மூன்றாம் உலகப்போரின் போது மின்வெட்டுகள் மற்றும் நீர் பற்றாக்குறைக்கு தயாராகவும்

மூன்றாம் உலகப்போர் மற்றும் இயற்கை பேரழிவுகள் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஒருவரது தயார் நிலையை உயர்த்திக்கொள்வது மிக அவசியம்.

மூன்றாம் உலகப்போரின் போது மின்வெட்டுகள் மற்றும் நீர் பற்றாக்குறைக்கு தயாராகவும்

அட்டவணை

1. மூன்றாம் உலகப்போருக்காக உங்கள் வீட்டை தயார் செய்வதை பற்றி அறிமுகம்

ஆன்மீக ஆராய்ச்சியினால், 2020 முதல் 2025 வரையான ஆண்டுகள் உலகத்திற்கு துயரமாக இருக்கும் என கண்டறிந்தோம். இத்தகைய கொடிய காலத்தின் ஆரம்பக்கட்டமே கொரோனாவைரஸ் பரவல் ஆகும். உலகளவில் அமைதியின்மை உயர்ந்து மோதல்களும் அதிகரிக்கும். இவையனைத்தும் அணு ஆயுதங்களால் பேரழிவு ஏற்படுத்தும் மூன்றாம் உலகப்போரில் முடியும். இதனுடன் இயற்கை பேரழிவுகளும் உயரும்.

இவ்வாறு ஏன் நடக்கிறது மற்றும் அதிக தகவல்களும் கீழ்கண்ட கட்டுரைகளில் விளக்கியுள்ளோம்:

 • உடனடி மூன்றாம் உலகப்போர்
 • காலநிலை மாற்றம் புதுப்பிப்புகள் – காரணங்களும் தீர்வுகளும்
 • இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப்போரில் வாழ வழிகாட்டிகள்

பெரும் பேரழிவு வரப்போவதால், வரவிருக்கும் ஆண்டுகள் மட்டுமின்றி மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு, இன்னும் பல ஆண்டுகளுக்கு அடிப்படை பொருட்களுடன் அனைத்துமே பற்றாக்குறையாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டும் என்றில்லை. இக்கட்டுரையில் (இது வரவிருக்கும் காலங்களுக்கு தயார்படுத்திக் கொள்வதற்கான தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதியாகும்), மின்சாரம் மற்றும் தண்ணீரை பொறுத்தவரையில், இந்த பாதகமான காலங்களுக்கு உங்கள் வீடு மற்றும் வாழும் பகுதியை எவ்வாறு தயார்நிலையில் வைப்பது என்பது குறித்த சில குறிப்புகளை நாங்கள் வழங்குவோம்.

2. போருக்கும் இயற்கை பேரழிவிற்கு உங்கள் இல்லத்தை தயார் செய்வதற்கான பொதுக் குறிப்புகள்

மூன்றாம் உலகப்போர் மற்றும் இயற்கை பேரழிவுகள் நெருங்கிக் கொண்டிருப்பதால், ஒருவரது தயார் நிலையை உயர்த்திக்கொள்வது மிக அவசியம். மின்வெட்டுகள் மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் எவ்வாறாக நம்மை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளலாம் என இக்கட்டுரை விளக்குகிறது.

2020 – 2025 க்கு இடையிலும் அதன்பிறகு சில ஆண்டுகளுக்கும் நாம் எதிர்கொள்ள வேண்டிய அவசரநிலைகளுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்வது உடனடி தேவையாக இருக்கிறது. நீங்கள் வசிக்குமிடம், இல்லத்தை பற்றி ஞாபகத்தில் வைக்க வேண்டிய சில விஷயங்களை கொடுத்துள்ளோம். இயன்றவரை இந்த மாற்றங்களை செய்ய பரிந்துரைக்கப் படுகிறது.

 1. எந்தவொரு புதிய கட்டுமானத்தை துவங்குவதையும், புதிய சொத்துக்களை வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. காரணம், பூகம்பங்கள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகள் காரணமாக, வீடு அல்லது சொத்து சேதமடையக்கூடும். எனவே, ஒரு புதிய வீட்டை உருவாக்க முதலீடு செய்த பணம் வீணாகிவிடும். ஆகையால், தற்போது இருக்கும் வீட்டில் அல்லது வாடகை வீட்டில் இருப்பது நல்லது. நீங்கள் அடுக்குமாடி வீடு அல்லது வீடொன்றை வாங்க வேண்டியிருந்தால், உங்கள் நாட்டில் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை எந்த பகுதி அல்லது மாநிலம் பாதுகாப்பானது என்பதை சிந்தித்து முடிவெடுக்கவும்.
 2. நீங்கள் ஒரு அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்கள் என்றால், 3 வது மாடிக்கு மேலே உள்ள வீட்டை வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் பூகம்பத்தின் போது கீழ்தளத்தில் இருந்தால் சுலபமாக வெளியேறலாம். அணுகுண்டு வீசிய நிலையில் கீழ் தளத்திலிருந்து கட்டிடத்தின் அடித்தளத்தில் தஞ்சம் அடைவது எளிது. 4-ஆம் மாடியில் ஒருவரின் வீடு இருந்தால் அதன் கீழேயுள்ள வீட்டை வாங்க முடியுமா என்று பார்க்கவும். அத்துடன், மின் பற்றாக்குறை இருக்க வாய்ப்புள்ளதால் மின்தூக்கிகளும் இயங்காமல் போகலாம்.
 3. அணு கதிர்வீச்சின் தாக்கத்தால் ஒருவரை பாதுகாத்துக் கொள்ள சிறந்த இடம் பெரிய கட்டிடத்தின்  நடு மற்றும் அடித்தள பகுதிகள் ஆகும். அணுகுண்டு வீசிய பின்பு பரவும் கதிர்வீச்சில் இருந்து ஒருவரை காத்துக்கொள்ள, இருக்கும் இடத்தின் காங்க்ரீட் சுவர்கள் எவ்வளவு அதிக தடிமனாக உள்ளதோ, அவ்வளவுக்கு அது நல்லது.
 4. ஒருவர் வசிக்கும் வீட்டில் முக்கியமான பழுதுபார்த்தல் இருந்தால், ஏனென்றால் வெள்ளம் அல்லது வலுவான சூறாவளி / புயல் ஏற்பட்டால், அது வீட்டை மேலும் சேதப்படுத்தும். ​​கட்டமைப்பு ரீதியாக பலவீனமாக இருக்கும் வீடுகள் தீவிர வானிலை தாங்காமல் இடிந்துவிடலாம். மேலும், மோசமான காலங்களில் வீட்டை சரிசெய்வதும் கடினமாக இருக்கலாம்.
 5. உங்கள் வீடு அழகாக தெரிவதற்காக செலவு செய்யவேண்டாம், பதிலாக உங்கள் பகுதியில் எதிர்பார்க்கப்படும் கடும் வானிலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலுவாக்குவதற்கு முதலீடு செய்யுங்கள். உங்கள் பிரதேசத்தில் இயற்கை பேரழிவோ போர் துவங்கினாலோ உங்கள் வீட்டின் பகுதிகள் பாழாகலாம். ஆகையால், நீங்கள் வீட்டை அழகுபடுத்தி புதுப்பிக்க நினைத்து செலவழித்தால் உங்கள் பணம் வீணாகும்.
 6. ஒருவரின் வீடு கிராமப்புறங்களில் இருந்தால், வாழும் அளவிற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து உடனடியாக உபயோகிக்கும் நிலையில் தயாராக வைக்கவும். போர்க்காலத்தில் கிராமங்களைவிட நகரங்களில் தான் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புண்டு. மேலும், கிராமங்களைவிட நகரங்களில் தான் அதிகளவில் குற்றங்களும் போராட்டங்களும் வெடிக்க வாய்ப்புள்ளது. வரும் காலத்தில், குறைந்த நேரத்தில் வீடு மாற வேண்டியிருக்கும். கிராமப்புற வீட்டில் வாழ்வதற்கான காப்புத் திட்டத்தை வைத்திருப்பது நல்லது.
 7. உங்கள் குடும்பத்தினர் யாராவது படிப்பு அல்லது வேலை சம்பந்தமாக வெளிநாடுகளில் இருந்தால் உலகின் நிச்சயமற்ற நிலையால் அவர்களை வீடு திரும்பச்சொல்வது நல்லது. நாம் அறிந்த வாழ்க்கை முறை முற்றிலும் சமரசம் செய்யப்படுவதற்கான பெரும் ஆபத்தில் உள்ளது, அத்துடன் சர்வதேச பயணமும் சாத்தியமில்லை. தற்போது, கோவிட்-19 காரணமாக சர்வதேச பயணம் சாத்தியமற்றது. பயணம் செய்ய எந்தவொரு வழிமுறைகள் இருந்தாலும் அதனை பயன்படுத்தி பயணிக்குமாறு குடும்பத்தினரை அறிவுறுத்துங்கள். இதனால் எதிர்பார்க்க முடியாத கஷ்டமான காலங்களில் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடியும்.
 8. கொரோனா வைரஸ் போன்ற நிலைமையில் வியாதியின் தொற்றுத்தன்மை அதிகமாக இருந்ததால், குடும்பத்தினரை பிரிந்து ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாமல் இருப்பதை நாம் கண்டுள்ளோம். பல சமயங்களில் நமது அன்பானவர்களுக்கு விடை கொடுக்கக்கூட இயலாமல் போனது. தற்போதைய கிளர்ச்சியான காலத்தில் குடும்பத்தில் வயதானவர்கள் குறைந்த உடல், ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிவசப்படுவதால் துயரத்துக்கு ஆளாவார்கள். அவர்கள் இறப்பதற்கும் வாய்ப்புண்டு. காலம் மிகவும் மோசமாகிவிடுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் எல்லா ஆவணங்களையும் ஒழுங்காக வைத்திருப்பது நல்லது. இதன் பொருள் என்னவென்றால், அவர்களின் முக்கியமான ஆவணங்கள் எங்கு இருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்து, அவற்றை பாதுகாப்பான இடத்தில் ஒன்றிணைத்து, அவர்களின் வாழ்க்கை, அவர்களின் நிதி மற்றும் அவர்களின் விருப்பங்களைப் பற்றிய எந்தவொரு முடிக்கப்படாத திட்டங்களையும் கையாள்வதற்கான ஏற்பாடுகளை (உயில் எழுதி வைப்பது) செய்வது போன்றவையாகும். தன்னால் முடிவு எடுக்க இயலாத நிலையில் மாற்று குடும்பத்தினரை நியமிப்பதும் இதில் இணைந்துள்ளது.

3. மாற்று சக்தி வளங்களை பயன்படுத்தி வரவிருக்கும் போர் காலத்தில் மின் தடைகளை தவிர்க்கத் தயாராகவும்

தீவிர வானிலை அல்லது போர் காரணமாக ஏற்படும் அவசரகாலங்களில், மின்வெட்டு அல்லது மின்சாரம் இல்லாமல் போவது மிகவும் பொதுவானதாக இருக்கும். அரசாங்கம் வழங்கும் மின்சாரம் தடைபடும். அத்தியாவசிய அல்லது முக்கியமான தேவைகளுக்கு கூட மின்சக்தி இல்லாமல் நாம் பல நாட்கள் அல்லது மாதங்கள் கூட மின்சாரம் இன்றி கஷ்டப்படலாம்.

ஆகையால் மின்சாரத்தை உருவாக்குவதற்கான மாற்று மூலத்தை ஏற்பாடு செய்வது முக்கியமாகிறது. மாற்று மூலத்தை தேர்ந்தெடுக்கும்போது, நிலையான மின்சாரம் நீண்ட காலத்திற்கு கிடைக்கும்படி ஒன்றை தேர்வு செய்யவும். அத்தகைய ஒரு மூலம் அவசரகாலத்தில் மட்டுமல்லாமல், நீண்ட கால மின்சக்தியாகவும் நமக்கு பயனளிக்கும்.

3.1 தயார்நிலையில் இருக்க வீட்டில் சூரிய மின்சக்தி அமைப்புகளை  பயன்படுத்தல்

மூன்றாம் உலகப்போரின் போது மின்வெட்டுகள் மற்றும் நீர் பற்றாக்குறைக்கு தயாராகவும்

 • அதிக அளவில் சூரிய ஒளி கிடைக்கும் இடங்களுக்கு சூரிய மின்சக்தி உகந்ததாகும்.
 • சூரிய தகடுகளை கூரையில் வைக்கும்போது அது மரங்கள், பிற கட்டிடங்கள் போன்றவற்றின் நிழலில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • சூரிய மின்சக்தி அமைப்பை (சோலார் பவர் சிஸ்டம்) வடிவமைக்கும்போது, அதை ஒரு இருமுறையாகவும் பயன்படுத்தக்கூடிய கலப்பு அமைப்பாகவோ அல்லது தனித்து இயங்கும் அமைப்பாகவோ பயன்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் மின் இணைப்புகளிலிருந்து மின்சாரம் வராதபோது, சூரிய ஆற்றலை பயன்படுத்தி சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளால் உங்கள் வீட்டை இயக்க முடியும்.
 • உங்களுக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதைத் திட்டமிட்டு அதற்கேற்ப உங்கள் சூரிய மின்சக்தி அமைப்பை வடிவமைக்கவும். குளிர்காலம் மற்றும் மேகமூட்டமான நேரங்களில் சூரிய மின்சக்தி அமைப்புகளின் குறைந்த செயல்திறனை கணக்கில் கொள்ளவும்.
 • மின்சார வாகனங்களை பயன்படுத்துவதைப் பற்றி கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் சூரிய மின்சக்தி அமைப்பு மூலம் அத்தகைய வாகனங்களை சார்ஜ் செய்வதையும் கருத்தில் கொள்ளுங்கள். ஏனென்றால், வரவிருக்கும் ஆபத்து காலத்தில் பெட்ரோல் குறைந்த அளவில் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம்.
 • நீங்கள் அடுக்கு மாடிக்குடியிருப்பில் வசித்தால், அங்கே குடியிருப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கட்டிடத்தின் கூரையில் அல்லது பொதுவான மொட்டை மாடியில் சூரிய தகடுகளை வைக்க முதலீடு செய்யலாம்.
 • நல்ல ஆற்றல் மதிப்பீட்டைக் கொண்ட உபகரணங்களை வாங்கவும். எரிசக்தி திறன் கொண்ட உபகரணங்களை வைத்திருப்பது போர் காலங்களில் விலைமதிப்பற்ற சேமிக்கப்பட்ட ஆற்றலை பாதுகாக்க உதவும்.
 • உங்கள் நாடு மற்றும் மாநிலத்தில் உள்ள சூரிய மின்சக்தி அமைப்புகளுக்கான அரசாங்க மானியங்கள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து தெரிந்து கொள்ளவும்.
 • உங்கள் மின்சார தேவைகளுக்கும் நீங்கள் வசிக்கும் பகுதிக்கும் மிகவும் பொருத்தமான அமைப்பை வடிவமைப்பதில் ஒரு சூரிய நிபுணரின் உதவியை நாடுங்கள்.
 • கீழ்க்கண்ட நகர்த்தக்கூடிய சூரிய மின்சக்தியில் முதலீடு செய்யவும்:
  • தனித்து நிற்கும் சூரிய மின்சக்தியில் இயங்கும் விளக்குகள்
  • சூரிய மின்சக்தியில் இயங்கும் சக்தி வழங்கிகள்
  • நகர்த்தக்கூடிய சூரிய தகடுகள்

3.2 மின்சக்தி தேர்வுகள் குறைவாக உள்ளபோது வீட்டிற்கு பயன்படும் மற்ற தேர்வுகள்

வானம் மேகமூட்டமாக உள்ள நேரத்தில் சூரிய மின்சக்திக்கு வரம்புகள் உள்ளன. அவசரகாலங்களில், எரிபொருளின் பற்றாக்குறை இருக்கலாம், எனவே ஜெனரேட்டர்கள் இயங்காமல் போகலாம். இத்தகைய நேரத்தில், ஒளி மற்றும் பிற சக்தி தேவைகளுக்கு பின்வருவனவற்றை நாம் கருதலாம்.

 • Wood fires – மரக்கட்டைகள்
 • மின்சார டார்சுகள்/விளக்குகள் (பேட்டரியினால் இயங்குவது மற்றும் ரீசார்ஜ் செய்யக்கூடியது)
 • மெழுகுவர்த்திகள்
 • தீப்பந்தங்கள்
 • அகல் விளக்குகள்
 • மண்ணெண்ணெய் (கெரோசின்) விளக்குகள் (எரிபொருள் கிடைக்குமாயின்)
 • ஜெனரேட்டர்கள் (எரிபொருள் கிடைத்தால் அல்லது சேமிக்கப்பட்டிருந்தால்)

அரசாங்கத்தின் மின்சாரம் அவ்வப்போது கிடைத்தால் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள்

3.3 காற்று சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள்

மூன்றாம் உலகப்போரின் போது மின்வெட்டுகள் மற்றும் நீர் பற்றாக்குறைக்கு தயாராகவும்

Nenad Kajić / Veneko.hr / CC BY-SA

உலக காற்றாலை சங்கம் (WWEA) முன்வைத்த புள்ளிவிவரங்களின்படி, 2019-ஆம் ஆண்டின் இறுதியில் உலகளவில் நிறுவப்பட்ட அனைத்து காற்று விசையாழிகளின் ஒட்டுமொத்த திறன் 650.8 கிகாவாட்டை எட்டியது. வரவிருக்கும் காலங்களில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் முக்கியத்துவத்தால், அரசாங்கங்கள் அவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது முக்கியமாகிறது.

நகர்த்தக்கூடிய வீட்டு காற்று விசையாழிகள் பிரபலமாகி வருகின்றன. சூரிய கல வரிசையுடன் சேர்ந்து இயங்கும்போது காற்று விசையாழிகள் சிறப்பாக செயல்படுகின்றன, ஏனெனில் இது ஆற்றல் உற்பத்தி திறனை அதிகரிக்கிறது. பகல் நேரத்தில், சூரிய தகடுகள் சூரியனின் கதிர்களை உள்வாங்கிக்கொள்ளும் மற்றும் மாலை நேரத்தில், காற்று விசையாழி வீசும் காற்றைக் கொண்டு மின்சக்தியை உருவாக்கும்.

3.4 அணுசக்தி மோதலின் போது மாற்று மின்சக்தி அமைப்புகளின் உபயோகத்தன்மை

அணுசக்தி மோதல் ஏற்பட்டால், அந்த சூழ்நிலையில் சூரிய மின்சக்தியின் வெற்றிகரமாக வேலை செய்யும் திறனைப் பற்றி சிலர் கேள்வி எழுப்பக்கூடும். இதன் காரணங்கள்  கீழ்வருமாறு:

 1. பூமியை அடையும் சூரிய கதிர்களில் குறைவு – ஒரு குறிப்பிட்ட அளவிலான அணுசக்தி மோதலில் கூட பூமியைச் சுற்றி பெருமளவில் புகைக்கரி சூழ்ந்துவிடும். இதனால் பொதுவாக பூமியை அடையும் சூரிய கதிர்களில் ஒரு சிறிய விகிதமே பூமியை வந்தடையும். இதனால் நிச்சயமாக எந்தவொரு சூரிய மின்சக்தி அமைப்பின் செயல்திறனும் குறையும்.
 2. அணு மின்காந்த துடிப்பு (Nuclear electromagnetic pulse, EMP) – போதுமான அளவிலான அணு ஆயுதம் ஒன்று வளிமண்டலத்தில் வெடித்தால், அதன் மின்காந்த துடிப்பானது, மின்னணு சுற்றுகளை பயன்படுத்தும் எல்லாவற்றையும் சீர்குலைக்கக்கூடும். இதனால் கார்கள், விமானங்கள், மின்சார கட்டமைப்பு (எலக்ட்ரிக் கிரிட்) மற்றும் ஒருவரின் வீட்டு சூரிய மின்சக்தி அமைப்பில் உள்ள மின்னணுவியலில் (எலக்ட்ரானிக்ஸ்) மாற்ற முடியாத சேதம் ஏற்படலாம். மின்னல் தாக்குதலை தாங்கும்படி சூரிய தகடுகள் செய்யப்பட்டதால் அவை ஈ.எம்.பீ-யினால் குறைவாக பாதிக்கப்பட்டாலும், சூரிய மின்சக்தி அமைப்பின் மின்சுற்று பெரும்பாலும் பாதிக்கப்படும்.

பதில்:

 1. ஒரு குறிப்பிட்ட அளவிலான அணுசக்தி மோதல் கூட சமூகத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும். குண்டு வெடிப்பு சுற்றுவட்டத்தின் அருகில் ஒருவர் தங்கியிருந்தால், மின்சாரம் இல்லாதது ஒருவரின் கவலையாக இருக்காது, ஏனெனில் அனைவருமே முற்றிலும் அழிந்து போய் விடுவார்கள்.
 2. சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற தீர்வுகளை நாங்கள் வழங்கியிருந்தாலும், அது அணுசக்தி மோதலின் போது தொடர்ந்து செயல்படும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது.
 3. அத்தகைய சூழ்நிலையில், பௌதீக மட்டத்தில் ஆபத்தைத் தணிப்பது பற்றிய எந்தவொரு அறிவார்ந்த கலந்துரையாடலும் மிகவும் இருண்டதாகவும் எந்த நம்பிக்கையுமின்றி ஒரு முடிவுக்கு வரக்கூடும்.
 4. எவ்வாறாயினும், இந்த காலங்களில் நாம் பிழைக்கிறோமா என்பது ஒரு முக்கியமான அம்சமாக இருப்பதால், வரவிருக்கும் காலங்களுக்குத் தயாராவதைப் பற்றி சிந்திக்கும்போது ஆன்மீக அம்சத்தை மனதில் வைத்திருப்பது முக்கியம். இது தொடர்பாக, பின்வரும் விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
  1. மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் அவர்களின் விதி மற்றும் சுயவிருப்பதை பயன்படுத்தும் விதத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது. விதியின் விளைவுகளைத் தவிர்க்க முடியாது, அதனை அனுபவித்தே தீர வேண்டும். 2019 – 2025 ஆண்டுகளில், மனிதகுலத்தின் கூட்டு விதி ஒரு நபரின் வாழ்க்கையில் மிக உயர்ந்த விளைவை ஏற்படுத்தும். தற்போதைய காலங்களில் கூட்டு விதி மிகவும் பாதகமானது, எனவே பலர் பாதிக்கப்படுவார்கள்.
  2. எதிர்மறையான விதியை ஆன்மீக பயிற்சியால் மட்டுமே வெல்ல முடியும். இருப்பினும், தற்போதைய யுகத்தில், மக்களின் ஆன்மீக பயிற்சி பெரும்பாலும் இல்லாததால், உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் அழிந்து போவார்கள்.
  3. ஆன்மீக பயிற்சியில் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்பவர்கள் (அதாவது உலகளாவிய ஆன்மீக தத்துவங்களிற்கேற்ப) வரும் காலங்களில் தப்பிப்பிழைப்பார்கள். ஒரு நபரின் ஆன்மீக நிலை உயிர்வாழ்வதற்கான முக்கியமான அளவுகோலாக இருக்கும்.
  4. 50% ஆன்மீக நிலைக்கு மேல் உள்ளவர்கள் கடவுளின் கிருபையால் வரவிருக்கும் கடுமையான காலங்களில் தப்பிப்பிழைப்பார்கள். எனவே, ஆன்மீக பயிற்சியை எடுத்துக்கொள்ளும் திறன் உள்ளவர்களுக்கு கற்பிப்பது முக்கியம். இதனால் அவர்கள் 50% ஆன்மீக நிலையை அடைய முடியும்.
  5. ஒரு நபரின் உயர்ந்த ஆன்மீக நிலையைப் பொறுத்து, அணுசக்தி மோதல் ஏற்பட்டால், அவரைச் சுற்றியுள்ள பகுதி கதிர்வீச்சு போன்றவற்றிலிருந்து கடவுளால் பாதுகாக்கப்படும். இதன் காரணமாக, ஸாதகர்கள் மட்டுமல்ல, அந்த பகுதியில் உள்ள தாவரங்கள், விலங்குகள் போன்றவை காப்பாற்றப்படும்.

4. போர் மற்றும் இயற்கை பேரழிவுகளின் போது நீர் பற்றாக்குறைக்கான தீர்வுகள்

பூமியில் மிகவும் மிகுதியாக உள்ளதும் வாழ்க்கைக்கு இன்றியமையாததுமானது நீராகும். இது திரவ, திட மற்றும் வாயு நிலைகளில் உள்ளது. பூமியில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் தண்ணீரினால் மூடப்பட்டிருந்தாலும் அதில் 2.5 சதவிகிதம் மட்டுமே நன்னீராகும். மீதமுள்ளவை உப்பு, மற்றும் கடல் சார்ந்தவை. உள்ள அனைத்து நன்னீரிலும் 1 சதவிகிதம் மட்டுமே எளிதில் அணுகக்கூடிய  நிலையில் உள்ளது. அதிலும்  பெரும்பகுதி பனிப்பாறைகள் மற்றும் பனிப்பகுதிகளில் சிக்கியுள்ளது. இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், பூமி கிரகத்தின் 7.4 பில்லியன் மக்களை, அனைத்து விலங்குகள், பறவைகள் மற்றும் தாவர உயிர்களுடன் பராமரிக்க கிரகத்தின் நீரில் 0.007 சதவீதம் மட்டுமே கிடைக்க பெறுகிறது.  சுருக்கமாக, தண்ணீர் மிகவும் விலைமதிப்பற்ற பண்டமாகும்.  இது குடிப்பதற்காக மட்டுமின்றி, கழுவுதல், சுத்தம் செய்தல், சுகாதாரம், விவசாயம் போன்ற பல முக்கியமான செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

தேசிய அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ  கல்விக்கூடங்கள் ஒருவருக்கு தேவையான தினசரி திரவ உட்கொள்ளலை பின்வருமாறு தீர்மானித்துள்ளன :

 • ஆண்களுக்கு சுமார் 3.7 லிட்டர் திரவங்கள்
 • பெண்களுக்கு சுமார் 2.7 லிட்டர் திரவங்கள்

உலகம் முழுவதும் நீரின் தரம், ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் கிடைக்கக்கூடிய நீரின் அளவு ஆகியவை வேறுபடுகின்றன; இம்மாறுபாடு காலநிலை, இருப்பிடம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட பல விஷயங்களைப் பொறுத்தது.

போர் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற கட்டமைக்கப்படாத சூழ்நிலைகளில், கிடைக்கும் தண்ணீரின் அளவும் தரமும் கடுமையாக மாறக்கூடும். போர்க்காலத்தில் அல்லது பிற மோதல்களின் போது, நீர் விநியோகிக்கும் முறைகளில் இடையூறு ஏற்படக்கக்கூடும். நீர் விநியோகிக்கும் உள்கட்டமைப்புகளை அழித்தல் (எடுத்துக்காட்டாக நீர் நிலைகள் மற்றும் சுத்திகரிப்பு வசதிகள்),  நீர் நிலையங்களுக்கு உண்டான மின் நிலையங்கள் மற்றும் மின் இணைப்புகளை  வேண்டுமென்றே துண்டித்தல், மற்றும் நீர் விநியோகிக்கும் அமைப்புகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை சீர்குலைத்தல் ஆகியவற்றை எதிரிகள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கவும் அவர்களின் ஸ்திரத்தன்மையை கெடுக்கவும் செய்யக்கூடும். ஈராக் மற்றும் சிரியா  ஆகிய நாடுகளின் சமீபத்திய மோதல்களில் நாம் கண்டது போல, பொதுமக்கள் பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகளின் இணை சேதத்தின் சுமைகளைத் தாங்குகிறார்கள். ஒரு அணுசக்தி யுத்தத்தைப் பொறுத்தவரையில்,  நமது நீர் ஆதாரங்களையும் பாழ்படுத்தக்கூடிய கதிரியக்க மாசுபாட்டையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.

இவை அனைத்தும் சமூகத்தின் பெரும் பகுதியினரை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். தேவையான குறைந்தபட்ச அளவு குடிநீர் கூட கிடைக்காமல் போகலாம். மேலும், ஓரளவிற்கு தண்ணீர் கிடைத்தாலும், அது பல்வேறு நீரினால் பரவும் நோய்களால் மாசுபடுத்தப்படலாம். மோசமான சுகாதாரம், சுத்தமான நீரை பெறுவதற்கான வாய்ப்பு குறைவாலும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் தொற்று நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உள்கட்டமைப்பில் தகர்வு  ஏற்படுமெனில் காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் தைபாய்டு காய்ச்சல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உள்ளூர் அதிகாரிகள் குடிமக்களுக்கு உதவ தண்ணீர் டேங்கர்களை அனுப்ப நினைத்தாலும், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அது இயலாமல் போகலாம்.

இந்த பின்னணியுடன், வரவிருக்கும் காலங்களுக்குத் தயாராவதைப் பற்றி சிந்திக்க வாசகர்களுக்காக சில விஷயங்களை கீழே கொடுத்துள்ளோம்

நீர் ஆதாரங்கள் மற்றும் சேகரிப்பு

பெரும்பான்மையான பொது நீர் அமைப்புகள் நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீரால் வழங்கப்படுகின்றன. மேற்பரப்பு நீரில் நீரோடைகள், நீரூற்றுகள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகள் அடங்கும். உள்கட்டமைப்பு தகர்வு காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள மாற்று நீர் ஆதாரங்களை ஒருவர் பரிசீலிக்க வேண்டும்.

1.கூரைகளிலிருந்து மழைநீர் சேமிப்பு

மூன்றாம் உலகப்போரின் போது மின்வெட்டுகள் மற்றும் நீர் பற்றாக்குறைக்கு தயாராகவும்

மூலம்: சுசானா செயலகம் / சி.சி.

 1. தனியார் நீர் கிணறுகள்: கிணறு தோண்டுவதற்கு உள்ளூர் அரசாங்க அனுமதி பெற வேண்டியிருக்கலாம் மற்றும் நிபுணர்களின் உதவி தேவைப்படலாம்.
 2. குடியிருப்புகளின் கழிவு நீர் பயன்பாடு: கழிவறையை தவிர்த்து நீர் உபயோகப்படுத்தப்படும் பிற அமைப்புகளான வாய் மற்றும் முகம் கழுவ பயன்படுத்தும் பேசின்கள், சலவை இயந்திரங்கள், மழை மற்றும் குளியல் அறை போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஒழுங்காக கையாளும்போது, அதை தோட்டத்திற்கு பாதுகாப்பாக மீண்டும் பயன்படுத்தலாம்.
 3. கைப்பற்றப்பட்ட உறைநீர்: காற்றில் உள்ள நீராவி (பெரும்பாலும் ஈரப்பதம் என விவரிக்கப்படுகிறது) குளிர்ந்த மேற்பரப்புடன் தொடர்பு கொள்ளும்போது, நீர் வாயுவிலிருந்து திரவமாக மாறி குளிர்ந்த மேற்பரப்பில் சேகரிக்கப்படுகிறது . திரவமாக மாறும் காற்றில் உள்ள இந்த நீராவியே உறைநீர் என குறிப்பிடப்படுகிறது.

நீர் சுத்திகரிப்பு

பொதுவாக நீர் சுத்திகரிப்பு என்பது  தெளிவுப்படுத்தல் (திடப்பொருட்களையும் திடமான துகள்களையும் அகற்றுதல்), வடிகட்டுதல், சுத்திகரிப்பு மற்றும் உப்புநீக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அத்துடன் வழக்கமான பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து மதிப்பிற்கான சோதனை செய்து, தேவைப்படும்போது அதை கூட்டுவதற்கான பணிகளும் ஆகும்.

நீரினால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான மற்றொரு முக்கிய அம்சம், வீட்டில் செய்யக்கூடிய நீர் சுத்திகரிப்பு. பயன்பாட்டின் நிலையிலான  நீர் சுத்திகரிப்பு  என்பது எளிய வீட்டு முறைகளில் கவனம் செலுத்துகிறது. அதாவது நீரை கொதிக்க வைத்தல் , பிளீச்சிங் செய்தல், ஒரு துணி மூலம் வடிகட்டுதல், வண்டலை (மணல் மற்றும் சரளை) வடிகட்டுதல் மற்றும் ஊதா ஒளி கதிர்கள் மூலம் கிருமி நீக்கம் போன்றவற்றை குறிப்பிடலாம்.

கதிரியக்கத்தால் மாசுபட்ட நீரை காட்டிலும், நீரினால் பரவும் நோய்களே அணுசக்தி தாக்குதலில் தப்பிப்பிழைப்பவர்களை அதிகமாக கொல்லக் கூடும் எனக் கூறப்படுகிறது. உங்கள் பகுதியில் போரின் போது தண்ணீரின் தூய்மை மாசுபடும் போது தண்ணீரை எவ்வாறு குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றுவது என்பது குறித்து உங்கள் சொந்த ஆராய்ச்சியைத் தொடங்க பரிந்துரைக்கிறோம்.

பாதுகாப்பான நீரோ அல்லது கிருமி நீக்கம் செய்வதற்கான ரசாயனங்களோ ஒரு நெருக்கடியின் போது கிடைக்கவில்லை என்றால், சேறு நிறைந்த நதி நீராக இருந்தாலும், கிடைக்கும் தண்ணீரை சேமிக்கவும். பெரும்பாலான மண் ஒரு சில நாட்களில் கீழே படிகிறது; ஒரு நெரிசலான தங்குமிடத்தில் கூட தண்ணீரைக் கொதிக்க வழிகள் இருக்கலாம். ஒரு நிமிடம் தண்ணீரை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வருவது அனைத்து வகையான நோய்களையும் ஏற்படுத்தும் நுண்ணுயிர்களைக் (பாக்டீரியா) கொல்லும். சில அரிதான தொற்று உயிரினங்களைக் கொல்ல நீரை 10 முதல் 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். (விக்னர், 1979)

நீர் சேமிப்பு

நீர் சுத்திகரிக்கப்பட்டாலும், கிருமி நீக்கம் செய்யப்பட்ட கொள்கலன்களில் சேமிக்கப்படாவிட்டால், அது விரைவில் மீண்டும் மாசுபடும். நீண்ட கால சேமிப்பிற்காக, அனைத்து நீரையும் கிருமி நீக்கம் செய்வது நல்லது, ஏனென்றால் ஒரு சில உயிரினங்கள் கூட விரைவாகப் பெருகி, சேமிக்கப்பட்ட தண்ணீருக்கு மோசமான சுவை அல்லது வாசனையைத் தரக்கூடும். ஒழுங்காக கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீர் தடிமனான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாத்திரங்களில் சேமித்து வைத்தால் பல ஆண்டுகளாக பாதுகாப்பாக இருக்கும். பல ஆண்டு சேமிப்பிற்கு, மெல்லிய பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டாம், இது காலப்போக்கில் பெரும்பாலும் கசிவுகளை உருவாக்குகிறது. (விக்னர், 1979)

தண்ணீரை குறைவாகப் பயன்படுத்துங்கள்

இந்த விலைமதிப்பற்ற வளத்தை வீணாக்காமல்,  தண்ணீரை எவ்வாறு குறைவாகப் பயன்படுத்துவது என்பதையும் முடிந்தவரை எவ்வாறு மறு பயன்பாடு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்வதற்கான நேரம் இது. சாதாரண காலங்களில் நீங்கள் இதை எவ்வளவு அதிகமாகப் பயிற்சி செய்கிறீர்களோ, யுத்த காலங்களில் உங்களை தக்க வைத்துக்கொள்ள நீங்கள் தயாராக இருப்பீர்கள்.

போரின் போது நீர் பற்றாக்குறையை நிர்வகிப்பது பற்றிய பிற இதர பரிந்துரைகள்

பின்வரும் குறிப்புகள் வரவிருக்கும் பாதகமான காலங்களில் தண்ணீரை உகந்த முறையில் சேமிப்பதையும்  பயன்படுத்துவதையும்  எளிதாக்க கொடுக்கப்பட்டுள்ளன.

 • மின் இணைப்பு சாதனங்களால் மட்டுமல்லாமல் மற்றும் பிற வழிகளால் கூட தண்ணீரை இழுக்க முடியவில்லை என்றால் கிணற்றிலிருந்து தண்ணீரை இழுக்க நீண்ட தடிமனான கயிறு, வாளி போன்றவற்றை வாங்கவும்.
 • முடிந்தால், சூரிய சக்தியில் இயங்கும் ஒரு பம்ப் வைத்திருங்கள்.
 • சில ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட கிணறு உங்களிடம் இருந்தால், ஒவ்வொரு ஆண்டும் மழை வரும் வரை அதில் போதுமான தண்ணீர் இருப்பதில்லை என்றால், கிணற்றை மீண்டும் ஆழமாக தோண்டுவது பற்றிச் சிந்தியுங்கள்.
 • உங்களிடம் தண்ணீருக்கு ஒரு ஆழ் துளை கிணறு இருந்தால், அதற்கு பல வகையான மின் இணைப்புகள் இருக்க முடியுமா என்று பாருங்கள் – சூரிய சக்தி, கையால் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஒரு பம்ப். இது எதனாலென்றால் ஒரு இணைப்பு தோல்வியுற்றால், நீங்கள் மற்றொன்றை  நாடலாம்.
 • அலட்சியம் அல்லது கவனிப்பின்மையால் கிணற்றில் இருக்கும் நீர் மாசுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 • போதுமான அளவு பெரிய நீர் தொட்டிகளை வைத்திருங்கள் (கொள்ளளவு – உங்கள் குடும்பத்தின் தேவைக்கேற்ப) 10-15 நாட்கள் தண்ணீர் நீடிக்கும் அளவுக்கு.
 • மின்சாரம் இல்லாததால், நீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயலற்றதாக மாறலாம். எனவே மண்ணாலான மாற்று வடிகட்டி அவசியம்.
 • நீங்கள் சேற்று நீரை குடிக்க அல்லது சமைக்க பயன்படுத்த வேண்டி வருமானால், இந்த முறையை முயற்சிக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தைப் பெற்று அதில் சேற்று நீரை ஊற்றவும். 24 மணி நேரம் கிளறாமல் தண்ணீரை அப்டியே வைக்க வேண்டும். பின்னர், சுத்தமான தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் ஊற்றவும். தடிமனான மஸ்லின் துணியைப் பயன்படுத்தி தண்ணீரை வடிகட்டலாம். மஸ்லின் துணி சுத்தமாக இருப்பதை உறுதிசெய்து, அதை தண்ணீர் வடிகட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 • தண்ணீரை தானாக சுத்தம் செய்யக்கூடிய சில பாட்டில்கள் உள்ளன. இந்த பாட்டில்களை ஆன்லைனில் வாங்கலாம்.
 • குளிர்ந்த நீரை கொடுக்கும் பெரிய மண் நீர் பானைகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தாமல் தண்ணீரை குளிர்விக்கும் வழிகள் உள்ளன. தண்ணீருக்கு மண் பானைகளை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது என்பதற்கான நுட்பங்கள் உள்ளன. புதிய மண் பானை வாங்க, சுத்தம் செய்து குணப்படுத்த சரியான வழியைப் பார்க்கவும் | பானையிலிருந்து குளிர்ந்த நீரைப் பெற 2 தந்திரங்கள்.
 • அனைத்து நடவடிக்கைகளுக்கும் தண்ணீரை குறைவாகப் பயன்படுத்துங்கள்.
 • தோட்டங்கள் அல்லது வயல்களுக்கு சொட்டு அல்லது தெளிப்பு பாசனத்தை பயன்படுத்துங்கள். கோடையில், நீர் மிக வேகமாக ஆவியாகாமல் இருக்க மெல்லிய ஈரமான துணியால் தாவரங்களை மூடி வைக்கவும்.
 • மழைநீரை சேகரிக்க மொட்டை மாடியில் அல்லது தரையில் பீப்பாய்களை வைக்கவும். இந்த நீரை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம்.
 • நீரை திறமையாக உபயோகிக்கும் நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது, சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமும் சிறந்த மற்றும் புதுமையான வழிகளில் தண்ணீரை பயன்படுத்துவதன் மூலமும் குறைவைக் கொண்டு நிறைவை பெற ஏதுவாகிறது.

5. நூலியல்

விக்னர், ஈ. பி. (1979, மே). அணுசக்தி உயிர்வாழும் திறன் அத்தியாயம்8: நீர். Https://www.oism.org/: https://www.oism.org/nwss/s73p919.htm இலிருந்து பெறப்பட்டது.