அமாவாசை மற்றும் பௌர்ணமியின் ஆன்மீக விளைவுகள்

அமாவாசை மற்றும் பௌர்ணமியின் ஆன்மீக விளைவுகள்

1.அறிமுகம்

மனிதனின் நடத்தை மீது சந்திரனுக்கு உள்ள நல்ல தாக்கம் மற்றும் எதிர்மறை தாக்கம் பற்றி பல்லாண்டுகளாக விஞ்ஞான அறிக்கைகள் வெளி வந்துள்ளன. இந்த அறிக்கைகள் மூலமாக, மன செயல்பாடுகள் அதிகரித்தல், பொது மற்றும் மனநல அவசர சிகிச்சை பிரிவிற்கு அதிகமானோர் செல்லுதல் மற்றும் மக்கள் அதிக அளவு உடல்ரீதியான, மனோரீதியான கஷ்டங்களை உணர்தல் போன்றவை பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.

ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) ஆன்மீக ஆராய்ச்சி முறைகளைக் கைக்கொண்டு மனித நடத்தை மீது சந்திரனுக்கு உள்ள தாக்கத்தை ஆய்வு செய்துள்ளது. ஆறாவது அறிவைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆன்மீக ஆராய்ச்சி மூலமாக, ஆம் மனித நடத்தை மீது சந்திரனின் தாக்கம் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரன் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தின் பல அம்சங்களைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2.சந்திரனின் பொதுவான சூட்சும விளைவு

நக்ஷத்திரங்கள், கிரஹங்கள் மற்றும் விண்கோள்கள் ஆகியவை தங்களின் ஸ்தூல தன்மைகளுடன் கூட சூட்சும அதிர்வலைகளையும் வெளிப்படுத்துகின்றன. அந்த ஸ்தூல தன்மைகளும் சூட்சும அதிர்வலைகளும் நம் மீது வெவ்வேறு விகிதங்களில் ஸ்தூலமாக மற்றும் சூட்சுமமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சந்திரனிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள் மனோமய கோசத்தின் அதிர்வலைகளை தாக்குகின்றன, அதாவது மனித மனத்தை தாக்குகின்றன. இங்கு மனம் என்பது நமது உணர்வுகள், ஆசைகளைக் குறிக்கிறது. மனம், வெளிமனம் மற்றும் ஆழ்மனம் ஆகிய இரு கூறுகளைக் கொண்டது. ஆழ்மனதில் பல எண்ணப்பதிவுகள் பதிந்துள்ளன. அவையே நம் அடிப்படை இயல்பை ஆளுமையை நிர்ணயிக்கின்றன. அனால் நமக்கு நம் ஆழ்மனதில் உள்ள எண்ணங்கள் மற்றும் பதிவுகளைப் பற்றித் தெரிவதில்லை. இந்த எண்ணப்பதிவுகள் பல பிறவிகளாக சேர்ந்துள்ளன.

நம் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளின்  ஊக்கியாக மனதிலுள்ள இந்த எண்ணப்பதிவுகள் விளங்குகின்றன. எண்ணப்பதிவுகள் மற்றும் நம் எண்ணங்களுக்கு அவர்களுக்கென்று தனி சூட்சும அதிர்வலைகள் உள்ளன.

‘நம் மனதின் எண்ணப்பதிவுகள் எவ்வாறு நம்மை ஆட்டுவிக்கின்றன’ என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

அமாவாசை மற்றும் பௌர்ணமியின் ஆன்மீக விளைவுகள்

நம் எண்ணங்களின் சூட்சும அதிர்வலைகளைக் காட்டிலும் சூட்சுமமானது சந்திர அதிர்வலைகள். மனதின் எண்ணப்பதிவுகளின் அதிர்வலைகள் சந்திர அதிர்வலைகளைக் காட்டிலும் சூட்சுமமானது. சந்திர அதிர்வலைகள் நம் ஆழ்மனதிலுள்ள எண்ணப்பதிவுகளை வெளிமனத்திற்கு கொண்டு வரும் ஆற்றல் கொண்டது. வெளிமனதிற்கு வந்த பின் நமக்கு அது தெரிய வருகிறது. அதனால் ஒருவரின் மனதிலுள்ள பிரதானமான எண்ணப்பதிவுகள் அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அடுத்த பகுதியில் இதைப் பற்றி மேலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் சந்திரன் மிருகங்களின் மனங்களையும் பாதிக்கின்றது. இருந்தாலும் மிருகங்களின் ஆழ்மனதில் அடிப்படை ஆசைகளான பசி, உடலிச்சை, தூக்கம் ஆகியன மட்டுமே இருப்பதால் முடுக்கப்பட்ட எண்ணங்கள் இதை சார்ந்ததாகவே உள்ளன.

3.சந்திர ஒளி அல்லது வளர்பிறை தேய்பிறை ஆகியவற்றின் பாதிப்பு

அமாவாசை அன்று ஒளியில்லாத சந்திர பகுதி பூமியை நோக்கி உள்ளது. இருள் ரஜ-தம தன்மை மிகுந்த அதிர்வலைகளை வெளியிடுகிறது. ஒளிமிகுந்த சந்திர பகுதி பூமியை நோக்கும் சமயத்தைக் காட்டிலும் இது அதிக ரஜ-தம பிரதானமான அதிர்வலைகளை பூமியை நோக்கி வெளியிடுகிறது.

ஸத்வ, ரஜ மற்றும் தம, மூன்று அடிப்படை கூறுகள் என்ற கட்டுரையை படிக்கவும்.

இதற்கு மாறாக பௌர்ணமி அன்று அதிகரிக்கும் ஒளியால் ரஜ-தம குறைகிறது. இருந்தாலும் பௌர்ணமி அன்று சந்திர அதிர்வலைகள் அதிக செயல்பாட்டில் இருப்பதால் மேலே கூறப்பட்ட குறிப்பு 2-ல் விளக்கியபடி மனதின் செயல்பாடுகள் அதிகரிப்பதை உணர முடிகிறது. ஆழ் மனதில் ஊக்குவிக்கப்பட்ட எண்ணப்பதிவுகளுக்கு ஏற்றாற்போல், அதிகரித்த செயல்பாடு அதிகரித்த ஏதாவது எண்ணங்களாக இருக்கலாம் அல்லது மனதின் அதிகரித்த குறிப்பிட்ட எண்ணங்களாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு, ஒரு புத்தகத்தின் மீது முழு கவனம் உடைய ஒரு எழுத்தாளருக்கு  அந்த புத்தகம் சம்பந்தமான அல்லது எழுதும் விதம் சம்பந்தமான எண்ணங்கள் அதிகரிக்கலாம். இது போன்ற எண்ணங்கள் திறன் மையத்திலிருந்து எழுகின்றன. அதன் மூலம் பௌர்ணமி அன்று அபரிமிதமாக அவர் எழுதக் கூடும்.

ஆனாலும் பெரும்பான்மையினருக்கு ஏதோ எண்ணங்கள் தான் எழுகின்றன. கோவம், பேராசை போன்ற பல ஆளுமை குறைகள் பிரதானமாக இருந்தால் அவை மேலெழும்பி இச்சமயத்தில் நம் மனதை ஆக்கிரமிக்கக் கூடும். உதாரணத்திற்கு ஒரு குடிகாரனுக்கு இந்நாளில் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக எழும்.

அதே சமயம் ஒரு ஆன்மீகவாதி இந்தக் காலத்தை பயன்படுத்திக் கொண்டு பௌர்ணமி நாளில் அதிக ஆன்மீக பயிற்சி செய்து ஆழ்மனதில் பதிந்துள்ள ஆன்மீக எண்ணங்களை விழிப்படைய செய்ய முடியும்.

4.சந்திரனின் புவிஈர்ப்பு சக்தியால் உண்டாகும் விளைவு

அமாவாசை, பௌர்ணமி ஆகிய இரு நாட்களிலும் சந்திரன் மற்றும் சூரியனின் புவிஈர்ப்பு சக்திகள் இணைகின்றன. மற்ற நாட்களிலும் சந்திரனின் புவிஈர்ப்பு சக்தி பூமி மீது செயல்பட்டாலும் அமாவாசை மற்றும் பௌர்ணமியைப் போன்று அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதில்லை.

நாம் நீண்ட மூச்சை உள்ளிழுக்கும்போது சாதாரண மூச்சைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக காற்றை வாய்க்குள் இழுக்கிறோம். இந்த உதாரணத்தை சந்திரன் மற்றும் பூமியின் மீது அதற்குள்ள புவிஈர்ப்புடன் பொருத்தி பார்க்கலாம். அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று சந்திரன் பூமியை ஈர்க்கிறது, அதாவது முன்னர் கூறியது போல் சந்திரன் நீண்ட மூச்சை உள்ளிழுக்கிறது. சந்திரனின் அளவைப் போன்ற மூன்று மடங்கு வட்டவடிவ காற்று மண்டலம் பூமியிலிருந்து ஈர்க்கப்படுகிறது.

அமாவாசை மற்றும் பௌர்ணமியின் ஆன்மீக விளைவுகள்

அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று பூமியிலுள்ள பஞ்ச தத்துவங்களான பூரண பூமி தத்துவம், பூரண நீர் தத்துவம், பூரண வாயு தத்துவம் போன்றவை சந்திரனை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. இதன் மூலம் சூட்சும உயர் அழுத்த பகுதி உருவாகிறது.

இந்த செயல்பாட்டில் ஸ்தூல அளவில் தண்ணீர் சந்திரனால் ஈர்க்கப்படும்போது, தண்ணீரைக் காட்டிலும் நீராவி மேலெழும்பி சூட்சும உயர் அழுத்த பகுதியை சேர்கிறது. தீய சக்திகள் பெரும்பாலும் வாயு ரூபத்தில் இருப்பதால் அவையும் இந்த உயர் அழுத்த பகுதியில் ஈர்க்கப்படுகின்றன. அங்கு அவை ஒன்றாகக் குழுமி தங்களின் பலத்தை அதிகப்படுத்துகின்றன. அதனால் அவை இந்நாட்களில் மனித இனத்தை அதிக அளவு தாக்குகின்றன. மனிதர்களின் மீது நடத்தப்படும் இந்த ஆவிகளின் தாக்குதல் உடலளவில் மற்றும் மன அளவில் மும்மடங்கு அதிகமாக உள்ளது.

உலகெங்கும் உள்ள எஸ்.எஸ்.ஆர்.எஃப். ஆச்சிரமங்களில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் தீய சக்திகளின் தாக்குதல் மற்றும் சூட்சும எதிர்மறை அழுத்தம் அதிகரிப்பதை உணர முடிகிறது. இந்த தாக்குதல் அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆரம்பித்து இரண்டு நாட்களுக்கு பின்பு வரை உள்ளது.

5.அமாவாசை மற்றும் பௌர்ணமியில் அதிகரிக்கும் சந்திரனின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள்

அமாவாசை தினத்தன்று ரஜ-தம தன்மையை பரப்பும் ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) ஆபிசார சடங்குகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பெரும்பாலும் ராஜஸீக தாமஸீக மக்கள் ஆகியோர் பெரிதும் ஈர்க்கப்பட்டு தங்களின் ரஜ-தம நடவடிக்கைகளுக்குத் தேவையான கருப்பு சக்தியைப் பெறுகின்றனர். இந்நாள் எதிர்மறை நடவடிக்கைகளுக்கு உகந்த நாளாக இருப்பதால் இது அசுப தினமாக கருதப்பட்டு எந்த நல்ல காரியங்களும் நடத்தப்படுவதில்லை. சந்திரனின் ரஜ-தம தன்மை மனதை பாதிப்பதால் ரஜ-தம பிரதானமான செயல்களான ஓடிப் போதல், தற்கொலை அல்லது ஆவிகளால் பீடிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அமாவாசை அன்று அதிகபட்சம் நடக்கின்றன. முக்கியமாக அமாவாசை இரவில், தூய்மைபடுத்தும் பரிபூரண தேஜ தத்துவமான சூரிய ஒளி இல்லாததால் ஆவிகள் மனிதர்களுக்கு அதிகபட்ச கஷ்டங்களைக் கொடுக்கக் கூடிய வாய்ப்பு அவைகளுக்கு கிடைக்கின்றது. அதிகரிக்கும் ரஜ-தம தன்மையை பயன்படுத்திக் கொண்டு ஆவிகள் கருப்பு சக்தியை தேக்கி வைக்கின்றன, அதன் மூலம் பெரும் இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப் போரை மூளச் செய்யும் சம்பவங்களை நடத்துவிக்கின்றன.

பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி மிகுந்த பகுதி பூமியை நோக்கி இருப்பதால் மற்ற இரவுகளைக் காட்டிலும் குறைந்தபட்ச ரஜ-தம அதிர்வலைகள் இரவில் வெளியிடப்படுகின்றன. அதனால் அன்று ஆவிகள், ரஜ-தம பிரதானமான மக்கள் அல்லது ஆபிசார சடங்குகளை செய்பவர்கள் ஆகியோருக்கு குறைந்த அளவே ரஜ-தம சக்தி கிடைக்கிறது. இருந்தாலும், ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) பௌர்ணமியின் புவிஈர்ப்பு சக்தியை பயன்படுத்தி அதிக கஷ்டங்களைக் கொடுக்கின்றன.

அமாவாசை மற்றும் பௌர்ணமியால் ஏற்படும் விளைவுகளில்  நுண்ணிய வேறுபாடு உள்ளதை ஆன்மீக ஆராய்ச்சி வெளிக் கொணர்ந்துள்ளது. எவ்வாறு இருந்தாலும் மனிதர்களின் மீது ஏற்படும் சந்திரனின் பாதிப்பு பௌர்ணமியைக் காட்டிலும் அமாவாசையில் அதிகமாக இருக்கிறது. பௌர்ணமி சந்திரனின் பாதிப்பு மனிதர்களின் ஸ்தூல தேஹத்தின் மீதும் அமாவாசை சந்திரனின் பாதிப்பு மனிதர்களின் மனங்களின் மீதும் ஏற்படுகின்றன. பௌர்ணமியின் பாதிப்பு வெளிப்பட தெரிகிறது, ஆனால் அமாவாசையின் பாதிப்பு அதிக சூட்சுமமாக உள்ளது. அமாவாசையின் பாதிப்பு வெளிப்பட தெரியாததால் அது மேலும் ஆபத்தானதாக உள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியாததால் அதற்கான நிவாரணமும் எடுக்கப்படுவதில்லை.

அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டையும் ஒப்பிட்டால் அமாவாசையின் பாதிப்பு நாம் அவ்வளவாக கவனிப்பதில்லை. ஆனால் அமாவாசை அன்றே எதிர்மறை பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணம் அமாவாசை அன்று மனிதர்கள் மீது அதிக சூட்சும நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது, ஆனால் பௌர்ணமி அன்று அதிகரிக்கும் எண்ணங்களை உடனே உணர முடிகிறது.

ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளின்படி தீவிர ஆன்மீக ஸாதனை செய்யும் ஸாதகர்கள் இயல்பாகவே அதிக ஸாத்வீகத் தன்மை கொண்டவர்களாக இருப்பர். அதன் பலனாக சூழ்நிலையில் ஏற்படும் ரஜ-தம மாறுதல்களை அவர்களால் உடனே உணர முடிகிறது; ரஜ-தம தன்மை கொண்ட ஒரு சராசரி மனிதரால் அவ்வாறு உணர முடிவதில்லை. இதிலுள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் தீய சக்திகளிடமிருந்து அதிக பாதுகாப்பை இறைவனிடமிருந்து ஸாதகர்களால் பெற முடிகிறது. ‘எந்த அளவிற்கு ஆன்மீக நிலை ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) இடமிருந்து பாதுகாப்பு பெற்றுத் தருகிறது?’ என்ற கட்டுரையைப் படிக்கவும்.

6.மனித நடத்தையின் மீது சந்திரனுக்கு உள்ள தாக்கத்தைப் பற்றிய நிரூபணத்தை ஏன் எந்த சமீபத்திய அறிக்கைகளும் தரவில்லை?

சற்று முந்தைய மருத்துவ/மனோதத்துவ ஆய்வுகள் மனித நடத்தையின் மீது சந்திரனுக்கு உள்ள தாக்கத்தைப் பற்றி பதிவு செய்துள்ளன. ஆனால் சமீபத்திய வருடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த சம்பந்தத்தை பதிவு செய்ய தவறிவிட்டன. இதன் காரணம் கடந்த பத்தாண்டுகளில் உலகில் ரஜ-தம ஆதிக்கம் அபரிமிதமாக அதிகரித்துள்ளது. இத்தகைய அதிகப்படியான ரஜ-தம தன்மையை ஆவிகளே (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) முக்கியமாக தூண்டிவிட்டுள்ளன.

நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடக்கும் யுத்தம் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

ஒட்டுமொத்த ரஜ-தம கூறின் அதிகரிப்பு உலகின் எல்லா அம்சங்களையும் பாதிக்கின்றது. இந்த பிரச்சனைகள் தனிப்பட்ட அளவில் அதிகரிக்கும் மனோவியாதிகளிலிருந்து குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், தீவிரவாதம் மற்றும் இயற்கை பேராபத்துகள் வரை நீள்கின்றன. மாதம் முழுவதும் தொடரும் இது போன்ற சமநிலையற்ற நடத்தையால் கூடுதல் பாதிப்பான அமாவாசை மற்றும் பௌர்ணமியின் பாதிப்பு இந்த புள்ளிவிவர ஆய்வில் பதிவாகவில்லை.

7. தீய விளைவுகளிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

அமாவாசை மற்றும் பௌர்ணமியால் ஏற்படும் தீய விளைவுகள் ஆன்மீக காரணங்களால் ஏற்படுவதால் இதிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு ஆன்மீக நிவாரணங்கள் அல்லது ஆன்மீக பயிற்சியே உதவும்.

உலக அளவில் அன்றைய தினத்தில் முக்கிய தீர்மானங்களை முடிவு செய்யாமல் அல்லது வாங்கல்-விற்றல் ஆகியவற்றில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவற்றின் மூலம் ஆவிகள் நம்மை பாதிக்கக் கூடும். அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு 2 நாட்கள் முன்பாகவும் முடிந்த பின் 2 நாட்களும் நம் ஆன்மீக பயிற்சியை தரத்திலும் அளவிலும் மேலும் தீவிரமாக செய்வது நல்லது. அதோடு கூட உங்கள் மதத்திற்கு ஏற்ற நாமஜபத்தை செய்வதும் ஆன்மீக பாதுகாப்பிற்காக ஸ்ரீ குருதேவ தத்தாவின் நாமஜபத்தை செய்வதும் சிறந்தது.

தேய்பிறையின் போது அதாவது பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை சந்திரனின் அளவு படிப்படியாக குறைவதால் அதிலிருந்து எழும் ரஜ-தம அதிர்வலைகளும் படிப்படியாக அதிகரிக்கிறது. சந்திரனின் இருள் மிகுந்த பகுதி அதிகரிப்பதுதான் இதன் காரணம். அதிகரிக்கும் ரஜ-தம தன்மையிலிருந்து பாதுகாப்பு பெற இக்கால கட்டத்தில் நம் ஆன்மீக பயிற்சியை அதிகரிப்பது நல்லது.

வளர்பிறை காலத்திற்கு முந்தைய இரு வாரங்களில் அதிகரித்த முயற்சிகளை அப்படியே தக்க வைத்துக்கொள்ளவாவது முயல வேண்டும். இவ்வாறு செய்தால்தான் அடுத்த தேய்பிறை காலத்தில் ஆன்மீக பயிற்சியை அதிகரிக்க நாம் புது முயற்சிகளை மேற்கொள்வோம்.

Datta chant
குறிப்பு: ஆடியோ கோப்பைப் பதிவிறக்கம் செய்ய , தயவுசெய்து படத்தின் மீது, வலது இணைப்பை அழுத்தி “இணைப்பை சேமி / இணைப்பை இவ்வாறு சேமி” என்பதை அழுத்தவும்

Datta photos