ஆன்மீகத்தைப் பற்றிய கட்டுரைகளை படித்துக் கொண்டிருக்கும்போது சந்தன வாசனையையும் ருசியையும் உணர்ந்த ஆன்மீக அனுபவம்
ஆன்மீகத்தைப் பற்றிய கட்டுரைகளை படித்துக் கொண்டிருக்கும்போது சந்தன வாசனையையும் ருசியையும் உணர்ந்த ஆன்மீக அனுபவம்

நான் சமீபத்தில் தீவிர ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அந்த சமயம் ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப். / SSRF) ஸாதகர்களுடன் தொடர்பு கொள்ள இயலாமல், அவர்களது ஸத்சங்கத்தை நான் இழந்தேன். நான் சிறிது உடல் தேறிய பின்பு கணினியில் எஸ்.எஸ்.ஆர்.எஃப். வலைதளத்தில் சில கட்டுரைகளை படித்தேன். அதுவே எனக்கு ஒரு ஸத்சங்கமாக அமைந்து எனது மனம் ஆன்மீகத்தில் செல்ல வழிவகுத்தது. வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களின் காரணங்கள் பற்றிய கட்டுரையைப் படிக்கும்போது, இறைவனின் போதனை தத்துவத்தை, அதாவது குருவை, எண்ணி என் மனதில் நன்றியுணர்வு நிறைந்தது. வாழ்கையின் கஷ்டங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு நல்ல முறையில் கையாள எவ்வாறு குருவின் மூலம் கிடைக்கும் ஆன்மீக ஞானம் உதவுகிறது என எண்ணி வியந்தேன்.

இப்படி என் மனம் நன்றியுணர்வால் நிறைந்தபோது சந்தன வாசனை மற்றும் ருசி ஆகியவற்றை உணரும் ஆன்மீக அனுபவம் ஏற்பட்டது. அச்சமயம் அந்த வாசனை உண்டாவதற்கான ஊதுபத்தியோ மற்ற எந்த காரணமோ அந்த இடத்தில் இல்லை. உடனே, ஆன்மீக உணர்வின் காரணமாக என் கண்களில் நீர் திரண்டு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஆனந்த அனுபவம் அரைமணி நேரம் நீடித்தது.

–  திருமதி மாயா ஜெயராம், கொலராடோ, யு.எஸ்.ஏ.

இந்த அனுபவத்தின் பின்னால் உள்ள ஆன்மீக சாஸ்திரம்

நம் வாழ்க்கையில் இறைவனின் அருளால் இத்தகைய ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன. நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை இம்மாதிரி அனுபவங்கள் மூலம் இறைவன் நமக்கு உணர்த்துகிறார். இது நமது ஆன்மீக பயிற்சியில் தொடர்ந்து முயற்சிகள் செய்ய நமக்கு ஊக்கமளிக்கிறது. நாம் இறைவன் மீது கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியின் காரணமாகவோ அல்லது இறைவன் நம் பக்கம் இருக்கிறார் என்ற எண்ணம் வலுவடைய வேண்டிய சூழ்நிலைகளிலோ ஆன்மீக அனுபவம் பல்வேறு வகைகளில் நமக்கு ஏற்படுகிறது.

திருமதி மாயா அவர்களின் விஷயத்தில், இறைவனிடம் அவருக்கு அளவிட முடியாத நன்றியுணர்வு ஏற்பட்ட சமயத்தில் அவர், அவரது வாழ்க்கையில் இறைவனது இருப்பை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார். அந்தக் கணமே அவர் சந்தனத்தின் நறுமணத்தையும் ருசியையும் சூட்சுமமாக உணர்ந்தார். இந்த சூட்சும நறுமணத்தையும் ருசியையும் அவர் தனது நறுமணம் மற்றும் ருசியின் சூட்சும ஞானேந்த்ரியங்களின் மூலம் உணர்ந்தார். பொதுவாக ருசியின் சூட்சும அனுபவத்தை பெறுவது மிகவும் அரிது. நமது ஆறாவது அறிவின் மூலம் (ருசியின் சூட்சும ஞானேந்த்ரியத்தின் மூலம்) பரிபூரண நீர் தத்துவத்தை உணரும்போது இந்த அனுபவம் கிடைக்கும்.

இது எல்லாம் சேர்ந்து அவரது நன்றியுணர்வை அதிகரித்தபோது அவரது ஆன்மீக உணர்வு விழிப்படைந்தது. பக்தியும் அமைதியும் நிறைந்த மனநிலையுடன் குளிர்ந்த நீர் கண்களிலிருந்து வெளிப்படுவது ஆன்மீக உணர்வின் ஒருவகை வெளிப்பாடாகும்.

சூட்சுமமான வாசனை அல்லது ருசியை நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பது பற்றிய விவரமான விளக்கங்களுக்கு, ஐந்து சூட்சும ஞானேந்த்ரியங்களைக் கொண்டு ஆறாம் அறிவின் மூலம் உணர்தல் என்ற கட்டுரையை தயைகூர்ந்து பார்க்கவும்.