பாலிகான்ராஸ்ட் இன்டர்பிரன்ஸ் போட்டோகிராஃபி (PIP) மற்றும் அதிநுட்பமான ஆறாவது அறிவின் மூலம் கண்டறியப்பட்ட ஒரு மஹானின் கையெழுத்திலுள்ள நேர்மறையான விளைவுகள்

பாலிகான்ராஸ்ட் இன்டர்பிரன்ஸ் போட்டோகிராஃபி (PIP) மற்றும் அதிநுட்பமான ஆறாவது அறிவின் மூலம் கண்டறியப்பட்ட ஒரு மஹானின் கையெழுத்திலுள்ள நேர்மறையான விளைவுகள்

எங்களின் கண்டுபிடிப்புகள்

எஸ்.எஸ்.ஆர்.எஃப், ஆன்மீக அறிவியலின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய PIP கருவியை பயன்படுத்தி வருகிறது. இக்கருவி மூலம், சாதாரண மனிதரின் கையெழுத்துடன் ஒப்பிடுகையில், ஆன்மீகத் தூய்மையான ஒரு மஹானின் கையெழுத்தைச் சுற்றியுள்ள சக்தி நிலை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை ஆய்வு செய்தோம். மேலும், இதனை அதிநுட்பமான ஆறாவது அறிவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆன்மீக ஆய்வுகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.

காணொளியின் எழுத்து வடிவம்

1. அறிமுகம்

வணக்கம் மற்றும் நல்வரவு.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையில் ஆன்மீக பரிமாணம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வழக்கமான அறிவியல் ஆய்வுகள் மனிதனின் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஆன்மீக ஆய்வுகள் அதிநுட்ப ஆறாவது அறிவைப் பயன்படுத்தி மட்டுமே செய்ய முடியும். ஆன்மீகப் பயிற்சி மூலம் பெறப்பட்ட அதிநுட்ப ஆறாவது அறிவை பெற்ற எஸ்.எஸ்.ஆர்.எஃப்-இன் ஸாதகர்களால், சாதாரண மனிதரால் அறிய முடியாத ஆன்மீக பரிமாணங்களை அனுபவிக்கவும் பார்க்கவும் முடிகிறது. ஆன்மீகப் பரிமாணம் என்பது சொர்க்கம், நரகம், தேவதைகள், பேய் பிசாசுகள் மற்றும் ஒளி மண்டலங்களை குறிக்கும்.

சமீப காலத்தில் பயோஃபீட்பேக் இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பயன்படுத்தி, எஸ்.எஸ்.ஆர்.எஃப் நமது ஒளி மண்டலம், நமது ஆற்றல் அமைப்புகள் மற்றும் சக்கரங்கள் மீது ஏற்படுத்தப்படும் பல்வேறு தூண்டுதல்களின் விளைவுகளைப் ஆய்வு செய்து வருகிறது. ஏனெனில் இது நாம் ஏற்கனவே ஆன்மீக வழிகளில் செய்த ஆராய்ச்சியை உடல் ரீதியாக உறுதிப்படுத்தவும் நிரூபிக்கவும் பெரும் பயனுள்ளதாக இருக்கிறது. உதாரணமாக, ஆன்மீக ரீதியில் உன்னத நிலையிலுள்ள மஹானின் கையெழுத்து குணப்படுத்தும் சக்தி கொண்டது என்பதை ஆறாம் அறிவு மூலமாக ஏற்கனவே அறிந்திருந்தோம். ஒரு மஹான் என்பவர் யார் என்று விரிவாக அறிந்து கொள்ள எங்கள் வலைத்தளத்தைப் பார்க்கவும். ஒரு மஹானின் கையெழுத்து உள்ள காகிதத்தை ஸாதகர்கள், சிறிது நேரம் கையில் வைத்திருந்த பின் அவர்களின் ஆற்றல் புலங்கள் மற்றும் சக்கரங்களை பயோஃபீட்பேக் கருவிகள் மூலம் எடுத்த அளவீடுகளில் ஒரு வியத்தகு மற்றும் நேர்மறையான விளைவு காணப்பட்டது. இது ஆன்மீகப் பயிற்சி என்பது தன்னை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள பலருக்கும் அவரது இருப்பின் மூலமாகவே நேர்மறையாக அருளக்கூடியது மற்றும் உன்னத ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான ஒரு வழியாகும் என்பதையும் நிரூபிக்கிறது.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட கருவிகளில் ஒன்று PIP (Polycontrast Interference Photography) ஆகும். இது, கீர்லியன் புகைப்படத்துக்கு ஒத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மனிதர்கள் மற்றும் பொருட்களைச் சுற்றியுள்ள ஒளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய உதவுகிறது.

இந்த ஆய்வுகளை, பயோஃபீல்ட் சயின்சஸ் மையத்தைச் சேர்ந்த டாக்டர் தோர்ன்டன் ஸ்ட்ரீட்டர் மற்றும் டாக்டர் அனிருத்த காந்தி ஆகியோரின் உதவியுடன் மேற்கொண்டோம்.

2. PIP நுட்பத்தால் உருவாக்கப்படும் படங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் தன்மை

பல்வேறு ஆன்மீக நிலைகளில் உள்ளவர்களின் கையெழுத்தைச் சுற்றியுள்ள ஆற்றல் புலம் எவ்வாறு மாறுகிறது என்பதை ஆய்வு செய்தோம். ஒருவரின் கையெழுத்திலிருந்து வெளிப்படும் நேர்மறை மற்றும் எதிர்மறைத் தன்மையை, அவர்களின் ஆன்மீக நிலையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் கவனம் செலுத்தினோம். ஒருவரின் கையெழுத்து, அவரின் ஆன்மீக நேர்மறை மற்றும் எதிர்மறைத் தன்மையை பிரதிபலிக்கிறது.

PIP நுட்பத்தால் உருவாக்கப்படும் படங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் தன்மை

உதாரணத்திற்காக, எஸ்.எஸ்,ஆர்.எஃப் ஆராய்ச்சி மையத்தில் ஆன்மீக பயிற்சி செய்து வரும் ஒரு சராசரி ஸாதகரின் கையெழுத்தை சுற்றியுள்ள ஆற்றல் வெளியை எடுத்துக்கொண்டோம். அதை முதலில் ஒரு சிறிய உறையிலும், பின்னர் ஒரு பெரிய வெள்ளை உறையிலும் வைத்தோம்.

நிறங்களைப் பொறுத்தவரை, ஆரஞ்சு, சிவப்பு மற்றும் ஊதா நிறங்கள் எதிர்மறைத் தன்மையையும், மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் நேர்மறைத் தன்மையையும் குறிக்கின்றன.

இந்த PIP படத்தில், உறையைச் சுற்றி பச்சை நிறம் பரவுவதை காணலாம். மேசையில் அதிக பச்சை நிறமும், மேசையைச் சுற்றி சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறமும், உறையில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமும் காணப்படுகிறது.

3. PIP மூலம் ஒரு சராசரி நபரின் கையெழுத்தை ஒரு மஹானின் கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தல்

பொதுவாக, ஒருவரின் கையெழுத்து அழகாக இருப்பதால் அதை நாம் விரும்புகிறோம், ஆனால் நம்மைப் பொறுத்தவரை, அழகு என்பது ஒவ்வொரு எழுத்தும் சரியான முறையில் எழுதப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. இங்கே, நம் கண்கள் எழுத்துக்களின் அழகைக் காண்கின்றன. அதனால் நம் மனம் அதை விரும்புகிறது, ஆனால் ஆன்மீகப் பயிற்சியின் மூலம் அதனுடன் தொடர்புடைய சூட்சும அதிர்வுகளையும் நம்மால் உணர முடியும்.

ஆன்மீகத்தில் பயிற்சி பெற்றவர், ஒரு மஹானின் கையெழுத்து, தோற்றத்தில் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதை நல்லதாகவே உணர்வார். அதிலிருந்து சைதன்யம் அல்லது தெய்வீக உணர்வின் அனுபவம் கிடைக்கும்.

சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் ஆன்மீகப் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.எஸ்.ஆர்.எஃப்-ன் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறார். அவருடைய கையெழுத்துடனும் இதே போன்ற ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

PIP மூலம் ஒரு சராசரி நபரின் கையெழுத்தை ஒரு மஹானின் கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தல்

இடதுபுறத்தில் சராசரி ஸாதகருடைய கையெழுத்தின் PIP படம், வலதுபுறத்தில் சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களின் கையெழுத்தின் PIP படம். இந்த இரண்டு படங்களையும் நாம் ஒப்பிடும்போது,

1. மேஜை மீது வைக்கப்பட்டுள்ள சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே கையழுத்தின் PIP புகைப்படத்தை பார்க்கும் போது, அதைச் சுற்றியுள்ள பகுதியில் காணப்படும் அதிக பச்சை நிறம் அதிக நேர்மறைத் தன்மையை உணர்த்துகிறது. ஆனால் ஒரு சராசரி ஸாதகரின் படத்தில் பச்சை நிறம் மிகக் குறைவாகவே உள்ளது.

2. மேலும், எதிர்மறைத் தன்மையைக் குறிக்கும் சிவப்பு மற்றும் ஊதா நிறங்கள் சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களின் கையெழுத்துப் படத்தில் மிகக் குறைந்த விகிதத்தில் காணப்படுகின்றன, ஆனால் சராசரி ஸாதகரின் படத்தில் அவை மிக அதிகமாக உள்ளன.

3. இறுதியாக, நேர்மறைத் தன்மையைக் குறிக்கும் மஞ்சள் நிறம் இரண்டு படங்களிலும் காணப்பட்டாலும், எதிர்மறை தன்மை கொண்ட ஆரஞ்சு நிறம் சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களின் படத்தில் காணப்படவில்லை, ஆனால் சராசரி ஸாதகரின் படத்தில் காணப்படுகிறது.

இப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டியது, PIP போன்ற கருவிகளிலிருந்து பெறப்படும் அளவீடுகள் ஒருவரின் ஆறாவது அறிவின் மூலம் பெறக்கூடியவற்றுக்கு ஒருபோதும் மாற்றாக இருக்க முடியாது என்பதேயாகும். இயந்திரங்களால் ஆன்மீகப் பரிமாணத்தின் ஒரு பகுதியை அதாவது கண்களுக்கு புலப்படும் அல்லது தெளிவாகத் தெரியக்கூடிய பகுதியை மட்டுமே அளவிட முடியும். இந்த சோதனையின் மூலம் பெறப்பட்ட காட்சிகளும் கண்டுபிடிப்புகளும், உண்மையான ஆன்மீக அனுபவத்தின் மூலம் பெறக்கூடிய அறிவின் ஒரு மேலோட்டமான பிரதிநிதித்துவமே ஆகும். இந்த சோதனை மற்றும் காட்சிகளைக் காண்பிப்பதன் முக்கிய நோக்கம் பின்வருவனவற்றைக் காட்டுவதே ஆகும் :

1. ஒரு நபரைச் சுற்றியுள்ள ஒளிமண்டலம் அல்லது ஆற்றல் புலம் மிகவும் உண்மையானது மற்றும் அதை ஓரளவிற்கு மட்டுமே படம்பிடிக்க முடியும்.

2. மேலும், அறிவியல் மனித ஆற்றல் புலம் அல்லது ஒளிமண்டலத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது.

ஒரு மஹானின் ஒளிமண்டலத்தை, மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த இயந்திரத்தாலும் முழுமையாகப் படம் பிடிக்க முடியாதது.

4. ஆறாவது அறிவின் மூலம் காணப்பட்ட மஹானின் கையெழுத்து

நவீன அறிவியலில், நாம் நமது ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் மூலம் வார்த்தைகள், தொடுதல், பிம்பம், சுவை, மணம், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களின் மூலம் கண்டு, பகுப்பாய்வு செய்கிறோம்.

ஆனால், ஆன்மீக ஆராய்ச்சியானது, சூட்சும ஒலிகள், சூட்சும தொடுதல், சூட்சும வாசனை, சூட்சும ஒளியின் காட்சிகள், அதிர்வலைகள் மற்றும் விச்வமனம், புத்தி ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கியது.

நம்மில் சில ஸாதகர்களால், நாம் ஸ்தூல / பௌதீக உலகத்தைப் பார்ப்பது போலவே, ஆன்மீகப் பரிமாணம் அல்லது ஆன்மீக உலகத்தைப் பார்க்க முடிகிறது. அவ்வாறு பார்ப்பதை அவர்கள் வரைகிறார்கள், இவை சூட்சும ஞானத்தின் அடிப்படையிலான ஓவியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த ஓவியங்கள், எந்தவொரு பொருள் அல்லது நிகழ்வுடன் தொடர்புடைய சூட்சும நிலையில் உணரப்பட்ட அம்சங்களின் ஒரு சித்திரப் பிரதிநிதித்துவம் அல்லது விளக்ககாட்சியாகும்..

இது, சூட்சும ஞானத்தின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களின் கையெழுத்தின் வரைபடம். இதில் தெய்வீக சைதன்யத்தின் சூட்சும அதிர்வலைகளை உணர முடியும்.

சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களின் கையெழுத்தின் சூட்சும வரைபடம்

1. வாக்கியங்களிலிருந்து மஞ்சள் நிறத்தில் வெளிப்படும் தெய்வீக சைதன்யத்தின் ஓட்டம்.

2. வாக்கியங்களில் உள்ள வார்த்தைகளைச் சுற்றி சக்தியின், ஆன்மீக ஆற்றலின் வெளிப்பாடு.

3. கையெழுத்தைச் சுற்றி தெய்வீக சைதன்யத்தின் வளையங்கள் உருவாகி, பரவுதல். அவை காகிதத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் பரப்பப்படுகின்றன.

4. தெய்வீக சைதன்ய அலைகள் வார்த்தைகளிலிருந்து மேல்நோக்கிப் பரவுகின்றன. மேலும் ஆனந்தத்தின் இளஞ்சிவப்புத் துகள்கள் சுற்றுச்சூழழில் பரப்பப்படுகின்றன.

இதன் மூலம் ஒரு இயந்திரத்தால் உணரக்கூடியதற்கும் ஆறாம் அறிவின் மூலம் உணரக்கூடியதற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளதை உணர முடியும்.

இதேபோல், மனித நகங்கள், முடி மற்றும் பல்வேறு வகை ஆன்மீக ஸாதகர்களின் படங்கள் தொடர்பான ஆற்றல் புலங்களைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வை நாங்கள் செய்துள்ளோம்.

5. சுருக்கம் மற்றும் முக்கிய கண்டுபிடிப்புகள்

இந்தச் சோதனையின் மூலம் இன்று சில முக்கிய கண்டுபிடிப்புகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

1. இந்தச் சோதனைகள் மூலம் ஆன்மீகப் பயிற்சி செய்யும் சராசரி மனிதருக்கும் மஹானுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் எவ்வித ஆன்மீகப் பயிற்சியும் செய்யாதவரை ஒப்பிடத்தேவையில்லை.

2. பலரும் மஹான்களின் இருப்பை நம்புவதில்லை. ஆனால் PIP படங்கள், அவற்றின் நேர்மறைத் தன்மையைப் புரிந்து, அதை பற்றி அறிந்து, இறுதியில் மஹானின் ஆன்மீக நிலையை அடைவதற்குரிய ஆர்வத்தைத் தூண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

3. ஆன்மீகப் பயிற்சி மிகவும் அவசியம், ஏனெனில் அதன் மூலம் ஒருவர் மஹானின் நிலையை அடைந்து, சுற்றுச்சூழலை நேர்மறையாக மாற்ற முடியும்.

சூட்சும ஒளிமண்டலத்தைப் பற்றிய இந்த விளக்கம் இதைப் பற்றிய உங்கள் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் என்று நம்புகிறேன். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து எங்கள் வலைத்தளமான ஐப் பார்வையிடவும்.

இந்த வீடியோவை நாங்கள் உருவாக்கியதன் மூலம் கற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் இதை பார்ப்பதன் மூலம் நிறைய கற்றுக்கொண்டீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் ஆன்மீகப் பயணத்திற்கு எங்களது நல்வாழ்த்துக்கள்.

வணக்கம்.