார். இதற்குக் காரணம்நபர் கணக்கைத் தீர்த்து வைப்பதால் தான். மேலும்நபரின் ஆழ்மனதானது அதன் கொடுக்கல்வாங்கல் கணக்கு மையத்திலுள்ள இக்கணக்கு, தீர்க்கப்பட்டதாக கருதுகிறது.

இருப்பினும், காட்சி 2 இல், நபர்வால் புதிய கணக்கு உருவாக்கப்படுவதால், நபர்நபர்வை மன்னிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.

மன்னிப்பு, கர்மவிதி மற்றும் கொடுக்கல் வாங்கல் கணக்கு

இப்போது, ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் நாம் கற்றுக்கொண்ட மற்றொரு கண்ணோட்டத்தை காட்சி 1 உடன் சேர்த்து பார்க்கலாம். அதாவது நபர் ‘ஆ’ முற்பிறவியில் ‘அ’ நபரை மன்னிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தால், அடுத்த பிறவியில், நபர் ‘அ’ அனுபவிக்க வேண்டிய பாதகமான விதி குறைவாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு நபர் ‘அ’ முற்றிலும் மனந்திருந்த வேண்டும், அப்போதுதான் அவர் செய்த பாவம் அல்லது தீமைகள் ஓரளவு குறைக்கப்படும். எனவே, எதிர்மறை கணக்கு இருக்கின்ற போதிலும், நபர் ‘ஆ’ க்கு தீங்கு விளைவித்ததால் ‘அ’ நபர் அனுபவிக்க வேண்டிய எதிர்மறை கர்மாவின் தீவிரம் குறையும்.

ஆளுமை குறைகளை விட அதிக நல்ல குணங்களைக் கொண்ட, உயர்ந்த ஆன்மீக நிலையில் இருப்பவர்களே உண்மையாக மன்னிக்க முனைபவர்களாக, மற்றும் உண்மையிலேயே வருந்துபவர்களாக இருப்பார்கள். அவர்கள் மனக்கசப்பு மற்றும் பழிவாங்கும் உணர்வுகள் இல்லாமல், நல்லவர்களாகவும், பிறருக்கு அடைக்கலம் தருபவர்களாகவும் இருப்பார்கள்.

மன்னிப்பு, கர்ம விதி, மற்றும் கொடுக்கல் வாங்கல் கணக்கு ஆகியவற்றில் ஆளுமை குறைகளினால் ற்படும் தாக்கம்

ஒருவருக்கு கோபம், பழிவாங்கும் குணம் போன்ற அதிகமான ஆளுமை குறைகளோடு, அதிக அகம்பாவ உணர்வான கர்வமும் இருந்தால், மன்னிக்கும் அல்லது தவறுக்கு வருந்தும் திறன் வெகுவாகக் குறைந்துவிடும். ஒருவரின் ஆளுமையானது 98% அவரது முற்பிறவியின் எண்ணப்பதிவுகளிலிருந்து பெறப்படுகிறது.

அத்தகையவர்கள் ஒருவரையொருவர் காயப்படுத்தும் போது, எதிர்மறையான கொடுக்கல் வாங்கல் கணக்குகளின் மூலம் ஒரு தீய சுழற்சியில் மாட்டிக்கொள்கிறார்கள். ஒருவரையொருவர் கஷ்டப்படுத்துவது பந்தாட்டம் போல் பல பிறவிகளில் தொடரும். ஆளுமை குறைகள் கணக்குகளைத் தீர்க்க அனுமதிக்காது, மாறாக உண்மையில் அவற்றை அதிகரிக்கவே செய்யும். இது எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள எடுத்துக்காட்டில் இருந்து காட்சி 1 க்கு மீண்டும் செல்வோம், அங்குநபர்க்கு 5 அலகு வலியைக் கொடுக்க வேண்டும். ஆனால்நபர் பல ஆளுமை குறைகள் மற்றும் அதிக ம்பாவம் கொண்டிருந்ததால், 5 அலகுகளைக் கொடுப்பதற்குப் பதிலாக. ‘நபருக்கு பாதகமான கர்மக் கணக்கை விகிதாசாரமற்ற முறையில் திருப்பிச் செலுத்துவார் (அதாவது அசல் 5 யூனிட் வலிக்கு பதிலாக 8 யூனிட் வலியை கொடுப்பார்), இதனால் நபர்உடன் ஒரு புதிய பாதகமான கர்ம கணக்கு உருவாக்கப்படும். அதை இப்பிறவி அல்லது அடுத்தடுத்த பிறவிகளில் தீர்க்கவேண்டும்.

4. மன்னித்தலில், தீய சக்திகளினால் ஏற்படும் தாக்கம்

வாழ்க்கையில் சில சமயங்களில், கொடுக்கல் வாங்கல் அல்லது கர்மக் கணக்கில் பங்கேற்பாளர்கள் இருவர் மட்டுமின்றி மூன்றவதாக ஒரு காரணியும் இருக்கலாம். தீய நோக்கம் கொண்ட, சூட்சும நிலையிலுள்ள, இவை தீயசக்திகள் என்று அழைக்கப்படுகின்றன.

விவாதத்தில் ஈடுபட்ட 2 நபர்களிடம் 20% கோபத்தை உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டது என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒருவர் தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டு இருந்தால், அவர் அதன் கட்டுப்பாட்டில் இருப்பார் என்று அர்த்தம். அவரை ஆட்கொண்ட அந்த தீய சக்தியானது அவ்விருவர் மீதும் கருப்பு சக்தி படலத்தை உருவாக்கி அவர்கள் இருவருக்கிடையேயான சூழ்நிலையை மோசமாக்கி, சாதாரணமாக எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக பாதகமான விளைவுகளை உருவாக்கும். தீய சக்திகளின் இத்தகைய குறுக்கீட்டால், சர்ச்சையில் ஈடுபடும் நபர்களுக்கிடைய மன்னிப்பது மிகவும் கடினமாகிறது.

இதை நாம் இங்கே சொல்லுவதன் காரணம், இன்றைய உலகில் இதுபோன்ற நிகழ்வுகளே முக்கியமாக நடக்கின்றன. ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், தற்போதைய காலகட்டத்தில் உலக மக்கள்தொகையில் தோராயமாக 30% பேர் தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் தோராயமாக 50% பேர் அவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளோம். இதன் பொருள், உலக மக்கள் தொகையில் 80% பேர் தீய சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் இருக்கிறார்கள். அவை அதிக அளவில் மக்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன.

இன்றைய உலகியல் தத்துவத்தின் படி போதுமான அளவு ஆன்மீக பயிற்சி மக்களிடையே இல்லாத காரணத்தால் தீய சக்திகள் அவர்களை ஆட்கொண்டு பாதிப்படையச் செய்கின்றன. மேலும் அவர்களின் ஆளுமைக்குறைகளான கோபம், பேராசை மற்றும் வெறுப்பு ஆகியவற்றையும் பயன்படுத்தி மக்களிடையேயும், சமூகத்திலும் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்படும் முரண்பாடுகளுக்கு பின்வருவன காரணமாக இருக்கலாம்:

  • கொடுக்கல் வாங்கல் கணக்குகளை உருவாக்குதல் அல்லது தீர்த்து வைத்தல் : பெரும்பாலும் முந்தைய வாழ்வின் கொடுக்கல் வாங்கல் கணக்கைத் தீர்ப்பதற்காகவே பெரிய முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இப்பிறவியில் ஒருவன் எனக்கு தீங்கிழைத்ததாகத் தோன்றினாலும், முற்பிறவியில் அவனுக்கு முதலில் தீங்கிழைத்ததன் மூலம் எதிர்மறையான கர்மக் கணக்கைத் தொடங்கியவன் நான்தான் என்பதே உண்மையாகும். பொதுவாக, நமது மனைவி மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே அதிகபட்ச அளவு கொடுக்கல் வாங்கல் கணக்குகள் உள்ளன. எனவே தான் அவர்களிடம் நாம் வாழ்வில் அதிகபட்ச இன்பம் மற்றும் துன்பத்தை அனுபவிக்கின்றோம்.

  • தீய சக்திகள் : பொதுவாக, மக்களை ஆட்கொண்டிருக்கும் இந்த சூட்சும சக்திகள் அவர்களிடையேயுள்ள மோதல்கள் அல்லது பாதகமான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, மேலும் முரண்பாடு மற்றும் பகையை உண்டாக்குகின்றன.

5. ஆன்மீக பயிற்சி எவ்வாறு மன்னிக்க உதவுகிறது

ஆரம்பத்தில், எந்தவொரு முரண்பாட்டிற்கும் காரணமான சூட்சும மற்றும் ஆன்மீகக் காரணங்களை (ஸ்தூல/உளவியல் காரணிகளுடன் சேர்த்து) முழுமையாகப் புரிந்து கொண்டு, மக்கள் தங்கள் கோபத்தையும் வெறுப்பையும் சமாளித்து முன்னேற உதவும் ஒரு தத்துவ கண்ணோட்டத்தை ஆன்மீக பயிற்சி அளிக்கிறது. மேலும் சிலர் மற்றவர்களை விட எளிதாக மன்னிப்பதை பற்றிய சூட்சும ஞானத்தையும் வழங்கும்.

இயல்பாகவே மன்னிப்பு என்பது ஒரு ஆன்மீக விஷயம். இது கொடுக்கல் வாங்கல் கணக்குகள் மற்றும் விதி (கர்மா) ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளாகிறது. நாம் ஏற்கனவே பார்த்த காட்சி 1 ல் நபர்மற்றும்ஏற்பட்டது போல ஆன்மீகக் காரணங்களே ஒரு பிரச்சனையின் மூல காரணமாக இருந்தால், அதை சரி செய்ய அல்லது சமாளிக்க ஆன்மீகத் தீர்வுகளே சிறந்ததாகும்.

உலகளாவிய தத்துவங்களின்படி பாதகமான விதியை வெல்ல ஆன்மீக பயிற்சியே சிறந்த ஆன்மீகத் தீர்வாகும். இது பாதகமான விதியை அழிகிறது. எனவே இது எப்படி நடக்கிறது என்பதை அறிய காட்சி 1 இல் உள்ள உதாரணத்தைப் பார்ப்போம்.

முற்பிறவியில், நபர்ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தால், அவரது ஆன்மீகப்பயிற்சியின் மூலம் உருவான ஆன்மீக சக்தி, அவரது பாதகமான விதியைக் குறைக்கும் நோக்கத்தில் செயல்படும். இதில்உடனான அவரது பாதகமான விதியும் அடங்கும். இதனால் நபர்வின் ஆன்மீகப்பயிற்சியிலிருந்து உருவாகும் ஆன்மீக சக்தி, அவருடைய கொடுக்கல் வாங்கல் கணக்கு மையத்தில் உள்ள தீய எண்ணத்தை நீக்க சூட்சும நிலையில் இயங்கும். இதன் மூலம் நபர் ஸாத்வீகத் தன்மையை பெற்றுவுடனான எதிர்மறை கணக்கை ஆழ்மனதில் மறந்துவிடுவார்.

பிறரை மன்னிக்கும் முயற்சியில் ஈடுபடும் செயலானது அவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவி அவர் ஆன்மீக ரீதியில் வேகமாக வளர உதவுகிறது. ஏனென்றால், அச்செயல் மூலம் அவர் தன்னை காயப்படுத்திய நபருடன் அதிக கர்ம கணக்குகளை உருவாக்குவது குறைகிறது. மேலும், ஆன்மீக பயிற்சியின் மூலம் மற்றவரைப் பற்றிய தீய எண்ணங்கள் அவர் மனதில் குறையும். இறுதியில், ஒருவர் 70-80% ஆன்மீக நிலைகளைத் தாண்டிச் செல்லும்போது, வாழ்க்கை சூழ்நிலைகளை அவர் ஒரு பார்வையாளர் என்ற நிலைப்பாட்டில் (சாக்ஷி உணர்வு) அனுபவிக்கத் தொடங்குகிறார். இந்த நிலையில், தன்னைச் சுற்றியுள்ள உலகம் மாயா (பெரிய மாயை) என்றும், அவருக்குள் இருக்கும் ஆத்ம தத்துவம் (இறை தத்துவம்) மட்டுமே உண்மை என்றும் உணர்கிறார். மேலும் எந்த ஒரு நிகழ்வையும் தனது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றைக் கொண்டு அடையாளம் காண்பது குறைந்து, ஆத்ம நிலையில் மட்டுமே அனைத்தையும் கவனிக்கிறார். இவ்வாறாக அனைத்து நிகழ்வுகளையும், பெரிய மாயையின் ஒரு பகுதியாக மட்டும் பார்ப்பதால் நிலையானவராக இருக்கிறார். இதனாலேயே, தான் பாதிக்கப்பட்டிருந்த சம்பவத்தை மன்னிப்பது மட்டுமல்லாமல் மறக்கவும் முடிகிறது.

நாம் முன்பு கூறியது போல, பாதகமான விதி மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்படுவது இரண்டுமே ஆன்மீகப் பிரச்சனைகளாகும். அவை ஆன்மீக நிவாரணங்களை பயன்படுத்தி தீர்வு காணப்பட வேண்டும். ஒருவர் ஆன்மீக பயிற்சியை செய்வதன் மூலம் ஆன்மீக சக்தியையும் நேர்மறை ஆற்றலையும் பெறுவது இவற்றை விட்டு கடந்து முன்னேற உதவுகிறது

உலகளாவிய தத்துவத்தின்படி ஆன்மீகத்தை பயிலுவதே மன்னிக்கும் மனப்பான்மையை அதிகரிப்பதற்கான சிறந்த நீண்டகால ஆன்மீகத் தீர்வாகும். நாங்கள் கடவுளின் நாமஜபம் செய்ய பரிந்துரைக்கிறோம். இது ஆழ் மனதில் உள்ள எதிர்மறையான கொடுக்கல் வாங்கல் எண்ணப் பதிவுகளை நீக்கி தூய்மையாக்குகிறது. மேலும் ஆளுமை குறைகளை களையும் செயல்முறையைப் பயிற்சிப்பது ஆளுமை குறைகளைக் குறைக்கவும், ஒருவரின் குணங்களை மேம்படுத்தவும் உதவும். இதனால் ஒருவர் மற்றவர்களை மன்னிக்கவும், சிறந்த மனிதராகவும் விளங்க முடியும்.

5.1 மன்னித்தல் பற்றிய வேறு கேள்விகள்

1. மன்னிக்க மற்றும் தன்னை விடுவிக்க முடியாத பாவம் ஏதேனும் உள்ளதா?

பதில்: இல்லை. மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்திய செயல்கள் அனைத்தும் ஒருவரது ஒட்டுமொத்த கணக்கு அல்லது சஞ்சித கர்மாவில் சேர்கிறது. ஒருவன் அவனுடைய சில பிறவிகளில், விதியாக அவனது செயல்களுக்கு ஏற்ற துன்பத்தை அனுபவிக்க வேண்டும்.

2. கடவுளுக்கு எதிரான பாவம் என்றால் என்ன?

பதில்: சமுதாயத்தில் ஆன்மீகத்தை தவறாக பரப்புவது அல்லது 80% ஆன்மீக நிலைக்கு மேல் இருக்கும் ஒரு மஹானுக்கு தீங்கு விளைவிப்பது போன்ற ஆன்மீக(த்தின்) பரவலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்.

3. நான் எப்படி( எவ்வாறு) கடவுளிடம் மன்னிப்பு தேடுவது?

பதில்: ஆன்மீக பயிற்சியின் 6 அடிப்படைக் கொள்கைகளுக்கு இணங்க ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் அதற்கு தீர்வு காணலாம்.

4. காட்சி 1 ன் அதே உதாரணத்தை எடுத்துக் கொண்டால் (பிரிவு 3 இல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது), நபர்ஆன்மீக பயிற்சி செய்து மோக்ஷம் அல்லது முக்தியை அடைந்தால், நபர்உடனான கணக்கு என்னவாகும்?

பதில்: அத்தகைய சந்தர்ப்பத்தில், நபர்‘, நபர்இன் மூலம் எந்த துன்பத்தையும் அனுபவிக்க மாட்டார், மேலும் அவரது விதியின் காரணமாக யாரும் துன்பத்தை அனுபவிக்காமல் கடவுள் பார்த்துக்கொள்வார்.

6. முடிவுரை

மன்னிக்கும் மனப்பான்மை மற்றவர்களை மட்டுமல்ல, பெரும்பாலும், நம்மையும் விடுவிக்க உதவுகிறது. ஒருவர் ஆன்மீக பயிற்சியைச் செய்யும்போது, ​​மன்னிப்பது எளிதாகிறது. மேலும் மன்னிப்பது மற்றும் மறப்பது ஆகிய இரண்டு அம்சங்களும் விரைவான ஆன்மீக வளர்ச்சியை அடைய உதவுகின்றன. தீய எண்ணங்கள், பழிவாங்கும் தன்மை மற்றும் அதன் தீவிரம் கணிசமாகக் குறைந்து, ஒருவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.