புத்தாண்டை வரவேற்பதற்கான ஒரு ஆன்மீகக் கண்ணோட்டம்

1. புத்தாண்டை கொண்டாடுவதன் ஆன்மீக விளைவு பற்றிய அறிமுகம்

புத்தாண்டு என்றாலே நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்களுடன் ஆடல்பாடல், மதுபானம், பலவகை உணவு, பட்டாசு வெடித்தல், கோலாகலம், கொண்டாட்டம் போன்றவை தான் மனதில் எழுகின்றன. கடந்த ஆண்டின் இன்ப துன்பமான நிகழ்வுகளையும் நினைப்பதன் தருணம் இதுவே. புதிய வருடத்தில் நாம் மேற்கொள்ளும் தீர்மானங்களையும் மறக்கலாகாது. புத்தாண்டன்று இத்தகைய தீர்மானங்களையும் நாம் மேற்கொள்கிறோம், அவற்றில் சில புதியவை, சிலர் பழையது. வரவிருக்கும் புத்தாண்டில் இத்தீர்மானங்களை நிறைவேற்ற நாம் நினைத்தவண்ணம் நள்ளிரவு 12 மணி ஆகிவிடுகிறது!

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் உலகெங்கும் டிசம்பர் 31 கோலாகல கொண்டாட்டங்கள் நிறைந்த தருணமாக இருந்தாலும் புத்தாண்டின் தேர்வு குத்துமதிப்பானதே. உண்மையில் ஜூலியஸ் சீசரே கிமு 46 இல், இன்று போல் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு தொடங்குவதாக அமைத்தார். இருப்பினும் கி.பி 1582 ஆண்டில் கிரெகொரியின் நாட்காட்டி அமுலுக்கு வரும்வரை புத்தாண்டு கொண்டாட்டத்தின் தேதி சீரற்றதாகவே இருந்தது.

புத்தாண்டன்று வாரத்தின் ஒரு நாள் இன்னொரு நாளாக மாறுவதே யதார்த்தம், ஆனால் ஏனோ அறியாக் காரணங்களால், இதனை பெரும் ஆடம்பரமாக உற்சாகமாக கொண்டாட வேண்டும் எனும் நிலையிலுள்ளோம். கொண்டாட்ட முறைகள் பலவகை உள்ளன பிரபலமான நைட் கிளப்இல் புத்தாண்டு விருந்து, அல்லது விலையுயர்ந்த மதுபானங்களை அருந்துதல், பட்டாசு வெடித்தல், வீட்டிலேயே விருந்து படைத்தல் அல்லது சுற்றுலாவுக்கு செல்லுதல். எதுவாயினும் உள்நோக்கம் ஒன்றே உண்ணுதல், மது அருந்துதல், ஆடல்பாடல், நாளை என்பதொன்று இல்லையென நினைத்து கூத்தாடுதல்! இதற்கு மாறாக சிலர் கோயில்ஆலயங்களுக்கு செல்வது என இன்னும் புனிதமான முறையில் புத்தாண்டை வரவேற்க நினைப்பார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் நடைபெறுவது மிகவும் வித்தியாசமானது, ஆன்மீக ரீதியில் தீங்கானதும் கூட. இந்நேரத்தில் தீய சக்திகள் உச்சத்தில் இருக்கும். அதனால் புத்தாண்டை கொண்டாட மக்கள் கூட்டம் கூடும்போது தீய சக்திகளால் அவர்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு.

கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் மறுநாள் நாம் இயல்பு நிலைக்கு திரும்புகிறோம். விருந்துகளில் மது அருந்தியவர்களுக்கு, அதனால் ஏற்படும் தூக்கம் மற்றும் தலைவலியில் (hangover) இருந்து மீண்டு வருவதே முன்னுரிமையாக இருக்கும். இருப்பினும், உடல் மற்றும் உளவியல் ரீதியில் நாம் உணரும் விளைவைவிட பெரிதானது ஏதாவது உண்டா? நாம் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் பல நம்மை ஆன்மீக ரீதியில் பாதிப்படையச் செய்யக்கூடியவை. புத்தாண்டு கொண்டாட்டங்களினால் ஏற்படக்கூடிய ஆன்மீக விளைவுகளை கண்டறியும் நோக்கில், எஸ்.எஸ்.ஆர்.எஃப் மற்றும் மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகம் ஆன்மீக ஆராய்ச்சியை மேற்கொள்ளத் தீர்மானித்தது.

2. மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகத்தின் பின்னணி

 பாரதத்தின் கோவாவிலுள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையமும் ஆசிரமமும்மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகமானது (MAV என்றும் அழைக்கப்படும்) பாரத நாட்டின் கோவா மாநிலத்தில் அமைந்துள்ளது. இலாப நோக்கற்ற நிறுவனங்களான மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகம் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சி அறிவியல் அறக்கட்டளையானது உலகெங்கும் ஆன்மீக வளர்ச்சி மற்றும் சத்தியத்தை நாடும் பொதுவான நோக்கமுடைய தொண்டர்களால் நடத்தப்படுகின்றது. இவ்விரண்டு நிறுவனங்களின் ஒரு முக்கியமான இலக்கு என்னவென்றால் நமது முடிவுகளும் தினசரி பணிகளும் ஆன்மீக அளவில் எவ்வாறு நம்மை பாதிக்கிறது என்று ஆராய்வதே ஆகும். இதன் ஆராய்ச்சிக் குழுவினர் இணைந்து பல்வேறு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை பாரதத்தின் கோவா மாநிலத்திலுள்ள ஆன்மீக ஆராய்ச்சி ஆசிரமத்தில் மேற்கொள்கின்றனர். 2019 வரை மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகத்தின் ஆன்மீக ஆராய்ச்சிக் குழுவினருக்கு 38 ஆண்டுகள் ஆன்மீக ஆராய்ச்சி அனுபவம் உள்ளது.

3. புத்தாண்டை ஒரு பிரபலமான மதுக்கூட உணவகத்தில் கொண்டாடுவதால் ஏற்படும் விளைவுகளை அறிய பரிசோதனை

3.1 பின்னணி மற்றும் நோக்கம்

புத்தாண்டு இரவு முழுவதும் வெளியே நேரத்தை கழிப்பதன் சூட்சும விளைவைப் பற்றி படிக்க ஆன்மீக ஆராய்ச்சி குழு எண்ணினர். புத்தாண்டை கொண்டாட வெவ்வேறு வழிகளை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் ஒரு கிளப் விருந்தில் பங்கேற்பதன் பொதுவான கொண்டாட்ட முறையின் விளைவைப் பற்றி ஆராய்ச்சி குழி கண்டறிந்தனர். புத்தாண்டு என்பது பிரதிபலிப்பு மற்றும் புதுப்பித்தலுக்கான நேரமாகும், அதோடு ஆன்மீகக் கண்ணோட்டத்தில் நமது உண்மையான வாழ்க்கை நோக்கத்தை நிறைவேற்ற நமக்கு வழங்கப்பட்ட மற்றொரு ஆண்டின் தொடக்கத்தைக் குறிப்பதால், ஆண்டின் சுபமான நேரம் என்றும் கருதப்படும்.

புத்தாண்டை வரவேற்கும் வழக்கமான கொண்டாட்டங்கள் மங்களகரமான சுபநிகழ்வுடன் பொருந்துமா? ஒரு மனிதனின் வாழ்க்கை நோக்கமான விதியை பூர்த்தி செய்தல் மற்றும் ஆன்மீக ரீதியில் முன்னேற இக்கொண்டாட்டங்கள் எவ்விதத்திலாவது உதவுகின்றதா? குறைந்தபட்சம் இக்கொண்டாட்டங்கள் நம்மை ஆன்மீக ரீதியியாக மோசமான நிலையில் தள்ளிவிடக்கூடாது.

  • மனதில் இக்கேள்விகளோடு ஆராய்ச்சிக் குழுவினர் ஒரு பரிசோதனையை நடத்தினர். புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கும் மக்கள் ஆன்மீக ரீதியில் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என புரிந்துக்கொள்ள எண்ணினர்.

முறை

ஆன்மீக ஆராய்ச்சி ஆசிரமத்திலிருந்து 12 ஸாதகர்கள் இந்த பரிசோதனையில் கலந்து கொண்டனர். 2019-ஆம் ஆண்டை வரவேற்க பாரதத்தின் கோவாவில் உள்ள ஒரு பிரபல மதுக்கூட உணவகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேட்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது. இந்த பரிசோதனைக்காக தேர்வு செய்யப்பட்ட மதுக்கூட உணவகம் மிகவும் பிரசித்தி பெற்று சமுதாயத்தின் செல்வந்தர்களை ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருந்தது. விருந்துக்குச் செல்லும் பொதுவான நபரைப்போல் கொண்டாட்டங்களில் மூழ்க ஸாதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

. பங்கேற்கும் ஸாதகர்களை பற்றி

  • பங்கேற்கும் அனைத்து ஸாதகர்களும் தொடர்ந்து ஆன்மீகத்தைப் பயிலுவதால் சராசரி ஆன்மீக நிலையைவிட அதிக நிலை படைத்தவர்கள் ஆவர். அதாவது, கொண்டாட்டங்களின் போது சுற்றுச்சூழலில் ஆன்மீகக் கஷ்டம் இருந்தால் சராசரி மனிதரைவிட இவர்களால் தீய விளைவுகளை நன்கு எதிர்கொள்ள முடியும்.

  • 12 ஸாதகர்களின் மாதிரியில் சிலருக்கு ஆன்மீகக் கஷ்டம் இருந்தது, சிலருக்கு இல்லை, அதாவது அவர்கள் ஆன்மீக ரீதியில் நேர்மறையானவர்கள். ஆன்மீகக் கஷ்டம் என்றால் என்ன? என்ற கட்டுரையை காணவும். மாதிரியில் இரு வகையினரையும் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்னவென்றால் உலகின் பெரும்பாலான ஜனத்தொகை ஆன்மீக கஷ்டத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன, அதனால் இரு வகையினரின் மீதும் கொண்டாட்டங்களின் விளைவின் வேறுபாடு என்னவென்று அறிய அவசிமாகிறது.

. பரிசோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவியைப் பற்றி

அதிநுட்ப ஆறாவது அறிவுடன் யுனிவர்சல் தெர்மோ ஸ்கேனர் (யு.டி.எஸ்.) எனப்படும் ஒளிமண்டலம் மற்றும் ஆற்றல் ஸ்கேனர்ஐ உபயோகித்து ஆன்மீக ஆராய்ச்சி குழுவினர் ஒரு பிரபல மதுக்கூடம் மற்றும் உணவகத்தில் புத்தாண்டை கொண்டாடுவதன் விளைவுகளை ஆராய்ந்துள்ளனர்.

யுனிவர்சல் தெர்மோ ஸ்கேனர் (யுனிவர்சல் ஆரா ஸ்கேனர் என்றும் அழைக்கப்படுகிறது)பரிசோதனையில் பங்கேற்கும் ஸாதகர்களை ஆராய யுனிவர்சல் தெர்மோ ஸ்கேனர் (யு.டி.எஸ்.) அல்லது யுனிவர்சல் ஆரா ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டது. முன்னாள் அணு விஞ்ஞானி டாக்டர் மன்னெம் மூர்த்தி உருவாக்கிய யு.டி.எஸ் (UTS) என்ற கருவி நேர்மறை மற்றும் எதிர்மறை சூட்சும ஆற்றலையும், உயிருள்ளஉயிரற்ற பொருளை சூழ்ந்திருக்கும் ஒளிமண்டலத்தையும் அளக்க உபயோகிக்கப்படுகிறது. ஸாதகர்களை சுற்றியும் உள்ள நேர்மறை, எதிர்மறை மற்றும் அளவிடப்பட்ட ஒளிமண்டலத்தின் தகவலை யு.டி.எஸ் (UTS) அளவீடுகள் அளித்தது. யு.டி.எஸ் (UTS) அளவீடுகள் எவ்வாறு எடுக்கப்படுகிறது, அதன் பொருள் என்ன (விரைவில்) என்பதை பற்றி மேலும் அறிய யு.டி.எஸ் (UTS) இயங்கும் முறை என்ற கட்டுரையை காண்க.

. நிகழ்வுகளின் வரிசை மற்றும் அளவீடுகளை பற்றி

புத்தாண்டு கொண்டாட்டத்தின் சூட்சும விளைவை ஆராய நடத்தப்பட்ட பரிசோதனையின் போது நிகழ்வுகளின் வரிசை

 

  • மாலை 7 முதல் இரவு 8 வரை மாலையில் கிளம்புவதற்கு முன் பங்கேற்பவர்களின் அடிப்படை யு.டி.எஸ் அளவீடுகள் எடுக்கப்பட்டன.

தனது முதல் அடிப்படை அளவீடுகள் எடுக்கப்பட்ட பின்பு ஆன்மீக ஆராய்ச்சி ஆசிரமத்திலிருந்து எந்தவித உணவும் தண்ணீரும் எடுத்துக்கொள்ளக் கூடாது என ஸாதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டனர். ஏனென்றால் இதனால் வலிமையான நேர்மறை சக்தி உருவாகிறது. இதே காரணத்தால் அவர்களை கடவுளின் நாமஜபம் செய்தல் அல்லது கடவுளை நினைத்தல், ஆன்மீக உணர்வு எழுப்புதல், ஆன்மீக அனுபவங்களை பகிர்தல், ஸத்சேவை செய்தல் போன்ற எவ்வித ஆன்மீக பயிற்சி செயல்களையும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டனர். பொதுவாக விருந்துக்குச் செல்லும்போது அணியும் ஆடையை அணியுமாறு, பெண்கள் தன் முகத்தில் ஒப்பனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஒரு சராசரி நபர் புத்தாண்டு விழாவுக்கு சென்றால் நடக்கவிருக்கும் உண்மையான பிரதிபலிப்பை ஏற்படுத்த ஆராய்ச்சி குழுவினர் முயற்சிக்கின்றனர்.

  • இரவு 8:30 முதல் 10 வரை நிகழ்விடத்திற்கு பயணம் செல்லும் வழியில் நிறுத்தி சைவ சிற்றுண்டி சாப்பிட்டனர். செல்லும் வழியில் பங்கேற்பவர்கள் பிரபல பாடல்களை கேட்பதோடு பாடிக்கொண்டிருந்தனர்.

  • இரவு 10 மணி பரிசோதனையின் பங்கேற்பாளர்கள் நிகழ்விடத்திற்கு வருகை.

  • இரவு 10 முதல் அதிகாலை 4:30 வரை நிகழ்விடத்தில்

    • ஒலிக்கப்பட்ட இசைக்கு ஸாதகர்கள் ஆடினார்கள். இசையின் வகை அதிரடியானதாக இருந்தது. டிரான்ஸ் அல்லது ஹெவி மெட்டல் இசை எதுவும் இசைக்கப்படவில்லை.

    • நடுவில் பங்கேற்கும் ஸாதகர்கள் சைவ பலகாரங்களை உட்கொண்டு அவ்விடத்திலிருந்து வாங்கிய மினரல் தண்ணீரை அருந்தினார்கள்.

    • ஸாதகர்கள் மது அருந்தவில்லை, புகை பிடிக்கவில்லை, சட்டவிரோத போதைப்பொருள் அருந்தவில்லை.

    • அதிகாலை 4:15 வரை ஸாதகர்கள் ஆடிக்கொண்டு இருந்தனர்.

  • அதிகாலை 4:30 – நிகழ்விடத்திலிருந்து புறப்பாடு

  • அதிகாலை 4:30 முதல் 5:20 வரை ஜனவரி 1, 2019 அதிகாலை 4:30 அன்று அவ்விடத்திலிருந்து ஸாதகர்கள் புறப்பட்டு அதிகாலை 5:20 மணிக்குள் ஆசிரமத்திற்கு வந்தடைந்தனர்.

  • அதிகாலை 5:20 முதல் காலை 6 வரை ஸாதகர்கள் வந்தவுடன் ஆசிரமத்திற்கு வெளியே அவர்களது யூ .டி.எஸ் அளவீடுகள் எடுக்கப்பட்டன. ஆசிரமத்தின் உச்சக்கட்ட நேர்மறை சக்தி அளவீடுகளை பாதிக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.

3.2 யூ.டி.எஸ் (UTS) அளவீடுகள்

4 வகையான யூ.டி.எஸ் அளவீடுகள் உள்ளன

  • அகச்சிவப்பு (.சி/IR) மற்றும் புற ஊதா (பு./UV): எதிர்மறை சக்தி அளவீடுகள் 2 வகையாக குறிக்கப்படுகிறது, அகச்சிவப்பு மற்றும் புற ஊதா. குறைவான தாக்கமுடைய எதிர்மறை அதிர்வுகளை அகச்சிவப்பு குறிக்கிறது, மாறாக சக்திவாய்ந்த எதிர்மறை அதிர்வுகளை புற ஊதா குறிக்கிறது.

  • நேர்மறை ஒளிமண்டலம் (நே./PA): நேர்மறை ஒளிமண்டலத்தை குறிக்கிறது.

  • அளவிடப்பட்ட ஒளிமண்டலம் (./MA): அளவெடுக்கப்படும் நபருக்கு குறிப்பான ஒட்டுமொத்த அளவிடப்பட்ட ஒளிமண்டலத்தை குறிக்கிறது.

ஆராய்ச்சிக் குழுவினர் இக்கருவியை விரிவாக பயன்படுத்தியது, அதாவது ஐந்தாண்டு காலத்தில் பொருட்களின் 10,000 அளவீடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த யூ.டி.எஸ் மிகவும் துல்லியமாக இருப்பதோடு ஆறாவது அறிவின் மூலம் பெறப்பட்ட அளவீடுகளுடன் நன்கு பொருந்துகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு பங்கேற்றவர்களின் அனைத்து யூ.டி.எஸ் அளவீடுகளும் மேலும் எதிர்மறையாக ஆயிற்று.

பரிசோதனையில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் அ.சி/IR எதிர்மறை ஒளிமண்டல அளவீடுகள் எவ்வாறு அதிகரித்துள்ளது என கீழேயுள்ள வரைபடம் காட்டுகிறது. ஆன்மீக கஷ்டங்கள் இருக்கும் ஸாதகர்களுக்கு அ.சி/IR எதிர்மறை ஒளிமண்டல சராசரி உயர்வு (மீட்டர் கணக்கில்) 343% இருந்தது. நேர்மறை ஸாதகர்களாக கருதப்பட்டவர்களின் அ.சி/IR எதிர்மறை ஒளிமண்டல சராசரி உயர்வு மீட்டர் கணக்கில் 354% இருந்தது. மனம் வெளிமுகப் பார்வையோடும், சற்றே நிலையற்றதாகவும், வரவிருக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கவனம் செலுத்தியதாக நேர்மறையாக இருந்த ஸாதகர்கள் பின்னர் கூறினார்கள். பரிசோதனை தொடக்கத்தில் அடிப்படை அளவீடுகள் எடுக்கும்போது அனைத்து நேர்மறை ஸாதகர்களிலும் எதிர்மறை அ.சி/IR ஒளிமண்டலம் கண்டறியப்பட்டது தான் இதற்கு காரணம்.

●யூ.டி.எஸ் மூலம் எடுக்கப்பட்ட அ.சி/IR எதிர்மறை ஒளிமண்டல அளவீடுகளை பார்த்தவாறு பங்கேற்பாளர்களின் மீது புத்தாண்டு கொண்டாட்டங்களின் விளைவு

முன்பு சொன்னது போல், மிகத் தீவிர வடிவமான ஆன்மீகக் கஷ்டத்தை புற ஊதா எதிர்மறை அளவீடுகள் குறிக்கிறது. கீழேயுள்ள வரைபடத்தை பார்த்தால், ஆன்மீகக் கஷ்டங்களுடைய ஸாதகர்களின் சராசரி பு./UV எதிர்மறை ஒளிமண்டல அளவீடுகளின் உயர்வு 291% ஆகும். ஒருத்தரை தவிர்த்து அனைத்து நேர்மறையான ஸாதகர்களுக்கு பு./UV அளவீடுகள் வந்தது, இது சற்று விசித்திரமானதாகும். பு./UV அளவீடுகள் கண்டறியப்பட்டால் ஆன்மீகக் கஷ்டம் அல்லது பேய்களின் பிடிப்பு என்று பொருள், இதை கவனிக்காமல் விட்டால் பேய்கள் ஆக்கிரமித்து விடும்.

●யூ.டி.எஸ் மூலம் எடுக்கப்பட்ட பு.ஊ/UV எதிர்மறை ஒளிமண்டல அளவீடுகளை பார்த்தவாறு பங்கேற்பாளர்களின் மீது புத்தாண்டு கொண்டாட்டங்களின் விளைவு

குறிப்பு: இன்றுவரை ஆன்மீக ஆராய்ச்சி ஆசிரமத்தில், இதுவே யு.டி.எஸ் மூலம் கண்டறியப்பட்ட உயர்ந்த அளவு எதிர்மறை அ.சி/IR மற்றும் பு./UV ஒளிமண்டலம் ஆகும். பங்கேற்கும் ஸாதகர்களின் மீது பரிசோதனையின் ஆன்மீகத் தாக்கத்தின் தீவிரத்தை இது குறிக்கிறது. ஆகையால், பங்கேற்பவர்கள் உணர்வின் மீது புத்தாண்டு கொண்டாட்ட விளைவுகளின் தீவிரத்தை குறிக்கிறது.

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் யாதெனின் பொதுவாக இவ்விழாக்களில் மது அருந்துவது, போதைப்பொருள் போன்ற ஈடுபாடு இருக்கையில், ஸாதகர்கள் எதிலுமே ஈடுபடாமல் இருந்தும் இத்தகைய பெரிதளவு எதிர்மறைத்தன்மையின் உயர்வு காணப்பட்டது. பரிசோதனைக்காக இத்தகைய செயல்களில் ஸாதகர்கள் ஈடுபட்டிருந்தால் பின்விளைவுகள் மிக மோசமாக இருந்திருக்கும்.

பதிப்பாளரின் குறிப்பு: விருந்துக்குச் செல்லும் சராசரி நபர் புத்தாண்டு விழாவில் மது அருந்தி, புகைப்பிடித்து, மாமிசம் உண்டு பொழுதுப்போக்கு போதைப்பொருட்களில் ஈடுபடுவார். மேலேயுள்ள அளவீடுகளைப் பார்த்தால், விருந்துக்கு செல்லும் இப்படிப்பட்டவர்கள் ஆன்மீக ரீதியில் பாதிப்படைய தன்னையே அதிக ஆபத்தில் தள்ளிக்கொள்வார்கள்.

3.3 ஆறாவது அறிவினால் பெறப்பட்ட கண்டுபிடிப்புகள்

யு.டி.எஸ் போன்ற உபகரணங்கள் அருமையான ஆன்மீக ஆராய்ச்சிக் கருவிகளாக திகழ்ந்தாலும் உண்மையான அளவு மற்றும் சூட்சும அதிர்வுகளை ஆராய ஆறாவது அறிவு மூலம் மட்டுமே முடியும். மக்கள் மற்றும் பொருட்கள் எழுப்பும் அதிர்வுகளை உண்மையில் உணரக்கூடிய ஸாதகர்கள் ஆன்மீக ஆராய்ச்சி ஆசிரமத்தில் உள்ளனர். அவைகளை வரைந்து ஆன்மீக எக்ஸ்ரேஆக திகழும் இவை, புத்தாண்டு கொண்டாட்ட விழா போன்ற நிகழ்வுகளின் உண்மை இயல்பை பற்றி தெளிவூட்டுகிறது.

எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஸாதகராகிய திருமதி யோயா வாலே சூட்சும ஞானத்தின் அடிப்படையில் ஓவியங்கள் வரைந்து வருபவர், இத்தகைய விழாக்களிலிருந்து அதிகளவு கஷ்டம் தரும் சக்திகள் உருவாகுவதை அவர் கண்டார். கஷ்டமளிக்கும் அதிர்வுகளால் மக்கள் சூழப்பட்டு இருந்தனர், மேலும் மாயாவி சக்தி உருவெடுத்தது. மக்களை கவர்ச்சியாக காண்பித்த இந்த மாயாவி சக்தி உண்மையில் மாயை தான். தீய சக்திகளும் அங்கே செயலுடன் இருந்தன, மக்களையும் சூழலையும் முற்றிலுமாக பாதித்துக்கொண்டு இருந்தன. ஆகமொத்தத்தில், நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்ட விழா அங்கிருக்கும் மக்கள் மீது அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது.

●டிசம்பர் 31 அன்று புத்தாண்டு விழா கொண்டாடுவதால் சுற்றுச்சூழல் மற்றும் நபர் மீது ஆன்மீக விளைவுகள் (புள்ளிகளை வரிசையாக படிக்கவும் - 1, 2, 2அ, 3, 3அ, 3ஆ, 3இ, 3ஈ, 4, 4அ)

4. ஸாதகர்களிடமிருந்து வந்த கணக்கெடுப்பு கருத்து

பரிசோதனையில் பங்கேற்ற ஸாதகர்களிடம் ஒரு கணக்கெடுப்பின் மூலம், நிகழ்விடத்திற்கு புறப்படும் முன்பு, விழாவின் போது மற்றும் அதற்கு மறுநாள் அவர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் என கேட்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து ஆன்மீக பயிற்சி செய்ததால் அத்தகைய விழாக்களில் உள்ள சூட்சும அதிர்வுகளை அவர்களால் உணர முடிந்தது. பரிசோதனையின் போதும் அதற்கு பின்பும் அவர்களின் உணர்வுகளின் சுருக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

புறப்படுவதற்கு முன்

புத்தாண்டு விழாவுக்குச் செல்லப்போகிறோம் என்று கேட்டவுடன் தமக்குள் வெளிமுகச் சிந்தனைகள் வந்ததை பல ஸாதகர்கள் கவனித்தனர். எவ்வாறு ஆடை அணிவது, மாற்று பாலினத்தையும் பிறரையும் எவ்வாறு ஈர்ப்பது என்பதைப்பற்றிய எண்ணங்கள் தானாகவே அவர்கள் மனதை நிரப்பியது. ஆன்மீக ஸாதனா பற்றிய சிந்தனைகள் குறைந்திருந்தன.

பரிசோதனையின் போது

பரிசோதனையின் போது நிகழ்விடத்தின் சுற்றுச்சூழல் ஆன்மீக ரீதியில் எதிர்மறையாகவும், மாயாவி சக்தியினால் சூழப்பட்டுள்ளது எனவும் ஸாதகர்கள் கவனித்தனர். உண்மையில் எதிர்மறை சக்திகள் நிகழ்விடத்திலுள்ள மக்களின் மூலமாக ஆடல்பாடலுடன் தங்களை வெளிப்படுத்திக் கொண்டன என ஸாதகர்கள் உணர்ந்தார்கள். வளாகத்தின் கஷ்டமளிக்கும் சக்தியால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஸாதகர்கள் உணர்ந்தார்கள். தம்மை ஆக்கிரமித்திருக்கும் தீய சக்திகள் வெளிப்படத் தொடங்கின என ஆன்மீக கஷ்டங்களிலிருந்து பாதிக்கப்பட்ட ஸாதகர்கள் உணர்ந்தனர். அதிகபட்ச வெளிப்பாடுகளாக இல்லாவிட்டாலும் ஆடவேண்டும் என்ற எண்ணமும், சிலருக்கு அதிகளவு காமச் சிந்தனைகளின் வடிவிலும் இருந்தன.

பதிப்பாளரின் குறிப்பு: சூட்சும கருப்பு சக்திகளை எடுக்க ஆடலும் இசையும் தீய சக்திகளுக்கு சக்திவாய்ந்த கருவிகளாகும். இசை மற்றும் நடனத்தின் ஆன்மீக அம்சங்கள் என்ற எங்களது காணொளியைப் பார்க்கவும். நடன மேடையில் ஆடும் மக்களின் மூலம் எதிர்மறைத் தன்மையை அதிகரிக்கும் நடனச் செயல்களை செய்து தீய சக்திகள் வெளிப்படும். ஆகையால், மக்கள் தீவிர நடனமாடி மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று காணப்பட்டாலும் இவையனைத்தும் தீய சக்திகளின் செயல் தான்.

பரிசோதனைக்கு மறுநாள்

குறைந்த ஆற்றலுடனும், பலவீனமாகவும், உடல் வலியுடனும் இருப்பதாக ஸாதகர்கள் உணர்ந்தார்கள். விருந்துக்கு பிறகு ஸாதகரைப் பொறுத்து 1 முதல் 3 நாட்கள் வரை இவ்வுணர்ச்சிகள் இருந்தன. தனது மனமும் புத்தியும் இருள்சூழ்ந்து இருப்பதாகவும் உணர்ந்த ஸாதகர்கள் தினசரி பணிகளை செய்ய குழம்பினார்களாம். ஆன்மீகக் கஷ்டமுள்ள ஸாதகர்கள் ஆன்மீக நிவாரணங்கள் எடுத்துக்கொண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப அதிக நேரம் ஆனதாம்.

பதிப்பாளரின் குறிப்பு: ஆன்மீக பயிற்சி செய்ததால் ஆன்மீக கஷ்டங்களை கிரகிக்க அதிக உணர்திறனை ஸாதகர்கள் படைத்துள்ளனர். இருப்பினும் தனது ஆன்மீக பயிற்சியால் கருப்புப் படலத்தை விரைவில் குறைக்க முடிந்தது. அப்படி இருந்தும் தனது ஆன்மீக நிலைக்கு திரும்ப ஸாதகர்களுக்கு 1 முதல் 3 நாட்கள் ஆனதாம். சராசரி நபருக்கு தீய சக்திகள் தம்மை பீடித்துள்ளதையும் தகுந்த நிவாரணங்கள் மூலம் அதிலிருந்து மீண்டுவரவும் திறன் துளியும் இல்லை. அதனால் சராசரி நபருக்கு அத்தகைய கொண்டாட்டங்களால் சூட்சும பாதிப்பு அதிக நாட்கள் நீடிக்கும்.

பரிசோதனையின் போது சில ஸாதகர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் என்ற அவர்களின் கருத்துகள் கீழ்வருமாறு.

  1. மாயாவி மற்றும் கவர்ச்சி அதிர்வுகளால் சுற்றுச்சூழல் ஆழ்த்தப்பட்டது.

  2. இசை ஒலித்துக்கொண்டு இருக்கும்போது எனது இருதய (அநாஹத) சக்கரத்தில் அழுத்தத்தை உணர்ந்தேன்.

  3. சொந்த ஆற்றல் படைத்த இடமாக எங்களுக்கு தோன்றியது, அதனால் மணிக்கணக்கில் என்னால் ஆடிக்கொண்டே இருக்கமுடிந்தது, இப்படியே விட்டால் இன்னும் பல மணி நேரம் ஆடலாம். ஒரு தீய சக்தி தனது சொந்த சக்தியுடன் காணப்பட்டது. நடனமாடும் சிலர் ஆன்மீக கஷ்டங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என நான் உணர்ந்தேன்.

  4. என்னை பாதிக்கும் தீய சக்தி சுற்றுச்சூழலில் இருந்து அதிக ஆற்றலை பெறுகிறது என உணர்ந்தேன்.

  5. பரிசோதனையின் முடிவில் எனக்கு பலமுறை தசைப்பிடிப்பு ஏற்பட்டும், அது சரியானவுடன் தொடர்ந்து ஆடவேண்டும் எனும் கட்டாயத்தை உணர்ந்தேன்.

  6. ஸாதகர்களை தவிர்த்து அங்கிருக்கும் அனைவரும் எதிர்மறையானவர்கள் என உணர்ந்தேன். கனவில் இருப்பது போல் மக்கள் மது அருந்திக்கொண்டு ஒரு மாய இன்பத்தில் மூழ்கியிருந்தனர்.

5. இறுதியான குறிப்புகள்

ஒரு நைட்கிளப் அல்லது மதுக்கூடத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது ஒரு துன்பமில்லா வழி என்று தோன்றலாம், ஆனால் ஆன்மீக ரீதியில் பாதிப்பு அடையலாம் என இந்த பரிசோதனை காட்டுகிறது. இதைச் செய்து ஒருவர் சேகரிக்கும் ஆன்மீக எதிர்மறைத் தன்மை அதிக காலம் அவர்களை பாதிக்கலாம். இதன் விளைவுகள் உடனுக்குடன் தெரியாவிட்டாலும் உடல்வலி, எதிர்மறை எண்ணங்கள், ஆன்மீக பாதிப்பு போன்ற அறிகுறிகளை இந்த உயர்ந்தளவு ஆன்மீக கஷ்டங்கள் அதிகரிக்கச் செய்யலாம். ஆன்மீக ரீதியில் நேர்மறையான ஸாதகர்களிலும் யு.டி.எஸ் (UTS) மூலமாக திடுக்கிடும் அதிக பு./UV எதிர்மறை ஒளிமண்டல அளவீடுகளின் கண்டுபிடிப்பு, அத்தகைய நிகழ்வுகளில் கலந்துகொண்டதன் விளைவாக அதிகரித்த ஆன்மீக பாதிப்பை காட்டுகிறது. பு./UV எதிர்மறை ஒளிமண்டலத்தின் நீடித்த இருப்பு என்பது அந்நபரை தீய சக்திகள் பீடித்திருப்பதை குறிக்கிறது. வெறும் புத்தாண்டு விழாவிற்கு மட்டும் இந்த கண்டுபிடிப்புகள் பொருந்துவதில்லை, ஆனால் பொதுவாக மதுக்கூடங்கள் மற்றும் நைட்கிளப் சென்றாலே ஒருவரை எதிர்மறையாக பாதிக்கும். மேலும், நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாடுவதன் சமுதாய மரபை ஆராயவேண்டும். ஏனென்றால் இந்த நேரம்தான் சுற்றுச்சூழலில் தீய சக்திகளின் செயல்கள் அதிகம், மற்றும் இது ஏற்படக் காத்திருக்கும் ஆன்மீகப் பிரச்சனை ஆகும்.

உலகியல்/ஸ்தூல அளவில் அசுத்தமான இடங்களுக்குச் செல்லாமல் நாம் எவ்வாறு பார்த்துக் கொள்கிறோமோ, அதேபோல் ஆன்மீக அளவிலும் நாம் ஆன்மீக ரீதியாக மாசுபட்ட இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது அவசியமாகும். நேர்மையுடன் தொடர்ச்சியாக ஒருவர் ஆன்மீகத்தை பயின்றால், அதுவே அவரை ஆன்மீகப் பாதிப்பிலிருந்து காக்கும். எவரொருவர் எந்தவித ஆன்மீக பயிற்சியையும் செய்யாமல் இருப்பார்களோ, அவர்களுக்கு ஆன்மீக மீட்பு நடக்காது. தன்னையே அறியாமல் அவர்களை மோசமாகப் பாதிக்கும் எதிர்மறை கருப்பு சக்தி படலத்தில் அவர்கள் ஆழ்ந்திருப்பார்கள்.

தொடர்ந்து ஆன்மீகப் பயிற்சியை மேற்கொண்டால் அத்தகைய விழாக்களிலிருந்து நாம் கிரஹித்துக்கொண்ட எதிர்மறை தன்மையிலிருந்து மீண்டுவர நேர்மறை சக்தியை அளிக்கிறது. நம்மை ஸாத்வீகமாக மாற்றி நமது தேர்வுகளையும் வாழ்வுமுறைகளையும் ஆன்மீக ரீதியில் நேர்மறையாக மாற்றி இயற்கையாகவே அச்செயல்களிலிருந்து நம்மை அகற்றுகிறது. இதனால் நாம் ஆன்மீக ரீதியில் நேர்மறையான வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையின் ஆன்மீக நோக்கமான கடவுளோடு ஒன்றிணைய உதவுகிறது.

ஆங்கில புத்தாண்டுக்கு பதில் சித்திரை மாத புத்தாண்டு கொண்டாடுவதன் ஆன்மீக விளைவை பற்றிய எங்களது தொடர் ஆய்வுக் கட்டுரையை படிக்கவும்

.