
முறை: கண் திருஷ்டியை கழிக்க கல்லுப்பு மற்றும் கடுகை உபயோகப்படுத்தும் முறை
இச்சடங்கை செய்ய தேவையான பொருட்கள்
கல்லுப்பு மற்றும் கடுகு உபயோகித்து கண் திருஷ்டியை கழிக்கும் செய்முறை
-
முதல் படி: பிரார்த்தனை
-
யார் மீது சடங்கு செய்யப்படுகிறதோ, அவரே ஆஞ்சநேயரை வணங்கி ஒரு பிரார்த்தனை செய்யவேண்டும்: “என் (உங்கள் பெயர்) மீது செலுத்தியிருக்கும் கண் திருஷ்டி நீங்கி, இந்த சடங்குமுறையை செய்பவரும் (நபரின் பெயர்) பாதிக்கப்படாமல் இருக்க அருள் புரியவும்.”
-
கஷ்டமளிக்கும் சக்திகளால் பாதிக்கப்படாமல் இருக்க சடங்குமுறையை செய்பவர் ஆஞ்சநேயரை பிரார்த்திக்க வேண்டும்.
-
-
இரண்டாம் படி: அவரவர் நிலையில் இருக்கவும்
தீயசக்திகளின் பாதிப்புக்குள்ளாகி சடங்கு மேற்கொள்பவரை தரையில் கிழக்கு நோக்கி மரப்பலகையிட்டு அவரது கால் முட்டிகள் நெஞ்சைத் தொடும் தோற்றத்தில் அமர்த்தவும். முட்டிகள் மீது கைகளை மேல்நோக்கி வைக்கவேண்டும்.

-
மூன்றாம் படி: சடங்குமுறையை செய்தல்
சடங்கு செய்பவர் பாதிக்கப்பட்டவர் முன் நிற்கவேண்டும். கைகள் கொள்ளும் அளவு கடுகு மற்றும் கல்லுப்பை இரு உள்ளங்கைகளிலும் எடுத்துக்கொள்ளவும்.

உங்கள் இரு கைகளையும் பெருக்கல் குறியீடு(குறுக்கே) “X” போல் வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவரின் தலையிலிருந்து பாதம் வரையிலும், எதிர்திசைகளிலும் நகர்த்தி தரையைத் தொடவேண்டும்.
தொடக்கத்தில் மட்டுமே கைகள் பெருக்கல் குறியீட்டில்(குறுக்கே) இருக்கவேண்டும். தொடங்கிய உடன் கைகளை பிரித்துக்கொண்டு வலதுகையை வலஞ்சுழியாக (இடமிருந்து வலம் ⭮) தலையிலிருந்து பாதம் வரையிலும், இடதுகையை இடஞ்சுழியாகவும் அதாவது தலையிலிருந்து பாதம் வரை (வலமிருந்து இடம் ⭯) சுற்றவேண்டும்.
தரையைத் தொட்ட பிறகு மீண்டும் அதேபோல் செய்யவேண்டும், அதாவது கைகளை பிரித்துக்கொண்டு வலதுகையை வலஞ்சுழியாக ⭮, பாதத்திலிருந்து தலை வரை மற்றும் இடதுகையை இடஞ்சுழியாக ⭯பாதத்திலிருந்து தலை வரை சுற்றவேண்டும்.

சடங்குமுறை செய்யும்போது இதைச் சொல்லவேண்டும்: “இவர்மீது வருகையாளர்கள்(அக்கம் பக்கத்தினர்), ஆவிகள், மரங்கள், வழிப்போக்கர்கள், இடம் போன்றவற்றால் பட்டிருக்கும் கண் திருஷ்டி கழிந்து நோய்-காயங்களிலிருந்து இவர் காப்பாற்றப் படவேண்டும்.
கைகளை மேலிருந்து கீழ் நகர்த்தி தரையைத் தொடுவதற்கான காரணம் :
-
- மேலே விளக்கியது போல் கைகளை நகர்த்துவதால் சடங்கில் பயன்படுத்தப்படும் பொருட்களில் கஷ்டமளிக்கும் சக்திகள் உள்வாங்கப்படுகிறது மேலும் தரையைத் தொடுவதால் அவை பூமிக்குள் இழுக்கப்படுகின்றன.
- எத்தனை தடவை கைகளை நகர்த்துவது என்பது கஷ்டமளிக்கும் அதிர்வுகளின் அளவைப் பொறுத்து இருக்கும். பொதுவாக மந்திரவாதிகள் ஒற்றை எண்களில் மாந்த்ரீகம் செய்வதால் ஒற்றை எண் மடங்குகளில் கைகளை நகர்த்தவேண்டும்.
-
நான்காம் படி :
சடங்குமுறை முடிந்தபின் எல்லாவற்றையும் சூடான இரும்பு வாணலியில் அல்லது எரியும் நிலக்கரியில் கொட்டிவிடவேண்டும்.
