ஆன்மீக உபாயமாக திருநீற்றை(விபூதி) இட்டுக்கொள்ளுதல்

உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) பரிந்துரைக்கிறது.

வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

அட்டவணை

1. ஆன்மீக உபாயமாக விளங்கும் திருநீறு (விபூதி) பற்றிய ஒரு அறிமுகம்

எஸ்.எஸ்.ஆர்.எஃப்(SSRF) ஊதுபத்திகளிலிருந்து சேகரிக்கப்படும் திருநீறானது(விபூதி) மிகவும் சிறந்த மற்றும் எளிமையான சுய ஆன்மீக நிவாரணத் தீர்வாகும். மூதாதையர்கள், ஆவிகளால்(பேய்கள், பிசாசுகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவை) உருவாகும் கஷ்டங்களிலிருந்து நிவாரணமடையவும், நேர்மறை ஆற்றலை வழங்கவும் இது வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.

விரிவான விளக்கத்திற்கு:

2. திருநீற்றை(விபூதி) எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய காணொளி

வறண்ட,அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் பிரச்சினைகளுக்கு திருநீற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய செயல் விளக்கம் கீழே உள்ள காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.

3. எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து பெறப்பட்ட திருநீற்றை (விபூதி) அணிந்துகொள்வது உபாயமாக எவ்வாறு செயல்படுகிறது?

 எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து தயாரிக்கப்பட்ட திருநீறில் உள்ள தெய்வீக உணர்வு(சைதன்யம்) பரிபூரண நெருப்பு தத்துவத்தின்(தேஜ தத்துவம்) நிலையிலிருந்து செயல்படுகிறது.

  1. மூதாதையர் மற்றும் ஆவிகளால் தீவிர கஷ்டத்திற்கு உள்ளாகாதவர்கள், எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து பெறப்பட்ட திருநீற்றை(விபூதி) உபயோகிக்கும் பொழுது நேர்மறை ஆற்றலை அனுபவிக்கிறார்கள்.
  2. உலக மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் பேர் ஆவிகளால்(பேய்கள், பிசாசுகள்) பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆன்மீக ஆராய்ச்சி காட்டுகிறது. உலகில் பெரும்பாலான மக்கள் நரகத்தின் (பாதாளம்) முதல் பகுதியிலுள்ள மூதாதையர்கள் அல்லது ஆவிகளால் பாதிக்கப்படுகிறார்கள் அல்லது பீடிக்கப்படுகிறார்கள். இவர்களால் தாக்கப்படும் நேரங்களில் திருநீற்றை (விபூதி) உபயோகிக்கும்போது அவர்களால் உருவாக்கப்பட்ட கருப்பு சக்தி படலம் அழிக்கப்பட்டு  திருநீற்றை அணிபவர்  தனது கஷ்டங்களிலிருந்து விடுபடுகிறார்.
  3. நரகத்தின் 2வது பகுதி முதல் 7வது பகுதி வரை உள்ள ஆவிகளால் கஷ்டங்களுக்கு உள்ளாகுபவர்கள்: திருநீற்றை அணிவதன் மூலம் அவைகளால் உருவாக்கப்பட்ட கருப்பு சக்தி படலம் அவர்களை விட்டு வெளியே தள்ளப்படுகிறது. எனவே, ஆவிகளின் கருப்பு சக்தியால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து அவர்கள் தற்காலிக நிவாரணம் பெறுகிறார்கள். அரைமணி நேர இடைவெளியில்(அதாவது அரைமணி நேரத்திற்கு ஒருமுறை) திருநீற்றை அணிவது, நிவாரணமடையும் நபர் மீது கருப்பு சக்தியை பயன்படுத்தும் ஆவிகளுக்கு ஒரு தடையாக செயல்படுகிறது.

மேலும் ‘ஆன்மீக நிவாரண முறையை ஏற்படுத்துவதில் எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளின் சிறப்பு என்ன?‘ என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

4. எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து தயாரிக்கப்பட்ட திருநீற்றை (விபூதி) பயன்படுத்துவதற்கான பல்வேறு வழி முறைகள்.

4.1 அ உடலில் ஆன்மீக ரீதியாக உணர்திறன் உள்ள பகுதிகளில் பாதுகாப்பிற்காக திருநீற்றை(விபூதி) உபயோகித்தல்.

நமது உடலில் புருவத்தின் மையப்பகுதி, உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், குதிகால் மற்றும் உச்சந்தலையின் முன்பகுதி ஆகியவை அதிக உணர்திறன் கொண்டவை. இவை நேர்மறை மற்றும் எதிர்மறை அதிர்வலைகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே, இந்த பாகங்கள் கஷ்டம் தரும் அதிர்வலைகள் அல்லது ஆவிகளின் (பேய்கள், பிசாசுகள், எதிர்மறை ஆற்றல்கள் போன்றவை) அதிர்வலைகளை ஈர்ப்பதால், தலைவலி, குழப்பம், அமைதியின்மை, பலவீனம் போன்ற பல அசௌகரியங்களை நாம் அனுபவிக்கின்றோம். இந்த பகுதிகளில் திருநீற்றைப் அணிவதன் மூலம், இந்த உணர்திறன் உள்ள மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை ஆவிகளின் கருப்பு சக்தியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறோம். எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளில் இருந்து தயாரிக்கப்பட்ட திருநீற்றை புருவத்தின் மையப்பகுதியில் உள்ள ஆக்ஞா சக்கரத்தில்(புருவ மைய சக்கரம்) அணியும்போது என்ன நடக்கும் என்பதை சூட்சும ஞானத்தினை அடிப்படையாகக் கொண்ட பின்வரும் வரைபடம் காட்டுகிறது.

ஆவிகளின் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவரின் ஆக்ஞா சக்கரத்தில் (புருவ மைய சக்கரம்) திருநீறு (விபூதி) அணிதல்

பின்வரும் காணொளியானது, ஆவியால் பீடிக்கப்பட்டவரின் ஆக்ஞா சக்கரத்தில் (புருவ மைய சக்கரம்),எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளில் இருந்து தயாரிக்கப்பட்ட திருநீற்றை இட்டவுடன், ஆவியானது (ஆவி பிடித்த நபரிடம் வெளிப்பட்ட) எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைக் காட்டுகிறது.

4.2 ஆ திருநீற்றை(விபூதி) முடியின் வேர்கள் மற்றும் நுனிகளில் தடவுதல்

ஆவிகள்(பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) தாக்கப்பட்ட நபரின் முடியின் நுனிகளின் வழியாக கருப்பு சக்தியை உறிஞ்சி, முடியின் வேர்களில் சேமித்து, பின்னர் முடியின் நுனிகள் வழியாக கடத்தி, அந்நபருக்கு கஷ்டங்களை கொடுக்கின்றன. எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஊதுபத்திகளிலிருந்து தயாரிக்கப்பட்ட திருநீற்றை முடியின் நுனிகள் மற்றும் வேர்களில் தடவுவது இதை நிகழவிடாமல் தடுக்கிறது.

4.3 இ உடலில் வலியுள்ள பாகங்களுக்கு திருநீற்றை (விபூதி) தடவுவது

தலை, கணுக்கால் போன்ற வலியுள்ள உடல் பாகங்களில் திருநீற்றை தடவுவது  ஆன்மீகக் காரணங்களால்  ஏற்படும் வலியைக் குறைக்கின்றது. உதாரணமாக, வலியின் அளவு 5 அலகுகளாகவும், அவற்றில் 2 அலகளவு வலி  ஆவிகளின் கருப்பு சக்தி போன்ற ஆன்மீகக் காரணத்தால் ஏற்பட்டிருந்தால், அந்தப் பகுதியில் திருநீற்றை தடவுவதனால் அந்த 2 அலகு வலியைக் குறைக்கலாம்.

4.4 கண் இமைகள், முகம், முடி மற்றும் உள்ளங்கைகளில் திருநீற்றை தடவுதல்

கண் இமைகள், முகம், முடி மற்றும் உள்ளங்கைகளில் திருநீற்றை தடவுதல், மூதாதையர்கள் மற்றும் ஆவிகளால் ஏற்படும் தூக்கம் மற்றும் அக்கறையின்மையைக் குறைக்கின்றது.

4.5 உ பிராணசக்தி குறைவதால் பலவீனம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் திருநீற்றை(விபூதி) அணிதல் மற்றும் முகர்ந்து பார்ப்பதால் உண்டாகும் பலன்.

உடலை பாதுகாக்க தேவையான ஓய்வு மற்றும் மருந்துகள் எடுத்தாலும் தொடர் பலவீனம் பெரும்பாலும் பிராணசக்தி குறைவதால் ஏற்படுகிறது.  திருநீற்றை உள்ளங்கையில் தடவி முகர்ந்து பார்ப்பதன் மூலம் இதை குறைக்க முடியும். மேலும், இந்த சோர்வு ஆவிகளால் ஏற்பட்டிருந்தால், அதற்குரிய நாமஜபம் செய்யவும்.

4.6 ஊ துணிகள் மற்றும் பிற பொருட்களில் திருநீற்றை (விபூதி) தூவுதல்

நம்மில் பெரும்பாலோர் வியர்வை அல்லது அதிகப்படியான பயன்பாடு காரணமாகத் துணிகளிலிருந்து வரும் உடல் துர்நாற்றத்தை அனுபவித்திருக்கிறோம். இது உடல் ரீதியான காரணமாகும்.

சில நேரங்களில் மிகக் குறுகிய காலத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துணிகளிலிருந்தும், இதுபோன்ற துர்நாற்றம் வெளிப்படுகிறது. இது பொதுவாக மூதாதையர்கள் அல்லது ஆவிகளின் கருப்பு சக்தியால் ஏற்படுத்தும்  துர்நாற்றத்தை உருவாக்கும் மையங்களால் உண்டாகிறது, இதனால் நமக்கு துன்பம் உருவாகிறது.

வியர்வை போன்ற உடல் காரணங்களால் ஏற்படும் துர்நாற்றத்தை துணிகளை துவைப்பதன் மூலம் அகற்ற முடியும். ஆனால் ஆவிகளால் ஏற்படும் மூல ஆன்மீகக் காரணத்தின் துர்நாற்றத்தை, பாதிக்கப்பட்ட துணிகளில் திருநீற்றை தூவுதல் போன்ற ஆன்மீக நிவாரணங்களால் மட்டுமே அகற்ற முடியும். துணிகளை சலவை இயந்திரத்தில் சுத்தம் செய்யும் போது ஒரு சிட்டிகை திருநீற்றைச் சேர்ப்பது அவற்றை ஆன்மீக ரீதியாக தூய்மைப்படுத்த உதவுகிறது. துணிகள் மற்றும் ஆபரணங்கள் போன்றவற்றில் தொடர்ந்து திருநீற்றை தூவுவது அவற்றில் உள்ள கருப்பு சக்தியைக் குறைக்க உதவுகிறது.

4.7 எ நியாஸ் (குவிக்கப்பட்ட சக்தி நிவாரணம்)செய்வதற்கு முன் விரல்களில் திருநீறு (விபூதி) அணிதல்

நியாஸ்(குவிக்கப்பட்ட சக்தி நிவாரணம்) செய்வதற்கு முன் விரல்களில் திருநீறு(விபூதி) அணிவது ஆன்மீக நிவாரணமளிக்கும் நியாஸின் செயல்திறனை பெரிதும் அதிகரிக்கிறது.