வாசகர்களுக்கான குறிப்பு: இந்த கட்டுரையை சிறந்த முறையில் புரிந்துகொள்ள, ஆன்மீக ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடங்கள் எவை என்னும் கட்டுரையை தயைக்கூர்ந்து படிக்கவும்.
இந்த கட்டுரையில், மதுவினால் ஈர்த்து வெளியிடப்படும் சூட்சும அதிர்வலைகளைப் பற்றி, சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடத்தை கொண்டு விவரித்துள்ளோம். இது அதிநுட்பமான ஆறாவது அறிவைக் கொண்ட பூஜ்ய.திருமதி.யோயா வாலேயினால் வரையப்பட்டுள்ளது. சச்சிதானந்தபரபிரம்மடாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதிநுட்பமான ஆறாவது அறிவைக் கொண்டு சரிபார்த்தபோது, சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த வரைபடம் 80% துல்லியமாக இருப்பது கண்டறியப்பட்டது.
ஆன்மீகக் கண்ணோட்டத்தில், மதுவைப் பற்றிய சில முக்கியக் குறிப்புகள்:
- கருப்பு சக்தியை ஈர்க்கும் திறன்: மது ரஜ-தம பிரதானமான ஒரு பானமாகும். ஆகையால், மது அருந்துவதால் ஒருவரின் ஸாத்வீகத்தன்மை குறைந்து அதே நேரத்தில் அவரின் தாமஸீக தன்மை அதிகரிக்கின்றது. மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட வரைபடத்தில் குறிப்பிட்டதுபோல, மது கருப்பு சக்தியின் ஓட்டத்தை ஈர்ப்பதோடு, தீய சக்திகளையும் ஈர்க்கின்றது. மது அருந்தும் நபரின் மனம் மற்றும் புத்தியைச் சுற்றி கருப்பு சக்தியின் சூட்சும படலம் உருவாகின்றது, இதனால் அவர் தீய சக்திகளின் தாக்குதல்களுக்கு எளிதில் ஆளாகிறார்.
- ஆன்மீக ரீதியில் பலவீனம் அதிகரித்தல்: மது அருந்தும்போது நாம் நம் மனம் மற்றும் புத்தியின் மீதுள்ள கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தீய சக்திகள் இந்த கட்டுப்பாட்டின் இழப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நம் உணர்வில் ஊடுருவுகின்றன. சமூக காரணங்களுக்காக, சாதாரணமாக ஒரு பீர்(பியர்) போன்ற பானத்தை அருந்தினாலும், அது குடிப்பவரின் ஸாத்வீகத் தன்மையைக் குறைத்து, அவரின் சூட்சும தாமஸீக தன்மையை அதிகரிக்கின்றது. இதனால் அவர் தீய சக்திகளின் தாக்குதல்களுக்கு எளிதில் ஆளாகின்றார்.
- ஆவிகளால் பீடிக்கப்படும் சாத்தியம் அதிகரிக்கின்றது: ஒருவருக்கு மதுவின்மீது விருப்பம் உள்ளபோது, மதுவின் மீது நாட்டம் கொண்ட ஆவிகள் அல்லது மறைந்த மூதாதையர்கள், அந்த நபரின் விருப்பத்தைப் பயன்படுத்தி, அவரை பீடிக்கின்றன. ஒரு ஆவி ஒருவரைப் பீடித்தவுடன், அவருக்கு மதுவில் உள்ள விருப்பத்தை மேலும் அதிகரிக்கின்றன. இது அந்த ஆவிக்கு அந்த நபரின் மீதுள்ள கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொண்டு அவர் மூலமாக மது அருந்தும் இன்பத்தில் ஈடுபட உதவுகிறது.
- குடிப்பழக்கம் உடையவரால் அவரின் குடும்பத்தின் மீது ஏற்படும் தாக்கம்: தீய சக்திகள் ஒருவரை பீடிக்கும்போது, அவர் மூலம் செயல்பட்டு அவை தங்கள் ஆசைகளை எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடிகின்றது. குடிபோதையில் உள்ளவர்களால், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமுதாயத்திற்கு எதிராக, பல கொடூரமான செயல்கள் செய்யப்பட்டுள்ளன. பீடித்திருக்கும் ஆவி, பீடிக்கப்பட்ட குடிகாரனின் வன்முறை தன்மையான ஆளுமை குறையைப் பயன்படுத்தி அதனை மேலும் அதிகரிக்கின்றது. இதுவே ஒரு குடிகாரன் (மதுவுக்கு அடிமையாகி, குடிபோதையில் உள்ளபோது) வெளிப்படுத்தும் வன்முறையான நடவடிக்கையின் முக்கிய காரணமாகும்.
- திராட்சைரசம்(வைன்) ஆன்மீகத் தன்மை: ஆன்மீக ரீதியான கண்ணோட்டத்தில், ‘விஸ்கி’ அல்லது ‘வோட்கா’ போன்ற மதுபானங்களை விட சற்றே குறைந்த அளவில் தாமஸீக தன்மையை ‘வைன்’ கொண்டதால், ‘வைன்’-னும் மற்ற மது வகைகளைப் போலவே ஆகும்.
- பிரச்சினையை முன்கூட்டியே சமாளித்தல்: மதுவிற்கு அடிமையான ஒருவர், அதிலிருந்து மீளாமலேயே இறந்து விட்டால், மதுவின் மீதான அவர் ஆசை இறப்பிற்கு பிறகும் தொடர்கின்றது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், மதுவின் மீதான தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள அவருக்கு உடல் இருப்பதில்லை. இதனால் மறுமையில் உள்ள அவரது சூட்சும தேஹம், வேறொருவர் மூலமாக தன் விருப்பத்தை தீர்த்துக் கொள்வதற்காக அவரை பீடிக்க முயற்சிக்கின்றது. இந்த தீய சுழற்சி தொடர்கிறது. நாம் வாழும்போதே இத்தகைய பற்றுதல்களிலிருந்து விடுபட வேண்டும். அப்போதுதான் மரணத்திற்கு பிறகு, நம் ஆழ்மனதில் உள்ள ஆசை மையத்தால் ஆளப்பட மாட்டோம்.
- மது பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான தீர்வு: ஆன்மீக ரீதியான மூல காரணங்களே, மது பழக்கத்திற்கு 40 சதவிகித காரணம் என்று ஆன்மீக ஆராய்ச்சியால் நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஆன்மீக பரிமாணத்தில் மூல காரணத்தை கொண்ட பிரச்சினைகளிலிருந்து திறம்பட மீண்டு வர ஆன்மீக நிவாரணங்களே தீர்வாகும். போதைப்பொருள் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி குறித்த எங்கள் கட்டுரையில், மது போன்ற பொருட்களுக்கு அடிமையான மக்களை, அதிலிருந்து குறைந்த பக்க விளைவுகளுடன் வெளியேற உதவும் ஒரு தெளிவான, 3-படி ஆன்மீக திட்டத்தை நாங்கள் விவரித்துள்ளோம்.
டி.டி.எஃப்.ஏ.ஓ(DDFAO) என்னும் உயிரியல் பின்னுட்ட இயந்திரத்தை (bio–feedback machine) கொண்டு மக்களின் குண்டலினி சக்கரங்களின் மீது மது மற்றும் பழச்சாறு ஏற்படுத்தும் விளைவையும் எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஆய்வு செய்துள்ளது. மது (விஸ்கி) மற்றும் பழச்சாறு (ஆரஞ்சு) ஆகிய இரண்டு வகையான பானங்கள், தீய சக்திகளால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றும் தீய சக்திகளால் பீடிக்கப்படாதவர்கள் மீது ஏற்படுத்தும் விளைவை நாங்கள் சோதித்தோம். ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் மற்றும் ஆன்மீக பயிற்சி செய்யாதவர்கள் மீதும் நாங்கள் இதை சோதித்தோம்.
மதுவின் மீது டி.டி.எஃப்.ஏ.ஓ-வினால் செய்த ஆராய்ச்சியில் சிலவற்றை கீழ்க்கண்ட எஸ்.எஸ்.ஆர்.எஃப். காணொளி முன்வைக்கின்றது.